Interfaith Conference Held in Jaffna

The Interfaith Conference was held on Saturday(04.10.2025) at the Thiruvalluvar Cultural Hall in Jaffna from 9:00 a.m. to 2:30 p.m.

The conference, organized by the Jaffna District Interfaith Council, was conducted under the theme “Religious Values that Guide Us Toward National Unity.”

Shiva Sri Krupananda Gurukkal, the President of the Interfaith Council and the Chairman of the Conference made the welcome address. The chief guest Vice-Chancellor of the University of Jaffna, Professor Srisatkunarajah, delivered the keynote address of the event.

Several other religious leaders were invited as special and honorary guests, along with hundreds of social activists and academics representing four major religions.

A key feature of the conference was the series of special speeches delivered by representatives of each faith.

Dr. P. Pennuthurai Chandrasekaran, Senior Lecturer at the University of Jaffna, spoke on behalf of Hinduism, Venerable Vanaskama Indarathana Thero, Chief Monk of Mangala Buddha Vihara in Tamil Nadu, represented Buddhism, and Rev. Fr. S.M. Selvaratnam, Spiritual and Counseling Advisor, spoke on behalf of Christianity.

I too was invited to deliver a speech representing Islam, and I was able to present my views for about thirty minutes on the topic “Islamic Guidelines for Achieving Peace and National Unity in Sri Lanka.” Alhamdulillah!

Many of the speakers, including those who delivered addresses and keynote speeches, pointed out that past bitter incidents in the country were rooted in religious and ethnic extremism. It was emphasized that the contribution of religious leaders is crucial for moving forward toward a peaceful future.

The importance of virtues such as compassion, tolerance, justice, and fairness was also highlighted.

During the event, cultural performances from each religion were staged, and the summaries of the speeches were published as a small booklet.

The entire program was remarkably well-planned and organized.

At the conclusion of the conference, several resolutions were passed, which were read out by Father Rajkumar, the Secretary of the Jaffna District Interfaith Council. Among them was a resolution calling for a ceasefire in Gaza, which was also adopted.

It was emphasized that such interfaith dialogues and conferences should be held frequently in various parts of the country.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சர்வமத மாநாடு

இன்று (04.10.2024) சனிக்கிழமை சர்வமத மாநாடு யாழ்ப்பாணத்திலுள்ள திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் பகல் 2.30 வரை நடைபெற்றது.
‘தேசிய ஒற்றுமையை நோக்கி எம்மை வழிநடாத்தும் சமய விழுமியங்கள்’ எனும் மகுட வாசகத்தைத் தாங்கி இடம்பெற்ற இந்த மாநாட்டை யாழ் மாவட்ட சர்வமத பேரவை ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தலைமையுரையை சர்வமத பேரவையின் தலைவரும் மாநாட்டின் தலைவருமான சிவசிரீ கிருபானந்தக் குருக்கள் நிகழ்த்தினார்.ஆசியுரைகளை நான்கு மதங்களைச் சேர்ந்த மதத்தலைவர்கள் நிகழ்த்த பிரதான உரை விழாவின் பிரதம அதிதியும் யாழ் பல்கலைக்கழக உபவேந்தரருமான பேராசிரியர் சிரிசற்குணராசா அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

சிறப்பு மற்றும் கெளரவ விருந்தினர்களாக மேலும் பல மதத் தலைவர்களும் அழைக்கப்பட்டு அவர்களும் மேலும் நான்கு மதங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் சமுகம் தந்திருந்தனர்.

இந்த மாநாட்டில் முக்கிய அம்சமாக சிறப்புரைகள் இடம்பெற்றன. அந்த வகையில் இந்து மதத்தின் சார்பில் யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பெ.பென்னுத்துரை சந்திரசேகரன் அவர்களும் பெளத்த மதத்தின் சார்பில் தமிழ்நாடு மங்கள புத்த விகாரையின் தலைமைத் தேரர் வனஸ்கம இந்தரதன தேரர் அவர்களும் கிறிஸ்தவம் சார்பில் ஆன்மீக, உளவளத் துணையாளர் அருட்தந்தை எஸ்.எம்.செல்வரட்ணம் அவர்களும் கலந்து கொண்டு தத்தமது மதங்கள் சார்பிலான கருத்துக்களை முன்வைத்தனர்.
இந்த மாநாட்டில் இஸ்லாம் சார்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்படி எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையால் “இலங்கையில் சமாதானத்தையும் தேசிய ஒற்றுமையையும் அடைவதற்கு இஸ்லாம் காட்டியுள்ள வழிமுறைகள் எனும் தலைப்பில் சுமார் முப்பது நிமிடங்களுக்கு கருத்துக்களை முன்வைக்க முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்!

கடந்த காலங்களில் இடம் பெற்ற கசப்பான சம்பவங்களுக்கு பின்னணியில் மதவாதம், இனவாதம் இருந்தது என்பதை மாநாட்டில் ஆசியுரை வழங்கியவர்களும் பிரதான உரைகளை நிகழ்த்திய பலரும் சுட்டிக்காட்டினர். எதிர்காலத்தை நோக்கி நகர்வதற்கு மதத் தலைவர்களது பங்களிப்பு மிக அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

இரக்கம், விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு நீதி, நியாயம் போன்ற விழுமியுங்கள் அவசியம் என்பது பற்றியும் நினைவூட்டப்பட்டது.

நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு சமயத்தைச் சேர்ந்தவர்களதும் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன் நிகழ்த்தப்பட்ட உரைகளது சாரம்சம் ஒரு சிறிய நூலாகவும் வெளியிடப்பட்டது.
மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் மிகவும் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாநாட்டின் இறுதியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அந்த தீர்மானங்களை யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் செயலாளர் பாதர் ராஜ்குமார் வாசித்தார்.அதில் காஸாவில் போர் நிறுத்தம் வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற சர்வமத கலந்துரையாடல் நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் அடிக்கடி நிகழ்வது அவசியமாகும்.

