About Me
Stay updated with the latest articles penned by Sheikh Faleel. Covering a wide range of topics, these writings reflect his deep understanding and thoughtful reflections on Islam.
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் (நளீமி)
தொகுப்பு: ஏ.ஆர்.ரிஸ்வி முஹம்மத்-திஹாரிய
எஸ்.எச்.எம். பளீல் இலங்கை வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த அனுராதபுர நகரிலிருந்து சுமார் 23 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நாச்சியாதீவு எனும் அழகிய முஸ்லிம் கிராமத்தில் 1964.12.10 அன்று பிறந்தார். மர்ஹூம் சாஹுல் ஹமீத், சையத் பீபி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த அவருக்கு ஒரு மூத்த சகோதரியும் ஒரு சகோதரரும் உடன்பிறப்புக்களாவர். அவர் கம்பஹ மாவட்டத்திலுள்ள கல்எலிய கிராமத்தில் 1992ம் வருடம் ரிஸானா எனும் வாழ்க்கைத் துணைவியுடன் இணைந்து ஓர் ஆண் பிள்ளைக்கும் நான்கு பெண் பிள்ளைகளுக்கும் தந்தையாக இருக்கிறார்.
நாச்சியாதீவு முஹ்யித்தீன் ஜும்ஆப் பள்ளியுடன் இணைந்து அமைந்திருந்த அல்மத்ரஸதுர் ரஹ்மானியாவில் குர்ஆன் மத்ரஸா கல்விப் போதனைகளைப் பெற்ற சிறுவர் பளீல் கிராமத்தின் ஒரு கோடியில் அப்போது அமைந்திருந்த அல்-இக்பால் மகாவித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றார். எட்டாம் வகுப்பு முதல் அனுராதபுர நகரில் அமைந்துள்ள விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் அவர் க.பொ.(சா,த) பரீட்சை எழுதும் வரை கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் சிங்களக் கலவரமொன்றுக்காக மேற்படி பாடசாலை சில மாதங்கள் மூடப்பட்டிருந்த காலத்தில் அதற்கு அருகாமையிலுள்ள சாஹிரா மகாவித்தியாலயத்திலும் அவர் கல்வி கற்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஊர்ச் சூழலிருந்து புதியதொரு சூழலுக்குள் பிரவேசித்தமை, வேற்றுமத ஆசிரியர்கள், மாணவர்களுடன் பழகும் வாய்ப்புக் கிட்டியமை, விவேகானந்தா பாடசாலை அக்காலப் பிரிவில் குறிப்பிடத்தக்க கல்விசார் சாதனைகளை ஈட்டியிருந்தமை போன்ற பல காரணங்கள் சிறுவர் பளீலின் அறிவாளுமையில் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தன.
1979 ஆம் வருடம் க.பொ.த.(சா,த) பரீட்சையில் சித்தியடைந்த பளீல் பேருவலை ஜாமிஆ நளீமிய்யாவில் இணைந்து கல்வியைத் தொடர வேண்டும் என்ற சிந்தனையை முதலில் முன்வைத்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இஸ்ஸதுல் லாபிர் எனும் ஆசிரியராவார். நாச்சியாதீவு அல்-இக்பால் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்பிப்பதற்காக வேறு ஊர்களிலிருந்து வருகை தந்த பலர் மாணவர் பளீலின் வீட்டில் தான் தங்கியிருந்தார்கள். யாழ்ப்பாணம், கல்கமுவ, கனேவல்பொல போன்ற பிரதேச ஆசிரிய, ஆசிரியைகளிடமிருந்து கல்விஞானங்களைப் பெறும், முன்மாதிரிகளைக் காணும் அரிய வாய்ப்பை அவர் பெற்றார். தகப்பன் சாஹுல் ஹமீது (ஜே.பி.) ஒரு வியாபாரியாக இருந்தும் வியாபாரத்துறையிலிருந்து பளீலின் கவனம் கல்வியை நோக்கித் திருப்பப்படுவதில் இந்த அறிவுச் சூழலுக்கு ஒரு பங்கிருந்தது.
அதேவேளை, நாச்சியாதீவு ஜும்ஆப் பள்ளியில் அவ்வப்போது கடமை புரிந்த மௌலவிமார்களான அமீன் (அக்கரைப்பற்று), நியாஸ் (நீர்கொழும்பு), தாவூத்ஷா (காத்தான்குடி) போன்றவர்கள் மார்க்கக் கல்வித்துறையில் பளீல் ஈடுபட வேண்டும் என உற்சாகமூட்டியதுடன்ஃ அவரது தகப்பனுக்கும் இதுபற்றி அடிக்கடி கூறிவந்தனர். அந்த வகையில்தான் ஜாமிஆ நளீமிய்யாவுக்குச் சென்று இஸ்லாமிய கல்விஞானங்களைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கும் ஏற்பட்டது.
