அஷ்ஷைக் பளீல்
ஓர் ஆன்மீகப் பார்வை
மஜ்மா நகரில் முஸ்லிம்களதும் பிறசமயத்தவரதும் சுமார் 4000 உடல்கள் அடக்கப்பட்டன. அந்த உடல்களை நாட்டின் நாலா பாகங்களிலிருந்தும் எடுத்துச்செல்ல அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த உடல்கள் ஒவ்வொன்றுடனும் உறவினர்கள் அன்பர்களது வாகனங்கள் குறைந்தது ஒன்று, இரண்டு,மூன்று சென்றன.
மொத்தமாக எவ்வளவு டீசலும் பெற்றோலும் செலவழிக்கப்பட்டிருக்கும்? அந்தப் பெட்ரோலும் டீசலும் இன்று இருந்திருந்தால்?
அங்கு பெட்ரோலையும் டீஸலையும் வீணடித்த குற்றத்துக்காக அல்லாஹ் இப்போது இலங்கையில் அவற்றுக்கு பலத்த தட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருக்கின்றான்.
கொரோனாவினால் இறந்தவர்களை தற்போதும் தகனம் செய்வதுமில்லை. அவ்வாறு செய்வதற்கு மின்சாரமும் இல்லை.
புதிய சட்டத்தின் படி அடக்கம் செய்யப்பட்டால் தரைக்கீழ் நீர் பாதிக்கப்படுவதுமில்லை.!
என்ன அதிசயம்!!
*மின்சாரத் தட்டுப்பாடு ஏன்?*
கொரோனாவினால் இறந்தவர்களது உடல்கள் முழு உலகத்திலும் நல்லடக்கம் செய்யப்பட்ட போது இலங்கையில் மாத்திரம் தரை கீழ் நீர் பாதிக்கப்படும் என்று போலி காரணம் காட்டி எரித்தார்கள்; அதாவது தகனம் செய்தார்கள். அவ்வாறு ஒவ்வொரு உடலையும் தகனம் செய்வதற்கும் அதிக அளவு மின்சாரம் செலவழிக்கப்பட்டது. அதாவது, வீணடிக்கப்பட்டது. அந்த மின்சாரம் இன்றிருந்தால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது.
வீம்புக்காக மின்சாரத்தை வீணடித்ததற்காக அல்லாஹ் தற்போது இந்த நாட்டு ஆட்சியாளர்களையும் அங்கீகாரம் வழங்கிய மக்களையும் மெளனம் காத்த ‘நன்மக்களை’யும் தண்டித்திருக்கிறான்.
அநியாயத்திற்கும் பொய் புரட்டுக்கும் துவேசத்துக்கும் எல்லையுண்டு. அடக்குமுறை, அநீதி என்பனவற்றை அல்லாஹ் பொறுக்கவேமாட்டான். எத்தனையோ பேர் உள்ளத்தில் சொல்லொனாத் துயரங்களால் அழுது புலம்பினார்கள்.
அநீதிக்கு உட்பட்டவனது கண்ணீர் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் சிந்தப்படுகிற பொழுது அதற்கு நிச்சயம் பதில் கிடைக்கும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
دعوةُ المظلومِ مُستجابةٌ ، وإن كان فاجرًا ففُجورُه على نفسِه
أخرجه أحمد (8781)، والطيالسي (2450)، وابن أبي شيبة في ((المصنف)) (29987)
“அநியாயத்துக்கு உட்படுத்தப்பட்டவனது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் அவன் பாவியாக இருந்தாலும். அவனது பாவம் அவனோடு”
அல்லாஹ் மிகக் கவனமாகத் திட்டமிட்டு உலகை இயக்கிக் கொண்டிருக்கிறான். எமக்குள்ள அவசரம் அல்லாஹ்வுக்கு இல்லை.
அல்லாஹ் சூழ்ச்சி செய்பவர்களில் முதன்மையானவன் என்ற குர்ஆனின் வசனத்தை புரிய இது நல்ல சந்தர்ப்பமாகும்.
யா அல்லாஹ்! உன்னிடமே முறையிடுகிறோம். நீயே எமது பாதுகாவலன்.
உனது திட்டமிடலை கவனமாக விளங்கி படிப்பினை பெறும் சந்தர்ப்பத்தை யாவருக்கும் ஏற்படுத்துவாயாக.
நமது நாட்டுக்கு சுபீட்சமான எதிர்காலத்தை தருவாயாக!




