one law one nation

ஒரு நாடு ஒரு சட்டம் பற்றி இஸ்லாம்

ஒரு நாடு ஒரு சட்டம் பற்றி இஸ்லாம்

(இஸ்லாமிய நாட்டில் முஸ்லிம் அல்லாதோருக்கான உரிமைகள்)



அஷ்ஷெய்க்.எஸ்.எச்.எம்.ஃபளீல்
(நளீமி
)

Islamic Perspective on
‘One Country One Law’

(Rights of Non-Muslims in
Islamic Law)

 

Copy Right: Author: Ash
Sheikh S.H.M.Faleel (Naleemi)

First Edition: January,2022

 

ISBN 978-624-9899-0-6

 

12/D/1, Danakan
Mawatha,Mallahewa,Kal-Eliya,Sri Lanka

Author: Ash
Sheikh S.H.M.Faleel (Naleemi),

Jamiah
Naleemiah, Beruwala,Sri Lanka.

Email: sheikhfaleel@gmail.com

 

  

முன்னுரை

               ‘ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கை பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டத்தை இங்கு விளக்க விரும்புகிறோம்.

ஒரு நாட்டின் பெரும்பான்மையினரது சட்டங்களையே அந்நாட்டில் வாழும் சிறுபான்மையினரும் பின்பற்ற வேண்டும் என்பதும் ஏனைய இனத்தவர்களது தனியார் சட்டங்கள் இல்லாமலாக்கப்பட வேண்டும் என்பதும் தான் ‘ஒரே நாடு ஒரே  சட்டம்’ என்ற கொள்கையின் சாராம்சமாகும்.

               ஆனால், இஸ்லாமிய ஷரீஆவை சட்ட யாப்பாகக் கொண்டிருக்கும் ஒருநாட்டில்  இப்படியான ஒரு நிலை இருக்கமாட்டாது என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும். அதாவது, இஸ்லாமிய நாடொன்றின் ஆழ்புல எல்லைக்குள் வாழும் ஒவ்வொரு இனத்தவருக்குமான சுதந்திரங்களை இஸ்லாமிய அரசு நிச்சயமாக வழங்கும். இஸ்லாமிய வரலாற்றில் இது நடைமுறையில் இருந்து வந்துள்ளது.

இஸ்லாமிய அரசின் அதிகாரம் பெற்ற எல்லையுள் வாழும் முஸ்லிம் அல்லதவர்களை ‘திம்மிக்கள்’ என்ற பெயரில்
அழைப்பர். இஸ்லாம் அவர்களை சகிப்புத்தன்மையோடும் நல்லிணக்கத்தோடுமே நடாத்துகிறது. இஸ்லாமிய அரசில் முஸ்லிம்களது தொகை அதிகமாக இருந்த காலப்பிரிவுகளிலும் முஸ்லிம்களது தொகை குறைவாக இருந்த ஸ்பெயின், இந்தியா போன்ற பிரதேசங்களிலும் இந்த சுதந்திரம் நடைமுறையில் இருந்துள்ளது. மதஉரிமை, தனியார், குற்றவியல் சட்டங்களில் அவர்களுக்கான விதிவிலக்குகள் போன்றனவற்றைக் குறிப்பிடலாம்.

இஸ்லாமிய சட்டங்கள் அமுலில் இருக்கும், முஸ்லிம்களது செல்வாக்கு மேலோங்கியிருக்கும் ஒரு நாட்டில் முஸ்லிம் அல்லாத பிரஜைகள் விரும்பினால் முஸ்லிம்களது தனியார் சட்டங்களைப் பின்பற்ற முடியும்; பின்பற்றாமலும் இருக்க முடியும். அல்லது அவர்கள் விரும்பினால் தத்தமது தனியார் சட்டங்களைப் பின்பற்ற முடியும். அவர்கள் மீது எவ்வித அழுத்தங்களும் பிரயோகிப்படமாட்டாது போன்ற கருத்துக்களை இந்த நூலில் விளக்க விரும்புகிறோம்.

அல்லாஹ் எமது முயற்சிகளை அங்கீகரிப்பானாக!