1980 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஜாமிஆ நளீமிய்யா நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியெய்திய மாணவர் பளீல் அங்கு 1987 வரை தனது கல்வி வாழ்வைத் தொடர்ந்தார். 1987 அவரைப் பொறுத்தவரை அவரது வாழ்வில் ஒரு முக்கிய ஆண்டாகும். மிக நீண்டகாலமாக சுகவீனமுற்றிருந்த அவரது தந்தை அவ்வாண்டில் தான் வபாத்தானார். பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சை, ஜாமிஆ பட்டச் சான்றிதழ் பரீட்சை இரண்டையும் இக்காலப் பிரிவுக்குள் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டமை அவருக்கு பெரும் சோதனையாகவும் சவாலாகவும் அமைந்தது. அல்லாஹ்வின் கிருபையால் இரண்டு பரீட்சைகளிலும் அவர் தேர்ச்சி பெற்றார்.
ஜாமீஆவின் விரிவுரையாளர்கள், நூல்நிலையம், பாடத்திட்டம் வெளிக்கள செயற்பாடுகள் என்பன அவரது ஆளுமையை நெறிப்படுத்தியமை குறிப்பிடத்தக்க விடயமாகும். நளீமிய்யாவின் ஸ்தாபகர் அறிவுத் தந்தை அல்ஹாஜ் எம்.ஐ.எம். நளீம் அவர்களையும் தனக்குக் கற்பித்த நளீமிய்யாவின் பணிப்பாளர் கலாநிதி சுக்ரி, விரிவுரையாளர்களான உஸ்தாத்மார்களான மன்சூர், ஐயூப் அலி, கைருல் பஷர், அகார் முஹம்மத் உள்ளிட்ட பலரையும் அவர் தற்போதும் நன்றிப்பெருக்கோடு நினைவுகூர்கிறார்.
ஜாமிஆவில் தனது கல்விப்பணியை முடித்து சுமார் 3 மாதங்கள் கழிவதற்கு முன்னரே அவரது சேவையை நளீமிய்யா நிருவாகம் வேண்டி அவரை நளீமிய்யாவில் பணிபுரிய அழைத்தது. அந்தவகையில், ஏக காலத்தில் விரிவுரையாளராகவும் நளீமிய்யா இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகத்தில் நிறைவேற்று அதிகாரமிக்க வெளியீட்டாளர் பதவியிலும் அவர் அமர்த்தப்பட்டார். சுமார் ஆறு வருடங்களின் பின்னர் கல்விப் பிரிவுக்கான முழுநேர விரிவுரையாளராக நியமனம் பெற்ற அவர்ஃ கல்விப் பகுதியின் பொறுப்பாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் ஆகிய முக்கிய பொறுப்புக்களை வகித்துவந்தார். தற்போது அவர் ஜாமிஆ நளீமிய்யவின் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கிடையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின்படிப்புக்காக வெளிவாரி மாணவராக 1993ல் இணைந்துகொண்ட அவர், முதுமானிக் கற்கைகளுக்கான ஆரம்ப கட்டப் பாடநெறியை (Preliminary) தொடர்ந்து கொண்டிருக்கையில் 1994ம் வருடம் சவூதி அரேபியாவிலுள்ள ரியாத் மன்னர் சஊத் பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா பாடநெறியொன்றைத் தொடரும் சந்தர்ப்பத்தைப் பெற்றார். ‘அரபியை தாய்மொழியாகக் கொள்ளாதவர்களுக்காக அதனைக் கற்பிக்கும் துறையிலான உயர் டிப்ளோமா’ (Higher Diploma in Teaching Arabic for Non-Arabs) எனப்பட்ட அந்தப் பாடநெறி ஒரு வருடகால எல்லையைக் கொண்டிருந்தது.
சவூதி அரேபியாவுக்கான அவரது இந்தப் பயணம் அவரது வாழ்வில் மற்றுமொரு திருப்புமுனையாக அமைந்தது. அல்லாஹ்வின் ஆலயத்தையும் புனிதத்தலங்களையும் உம்ராவுக்காகவும் ஹஜ்ஜுக்காகவும் தரிசிக்கும் பாக்கியம் அவருக்குக் கிட்டியது. அரபு விரிவுரையாளர்களது சகவாசம், கடல்கடந்த நிலையில் வெளிநாடுகளில் தொழில்புரிவோரின் பிரச்சினைகள்ஃ விவகாரங்கள் என்பன அவரது சிந்தனை வட்டத்தை மேலும் விரிவுபடுத்தின.
