முஸ்லிம்கள் முதலில் அல்லாஹ்வுடனான தமது தொடர்பை மென்மேலும் பலப்படுத்த வேண்டும்.அல்குரானில் இதற்கான வழிகாட்டல்கள் தாராளமாக இருக்கின்றன.
1)2:155. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.
1)பொறுமை, 2)இன்னலில்லாஹி….. என்று கூறுவது
முடிவு:-அல்லாஹ்வின் நல்லாசி,நற்கிருபை,நேர்வழி(மனநிம்மதியும் சந்தோசமும்)
(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிபந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.
2)அஸ்தக்பிருல்லாஹ்,சுப்ஹானல்லாஹ் போன்ற வாசகங்களை உச்சரிப்பது
ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக; மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹு (துதி) செய்து கொண்டு இருப்பீராக!
நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த அல்லாஹ்வுடைய வசனங்களைப்பற்றி எந்த ஆதாரமுமின்றித் தர்க்கம் செய்கின்றார்களோ, அவர்களுடைய இருதயங்களில் பெருமை தவிர (வேறு எதுவும்) இல்லை; ஆனால் அ(ப் பெருமையான)தை அவர்கள் அடையவும் மாட்டார்கள்; ஆகவே (நபியே!) நீர் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக அவன், யாவற்றையும் செவியேற்பவன், பார்ப்பவன்.(40:55,56)
மேலே கூறியவற்றுடன்,
ஒற்றுமை,அறிவுத்துறையில் கூடிய கவனமெடுப்பது,
சட்டபூர்வமான அனுகுமுறைகளை கையாழ்வது,
எமது அக்லாக்குகளை மேம்படுத்துவது
பிற சமூகங்களைச் சேர்ந்த நல்லுள்ளம் படைத்தவர்களுடன் நல்லுறவைப் பேணுவது
மீடியாவை நல்லமுறையில் பயன்படுத்துவது
போன்றவற்றுடன் பின்வரும் குர்ஆனிய வழிகாட்டலையும் கவனத்திற் கொள்வோமாக.:-
நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்.(41:34)
வல்ல அல்லாஹ் எம்மை பாதுகாப்பானாக!