යාපනයේ සංයුක්ත ආගමික සම්මන්ත්‍රණය

පසුගිය සෙනසුරාදා උදෑසන 9.00 සිට පස්වරු 2.30 දක්වා යාපනයේ තිරුවල්ලුවර් සංස්කෘතික මණ්ඩපයේ දී සංයුක්ත ආගමික සම්මන්ත්‍රණයක් පැවැත්විණි.

“ජාතික ඒකාබද්ධතාවය වෙත මග පෙන්වන ආගමික වටිනාකම්” යන තේමාවෙන් යුතු ව මෙම සම්මන්ත්‍රණය යාපන දිස්ත්‍රික්ක සංයුක්ත ආගමික මණ්ඩලය විසින් සංවිධානය කර තිබුණි.

සංයුක්ත ආගමික මණ්ඩලයේ සභාපති ශිව ශ්‍රී කෘපානන්ද ගුරුක්කල් මහතාගේ ප්‍රධානත්වයෙන් සම්මන්ත්‍රණය පවත්වන ලදී. ප්‍රධාන ආරාධිත අමුත්තා වූ යාපන විශ්වවිද්‍යාලයේ උපකුලපති මහාචාර්ය ශ්‍රීසත්කුණරාජ මහතා විසින් ප්‍රධාන දේශනය කරන ලදී.

විවිධ ආගමික නායකයින් කිහිපදෙනෙකු විශේෂ සහ ගෞරවණීය අමුත්තන් ලෙසත්, එසේම ආගමික ප්‍රජාවලට අයත් සමාජ සේවකයින් සහ අධ්‍යාපනවේදීන් රැසක්ද සම්මන්ත්‍රණයට සහභාගී විය.

මෙම සම්මන්ත්‍රණයේ ප්‍රධාන අංගයක් ලෙස විවිධ ආගම් නියෝජනයෙන් විශේෂ දේශන පැවැත්විණි. එසේ ම හින්දු ආගම නියෝජනය කළේ යාපන විශ්වවිද්‍යාලයේ ජ්‍යේෂ්ඨ අධ්‍යපක ඩො. පී. පෙන්නුතුරයි චන්ද්‍රසේකරන් මහතාය. බෞද්ධ ආගම නියෝජනය කරමින් දමිළනාඩුවේ මංගල බුද්ධ විහාරයේ ප්‍රධාන හිමිකරු වනාස්කම ඉන්ද්‍රධන හිමියන් දේශනය ඉදිරිපත් කළ අතර ක්‍රිස්තු ආගම නියෝජනය කළේ ආත්මීය හා මනෝවිද්‍යා උපදේශක ගරු එස්. එම්. සේල්වරත්නම් පියතුමා විසිනි.

ඉස්ලාම් ආගම නියෝජනය කරමින් “ශ්‍රී ලංකාවේ සාමය හා ජාතික ඒකාබද්ධතාවය ලබා ගැනීමට ඉස්ලාම් දක්වන මගපෙන්වීම්” යන මාතෘකාව යටතේ මිනිත්තු තිහකට අධික කාලයක් මගේ අදහස් ඉදිරිපත් කිරීමටද මට අවස්ථාව ලැබුණි. අල්හම්දුලිල්ලාහ්!
ආරාධිත දේශකයින් සහ ප්‍රධාන දේශනාවන් ඉදිරිපත් කළ අය බොහෝ දෙනෙක් ඉතා පැහැදිලිව අවධාරණය කළේ, අතීතයේ සිදු වූ තුවාලකාරී සිදුවීම් බොහෝ විට ආගමික හෝ ජාතිවාදී අතිරේකව නිසා වූ බවය. අනාගතයට සාමකාමී මගක් උදෙසා ගමන් කිරීමට
ආගමික නායකයින්ගේ සක්‍රීය සහභාගීත්වය අත්‍යවශ්‍ය බවද එහි දී වැඩිදුරටත් ප්‍රකාශ කරන ලදී.

කරුණාව, සමාව, සාධාරණය සහ නීතිය වැනි ආගම්පරම පාරමිතා ඉතා වැදගත් බවද මෙහි දී සඳහන් කරන ලදී.
මෙම අවස්ථාවේ දී විවිධ ආගම් නියෝජනය කරමින් කලාත්මක වැඩසටහන් ද ඉදිරිපත් කළ අතර සියලු ම දේශනාවන්ගේ සාරාංශයක් අඩංගු කුඩා ග්‍රන්ථයක් ද ප්‍රසිද්ධ කරන ලදී.

සම්මන්ත්‍රණය ඉතා සැලසුම්ගත ව සහ ක්‍රමානුකූලව පවත්වා තිබීමද විශේෂයෙන් කැපී පෙනුණි.

අවසානයේ දී විවිධ තීරණවලට එළඹුණු අතර, ඒවා යාපන දිස්ත්‍රික්ක සංයුක්ත ආගමික මණ්ඩලයේ ලේකම් රාජ්කුමාර් පියතුමා විසින් සඳහන් කරන ලදී. ඒ අතර ගාසා ප්‍රදේශයේ යුද්ධය නවත්වන්නැයි ඉල්ලූ තීරණයක් ද අනුමත කරන ලදී.

මෙවන් ආගමික සංවාද හා සම්මන්ත්‍රණ වැඩසටහන් රටේ විවිධ ප්‍රදේශවල නිතර සංවිධානය විය යුතු බව ද මෙහි දී වැඩිදුරටත් අවධාරණය කරන ලදී.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top