சவூதி அரேபியாவிலிருந்து திரும்பியதிலிருந்து தொடர்ந்தும் விரிவுரையாளராக நளீமிய்யாவில் இணைந்துகொண்ட விரிவுரையாளர் பள அவர்கள் 2002ம் ஆண்டு தனது முதுமானிப் பட்டத்தை (M.A.) பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். அதனைத் தொடர்ந்து தத்துவ முதுமானி (M.Phil.) பட்டத்துக்காக ‘சகிப்புத்தன்மையும் சமாதான சகவாழ்வும் தொடர்பான இஸ்லாமிய கண்ணோட்டமும் பல்லின சமூக சூழலில் அதன் பிரயோகமும் – இலங்கையை சிறப்பாகக் கொண்ட ஆய்வு’ (Concept of Tolerance and Co-Existence in Islam and its Application in a Pluralistic Society-with Special Reference to Sri Lanka) எனும் தலைப்பில் ஆய்வை மேற்கொண்டு 2000ஆம் ஆண்டில் M.Phil. பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.
தர்வா, கல்வி சமூகப் பணிகள்
தமிழ், அரபு, சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழியறிவுகளைப் பெற்றுள்ள இவர் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தர்வா மற்றும் அறிவுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கொழும்பில் மாத்திரம் சுமார் 15 ற்கு மேற்பட்ட பள்ளிவாயல்களில் அவரது குத்பாக்கள் இடம்பெற்று வருகின்றன. பெரிய பள்ளி, கொள்ளுப்பிட்டி, ஜாவத்தை, பொரளை, கிரேண்ட்பாஸ், மினன், மாளிகாவத்தை, கோட்டை, வாழைத் தோட்டம் ஆகிய பள்ளிவாயல்கள் குறிப்பிடத்தக்கவை.
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையிலும் அவரது நிகழ்ச்சிகள் நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றன. மஜ்லிஸு ஷ_ரா, கருத்துக்களம் போன்ற நேரடி நிகழ்ச்சிகளில் அவர் மிக அதிகமான நிகழ்ச்சிகளை வழங்கியிருப்பதுடன் அல்குர்ஆன் விளக்கம், மணிமொழிகள், நினைவுதினப் பேச்சுக்கள் போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வந்தார். சனிக்கிழமைகளில் முஸ்லிம் சேவையில் அவர் இஸ்லாமிய வீடு| என்ற தலைப்பில் தொடர்ந்தும் நிகழ்த்திய உரைகளும் கருத்துக் களம் என்ற நிகழ்ச்சியில் இலங்கையின் பிரபலமான உலமாக்கள் மற்றும் புத்திஜீவிகளை அழைத்து வந்து நடாத்தி வந்த தொடர் நிகழ்ச்சியும் வானொலி நேயர்களால் அடிக்கடி ஞாபகமூட்டப்படுவதுண்டு. அதேபோல் சக்தி வானொலியில் காலை வேளையில் அவர் இஸ்லாமிய விழுமியங்கள்| எனும் தலைப்பில் சிலபோது தொடராக உரைநிகழ்த்தி வந்தார். இலங்கையில் மட்டுமன்றி தென்னிந்திய மற்றும் சர்வதேச நாடுகளிலுள்ள நேயர்களும் அவரது உரைகளை வானொலியிலும் இணைய தள வசதியினூடாகவும் செவிமடுப்பதுண்டு.
இது தவிர, வசந்தம் தொலைக்காட்சியில் பள்ளிக்கூடம்| எனும் நேரடி நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். மாற்றுமத அறிஞர்களுக்கு மத்தியில் இஸ்லாத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவர் பங்குபற்றிய ‘ஆயுதப் போராட்டமும் மதங்களும்’ , ‘மிருகபலியை மதங்கள் ஆதரிக்கின்றனவா?’, ‘குடும்ப வாழ்வா – துறவு வாழ்வா?’ ஆகிய மூன்று தலைப்புக்களில் இடம்பெற்ற நிகழ்ச்சிகள் குறிப்பிடத்தக்கவையாகும். சுயாதீன தொலைக்காட்சியில் நேத்ரா அலைவரிசையிலும் UTV இலும் அவரது உரைகள், கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருகின்றன.
சன்மார்க்க – சமூக விடயங்கள் தொடர்பில் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் பெற்றுள்ள அறிவுச்செறிவு, தெளிவான கண்ணோட்டம் என்பவற்றுக்கு அப்பால், அவரது மொழிவளமும் தான் சொல்லவரும் விடயத்தை அழுத்தந் திருத்தமாக எடுத்துரைக்கும் பான்மையும் ஆற்றோட்டம் போன்று சரளமாகப் பிரவகிக்கும் பேச்சுத்திறனும் அவரது உரைகள் மக்கள் மத்தியில் பிரபல்யமாவதற்குக் காரணமாக அமைகின்றன. சமூகப் பிரச்சினைகளை – சமூகத்துக்குத் தூரத்தில் நிற்காமல் – சமூகத்தின் சராசரி உணர்வுகளுக்குச் சமாந்தரமாக நின்று – அதேவேளை இஸ்லாமிய அடிப்படைகளை விட்டுக்கொடாமல் – அணுகும் அவரது பாங்கும், ஆரவாரமின்றிய அவரது தன்னடக்கமும் அவரை உளமார நேசிக்கும் எண்ணற்ற அபிமானிகளை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளன என்ற உண்மையும் கவனத்திற்கொள்ளத் தக்கது.
