அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல்
பெருநாளைக் கொண்டாடுகின்ற, இன்ஷா அல்லாஹ் கொண்டாட இருக்கின்ற இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு :-
- முஸ்லிம்களுக்கு எதிரான கெடுபிடிகளும் அவர்கள் பற்றிய தப்பிப்பிராயங்களும் இருந்து வரும் இந்த காலகட்டத்தில் குர்பானி கொடுக்கின்ற பொழுதும் பெருநாளின் நிமித்தம் உல்லாசப் பயணங்கள் போகின்ற போதும் மிகவும் ஜாக்கிரதையாகவும் முன்யோசனையுடன் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
- கடந்த ரமழான் காலத்தில் வட மேல் மாகாணத்தில் இடம்பெற்ற இன வன்முறைகளின் காரணமாக பலர் தமது தொழில்களை இழந்நிருக்கிறார்கள். அல்லது தொழில்களுக்கு உரிய முறையில் செல்லும் வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். எனவே, அத்தகையவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கு இந்த தியாகத் திருநாளில் எமக்கு வரவேண்டும். அவர்கள் பற்றியும் இந்த நாளில் நாம் சிந்திக்க வேண்டும்.
- ஈஸ்டர் தாக்குதலில் சுமார் 250க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்த நிலையிலும் அங்கவீனமான நிலையிலும் வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் இருக்கிறார்கள். எனவே, பெருநாளில் எமது சந்தோஷங்களை வெளிப்படுத்துகின்ற பொழுது இப்படியான ஒரு நிலையும் இந்த நாட்டில் இருந்து வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
- சிரியா, காஷ்மீர், பலஸ்தீன்,சீனா போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் இன்னோரன்ன துன்பங்களை சந்தித்து வருகிறார்கள். நாம் சந்தோஷமாக பெருநாளைக் கழிகின்ற பொழுது அங்கெல்லாம் பலர் அகதி முகாம்களிலும் சிறைகளிலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான விடிவுக்காக பிரார்த்திப்பது எங்களுடைய கடமையாகும்.
- நாட்டில் இடம்பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி மக்களது வாக்குகளை எப்படியாவது சூறையாட வேண்டும் என்ற நோக்கில் இனவாத உணர்வுகளும் போட்டிகளும் தூண்டப்பட்டு விட்டன. அவை மென்மேலும் தூண்டப்படலாம். எனவே பொதுவாக இந்த நாட்டு மக்களும் குறிப்பாக முஸ்லிம்களும் இப்படியான ஒரு நிலை இருப்பதை கவனத்திற் கொண்டு தான் தமது சகல நடவடிக்கைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.
- தனிப்பட்ட லாபங்களுக்காகவும் சுயநலத்தின் காரணமாகவும் இயக்கங்கள் அமைப்புகள் மீது கொண்ட வெறியின் காரணமாகவும் காட்டிக் கொடுக்கின்ற, மூட்டி விடுகின்ற சிலர் முஸ்லிம் சமூகத்தில் இருந்து வருகிறார்கள். அல்லாஹ் அத்தகையவர்களுக்கு ஹிதாயத்தைக் கொடுக்க வேண்டும். அத்தகையவர்களது வலையில் முஸ்லிம் சமூகம் சிக்கிவிடாமல் தற்காத்துக் கொள்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். தமது மோசமான செயல்களில் இருந்து தூரமாக இருக்கும் படி அத்தகையவர்களுக்கு உபதேசிப்பது எமது கடமையாக இருக்கிறது.
- பெருநாள் தினத்தில் பெற்றார் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அயல்வீட்டார் போன்றவர்களிடம் சென்று சுகம் விசாரிப்பதும் வாழ்த்துக்களைப் பரிமாறுவதும் மிகவுமே வேண்டப்படுகிறது. சகோதர இனங்களைச் சேர்ந்தவர்களையும் இப்பட்டியலில் நாம் இணைத்துக்கொள்வது காலத்தின் தேவையும் மார்க்க ரீதியில் நன்மையைப் பெற்றுத் தரும் கைங்கரியமுமாகும்.
