ரட்கோ ம்லாடிக் இறப்பு

1995ல் முஸ்லிம்களை படுமோசமாகக் கொலை செய்த “பொஸ்னியாவின் கசாப்புக்காரர்” என்று அழைக்கப்பட்ட முன்னாள் பொஸ்னிய செர்பிய இராணுவத் தளபதி ம்லாடிக்ரட்கோ ம்லாடிக் 83 அல்லது 84 வயதில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கத்திய தாக்குதலில் இருந்து செர்பிய மக்களைப் பாதுகாக்க தான் “விதியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்” என்று அவர் தொடர்ந்து கூறி வந்தார்.

ஆனால் 2017-ஆம் ஆண்டு பொஸ்னியாவில் நடந்த போர்குற்றங்களுக்காக குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு, “மனிதகுலம் அறிந்தவற்றில் மிகவும் கொடூரமானவை” என்று வர்ணிக்கப்பட்ட இனப்படுகொலைக் குற்றத்திற்காக தனது கடைசி ஆண்டுகளை அவர் சிறையில் கழித்தார்.

1995-ஆம் ஆண்டு ஸ்ரெப்ரெனிகாவில் சுமார் 8,000 முஸ்லிம் சிறுவர்கள் மற்றும் ஆண்கள் படுகொலை செய்யப்பட்டமை இது இராணுவத் தலைவர் ம்லாடிக் ம

அவரது அரசியல் தோழர் ரடோவன் கராஜிக் ஆகியோரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை என்று நீதிமன்றம் தீர்பளித்தது.

இந்த படுகொலை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்த மிக மோசமான ஒற்றை அட்டூழியம் உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் அவரை “பொஸ்னியாவின் கசாப்புக்காரர்” என்று அழைக்க வழிவகுத்தது.

பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் ஏழாம் தேதி ஸ்ரெப்ரெனிகா நகரில் கூடி அந்த படுகொலைகளை நினைவு கூருவார்கள்

ஸ்ரெப்ரெனிகா நகரைச் சுற்றியுள்ள பல்வேறு கூட்டு கல்லறைகளில் இருந்து இன்னும் உடல்கள் தோண்டி எடுக்கப்படுவதால் இந்த கூட்டு இறுதி சடங்குகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகின்றன.

இருப்பினும், பெரும்பாலும் உறவினர்களால் உடல் பாகங்களில் சிலவற்றை மட்டுமே அடக்கம் செய்ய முடிகிறது. ஏனெனில் அவர்களின் உடல் பாகங்கள் பெரும்பாலும் பல கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ள வெவ்வேறு கூட்டு கல்லறைகளில் கண்டுபிடிக்கப்படுகின்றன.

இத்தகைய படுகொலைகளைச் செய்தரட்கோ ம்லாடிக் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் தலைவர் செய்த் ராஅத் அல் ஹுசைன் அவரை “தீமையின் முழு உருவம்” என்று வர்ணித்தார்.

ஆனால் பெரும்பாலான செர்பியர்கள் தொடர்ந்து அவரை மதித்தனர்.

“அவர் தனது மக்களை மட்டுமே பாதுகாத்தார்” என்று பொஸ்னிய செர்பிய போர்வீரர் லியூபோ டோமோவிச் AFP-யிடம் கூறினார். “அவரை குற்றவாளி என தீர்ப்பளிப்பது அவமானம் மற்றும் பாவம்” என்று 2021-ஆம் ஆண்டு ம்லாடிக்கின் தீர்புக்கு முன் அவர் கூறினார்.

கடந்த சில மாதங்களாக பல பக்கவாதங்களால் பாதிக்கப்பட்டிருந்த ம்லாடிக் வியாழக்கிழமை இறந்ததாக செர்பிய அரசு ஒலிபரப்பு நிறுவனமான RTS, செய்ததி வெளியிட்டது.

தன்னை “ஒரு சாதாரண மனிதன்” என்றும் தனது மக்களைப் பாதுகாக்க தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்றும் அவர் தன்னை சித்தரித்தார்.