ஆக்கங்களைப் பொறுத்தவரை அவர், ‘யார் இந்த தஸ்லிமா நஸ்ரின்?’, ‘இஸ்லாமும் தொடர்புசாதனங்களும்’, ‘இய்யாக்க நர்|புது வஇய்யாக்க நஸ்தஈன்’, ‘சகிப்புத் தன்மைக்கும் சமாதான சகவாழ்வுக்குமான இஸ்லாமிய அடிப்பபடைகள் ‘, 40 நபிமொழிகளுக்கான தமிழ் , ஆங்கில, சிங்கள மொழிபெயர்ப்பு, ශ්රීලංකා වේ ආගමික සංහිඳියාව – ඉස්ලාමීය පර්යාවවලෝකය-சிங்களம் (இலங்கையில் மத நல்லிணக்கம் இஸ்லாமிய கண்ணோக்கு), ‘முஸ்லிம்கள் ஐக்கியப்படுவார்களா?’ (மொழிபெயர்ப்பு), ‘நாளைய முஸ்லிம் பெண்’ (மொழிபெயர்ப்பு) போன்ற நூல்களைத் தந்திருக்கிறார். நளீமிய்யா இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகத்தின் முத்திங்கள் ஆய்வு சஞ்சிகையான இஸ்லாமிய சிந்தனை, அல்-ஹஸனாத் உட்பட தினகரன், நவமணி, விடிவெள்ளி, மீள்பார்வை உள்ளிட்ட உள்நாட்டு பத்திரிகைகளிலும் சமரசம், விடியல்வெள்ளி ஆகிய இந்திய சஞ்சிகைகளிலும் அவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.
தேசிய ரீதியில் இடம்பெறும் கருத்தரங்குகளிலும் மாநாடுகளிலும் அவர் பிரதான வளவாளராக அழைக்கப்படுவதுண்டு. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, ஜமாஅத்தே இஸ்லாமி, வாமி, மர்கசுஸ் ஸலாமா, அஹதிய்யா சம்மேளனம், அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு, கல்விஅமைச்சின் முஸ்லிம் பிரிவு, தேசிய கல்வி நிறுவனம் போன்ற அமைப்புக்களால் முஸ்லிம் பாடசாலைகள், பள்ளிவாயல் சம்மேளனங்களால் ஏற்பாடு செய்யப்படும் கருத்தரங்குகளில் பிரதான உரைகள் பலவற்றை அவர் நிகழ்த்தியுள்ளார்.
சஊதிஅரேபியா, பஹ்ரைன், குவைத், இந்தியா, கத்தார், அமெரிக்கா, இங்கிலாந்து, துருக்கி, இந்தோனேஸியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ள அவர், பஹ்ரைனில் 2006 ஆம் ஆண்டு மார்ச் 22, 23ம் திகதிகளில் நடைபெற்ற ‘றஸூல் (ஸல்) அவர்களுக்கு ஆதரவு வழங்கும் சர்வதேச கருத்தரங்கு’இல் இலங்கையின் சார்பில் கலந்துகொண்டார். உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பல இஸ்லாமிய அறிஞர்களும் ஆர்வலர்களும் கலந்துகொண்ட மேற்படி 3 நாள் மாநாட்டில் ஷடென்மார்க் காட்டூனின் பின்புலமும் தாக்கமும்| எனும் தலைப்பிலான தனது ஆய்வை முன்வைத்தார்.