 

10.12.2021                                          

அஷ்ஷெய்க்  எஸ்.எச்.எம்.ஃபளீல்

 

 

இஸ்லாமிய அரசின் குடிமக்கள்

‘தாருல் இஸ்லாம்’ எனப்படும் முஸ்லிம் நாட்டின் குடி மக்களை மிகப் பிரதானமாக இரண்டு வகையினராக வகைப்படுத்தலாம்:-

(1) முஸ்லிம்கள்  مسلمون
(2) திம்மீக்கள்   ذميون

திம்மீக்கள் (ذميون)

இஸ்லாமிய அரசில் வாழும் முஸ்லிம் அல்லாதவர்கள்  ‘திம்மீக்கள்’ எனப்படுவர். திம்மீக்கள் என்ற அரபுச் சொல்லுக்கு ‘உடன்பாட்டுக்கும் உத்தரவாதத்திற்கும் பாதுகாப்புக்கும் உட்பட்டவர்கள்’ என்பது பொருளாகும். அவர்கள் உடன்பாட்டுக்குரியவர்கள் என அழைக்கப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. அவர்கள் இஸ்லாத்தின் பாதுகாப்பிலும் இஸ்லாமிய சமுதாயத்தின் அரவணைப்பிலும் பாதுகாப்பாகவும் உள அமைதியோடும் வாழுவதற்கும் அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் முஸ்லிம் சமுதாயத்தினதும் உடன்பாடு கிடைத்திருக்கிறது என்பது அர்த்தமாகும்.

நபிகளார் (ஸல்) அவர்கள்: 

مَن ظَلَم مُعاهَدًا أو تَنَقَّصَه حقَّه وكَلَّفَه فوقَ طاقتِه أو أخَذ منه شيئًا بغيرِ طِيبِ نفْسٍ فأنا خَصمُه يومَ القيامةِ

“யார் (இஸ்லாமிய அரசினால்) உடன்படிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட (திம்மீ) ஒருவருக்கு அநீதியிழைக்கிறாரோ அல்லது அவருக்குச் சேரவேண்டிய ஓர் உரிமையைக் குறைத்துக் கொள்கிறாரோ அல்லது அவரது சக்திக்கு மேல் அவரை நிர்ப்பந்திக்கிறாரோ அல்லது அவரது மனவிருப்பமின்றி அவரிடமிருந்து ஏதாவதொன்றை எடுத்துக்கொள்கின்றாரோ அவருக்கு எதிராக நான் மறுமையில் வாதாடுவேன்.”[1][1]

 مَن قَتَلَ نَفْسًا مُعاهَدًا لَمْ يَرِحْ رائِحَةَ الجَنَّةِ، وإنَّ رِيحَها لَيُوجَدُ مِن مَسِيرَةِ أرْبَعِينَ عامًا

        “யார் (இஸ்லாமிய அரசினால்) உடன்படிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட (திம்மீ) ஒருவரைக்   கொலை செய்கிறாரோ, அவர் சுவர்க்கத்தின் வாடையைக் கூடநுகர மாட்டார். அதன் வாசனை நாற்பது வருடம் ஒருவர் நடக்கும்  தூரத்துக்கு வீசும்” [2][2] போன்ற நபிமொழிகள் இதற்கு ஆதாரமாகும்.

           அந்தவகையில், திம்மீக்களுக்கு அவர்களது உயிர், உடமைகள், கௌரவம் என்பன பாதுகாக்கப்படும் என உத்தரவாதமளிக்கப்படுவர். அவர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் எவ்வகையிலும் (முஸ்லிம்களால்) மாற்றியமைக்க முடியாத தன்மை கொண்டவையாகும். இவ்வாறு திம்மீக்களது உயிர், உடமை, மானம் என்பவற்றைப் பாதுகாப்பது ஒரு முஸ்லிமின் ஈமானின் (நம்பிக்கையின்) ஒரு பிரிக்க முடியாத பகுதியாக ஆகிவிடுவதனால் அது அவனது மார்க்கக் கடமையாக மாறிவிடுகிறது.[3][3]

