கிழக்கின் நிகழ்வுகள் பற்றி சிந்திப்போம்!

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்-தமிழ் சமூகங்களுக்கிடையிலான உறவில் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றங்கள் மிகுந்த கவலையைத் தருகின்றன.

வெவ்வேறு இனங்களுக்கிடையிலான உறவில் பயம், பதட்டம், அவநம்பிக்கை, சந்தேகம், பகை என்பன நிலவுமாயின் அவை அந்த சமூகங்களில் பல அபாயகமான விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்பதை உலக வரலாறு எப்படிப் போனாலும் எமது தாய் நாட்டின் வரலாறே சொல்லுகிறது.

இலங்கையில் ஒவ்வோர் இனத்தவர்களும் பிற இனங்களில் தங்கித் தான் வாழுகிறார்கள்.பிறரது உதவியும் ஒத்தாசையுமின்றி எவருக்குமே வாழ முடியாது.

தமிழர்களுக்கு முஸ்லிம்களது ஒத்துழைப்பும் முஸ்லிம்களுக்கு தமிர்களது ஒத்துழைப்பும் ஏன் இவ்வினத்தாருக்கும் சிங்களவர்களது ஒத்துழைப்பும் சிங்களவர்களுக்கு இவ்விரு இனங்களதும் தனித் தனியானதும் கூட்டானதுமான ஒத்துழைப்பும் தேவை.

கிழக்கில் முஸ்லிம்களது ஊர்களில் தமிழ் சகோதரர்களும் தமிழ் ஊர்களில் முஸ்லிம்களும் சென்று தொழில் செய்யவில்லையா?

முஸ்லிம்களது கடைகளுக்கு முஸ்லிம்கள் மட்டும் தமிழர்களது கடைகளுக்கு முஸ்லிம்கள் மட்டும் பொருட்கள் வாங்கச் செல்லும் நிலை உருவானால் இவ்விரு சமூகங்களது பொருளாதாரத்துக்கு என்ன நடக்கும்?

கிழக்கில் இருக்கும் அரச, தனியார் காரியாலங்களை எடுத்துக் கொண்டால் அவற்றில் பெரும்பாலும் பல்லின அதிகாரிகளும் ஊழியர்களுமே கடமை புரிகிறார்கள். வைத்தியசாலைகளில் முஸ்லிம் நோயாளி, தமிழ் நோயாளி என்று பிரித்துப் பார்த்து சிகிச்சை செய்ய ஆரம்பித்தால் அது மனிதாபிமானத்துக்கே எதிரானதல்லவா?

மறைந்த அறிஞர் எஸ்.எச்.எம் ஜமீல் அவர்களை அவர்களது மறைவுக்கு சரியாக ஒரு வாரத்துக்கு முன்னர் அன்னாரது இல்லத்தில் சென்று எனது பல்கலைக்கழக ஆய்வின் ஆய்வின் நிமித்தம் பேட்டியொன்றுக்காக சந்திக்க முடிந்தது.

அந்த நேரம் கிழக்கில் மட்டுமின்றி முழு இலங்கையிலும் தமிழ் முஸ்லிம் சமாதான சகவாழ்வு எவ்வளவு ஆரோக்கியமாக நிலவிய என்பதற்கான சான்றுகளை அவர் பகிர்ந்து கொண்டார்.

விபுலானந்த அடிகளுக்கும் ஏ.எம்.ஏ.அஸீஸுக்கும் இடையில் நிலவிய உறவு, 20 ஆம் நூற்றாண்டுகளது முதற்கூறுகளில் தமிழ் அதிபர்கள் முஸ்லிம் பாடசாலைகளில் கடமை புரிந்தமை, கொழும்பு ஸாஹிராவில் கற்ற தமிழ் மாணவர்கள் என்று அந்த பட்டியலை ஆண்டுகளோடு பெயர்களோடு கூறினார்.

தற்காலத்திலும் இந்த சகவாழ்வு தொடர்கிது. 70 பதுகளில் நாம் அனுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலத்தில் கல்வி பயின்ற போது எமக்கு கணித பாடம் கற்பித்த வேல்முருகு ஆசிரியரையும் கல்லூரிக்கு அதிபராக இருந்து தலைமைத்தும் வழங்கிய ஜெகன்னாதன் ஆசிர

எனவே, இந்த வரலாறுகள் மீட்டப்பட வேண்டும்.சமாதான சகவாழ்வை கட்டியெழுப்புவதே இன்றைய எமது பணி. இல்லாத போது 30 வருட யுத்தத்திலிருந்தும் தர்கா நகர்,திகணை போன்ற கலவரங்களில் இருந்தும் நாம் படிப்பினை பெற்றவர்களாக மாட்டோம்.

ஒவ்வொருவரும் தத்தமது இடங்களில் இருந்து உறவுப் பாலங்களை அமைக்க பாடுபடுவோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top