2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் அமெரிக்காவில் இடம்பெற்ற ‘Religion and Social Justice in America’ எனும் தொனிப்பொருளிலான மூன்று வார நிகழ்ச்சித் திட்டத்தில் அவர் கலந்துகொண்டார். இலங்கையிலிருந்து மூன்று பௌத்த பிக்குகள், ஒரு கிறிஸ்தவ பாதிரி, ஓர் இந்துக் குரு உட்பட இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகள் இருவருள் ஒருவராக அவர் அழைக்கப்பட்டிருந்தார். வொஷங்டன், அலபாமா, நிவ் மெக்ஸிகோ, கலிபோர்னியா ஆகிய பிரதான மாகாணங்களில் இடம்பெற்ற பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டார். அமெரிக்காவிலுள்ள மதத் தலைவர்களுடன் மதக் கலைந்துரையாடல்கள், இன ஐக்கியம் என்பவற்றை ஏற்படுத்துவதில் வகிக்கும் பங்கு, அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மத நல்லிணக்கத்தை வளர்ப்பதிலும் பல்லின சமூக அமைப்பை கட்டிக் காப்பதிலும் வகிக்கும் பங்கு, சிறுபான்மையினரது உரிமைகள், நலன்களைக் காப்பதில் தனியார் துறையின் பங்கு, தன்னார்வ செயல்பாடுகள், அரசியல் வாழ்வு என்பவற்றில் மதங்களது பங்கு என்பவற்றைக் கண்டறியும் வகையில் பல நிகழ்வுகள் அங்கு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன. பல பல்கலைக்கழகங்கள், மத நிறுவனங்கள், கிறிஸ்தவ, யூத, இந்து, சீக்கிய, பௌத்த ஆலயங்களுக்கும் விஜயம் செய்த குழுவினர் விரிந்த கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
அமெரிக்காவிலுள்ள இஸ்லாத்திற்கெதிரான சவால்கள், முஸ்லிம்களது வாழ்வுமுறை, சர்வதேச ரீதியாக அமெரிக்கா கடைப்பிடிக்கும் இஸ்லாமிய விரோதக் கொள்கை என்பவற்றை ஆராயும் வாய்ப்பும் அங்கிருந்த வேளை அவருக்குக் கிட்டியது.
அமெரிக்கப் பயணத்தின்போது தூதுக்குழுவினர் விஜயம் செய்த முக்கிய இடங்களில் சில வருமாறு:
- Washington D.C.
Library of Congress, The Pew Forum on Religion and Public Life, Inter-Faith Conference of Metropolitan Washington, U.S. Agency for International Development (USAID), United States Institute for Peace (USIP), U.S. Department of State, U.S. Conference of Catholic Bishops, American University, Muslim Public Affairs Council, George Town University, Washington Buddhist Viharaya.
- u;untsville / Birmingham / Alabama
Islamic Centre, Southern College, National Conference for Community and Justice University of Alabama
- Santa Fe, New Mexico
Santa Fe Immigration Committee, Sikh D}arma International, Temple Bet Shalom, St. John the Baptist Catholic Church.
- San Francisco, California
United Religions Initiative, Balaji Temple, Buddha Vihara, Buddhist Peace Fellowship University of California.
அஷ்ஷெய்க் பளீல் அவர்களுடன் சென்ற குழுவினர் :
- Rev. Antony Rasaratnam (M.Phil), Batticaloa
- Rev. Ariyawansa (M.A.), Lecturer, University of Ruhuna
- Rev. Dr. D}ammajothi (PhD), Lecturer, University of Colombo
- Rev. Prof. Deerananda (PhD), Lecturer, University of Peradeniya
- Mr. Asiff u;ussain (B.A.), Editor, Islamic Finance
- Rev. Ishwaradasan, Chinmayananda Mission – Colombo)
ஆனால், அவரது அமெரிக்கப் பயணம் அவரது இஸ்லாத்தின் மீதான பற்றை மேலும் அதிகரித்திருக்கிறது என்பதையும் அமெரிக்காவின் இஸ்லாமிய விரோதப் போக்கை அவர் தொடர்ந்தும் விமர்சன நோக்கில அணுகிவருகிறார் என்பதற்கு அவரது அமெரிக்கப் பயணத்தின் பின்னரான அவரது வானொலி, பகிரங்க உரைகள் சிறந்ந சான்றாகும்.
இந்திய மற்றும் இங்கிலாந்துப் பயணங்கள்
2012ம் ஆண்டு ரமழான்-ஓகஸ்ட் மாதம் முதல் பகுதியில் இடம்பெற்ற காயல்பட்டணத்துக்கான அவரது தர்வாப் பயணமும் குறிப்பிடத்தக்கதாகும். அங்குள்ள ஜாமிஉல் அஸ்ஹர் பள்ளிவாயல்ஃ இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன்(IIM) ஆகியவற்றின் நிருவாகிகளதும் மற்றும் தர்வாப் பணி நண்பர்கள் சிலரதும் அழைப்பின் பேரில் அங்கு சென்ற அவர் ளுஹர் மற்றும் தராவீஹ் தொழுகைகளின் பின்னர் முக்கியமான சில தலைப்புக்களில் விரிவுரைகளை நிகழ்த்தினார். கொள்கை ரீதியில் பல சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ள காயல்பட்டண மக்களுக்கு பல தெளிவுகளை வழங்கும் வகையில் அவரது உரைகள் அமைந்திருந்தன. ஜாமிஉல் அஸ்ஹர் மற்றும் IIM நிருவாகிகள் ஆகியோருடன் இடம்பெற்ற முக்கியமான கலந்துரையாடல்களின் போது இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் தென்னிந்திய முஸ்லிம்களுக்குமிடையில் மார்க்க அடிப்படையிலான உறவுகள் வலுப்படுத்தப்படுவதன் அவசியம் உணர்த்தப்பட்டதுடன், காயல்பட்டணத்தில் சகல வசதிகளுடனும் கூடிய ஓர் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தை உருவாக்குவது, ஏலவே இயங்கிவரும் ஆயிஷா சித்தீக்கா மகளிர் கல்லூரியின் தரத்தை மேலும் அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதுஇ இலங்கையின் அறிஞர்கள் சன்மார்க்கப் பணிக்காக தென்னிந்தியாவுக்கு வருகை தருவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது என்பன ஆராயப்பட்டன. அஷ்ஷெய்க் பளீலின் உரைகள் உடனுக்குடன் உள்ளக தொலைக்காட்சியில் நேரடியாகவும், காயல்பட்டண வெப்தளத்திலும் ஒளிபரப்பப்பட்டன.
