இம்முறை பரீட்சை மோசடிகளில் 473 ஈடுபட்டுள்ளதாக ஆசிரியர் சங்கம் குறிப்பிடுகிறது இது பிடிபட்டவர்களுடைய தொகை மாத்திரமே.
பரீட்சை மண்டபத்தில் மாணவர்கள் பரீட்சை மோசடி செய்வது இஸ்லாமிய நோக்கில் ஹராம்;துரோகம். அதற்கு இடமளிப்பவர்கள் மோசடிக்கு துணை போகிறவர்கள்.
மாணவர்கள் மோசடி செய்து பெற்றுக் கொள்ளும் பரீட்சை பெறுபேறுகளும் அந்த பெறுபேறுகளை வைத்து பெறப்படும் தொழில்களும் உழைப்புக்களும் ஹராம்களாகும்.
ஓர் ஊரில் பரீட்சை மோசடி செய்யும் மாணவர்கள் இருப்பது பண்பாட்டு வீழ்ச்சியின் பிரதிபலிப்பு மட்டுமன்றி சோம்பேறிகளான மாணவ சமுதாயம் உள்ளது என்பதற்கான அடையாளமும் ஆகும்.
உயர் பெறுபேறுகளை பெறுவது தான் இலக்கு. அதற்காக எந்தவொரு கீழ்த்தரமான அணுகுமுறையையையும் கையாளும் கல்விச் சமூகம் அதளபாதாளத்தில் இருக்கிறது.
சில ஆசிரிய ஆசிரியர்கள் தமது பாடசாலையின் பரீட்சை பெறுபவர்களை உச்ச மட்டத்தில் பேணுவதற்காக மாணவ மாணவியர் பரீட்சை மோசடிகளில் ஈடுபட அனுமதிப்பதும் மிகப் பெரிய துரோகமும் பாவமும் ஆகும்.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَخُونُواْ ٱللَّهَ وَٱلرَّسُولَ وَتَخُونُوٓاْ أَمَٰنَٰتِكُمْ وَأَنتُمْ تَعْلَمُونَ
“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் துரோகம் செய்யாதீர்கள். நீங்கள் தெரிந்து கொண்டே உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களுக்கும் துரோகம் செய்யாதீர்கள்.
அஷ்ஷைக் பளீல் (நளீமீ)




