எமது நாட்டில் பெரும்பாலானோர் உணவாகக் கொள்ளும் அரிசியை ஸகாதுல் பித்ராகக் கொடுப்பது சிறந்தது.
அந்த வகையில் ஒருவருக்காக இரண்டே கால் கிலோ சம்பா அரிசியை கொடுக்க வேண்டும்.விரும்பினால் இரண்டரை கிலோவையும் கொடுக்க முடியும். அது அதிக நன்மையை பெற்று தரும்.
அரிசியாக கொடுப்பதில் சிரமங்கள் இருப்பின் அதன் பெறுமதியை கொடுப்பதற்கும் அனுமதி உண்டு.
அரிசி கீரி சம்பாவாக இருந்தால் அதன் ஒரு கிலோவுக்கான தற்போதைய சந்தை விலை 360/-ஆக இருப்பதாயின் ஒருவருக்கான ஸதக்கதுல் பித்ரின் பணப்பெறுமதி பின்வருமாறு அமையும்:
360×2+90=810/- (இரண்டே கால் கிலோ என்ற கணிப்ட்டின் படி)
360×2+180= 900/-இரண்டரைக் கிலோ என்ற கணிப்ட்டின் படி)
உதாரணமாக ஒரு வீட்டில் குடும்பத் தலைவன் உட்பட மனைவிக்கும் 5 பிள்ளைகளுக்கும் அவரது பராமரிப்பில் உள்ள தாய் தகப்பன் ஆகியோருக்காக அதாவது 9 பேருக்காக பித்ராவை கொடுப்பதாயின் பின்வருமாறு கணிப்பீடு அமையும்:-
9×900= 8,100/- ரூபாய்.
சதக்கத்துல் பித்ருக்கு இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன:-
- நோன்பாளியை பரிசுத்தப்படுத்துவதற்கு
- ஏழைகளுக்கான உணவாக அமைவதற்கு
இந்த ஸதகாவை ஏழைகளுக்கு கொடுப்பது அவசியமாகும். பெருநாள் தினத்தில் அவர்கள் பிறரிடத்திலே கையேந்தாமல் இருப்பதற்கு இந்த ஸதகா உதவியாக அமையும்.
எனவே பெருநாள் தினம் வரை காத்திருக்காமல் இப்போதிருந்தே அதனை கொடுத்துக் கொள்ளலாம்.
Amount of Ṣadaqat al-Fiṭr
In our country, it is (best) to give rice—the staple food of most people—as Zakāt al-Fiṭr.
Accordingly, for one person, 2¼ kilograms of samba rice should be given. If one wishes, 2½ kilograms may also be given, which brings greater reward.
If it is difficult to give rice itself, it is permissible to give its monetary value instead.
If the rice is Keeri Samba, and the current market price per kilogram is Rs. 360, then the monetary value of Ṣadaqat al-Fiṭr per person would be as follows:
360 × 2 + 90 = Rs. 810 (based on 2¼ kg)
360 × 2 + 180 = Rs. 900 (based on 2½ kg)
For example, if a household head is giving Fiṭr on behalf of 9 people (himself, his wife, 5 children, and his dependent parents), the calculation would be:
9 × 900 = Rs. 8,100
There are two main purposes of Ṣadaqat al-Fiṭr:
- To purify the fasting person
- To provide food for the poor
It is essential that this charity be given to the poor so that they do not have to beg from others on the day of Eid.
Therefore, rather than waiting until the day of Eid, it is better to give it from now onwards.




