1. கொலைக்குக் கொலை என்ற இஸ்லாமிய சட்டத்தை விமர்சிப்பது ரித்தத்தாகும். அல்லாஹ்வையே விமர்சிப்பதாகும்.
2. சவூதி அரேபிய அரசும் நீதித்துறையும் ரிஸானாவை விசாரித்த முறையிலும் தண்டனை வழங்கிய விதத்திலும் தவறு நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறுங்கள்.
3. இஸ்லாத்தை விமர்சிக்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த இனவாதிகளுக்கு வாய்க்கு அவல்| கிடைத்தது போன்று, ரன்ஜன் ராமனாயக்க BBC க்கு 10ஆம் திகதி இரவு வழங்கிய பேட்டியில் சவுதி சிறையில் மேலும் சிலர் கொலைத் தண்டனையை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர்களில் ஒருவர் தனது அறையில் சிலையையும் மற்றொருவர் சிலுவையையும் வைத்திருந்த குற்றத்துக்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். எனவே, இஸ்லாத்தை மட்டம் தட்டும் யுத்தம் ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. தற்போது வேகமாகி வருகிறது. பெண்களது உரிமையை இஸ்லாம் பறித்துவிட்டது, இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது. நபி(ஸல்) அவர்களது குடும்ப வாழ்வு மோசமானது, மிருகவதையை இஸ்லாம் கொடூரமாக அங்கீகரிக்கிறது என அது தொடர்கிறது.
எமது கருத்து:
1. இஸ்லாத்தை அறிய அது சட்டங்களில் பொதிந்துள்ள சிறப்பம்சங்களை புரிய வைக்க அரிய சந்தர்ப்பம். நழுவவிடலாகாது.
2. இலங்கையிலுள்ள சவுதி அரேபிய தூதுவராலயத்துக்கும் சவுதி அரேபியாவிலிருந்து பண உதவி பெற்று இயங்கிவரும் Ngo களுக்கும் உலமாக்களுக்கும் ஒரு பெரிய பொறுப்புள்ளது. ரிஸானாவின் விவகாரத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை சவுதி அரசு கையாண்ட விதம், விசாரணைகளில் கையாளப்பட்ட ஒழுங்குவிதிகள் பற்றியெல்லாம் சுருக்கமாகவேனும் இலங்கையருக்கு தெரிவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.அதற்காக ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை உடனடியாக கூட்டவேண்டும்.அல்லது பத்திரைகளுக்கு தெளிவான அறிக்கை வெளியிடப்பட வெண்டும்.
3. சவுதி அரசாங்கம் இது விடயமாக அசட்டை செய்தால், நாம் எதனையும் செய்வோம். யாரும் கேட்பதற்கு உரிமையில்லை என்று நினைத்தால் அது இஸ்லாத்தையும் இங்குள்ள முஸ்லிம்களையும் பாதிக்கும் என்பதை அது மறக்கலாகாது.
ஏற்கனவே, வீட்டுப் பணிப்பெண்கள் விடயமாக அரபு எஜமானர்கள்; பற்றி முன்வைக்கப்பட்ட பல குற்றச்சகட்டுக்களுக்கு இன்னும் விளக்கம் வழங்கப்படவில்லை. வீட்டுப் பணிப்பெண்களது கைகளில் ஊசி ஏற்றப்பட்டமை, பல பெண்கள் பாலியல் ரீதியாக பலாத்காரப்படுத்தப்பட்டமை, துன்புறுத்தப்படுகின்றமை பற்றியெல்லாம் உள்ளுர் மீடியாக்கள் வாய் கிழியக் கத்திய போது இந்த நாட்டில் சவுதியுடன் தொடர்புள்ளவர்கள் தெளிவான கருத்தக்களை கூறவில்லை. இந்த மௌனம் பயங்கரமான விளைவுத் தரும்.
ரிஸானா நபீக் தண்டணை அனுபவிக்க இன்னும் பலர் காரணமாக அமைந்திருக்கிறார்கள்.
* ரிஸானா விடயத்தில் சவுதி அரசு நடந்த முறை பற்றி விமர்சிப்பவர்கள் இலங்கையில் நடைபெறும் பயங்கரமான கொலைகள் பற்றி என்ன கூறுவார்கள்?
* மனைவியையும் 3 வயதுள்ள மகளையும்; கழுத்தை நெரித்து கொண்டு தீயிட்டுப் பொசுக்கியவனுக்கு மரணதண்டனை வழங்கப்படுமா?
* புறக்கோட்டை மேம் பாலத்தில் பொலிஸ் காதலியை கத்தியால் தாறுமாறாகக் குத்திக் கொண்டவதையும் மன்னிப்பீர்களா?
* தென் மாகாணத்தில் பிரதேச சபைத் தலைவரும் அவருடன் 14 பேரும் பாலியல் வக்கிரமம் செய்யவில்லையா?
இன்னும் பல பல….
இவற்றுக்கான தண்டனைகள் மன்னிப்புத்தானா? இலங்கையில் இடம்பெறும் குற்றங்களுக்கு அரபு நாட்டுப்பாணியிலான தண்டனைகள் தான் தேவை என்று பல மதகுருக்களும் ஏன் அரசியல்வாதிகளும் கூறவில்லையா?
மேலும், இஸ்லாத்தில் கூறப்படும் குற்றவியல் தண்டணைகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தவை.அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பின்வரும் முன்நிபந்தனைகள் தேவை.
1.குடிமக்களிடம் ஈமானிய பக்குவமும் இஸ்லாமிய சட்டங்கள் பற்றிய நல்லபிப்பிராயமும்
2.நன்மைகளை வளர்ப்பதற்கான ஏற்பாடுகள்
3.தீமைகள் வளர்வதற்கான வழிகள் அடைக்கப்பட்டிருத்தல்
4.அங்க சம்பூரணமபன இஸ்லாமிய அரசும் பொருத்தமான இஸ்லாமிய ஆட்சியாளர்களும்
மேற்கூறப்பட்ட நிபந்தனைகளை சவுதி அரசு பெற்றிருந்தால் அதற்கு இஸ்லாத்திற்கு உரிமை கொண்டாட உரிமை உண்டு. எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே.




