அண்மை காலங்களில் வாகன விபத்துக்கள் அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கது.
இதற்கு வாகன சாரதிகளது அமைதியற்ற மனநிலை முக்கிய காரணம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Unveiling the Influence of Psychological Factors on Traffic Accidents and Driver Behavior: Statistical
“சாலை விபத்துகள் மற்றும் ஓட்டுநர் நடத்தை மீது உளவியல் காரணங்களின் தாக்கம்: புள்ளியியல் ஆய்வு”
எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள ஓர் ஆக்கத்தில் பின்வரும் குறிப்புகள் இருப்பது கவனிக்கத்தக்கது:-
Your mental state can have a huge impact on your driving behavior and the safety of everyone on the road. Whether you are feeling stressed, tired, or distracted, your brain is doing a lot of work behind the scenes, and distracted driving is one of the type of behavior that can lead to accidents.
உங்கள் மன நிலை, உங்கள் ஓட்டும் பழக்கத்திலும், சாலையில் இருக்கும் அனைவரின் பாதுகாப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். நீங்கள் மன அழுத்தம், தூக்கமின்மை அல்லது கவனச்சிதறலுடன் இருந்தால் கூட, உங்கள் மூளை பின்னணியில் பல வேலைகளை செய்து கொண்டே இருக்கும். அதனால் கவனச் சிதறலுடன் ஓட்டுவது, விபத்துகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு நடத்தை வகையாகும்.
Researchers have found that drivers with high stress or anxiety levels are far more likely to be involved in an auto accident than drivers with a calm state of mind.
ஆய்வுகள் கூறுவதாவது, அதிக மன அழுத்தம் அல்லது பதட்ட நிலை கொண்ட டிரைவர்களுக்கு அமைதியான மனநிலையுடன் உள்ள டிரைவர்களை விட விபத்தில் சிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
Almost 80% of drivers have admitted to experiencing extreme bouts of aggression, anger, and road rage while driving.
ஓட்டுநர்களில் சுமார் 80% பேர், தாம் வண்டி ஓட்டும் போது கடும் கோபம், ஆத்திரம் மற்றும் சாலைக் கோபம் போன்ற உணர்ச்சிகளை அனுபவித்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
மேலும் வாசிக்க:-
எனவே, வாகனம் ஓட்டுகின்ற பொழுது தொலைபேசியில் உரையாடுவது குழப்பமான மனநிலையில் இருப்பது போன்றன பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் பிரயாணம் செய்யும் பலர் வலது கையால் ஒரு ஹென்ட்லை பிடித்துக்கொண்டும் இடது கையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளை செலுத்துகிறார்கள்.
இன்னும் பலர் ஒரு கையால் வாகனத்தை ஓட்டும் போது மறுகையில் தொலைபேசியை வைத்துக்கொண்டு உரையாடிய வண்ணம் பயணிக்கிறார்கள். தொலைபேசியில் மறுபுறத்தில் உரையாடுபவர் சில போது தெரிவிக்கும் கருத்துக்கள் மூளையை வெகுவாகப் பாதித்தால் மோட்டார் சைக்கிளை அல்லது ஏனைய வாகனங்களை ஓட்டிக் கொண்டிருப்பவரை மாத்திரமல்ல வாகனத்தில் பயணிக்கும் சிறார்கள் பெண்கள் நோயாளிகள் போன்ற அனைவருக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்வதில்லை.
இலங்கையைப் பொறுத்தவரையில் தனியார் மற்றும் அரச பேருந்துகளை ஓட்டுபவர்கள் தமக்கிடையே பலத்த போட்டி மனப்பாங்கோடு நடந்து கொள்கிறார்கள்.அதிக பணம் உழைக்க வேண்டும் என்பதே அவர்களது இலக்காக இருக்கிறது. இதனால் போட்டி போட்டுக் கொண்டு வாகனம் ஓட்டி விபத்துகளை சந்தித்தவர்கள் பலர். இதனால் அவர்களை நம்பி வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் பலிக்கடாக்களாகிறார்கள்.
நாட்டு சட்டங்கள் எவ்வளவு கடுமையாக இருந்த பொழுதிலும் ஓட்டுநர்களது மனப்பாங்கில் மாற்றம் வராத வரை எவ்வித மாற்றத்தையும் பாதைகளில் காண முடியாது.
எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப் படி தான் எல்லாம் நடக்கிறது என்பதை ஆழமாக விசுவாசிப்பவர்கள் நாம். ஆனால் எமது அழிவை நாமே தேடிக் கொள்ளக் கூடாது. உயர்ந்த பட்சம் எமது தற்காப்பில் நாம் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.
அல்லாஹ் அனைவரையும் பாதுகாப்பானாக!