2013 ஆம் ஆண்டு ஜுன் மாதம் United Kingdom – ஐக்கிய இராச்சியத்துக்கு அவர் மேற்கொண்ட பயணமும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கையர்களால் உருவாக்கப்பட்டு சிறப்பாக இயங்கும் இஸ்லாமிய பிரசாரத்துக்கும் சமூகப் பணிகளுக்குமான Sri Lanka Islamic Forum(SLIF) எனப்படும் அமைப்பினரின் விசேட அழைப்பின் பேரில் அங்கு சென்ற அவர் அவ்வமைப்பின் பத்தாவது வருடாந்த மாநாட்டில் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு பிரதானமான இரு தலைப்புக்களில் உரைநிகழ்த்தியதுடன் அங்கு அவர் தங்கியிருந் பத்து நாட்களிலும் மில்டன் கீன்ஸ்ஃஹெரோஃலெஸ்டர் உள்ளிட்ட பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல்கள், உரைகள் என்பவற்றிலும் கலந்துகொண்டார்.
அஷ்ஷெய்க் பளீல் அவர்களது பங்களிப்புகள் :
- தேசிய சூரா சபையின் உபதலைவர்
- நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பின் உயர்மட்ட ஆலோசனை சபை உறுப்பினர்
- குரீகொட்டுவ அல்ஹாதியா அரபுக்கல்லூரி ஆலோசனை சபை, பாடவிதானக் குழு உறுப்பினர்
- கல்எலிய மகளிர் அரபுக் கல்லூரி கல்வி அபிவிருத்திக் குழுத் தலைவர்
- அஹதிய்யா பாடவிதானக் குழு உறுப்பினர்
அவரது கொள்கைகளும் இலக்குகளும்
- முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீக, குடும்ப, அரசியல், பொருளாதார, கல்வித்துறை மேம்பாடுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
2. சகல பிரச்சினைகளுக்கும் ஆன்மீக வறுமை காரணமாக அமைவதால் சகல மட்டங்களிலும் ஷதர்பியா| முயற்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
3. முஸ்லிம்களது சிந்தனைத் தெளிவும் அறிவு வளர்ச்சியும் மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பது சமூகத்தை வெகுவாகப் பாதித்துள்ளது. எனவே, பரவலாக மார்க்க, உலகக் கலைகளில் துறைசார் நிபுணர்களை உருவாக்குவதோடு சமூகத்தின் பொதுவான அறிவு மட்டத்தை உயர்த்தவும் ஏற்பாடுகள் தேவை.
4. சமூக ஐக்கியம் தொடர்பில் கூடிய கரிசனை தேவை.
5. இஸ்லாத்திற்கெதிரான சூழ்ச்சிகளை சரியாக இனம் கண்டு முறியடிக்க வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.
6. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு என்ற ஒழுங்கில் கட்டம் கட்டமான உருவாக்கங்கள் இடம்பெற வேண்டும்.
இணையத்தில் அவர்
அஷ்ஷெய்க் பளீல் அவர்களது ஆக்கங்கங்களையும் உரைகளையும் பின்வரும் இணைய தளங்களில் பெற்றுக்கொள்ள முடியும்:
- www.slhub.lk
- www.slmuslims.com
- www.slbayan.com
Professional Designations
Sheikh Faleel has held numerous prestigious positions throughout his career:
Senior Lecturer - Jamiah Naleemiah, Beruwala (30 years)
Head of Academic Programs - Jamiah Naleemiah (20 years)
Dean of Faculty of Islamic Studies - Jamiah Naleemiah (1 year)
Educational Background
Ash Sheikh S.H.M. Faleel’s academic journey has been both extensive and distinguished:
1976
Al Iqbal Muslim Maha Vidyalaya, Nachchaduwa
1979
Vivekananada Tamil Maha Vidyalaya, Anuradhapura
1987
Licentiate Certificate in Arabic and Islamic Studies
Jamiah Naleemiah, Beruwala
1987
Bachelor of Arts (BA)
University of Peradeniya, Sri Lanka.