”எனவே, அவர்கள் முஸ்லிம்களது பாதுகாப்பிலும் உத்தரவாதத்திலும் இருப்பர். இந்த  ‘திம்மத்’ உடன்பாடு  மூலம் முஸ்லிமல்லாதவர்கள் பெறும் உரிமை தற்காலத்தில் அரசியல் பிரஜாவுரிமைக்கு நிகர்த்ததாகும். இதன்மூலம் ஒரு
நாட்டின் பிரஜைகள் பெறும் உரிமைகளை அவர்கள் பெறுவதுடன் அவர்களுக்குள்ள கடமைகளையும் சுமப்பர்.” [4][4] அந்தவகையில் ஒரு திம்மீ, தாருல் இஸ்லாத்தைச் சேர்ந்த ஒருவராவார்.[5][5] ஆனால்,இதை விட ஒருபடி மேல் சென்று  தற்கால ஆய்வாளர்கள், அவர் இஸ்லாமிய பிரஜாவுரிமையைப் பெற்றவர் என்று கூறுகின்றனர்.[6][6]

ஆனால், பஹ்மீ ஹுவைதீ, இவர்களை ‘திம்மீக்கள்’ என்ற சொல்லால் அழைப்பது அவர்களது தரத்தைக் குறைத்துக் காட்டும் என்றும் ஒரு முஸ்லிம் நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியிலும் குர்ஆன், ஸுன்னா என்பன பொதுவான மனித வர்க்கத்திற்குக் கொடுத்திருக்கும் கண்ணியத்தை நோக்கும் போதும், முஸ்லிமல்லாதவர்கள் முஸ்லிம்  அரசில் அனுபவிக்க அனுமதிக்கப்பட்ட உரிமைகளைப் பார்க்கும் போதும் அவர்கள் முஸ்லிம்களுக்கு முழுக்க முழுக்க நிகர்த்த தரத்திலுள்ள ‘முவாதினூன் ‘مواطنون  (குடிமக்களாகவே) கருதப்படுவர் என்றும் அவர் கூறுகிறார்.[7][7] எனவே அவர் ‘குடிமக்கள் தான் திம்மீக்கள் அல்லர்’ (முவதினூன் லா திம்ம்மியூன்) எனும் நூலை எழுதினார்.

முஸ்லிம் அரசில் வாழும் குடிமக்களது நம்பிக்கைக் கோட்பாடுகளை அடிப்படையாக வைத்து இஸ்லாம் அவர்களை தரம்பிரிப்பதில்லை. மாறாக, முஸ்லிம் அரசின் அடையாளமாக இருப்பது, அங்கு வாழ்வோர் -எந்த மதப்பிரிவினைச்  சேர்ந்தோராக இருப்பினும் – அவர்கள் அங்கு எவரது அத்துமீறலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகாமல், தத்தமது தனித்துவங்களைப் பேணி வாழும் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் பெற்றிருக்கிறார்கள் என்பதாகும். இதனை அப்துல் வஹ்ஹாப் கல்லாப் அவர்கள் ‘(தாருல் ஹர்புக்கும்[8][8] தாருல் இஸ்லாத்துக்குமான) வேறுபாடு இஸ்லாமா, இல்லையா என்பதனைப் பொறுத்தல்ல, அங்கு வாழுவோர் பாதுகாப்பாகவும் அச்சமின்றியும் இருக்கிறார்களா என்பதைப் பொறுத்ததாகும்.’ [9][9] என்கிறார்.

சுப்ஹீ மஹ்மஸானீ அவர்கள் கூறும் போது,   “ஒரு நாட்டின் குடிமக்கள் -அந்நியர்கள் என்ற பாகுபாட்டை இஸ்லாம் அவரவரது இனத்தை, அவர்கள் சார்ந்திருக்கும் கொள்கையை வைத்து தீர்மானிக்கவில்லை.அது மக்களை,அவர்கள் இஸ்லாமிய அரசுடன் சமாதானமான உறவையா அல்லது போராட்ட ரீதியான உறவையா வைத்திருக்கிறார்கள் என்பதை வைத்தே வகைப்படுத்தியது. சமாதானமாக இருக்க விரும்புவோர் தான் அடிப்படையானவர்கள் என்றும் போராட்ட மனப்பாங்குள்ளவர்(ஹர்பிய்யூன்)கள் தான் விதிவிலக்கானவர்கள் என்றும் கூறுபோட்டது. அந்தவகையில், ஹர்பீக்களைத் தான் அந்நியர்களாகக் கருதியது. அவர்களது நாடுகளையே எதிரிகளின் பூமியாகவும் அல்லது ‘தாருல் ஹர்ப்’ என்றும் கணித்தது”என்கிறார்.[10][10]