- எந்த சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வுடனான உறவை பலமாகவே வைத்துக்கொள்ள வேண்டும். அவன் மீதான ஆழமான விசுவாசம், இபாதத்ததுக்களில் ஈடுபாடு, எமது பண்பாடுகளின் பலம் என்பன நிச்சயமாக அல்லாஹ்வின் உதவியால் எம்மை பாதுகாக்கும். எனவே, ஆன்மீக ரீதியான பலமும் பண்பாட்டுப் பலமும் எமக்கு அவசியப்படுகிறது.
- எல்லாவற்றிற்கும் மேலாக இந்த துல்ஹிஜ்ஜா மாதத்தில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களதும் அவர் தம் குடும்பத்தாரதும் வாழ்வு முறையையும் தியாகங்களையும் நினைத்துப் பார்ப்பதும் வாழ்க்கையில் எடுத்து நடப்பதும் அவசியமாகும்.
قال تعالى (قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه)سورة الممتحنة – ٤
فقد أمر الله نبيه محمدا صلى الله عليه وسلم أن يتبع إبراهيم عليه السلام في قوله : ﴿ثُمَّ أَوْحَيْنَا إِلَيْكَ أَنِ اتَّبِعْ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ﴾[ النحل : 123 ].
وأمر سبحانه عباده بإتباعه في قوله : ﴿قُلْ صَدَقَ اللَّهُ فَاتَّبِعُوا مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنْ الْمُشْرِكِينَ﴾ [آل عمران : 95].
وفي ثنائه سبحانه على المؤمنين في قوله : ﴿وَمَنْ أَحْسَنُ دِينًا مِمَّنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ وَاتَّبَعَ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلاً﴾ [النساء : 125 ].
ومن عظيم صفات وأفعال إبراهيم عليه السلام :
قال الله تعالى : (إِنَّ إِبْرَاهِيمَ كَانَ أُمَّةً قَانِتاً لِلَّهِ حَنِيفاً وَلَمْ يَكُنْ مِنَ الْمُشْرِكِينَ شَاكِراً لأَنْعُمِهِ اجْتَبَاهُ وَهَدَاهُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ وَآتَيْنَاهُ فِي الدُّنْيَا حَسَنَةً وَإِنَّهُ فِي الآخِرَةِ لَمِنْ الصَّالِحِينَ) النحل/ 120، 122 .
قال الله تعالى : (وَإِبْرَاهِيمَ الَّذِي وَفَّى) النجم/37 .
أي : قام بجميع ما أمره الله به .
قال الله تعالى : (إنَّ إبْرَاهِيمَ لَحَلِيمٌ أَوَّاهٌ مُّنِيبٌ) هود/ 75 .
كرمه وسخاؤه ، قال الله تعالى : (هَلْ أَتَاكَ حَدِيثُ ضَيْفِ إبْرَاهِيمَ المُكْرَمِينَ . إذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلامًاً قَالَ سَلامٌ قَوْمٌ مُّنكَرُونَ . فَرَاغَ إلَى أَهْلِهِ فَجَاءَ بِعِجْلٍ سَمِينٍ . فَقَرَّبَهُ إلَيْهِمْ قَالَ أَلا تَأْكُلُونَ) الذاريات/ 24 – 27 .
عظم صبره ، قال الله تعالى : (فَاصْبِرْ كَمَا صَبَرَ أُوْلُوا العَزْمِ مِنَ الرُّسُلِ) الأحقاف/ 35 ، وإبراهيم عليه السلام من أولي العزم من الرسل ، فهم المذكورون في قوله تعالى : (شَرَعَ لَكُمْ مِنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحاً وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ وَلا تَتَفَرَّقُوا فِيهِ) الشورى/13
.
(إنَّ إبْرَاهِيمَ كَانَ أُمَّةً قَانِتاً لِّلَّهِ حَنِيفاً)
ان إبراهيم الأواه المنيب في دعاء رخي مديد، يتوجه به إلى ربه في إيمان وخشوع؛ {رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ . وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ . وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ . وَاغْفِرْ لِأَبِي إِنَّهُ كَانَ مِنَ الضَّالِّينَ . وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ . يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ . إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ} [الشعراء:83-89].
இந்தத் தியாகத் திருநாளில் வல்லவன் அல்லாஹ் எம் அனைவரதும் நல் அமல்களை அங்கீகரித்து அனைவரது உள்ளங்களிலும் நிம்மதி சந்தோஷத்தைத் தருவானாக!
تقبل الله منا ومنكم صالح اعمالنا
الله اكبر الله اكبر الله اكبر ولله الحمد



