ramadan-338

ரமளானுக்குப் பிந்தியும் கீழ்ப்படிதல்களைத் தொடருதல்

✍🏼 கலாநிதி அஹ்மத் அப்துல் கரீம்
🌷 ஒரு முஃமின் ரமளானுக்குப் பிந்தியும் இரவு தொழுகையை தொடருதல், குர்ஆன் ஓதுதல், ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்றல் போன்ற நல்ல செயல்களைச் செய்வது இறை திருப்தியைப் பெற்றுக் கொடுக்கும்.
🌹 ஆனால், இது மட்டும் போதாது. இந்த வழிபாடுகளை முழுமைப்படுத்தும் ஒரு முக்கியமான விடயம் உள்ளது, அது தான் ஹலாலை ஹலாலாக்குவதும் ஹராத்தை ஹராமாக்குவதுமாகும்.
🌺 (உறவுகளைத் துண்டித்தல், பகைமை, அகந்தை, அருவருப்பான தீவினைகள், பொய் சாட்சி, புறம் பேசுதல் போன்ற) தடைசெய்யப்பட்டவற்றிலிருந்து விலகுவதற்கான கவனம், கட்டளையிடப்பட்ட அம்சங்களை கடைப்பிடிப்பதை விட முக்கியமானதாகும்.
ஆனால், இது கட்டளைகள் விடயமாக நாம் அசியத்தையாக இருக்க வேண்டும் என்பது பொருளல்ல;
தடைசெய்யப்பட்டவற்றைத் தவிர்ப்பதிலும் நாம் தீவிரமாக இருக்க வேண்டும்.
🌴 புகாரி முஸ்லிம் ஆகிய இருவரும் அபூஹுரைரா (ரலி) வழியாக அறிவிக்கின்றனர்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: “நான் உங்களுக்கு தடை விதித்தவற்றைத் தவிருங்கள், மேலும் நான் உங்களுக்கு கட்டளையிட்டவற்றை உங்களால் முடிந்த வரை கடைப்பிடியுங்கள்.”
🌴 முஸ்லிம் மற்றும் அஹ்மத் ஆகியோரது பதிவில் ஜாபிர் (ரலி) கூறுகின்றார்: ஒரு நபர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்: *”நான் கட்டாயமான தொழுகைகளை தொழுது, ரமளானில் நோன்பு நோற்று, ஹலாலை ஹலாலாக்கி, ஹராத்தை ஹராமாக்கி, அதற்கு மேல் எதையும் செய்யாவிட்டால் நான் சொர்கத்தில் செல்லுவேனா?” நபி (ஸல்) பதிலளித்தார்கள்: “ஆம்” .அந்த நபர் கூறினார்: “அல்லாஹ்வின் சத்தியமாக, நான் இதற்கு மேல் எதையும் செய்ய மாட்டேன்.”
🌴 அல்லாஹு தஆலா ஸூரத்துல் பகராவில் நோன்பு தொடர்பான வசனங்களை முடித்த பின் பின்வருமாறு கூறுகிறான்:
“அவ்வாறு அல்லாஹ் தன் வசனங்களை மக்களுக்கு அவர்கள் தக்வா உள்ளவர்களாக மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் விளக்குகின்றான்.
உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும் நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து எந்த ஒரு பகுதியையும் அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் இலஞ்சம் கொடுக்க நெருங்காதீர்கள்.(அல்-பகரா: 2:187-188)
🌸 இப்னு ஆஷூர் இதற்கு விளக்கம் கூறுகையில்: “இது அனுமதிக்கப்படாத முறையில் நோன்பை முறிப்பதற்கான துணிச்சலைத் தவிர்ப்பதைப் பற்றிய எச்சரிக்கையாகும். ஏனெனில், அது ஹராமான உணவு அருந்துவதைப் போன்றதாகும். அதனால், முறையற்ற விதத்தில் செல்வங்களை நுகர்வதையும் அதனுடன் இணைத்துக் கூறியுள்ளான்.” என்று கூறுகிறார்.
💐 ஆகவே, நாம் கட்டளைகளைக் கடைப்பிடித்து, தடைசெய்யப்பட்டவற்றைத் தவிர்ப்பதை உறுதியாக மேற்கொள்வோம், அப்போது நாம் அல்லாஹ்வின் திருப்தியை பெற்ற தக்வா உள்ளவர்களாக இருப்போம்.

தமிழில்: அஷ்ஷைக் பளீல் (நளீமீ)

💥استمرار الطاعات واجتناب المحرمات بعد رمضان
🌷استمرار المؤمن على قيام الليل وتلاوة القرآن وصيام ست من شوال وغيرها من الطاعات شيء مرضي.
🌹لكنه ليس كل شيء، فهناك المتمم لهذه الطاعات، ولعله الأهم، وهو إحلال الحلال، وتحريم الحرام.
🌺الاهتمام بأمر المنهيات ( قطيعة الرحم – الشحناء – الكبر- مقارفة الفواحش المنكرات – شهادة الزور – الغيبة ..) ربما أبلغ من الاهتمام بالمأمورات، ولا يعني ذلك التساهل بالمأمورات، وإنما التشديد في اجتناب المنهيات
.
🌴 روى الشيخان عن أبي هريرة رضي الله عنه قال رسولُ الله صلى الله عليه وسلم : ( ما نهيتُكم فاجتَنِبُوه، وما أمرتكم فائتوا منه ما استطعتم ).
🌴روى مسلم و أحمد عَنْ جَابِرٍ أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : ( أَرَأَيْتَ إِذَا صَلَّيْتُ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ، وَصُمْتُ رَمَضَانَ، وَأَحْلَلْتُ الْحَلَالَ، وَحَرَّمْتُ الْحَرَامَ، وَلَمْ أَزِدْ عَلَى ذَلِكَ شَيْئًا أَأَدْخُلُ الْجَنَّةَ؟ قَالَ: نَعَمْ . قَالَ: وَاللَّهِ لَا أَزِيدُ عَلَى ذَلِكَ شَيْئًا).
🌴بعد أن أنهى الله تعالى آيات الصيام في سورة البقرة قال : كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ * وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنْتُمْ تَعْلَمُونَ).
🌸قال ابن عاشور: ( تَحْذِيرٌ مِنَ الْجُرْأَةِ على مُخَالفَة حكم الصِّيَامِ بِالْإِفْطَارِ غَيْرِ الْمَأْذُونِ فِيهِ ، وَهُوَ ضَرْبٌ مِنَ الْأَكْلِ الْحَرَامِ، فَعَطَفَ عَلَيْهِ أَكْلٌ آخَرُ مُحَرَّمٌ، وَهُوَ أَكْلُ الْمَالِ بِالْبَاطِلِ ).
💐 فلنحرص على فعل المأمورات ، واجتناب المنهيات؛ حتى نكون من المتقين المرضيين.
د أحمد عبد الكريم

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top