அஷ்ஷைக் பளீல் (நளீமி)
முஸ்லிம் உம்மத்தின் சோதனைகளுக்கான காரணங்கள்:-
1. சோதனை
2. தண்டனை
சோதனை:-
அல்லாஹ், ரசூல் கூறிய படி வாழ்ந்தால் சோதனைகள் கட்டாயம் வரும். இது உலக நியதி. வரலாற்றில் பல ஆதாரங்கள் உள்ளன. குர்ஆனிய வாக்குறுதி:-
أفحسبتم أنما خلقناكم عبثا..
ولنبلونكم بشيء من الخوف..
- உலகில் இஸ்லாமிய எழுச்சி ஒன்று காணப்படுகிறது.
- முஸ்லிம்களது சனத்தொகை(குறிப்பாக மேற்குகில்) அதிகரித்து வருகிறது.
- இஸ்லாத்தைத் தழுவுவோர் அதிகம்.
- இவற்றை எதிரிகள் கண்டு அச்சப்படுவதும் பொறாமைப்படுவதும், தமது நலன்களுக்கு அது எதிராக அமையும் என்று பயந்து முஸ்லிம்களை நசுக்குவதும் இயல்பாகும்.
தண்டனை:-
வெற்றிக்கான நிபந்தனைகளை முஸ்லிம்கள் பெறாத போது தண்டிக்கப்படுவர்.
நிபந்தனைகள்:
1. ஆழமான அசைக்க முடியாத ஈமான்
2. முஸ்லிம் சமூகத்தின் ஐக்கியம்
3. கல்வி, ஊடகத்துறை,விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பிறரை விட முன்னேற்றம்.
4. நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பணி
5. உலக மோகம் இன்மை, மரணத்துக்குப் பயப்படாமை
6. இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பூரண விசுவாசமாக நடப்பது
7. இறுதி வெற்றியும் முடிவும் இஸ்லாத்துக்கு என்ற ஆழமான நம்பிக்கை. இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பயங்கரமான சோதனைகளை முஸ்லிம் சமூகம் சந்தித்தது. ஆனாலும், இறுதி வெற்றி முஸ்லிம்களுக்கு கிடைத்தது.
சுருக்கம்:-
பலமான ஈமான்+ தூய எண்ணம்+ தீவிர முயற்சி+ அல்லாஹ்விடம் துஆ
سَتَكُونُ أثَرَةٌ وأُمُورٌ تُنْكِرُونَها، قالوا: يا رَسولَ اللَّهِ، فَما تَأْمُرُنا؟ قالَ: تُؤَدُّونَ الحَقَّ الذي علَيْكُم، وتَسْأَلُونَ اللَّهَ الذي لَكُمْ.
(أخرجه البخاري (3603)، ومسلم (1843)
“உங்களை விட ,பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும் நிலை எதிர்காலத்தில் உருவாகும். இன்னும் நீங்கள் வெறுக்கிற சில காரியங்கள் நடக்கும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அதனைக் கேட்ட மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “உங்களின் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்குரிய உரிமைகளை அல்லாஹ்விடம் கேளுங்கள்” என்று பதிலளித்தார்கள்.
(புகாரி: 3603)