“நீங்கள் மேற்கத்திய சக்திகள் வத்திக்கான் மற்றும் மேற்கத்திய மாஃபியாவின் உதவியுடன் சிதைத்த எனது நாட்டைப் பாதுகாக்கும் நிலையில் விதி என்னை வைத்தது” என்று 2020-ஆம் ஆண்டு மேல்முறையீட்டு விசாரணையின் போது அவர் கூறினார்.

இருப்பினும், பொஸ்னிய தலைநகர் சரஜெவோவை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அவர் முற்றுகையிட்டார். அவரது துப்பாக்கி சுடும் வீர்களும் பீரங்கி குண்டுகளும் தெருக்களிலும் வீடுகளிலும் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்றன.

மேலும் ஸ்ரெப்ரெனிகாவில் இருந்து வந்த வீடியோ காட்சிகளில், தனது வீர்கள் ஆயிரக்கணக்கான பொதுமக்களை படுகொலை செய்வதற்கு சற்று முன், 12 வயது முஸ்லிம் சிறுவனுக்கு அவர் ஆறுதல் கூறுவது காணப்படுகிறது.

ஏறக்குறைய அதே நேரத்தில், அவர் பாழடைந்த ஸ்ரெப்ரெனிகாவிற்கு திரும்பி வந்து கேமராவை பார்து: “இந்த நகரத்தை நாங்கள் செர்பிய மக்களுக்கு பரிசாக வழங்குகிறோம்” என்று கூறுவதும் காணப்படுகிறது.

பிராந்தியத்தின் வரைபடத்தை மீண்டும் வரையும் முயற்சியில் இன அழிப்பு அலையை ஏற்படுத்திய செர்பிய தேசியவாத மும்மூர்திகளில் ஒருவராக ம்லாடிக், கராஜிக் மற்றும் முன்னாள் யூகோஸ்லாவிய அதிபர் ஸ்லோபோதன் மிலோசெவிச் ஆகியோருடன் இருந்தார்.

கராஜிக் சித்தாந்தவாதியாகவும், மிலோசெவிச் சாதுர்யமான அரசியல்வாதியாகவும் இருக்க, ம்லாடிக் ஒரு வீரர். அவரது தொழில் போர் புரிவதுதான்.

நாசீசம் கொண்டவர், அகந்தையானவர்’

ம்லாடிக் பிறந்த சிறிது நேரத்திலேயே அவரது வாழ்க்கை மோதலால் அழியாமல் குறிக்கப்பட்டது.

அவர் இரண்டாம் உலகப் போரின் போது கிழக்கு பொஸ்னியாவில் உள்ள கலினோவிக்கில் பிறந்தார். பெரும்பாலான தகவல்களின்படி 1942, ஆனால் ம்லாடிக் தீர்ப்பாயத்திடம் தான் உண்மையில் 1943-இல் பிறந்ததாக கூறினார்.

போரின் இறுதியில், பல்லின நாடான யூகோஸ்லாவியாவை ஒன்றிணைத்து உள்ளிருந்த பகைமையை அடக்கிய தலைவர் மார்ஷல் டிட்டோவுக்காக போரிட்ட அவரது தந்தை கொல்லப்பட்டார்.

பெரும்பாலான தகவல்களின்படி, ம்லாடிக் எப்போதும் ஒரு வீரனாக வேண்டும் என்று விரும்பினார்.

1960-களின் தொடக்கத்தில் அவர் பெல்கிரேடில் இராணுவ பயிற்சிக்காக சென்றார். 22 வயதில் அதிகாரியானார் மற்றும் போரில் பொஸ்னிய செர்பிய படைகளின் தளபதியாக உயர்ந்தார்.

தனது வீரர்களால் அவர் பெரிதும் மதிக்கப்பட்டாலும், முன்னாள் யூகோஸ்லாவிய இராணுவ செய்தித் தொடர்பாளர் லியுபோத்ராக் ஸ்டோஜாடினோவிச் ஒருமுறை அவரை “நாசீசம் கொண்டவர், அகந்தையானவர், வீண் பெருமை உடையவர் மற்றும் ஆணவம் கொண்டவர்”என்று விவரித்தார்.