முஸ்லிம் அரசில் பிரசமயத்தவரது நிலை பற்றிய நிலைப்பாட்டிற்கு மேற்கூறப்பட்ட கருத்தே சரியானது என்று வாதிடும் பஹ்மீ ஹுவைதீ, அதற்கு இரண்டு ஆதாரங்களை முன்வைக்கிறார்:-

(1) நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தவுடன் அரபு கோத்திரங்கள் மற்றும் யூதர்கள் உள்ளிட்ட அந்த ‘பிறர்’ உடன்
முதல் ஒப்பந்தத்தைச் செய்தார்கள். இஸ்லாமிய வரலாற்றில் அரசுக்கான முதல் சட்டயாப்பாக கருதப்படும் இந்த ஒப்பந்தத்தில் பின்வரும் ஷரத்து இடம்பெற்றிருந்தது. ‘அவ்ப்’[11][11] இன் புத்திரர்களான யூதர்கள் முஃமின்களுடன் இணைந்த சமூகத்தினரே. யூதர்களுக்கு அவர்களது மதத்தையும் முஸ்லிம்களுக்கு தமது மார்க்கத்தையும் பின்பற்றும் உரிமை இருக்கிறது.’ [12][12] இங்கு முஸ்லிம் அல்லாதோர் – அவர்கள் முஸ்லிம்களுடன் அமைதி வழியில் நடக்கும் காலமெல்லாம் – ‘ஒரே சமூகமாக’வே கருதப்பட்டனர். அவர்கள்  ‘தாருல் ஹர்ப்’ன் வட்டத்தில் வரவில்லை. இங்கு தாருல் இஸ்லாத்திற்கும் தாருல் ஹர்பிற்குமிடையிலான பிரிகோடாக  ‘மார்க்கம்’ என்பது அமையாமல் சுமூகமான வழி அல்லது இணக்கமான போக்கு என்பது தான் துலாக்கோலாகக் கணிக்கப்பட்டுள்ளது.

(2) அப்துல் வஹ்ஹாப் கல்லாப் அவர்கள் தாருல் இஸ்லாத்திற்கும் தாருல் ஹர்பிற்கும் வழங்கியுள்ள வரைவிலக்கணத்தைப் பார்க்கும் போது, அவர் மத நம்பிக்கையை வைத்து வகைப்படுத்தாமல் ஒரு நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா இல்லையா என்பதனை வைத்தும் அங்கு வாழுவோர் நிம்மதியாக வாழுகிறார்களா என்பதனை வைத்துமே வகைப்படுத்தியுள்ளார். இஸ்லாமிய சட்டங்கள் செல்லுபடியாகும் பிரதேசம்  ‘தாருல் இஸ்லா’மாகும். அங்கு வாழுவோர் முஸ்லிம்களாகவோ முஸ்லிம் அல்லாதவர்களாகவோ இருப்பினும் முஸ்லிம்களது (அரசின்) பாதுகாப்பு அவர்களுக்குக் கிட்டும்’[13][13] இந்த அடிப்படையில் நோக்கும்போதும் நம்பிக்கைக் கோட்பாட்டை அடிப்படையாக வைத்தே தாருல் இஸ்லாத்தையும் அதன் குடிமக்களையும் தீர்மானிப்பதாயின் தாருல் இஸ்லாத்திலிருந்து திம்மீக்கள் வெளியேற்றப்பட்டிருப்பார்கள். இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு மட்டுமே உரிய பிரதேசமாக தாருல் இஸ்லாம் இருந்திருக்கும்.

