பரீட்சைக்காக தொழுகையை சேர்த்து தொழுதல்

இன்று இடம்பெறும் கணித பாடத்தின் முதலாம் பகுதி 10. 30 க்கு முடிவடைந்து மீண்டும் 1.00 மணிக்கு அடுத்த பகுதி ஆரம்பமாகும்.

இன்று இலங்கையின் சில பாகங்களில் லுஹர் 12.26 மணிக்கும்

அஸர் 03.47 மணிக்கும் ஆரம்பமாகிறது.ஆனால் பரீட்சை மண்டபத்தில் 12.30ற்கு முன்னர் பரீட்சாத்திகள் சமூகமளித்திருத்தல் வேண்டும் என்று சில இடங்களில் பரீட்சை மேற்பார்வையாளர்கள் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

நிலைமை இப்படி இருந்தால் ளுஹரை 4 நிமிட இடைவெளிக்குள் தொழுது கொள்ள முடியுமா? அதற்கான வசதிகள் பரீட்சை மண்டபத்தில் அல்லது அதற்கு அருகில் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இது சாத்தியப்படலாம்.ஆனால் முழுக்க முழுக்க பெரும்பான்மையினர் வாழும் சூழல்களில் உள்ள பரீட்சை மண்டபங்களில் இது எவ்வளவு சாத்தியம் என்ற கேள்வி எழலாம். பரீட்சை மேற்பார்வையாளர்கள் சற்று நெகிழ்ச்சியாக விடயத்தை அணுகினால் பரீட்சாத்திகள் வசதியாக தொழுது கொள்ளலாம்.அப்படி இல்லாத போது தொழுவதற்கான வாய்ப்பு பெரும்பாலும் கிடைக்கமாட்டாது.

இப்படியான சந்தர்ப்பத்தில் அத்தகைய பரீட்சாத்திகள் ளுஹர் தொழுகையை அஸரோடு சேர்த்து அதாவது பிற்படுத்தி தொழுவதற்கான அனுமதி இருக்கிறது. இதற்கு இஸ்லாமிய சட்டத்தில் “தேவைக்காக சேர்த்து தொழுதல்” ‘அல்ஜம்உ லில்ஹாஜா’ என்ற வகையில் அனுமதி உண்டு.

மிகவும் நெருக்கடியான சூழ்நிலைகள் இவ்வாறு உருவாகின்ற பொழுது முற்படுத்தியோ பிற்படுத்தியோ தொழுகையை சேர்த்து தொழுவதற்கு ஊரில் இருக்கின்ற அதாவது முகீமுக்கு அனுமதி உண்டு என்பது சில இமாம்களது கருத்தாகும்.

குறிப்பாக இமாம் அஹ்மத், இமாம் இப்னு சீரின், ரபீஆ,அஷ்ஹப்,இப்னுல் முன்திர், கப்பாலுல் கபீர் போன்றோர் இக்கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் நிர்பந்தமான சூழ்நிலையிலேயே இந்த சலுகையை பயன்படுத்த முடியும் என்றும் இதனை வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது என்றும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதற்கு பின்வரும் இமாம் இப்னு அப்பாஸ் ரலி அவர்களது ஹதீஸை ஆதாரமாக காட்டுகிறார்கள்.

صَلَّى رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا

بالمَدِينَةِ، في غيرِ خَوْفٍ، وَلَا سَفَرٍ. قالَ أَبُو الزُّبَيْرِ: فَسَأَلْتُ سَعِيدًا: لِمَ فَعَلَ ذلكَ؟ فَقالَ: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ كما سَأَلْتَنِي، فَقالَ: أَرَادَ أَنْ لا يُحْرِجَ أَحَدًا مِن أُمَّتِهِ.

الراوي : عبدالله بن عباس | المحدث : مسلم | المصدر : صحيح مسلم

الصفحة أو الرقم: 705 | خلاصة حكم المحدث : [صحيح]

التخريج : من أفراد مسلم على البخاري

இமாம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “நபியவர்கள் மதினாவில் இருந்த பொழுது எவ்வித பயமோ பயணமோ இல்லாத சூழ்நிலையிலும் ளுஹர் அஸர் ஆகிய தொழுகைகளை சேர்த்துத் தொழுதார்கள்” என்று குறிப்பிட்டுவிட்டு “தனது உம்மத்தில் எவரையும் சங்கடத்துக்கு உள்ளாக்கக் கூடாது என்பதே நபியவர்களது நோக்கமாக இருந்தது” என்றும் குறிப்பிட்டார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம் : 705)

ஆனால் இன்று பரீட்சார்த்திகளுக்கு ளுஹரை உரிய நேரத்தில் தொழுவதற்கு வசதி இருக்குமாயின் கட்டாயமாக அவ்வாறு தொழுது கொள்ள வேண்டும்.சலுகையை தவிர்க்க வேண்டும்.

https://www.dar-alifta.org/ar/fatwa/details/19343/%D8%A7%D9%84%D8%AC%D9

https://www.google.com/…/www…/amp/ar/fatwa/60645/

குறிப்பு: தேவையின் நிமித்தம் தொழுகைகளை ஊரில் இருப்பவர் சேர்த்து தொழுதல் தொடர்பான சட்ட விளக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் இடம்பெறும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top