1996
Diploma in Teaching Arabic for Non-Arabs (Dip. in TA)
King Saud University, Riyadh, Saudi Arabia
2000
Master of Arts (MA)
University of Peradeniya, Sri Lanka.
1976
Master of Philosophy (MPhil.)
University of Peradeniya, Sri Lanka.
Thesis: “Concept of Tolerance and Coexistence in Islam and its Application in a Pluralistic Society with Special Reference to Sri Lanka”
Academic & Official Assignments
Sheikh Faleel has contributed significantly to various committees and organizations:
-
Member:
Inter-Religious Advisory Committee to the President of Sri Lanka for Reconciliation and Interfaith Dialogue
-
Team Leader:
Muslim Theologians in Council for Religious Leaders for Reconciliation, Ministry of Buddasasana, Sri Lanka
-
Deputy President:
National Shoora Council of Sri Lanka
-
Member:
Global Network of Religions for Children (GNRC) Sri Lanka
-
Member:
Curriculum Board for Islam Subject, National Institute of Education (NIE)
-
Paper Setter and Chief Controller:
Paper setter and chief controller in some subjects in the ministry of Examination
-
President:
Education Development Committee, Muslim Ladies Arabic College, Kal-Eliya
-
Advisory Committee Member:
Hadiyya Ladies Arabic College, Kurikotuwa
-
Advisory Committee Member:
Rabitha An Naleemiyyeen (Jamiah Naleemiah Alumni)
International Lecture Tours
Sheikh Faleel's teachings and insights have reached a global audience through numerous international lecture tours:
State of Kuwait
2002
India
(Tamil Nadu - Kayalpattinam) 2012
Bahrain
2013
United Kingdom
2013
Qatar
2013
Seminars and Workshops
He has participated in and contributed to many seminars and workshops around the world, focusing on topics such as interfaith dialogue, social justice, and child rights.
-
Participated in the International Seminar in Bahrain capital Manama organized by ‘The Committee for Helping the Prophet (Sal)’ after the Denmark Cartoon Issue. (22-25 March 2006) 3 Days.
-
Participated in the International Visitor Leadership Program for seven religious leaders of Sri Lanka in USA Arranged by Mississippi Consortium for International Development (MCID) under the theme of “Religion and Social Justice in America” (28 June -16 July 2010) 21Days.
-
Participated as a resource person with other two international resource persons in an Advocacy campaign workshop held in Villa Ocean View Hotel-Wadduwa during 23- 25 May 2015.
-
Participated as a panelist at a Roundtable discussion held on 23rd of August 2017 at Sarvodaya HQ and presented a paper on Child Rights and Protection an Islamic Perspective. UNICEF, Walpola Rahula Institute, Sarvodaya and Arigatou international Geneva were core organizers. Theme of the Roundtable Discussion was Strengthening Families to Foster Values and Nurture Spirituality in Early Childhood for the Prevention of Violence Against Children – The Role of Religious Communities.
-
Participated in a Global Summit which was held from 23-25 , 2018 on “Mindfulness” organized by Sathi Pasala Foundation and presented a paper on “Child care and Mindfulness an Islamic Perspective” Participated as Resource person in several workshops and seminars organized locally for Ulamas (Muslim Religious leaders) community leaders, teachers, parents & trustees of Masjids as a trainer and motivator.
-
Participated in Second International Workshop on Buddhist-Muslim and inter-faith relations in South and South-East Asia which was held in Jakarta, 16 to 19 December 2019 and organized by KAICIID International Dialogue Centre and of the Organization of the Islamic Cooperation (OIC) under the theme of “Religious dialogue to prevent and mitigate conflicts in South and South-East Asia”,
-
Resource Person, Ministry of Education, National Institute of Education (NIE) and Department of Muslim Religious & Cultural Affairs.
-
08 - Conferences / Symposiums / Workshops
-
a) Participated in the International Seminar in Bahrain capital Manama organized by ‘The Committee for Helping the Prophet (Sal)’ after the Denmark Cartoon Issue. (22-25 March 2006) 3 Days.
-
b) Participated in the International Visitor Leadership Program for seven religious leaders of Sri Lanka in USA Arranged by Mississippi Consortium for International Development (MCID) under the theme of “ Religion and Social Justice in America” (28 June -16 July 2010) 21Days.