போரின் போது, செர்பிய வரலாறு குறித்த அவரது நீண்ட சம்பந்தமில்லாத பேச்சுகளால் அவர் சர்வதேச பேச்சுவார்தையாளர்களை குழப்பினார்.

போரின் இறுதி நாட்களில், அவரது நெருங்கிய கூட்டாளிகள் கூட அவரது மனநிலையை சந்தேகித்தனர்.

“ஒரு வீராகவும் மனிதராகவும் நான் ஜெனரல் ம்லாடிக்கை மதித்தேன்” என்று மறைந்த முன்னாள் மொண்டெனேக்ரோ அதிபர் மோமிர் புலடோவிச் 1990-களில் BBC ஆவணப்படத்தில் கூறினார்.

“ஆனால் மூன்று ஆண்டு போருக்குப் பிறகு, அவர் யதார்த்தத்துடனான தொடர்பை இழந்துவிட்டார்.”

‘அவர் ஒரு அரக்கன்’

1995-இல் குற்றம் சாட்டப்பட்ட பிறகு ம்லாடிக் தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் மேலும் 16 ஆண்டுகள் அவர் கைதாவதை தவிர்தார்.

ஆரம்பத்தில், செர்பிய இராணுவத்தால் செல்லமாக கவனிக்கப்பட்டு ஆடம்பர வாழ்கை வாழ்ந்தார். ஆனால் 2000-இல் மிலோசெவிச் அதிகாரத்தில் இருந்து வீழ்ந்த பிறகு அவர் மீதான அழுத்தம் அதிகரித்தது.

இறுதியாக 2011 மே மாதம், வடக்கு செர்பியாவில் உள்ள அவரது உறவினரின் கிராமத்து வீட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

அவரது மகள் அனா 1994-இல் 23 வயதில் தற்கொலை செய்துகொண்டார். தனது தந்தை செய்த குற்றங்களால் ஏற்பட்ட அவமானத்தை அவரால் தாங்க முடியவில்லை என்று சில தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் ம்லாடிக்கின் குடும்பத்தினர் இதை மறுக்கின்றனர்.

நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதற்கு முன் அவர் விடுத்த கடைசி வேண்டுகோள், தனது மகளின் கல்லறைக்கு செல்ல அனுமதி கேட்டதாகும்.

இந்த காலம் முழுவதும், பொஸ்னியாவிற்குள் உள்ள செர்பிய இனப் பகுதியான ரிபப்ளிகா ஸ்ரப்ஸ்கா முழுவதும் உள்ள சுவர் ஓவியங்களில் அவரது போர்கால தலைமை அழியாப் புகழாக போற்றப்பட்டது. அவரது புகழ் வளர்ந்தது.

“இந்த தீர்பு ஜெனரல் ம்லாடிக்கை நேரடியாக ஒரு புராணக் கதாநாயகனாக உயர்த்தியது” என்று அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட பிறகு ரிபப்ளிகா ஸ்ரப்ஸ்கா தலைவர் மிலோராட் டோடிக் கூறினார்.

“அவர் இல்லாமல் இருந்திருந்தால் எங்கள் மக்கள் இன்னும் அதிக துன்பங்களை அனுபவித்திருப்பார்கள் என்பதை செர்பியர்கள் அறிவார்கள்.”

மற்றவர்கள் இதை ஏற்கவில்லை.

“அவர்களின் இராணுவம் எங்கெல்லாம் வந்ததோ, எங்கெல்லாம் அவர்களின் காலடிகள் பட்டதோ, அங்கெல்லாம் அவர்கள் இனப்படுகொலை செய்தனர்” என்று ஸ்ரெப்ரெனிகா தாய்மார்கள் சங்கங்களில் ஒன்றின் தலைவர் முனிரா சுபாசிக் கூறினார்.

தகவல் :AFP, Aljazeera

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top