யுத்தங்களது விளைவுகள்

யுத்தங்களால் மனங்களில் வெறுப்பு, பழிவாங்க வேண்டும் என்ற உணர்வு, மென்மேலும் அதிகரிக்கும். மில்லியன் கணக்கான மக்கள் கொலை செய்யப்படுபவர். கோடான கோடி ரூபாய் பெறுமதியான கட்டடங்கள் தரைமட்டமாக்கப்படும். யுத்தங்களின் பொழுது பிரயோகிக்கப்படும் ஆயுதங்களால் சூழல் மாசடையும். பொருட்களின் விலைகள் உயரும். இனங்கள் துருவமயமாக்கப்படும்.

ஆனால் இவற்றைப் பற்றி யுத்தங்களை தூண்டுவோருக்கு எந்தக் கவலையும் இல்லை. அவர்கள் தமது அதிகார எல்லைகளை விஸ்தரிக்கவும் தமது பொருளாதார நலன்களை ஈட்டவும் எத்தகைய பாதகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள்.

பாவமறியாத பச்சிளம் பாலகர்கள், பெண்கள், வயோதிபர்கள், நோயாளிகள், அப்பாவிகள் என்று கோடான கோடி மக்கள் யுத்தங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

முதலாம், இரண்டாம் உலக மகா யுத்தங்களின் பொழுது அன்னளவாக 9 கோடிப் பேர் இறந்தார்கள். ஊனமுற்றோர் காயப்பட்டோரின் தொகை வேறு.இது முழு மனித சமுதாயத்தினதும் பேரழிவாகும். தனது இனத்தையே தனது கைகளால் கொன்றவர்களது ஈனத்தனமான வரலாறு இது.

அந்த யுத்தங்களால் ஏற்பட்ட விளைவுகளை இன்றும் உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

இலங்கையில் 30 வருடங்களாக நடந்த யுத்தத்தில் மொத்தம் அண்ணளவாக 60 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இதன் மூலமாக யார் பயனடைந்தார்கள்?

தற்போதும் கூட மத்திய கிழக்கில் வளைகுடாவில் யுத்த மேகங்கள் சூழ்ந்திருப்பது எவ்வகையிலும் வரவேற்கத்தக்கது அல்ல.இதற்கு காரணமாக அமைந்தவர்கள் மனித இனத்தின் குற்றவாளிகள்.
1. மக்களது உரிமைகளை பறித்து, அத்துமீறி, அவர்களைச் சுரண்டி, அவர்களது வாழ்விடங்களில் இருந்து அவர்களை வெளியேற்றியவர்கள்
2. இந்த பாதகர்ளுக்குப் பக்கபலமாக இருப்பவர்கள்
3. அவர்களை கண்டும் காணாமல் இருப்பவர்கள்

இந்த மூன்று சாராரும் இந்த படுபாதகத்தில் சமபங்கைப் பெறுகிறார்கள்.

அதேவேளை அநியாயத்திற்கு உள்ளாக்கப்பட்டவர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட முடியும் என்றும் இஸ்லாம் தெளிவாகக் கூறியிருக்கிறது.

எது எப்படிப் போனாலும் இலங்கை போன்ற மூன்றாம் மண்டல நாடுகளை தற்போது நடைபெறும் யுத்தம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயங்கரமாகப் பாதிக்கும்.
யா அல்லாஹ் நீயே போதுமானவன்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top