-
c) Participated as a resource person with other two international resource persons in an Advocacy campaign workshop held in Villa Ocean View Hotel-Wadduwa during 23- 25 May 2015.
-
d) Participated in the Seminar and workshop on training on strategic partnership with Muslim religious leaders in Family Planning which was held in Jakarta & Purwokerto, Indonesia, 23- 28 April 2018
-
e) Participated as Resource Person in a workshop organized by the Expatriates in state of Kuwait and delivered a speech on “Concept of tolerance and coexistence in Islam and Muslims role in Nation Building” which was held in Kuwait 20-24 November 2019
-
f) Participated as Resource person in several workshops and seminars organized locally for Ulamas (Muslim Religious leaders) community leaders, teachers, parents & trustees of Masjids as a trainer and motivator.
-
f) Participated as Resource person in several workshops and seminars organized locally for Ulamas (Muslim Religious leaders) community leaders, teachers, parents & trustees of Masjids as a trainer and motivator.
Dissertations And Thesis Submitted
Sheikh Faleel has contributed significantly to various committees and organizations:
-
Social changes from an Islamic viewpoint
Dissertation Submitted (in Arabic) to Jamiah Naleemiah, Beruwala, Srilanka, Dec.1986 for the final examination
-
The Present situation of Arabic Language in Sri Lanka
Dissertation Submitted (in Arabic) to King Saud University, Riyadh, Saudi Arabia, March 1996, for the Higher Diploma in Teaching Arabic for Non-Arabs
-
Concept of Tolerance and Coexistence in Islam and its application in a pluralistic society with special reference to Sri Lanka
(in Tamil) Thesis Submitted to the University of Peradeniya, Sri Lanka March 2015, for the Master of Philosophy(M.Phil.)
Contributions To The Media:
Sheikh Faleel has held numerous prestigious positions throughout his career:
Writer, Researcher:
many articles in local and foreign journals, Magazines and Newspapers.
Regular Artist
Regular Artist in Sri Lanka Broadcasting Corporation, Muslim Service, Shakthi FM (Radio Programs).
Regular contributor
Regular contributor in Sri Lanka Rupawahini Corporation, Eye Channel, Wasantam TV (TV Talk shows and Discussions).
Book and Publications
Some of his notable books include:
Yaar Inda Thasleemima Nasreen
(Tamil- Thasleemna Nasreen Feminist-an Islamic viewpoint). February ,1995
Islamum Thodarpu Saathanankalum
(Tamil - Islam and Mass media). February,1996
Sakipputh Thanmaikkum Samaathana Saka waalvukkaana Islaamiya Adippadaikal
(Tamil- Islamic Concept and Basics for Tolerance and Coexistence) March,2014
Iyyaka nau’budu wa iyyaaka nasthayeen
(Tamil- You alone we worship and you alone we ask for help).Feb,2005
Muslimkal Aikkiyappaduwarkala?
(Tamil Translation from Arabic text -Guidelines for Muslims Unity). Oct.2003
Naalaiyya Muslim Pen
(Tamil Translation from Arabic text - Muslim woman as a role model). Feb.1997
Sri Lankave Aagamika Sahindiyava Islamaya Paryaavalokaya”Sri Lankave Aagamika Sahindiyava Islamaya Paryaavalokaya
(Sinhala)The Religious Harmony in Sri Lanka-An Islamic Perspective March 2018
325
Revenue in 2017 (Million)
525
Collaegues & Counting
302
Successfully Project
25
Year of experience
Sustainability
Committed To Keep People Healthy & Safe
We Follow Best Practices
- Sustainablility
- Project On Time
- Modern Technology
- Latest Designs
About Me
Pellentesque vel tempus ultrices fringilla feugiat sagittis, fermentum eget nunc lacus, mi ut eros sed a tincidunt massa amet tellus tempor, nec curabitur ultricies.
Consequat neque fermentum facilisi neque lacus elit velit ultrices aliquam nibh lorem arcu consequat mauris lacus, risus egestas quam dictum enim diam sociis volutpat vel id id non interdum sollicitudin sit est arcu vulputate quis vulputate facilisi in nibh urna.
- Arcu nisl ut fermentum, ut molestie in eu ipsum condimentum
- Quis in lobortis nunc ullamcorper sit mollis eget nulla ultricies volutpat adipiscing
- Non sit vulputate praesent praesent dignissim platea aenean sed scelerisque aliquam facilisis
- Vestibulum suscipit nisi lectus leo ut congue nec sed eu at
Exceptional Service
Practical Financial Advice You Can Count on
Focus Your Time and Efforts on Running Your Business and Leave the Accounting to Me
I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.
About Us
Welcome to the Official Website of Ash Sheikh S.H.M. Faleel (Naleemi)
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Building Staffs
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar.
History Emphasis
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar.
Economic Outcomes
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar.
