அராஜகத்துக்கு செங்கம்பளம்; நீதிக்கு கைவிலங்கு!!!

ஈமானைச் சுமந்த மக்கள் படுமோசமாக கொல்லப்படுகின்ற பொழுது, அவர்கள் அன்றாடம் உண்பதற்கும் குடிப்பதற்கும் எதுவும் இல்லாமல் கதறி அழுகின்ற பொழுது, குண்டுகள் வீசி கட்டடங்கள் தரைமட்டமாக்கப்படுகின்ற பொழுது, அல்லல்படும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக கோடான கோடி பணம் தேவைப்படுகின்ற பொழுது…..
இந்த உலகத்தில் மிகப்பெரிய பணக்காற, அணு ஆயுத நாட்டின் தலைவருக்கு முஸ்லிம் ஆட்சியாளர்கள் பெறுமதி மதிக்க முடியாத பரிசுகளை வழங்கி சந்தோசப்படுவதாயின் இவர்களுக்கு மனசாட்சி இருக்கிறதா? ஈமான் இருக்கிறதா ? ஈவிரக்கம், மனிதப் பண்புகள் இல்லையா என்றெல்லாம் யோசிக்கத் தோன்றுகிறது.
எவ்வளவு தூரம் இவர்களது மூளைகள் சலவை செய்யப்பட்டிருக்கின்றன என்பதற்கு இதனை விட சிறந்த ஆதாரம் எதுவுமில்லை.
உலகில் உள்ள மனசாட்சி உள்ள, ஈவிரக்கமுள்ள, சாதாரண பொது மக்கள் கூட இந்த யுத்தங்கள் வேண்டாம். மனித உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஒவ்வொருவரும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும். எவரது நிலத்தின் மீதும் அந்நிய சக்திகள் ஊடுருவக்கூடாது; எல்லோரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்றெல்லாம் குரல் கொடுக்கின்ற பொழுது,
நேரடியாகவும் மறைமுகமாகவும் யுத்தத்திற்கு ஆதரவு வழங்கும், ஆசீர்வாதம் கொடுக்கின்ற, பக்க பலமாக இருப்பவர்கள் இவ்வளவு தூரம் போற்றப்படுகிறார்கள் என்றும், பரிசீல்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள் என்றும் நினைக்கின்ற போது ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த முஸ்லிம் ஆட்சியாளர்களது திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு பின்னால் தூரநோக்கும் சானாக்கியமும் மூலோபாயத் திட்டமும் இருக்கலாம் என எம்மில் சிலர் யோசிக்கலாம். ஆனால் வெளிப்படையில் பார்க்கின்ற பொழுது அவை நியாயமாகத் தெரியவில்லை.
அல்லாஹ் நிச்சயம் உண்மையை வெல்லச் செய்வான். அசத்தியம் தற்போது ஒளிர்ந்து கொண்டிருக்கலாம். நடனமாடிக் கொண்டிருக்கலாம்.ஆனால் அது தற்காலிகமானது என்பது உலக வழமையாகும்.
அல்லாஹ்வே நீயே போதுமானவன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top