மேற்கூறப்பட்ட காரணங்கள் இரண்டையும் வைத்து நோக்கும் போது, முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம் அரசின் ‘முதல் தரத்திலான பிரஜைகள்’ என்றும் முஸ்லிம் பிரதேசங்களில் அடிப்படைப் பங்காளிகளாக அவர்கள் மாறியிருக்கிறார்கள் என்றும் குறிப்பிடும் ஆய்வாளர் பஹ்மீ ஹுவைதீ,முஸ்லிம்களது பூமிகள் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் சொந்தமானதாகும், எவரும் எவர் மீதும் ஆதிக்கம் செலுத்தவோ சிறப்புரிமை கொண்டாடவோ முடியாது என்றும் தெரிவிக்கிறார்.[14][14]

திம்மீக்களுக்கும் இஸ்லாமிய அரசுக்குமான உறவை அறிஞர் சூரஹ்மான் என்பார் அரசுக்கு விசுவாசமாக இருப்பது என்ற அம்சத்தை அடிப்படையாக வைத்தே நோக்குகிறார். ”இஸ்லாமிய அரசின் குடிமகனாக இருப்பதற்கு இரு அடிப்படைகள் தேவை. ஓன்று, இறைவிசுவாசமும் மற்றையது, அரசுக்கு விசுவாசமாக  இருப்பது என்பதுமாகும். இவ்விரு அடிப்படைகளும் விசுவாசிகளிடம் காணப்படுகின்றன. முஸ்லிமல்லாதவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது குடியுரிமைக்கான அடிப்படை அரசுக்கு அவர்கள் தெரிவிக்கும் விசுவாசமாகும்.[15][15] இதற்கு சிறந்த உதாரணம் நபி(ஸல்)அவர்கள் நஜ்ரான் தேச கிறிஸ்தவர்களுடன் செய்து கொண்ட  ஒப்பந்தமாகும். அந்த உடன்பாட்டில் நபியவர்கள் இந்த ஏக சமுதாயத்திற்கும் இஸ்லாமிய அரசுக்கும் அவர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என நிபந்தனையிட்டனர். எனவே, அந்த உடன்பாட்டின் வாசகம் ஒன்றில், ‘அவர்களில் எவராவது அரசுக்கெதிராக யுத்தம் தொடுக்கும் எவருக்கும் உளவாளியாக இருத்தலாகாது, முஸ்லிம்களது எதிரிகள் எவருக்கும் புகலிடமளிக்கலாகாது’. என்று கூறப்பட்டுள்ளது.”[16][16]

ஹாமித் ஸுல்தான் எழுதும் போது, “முஸ்லிம் சமூகத்தின் அங்கத்தவர்களாக முஸ்லிம்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. வரலாற்று நெடுகிலும் முஸ்லிம் சமூகம் பெரும்பாலான நாடுகளில் முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதவர்களையும் கொண்டிருந்தது. அரச மட்டத்திலிருந்து பார்க்கையில் முஸ்லிம் சமூகத்தின் உறுப்பினர்கள் அரச குடிமக்கள் (ரஇய்யா-رعية)எனப்படுவர். இந்த குடிமக்கள் அனைவரதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இஸ்லாமிய நோக்காகும். (ரஇய்யா)رعية, (குடிமகன்) ,مواطن முவாதின் (பிரஜாவுரிமையுள்ளவன்) என்ற பாகுபாடு முஸ்லிம் சமூகத்தில் இல்லை.[17][17]

இஸ்லாமிய நாட்டில் சகல இனத்தவரும் குடியுரிமை பெற்று வாழும் உரிமையைப் பெற்றிருப்பர் என்பதை கலாநிதி
இஸ்மாயில் பாரூகீ எழுதும் போது, “மனிதகுல ஐக்கியத்துக்கான அடிப்படையாக இஸ்லாம், ‘முழு உலக சமூகம்’ ஒன்றை தோற்றுவிக்கிறது. இதற்காக நாடு, மக்கள், இனக்குழுக்கள் என்பவற்றைக் கவனிப்பதில்லை. இந்த முழு உலக சமூகத்தில் முஸ்லிம்கள் ஒருபிரிவினர் மட்டுமே. உலகில் எழுதப்பட்ட முதல் சட்ட யாப்பில் ‘முஸ்லிம் உம்மா’ ஒரு சமூகம் என்றும், யூதர்கள் இன்னொரு சமூகம்(உம்மத்) என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் கிறிஸ்தவ, சொராஸ்திரிய, ஹிந்து மற்றும் பௌத்த ‘உம்மாக்கள்’ இஸ்லாமிய அரசில் இணைந்து கொண்டன. இஸ்லாமிய அரசே பல்வேறு சமூகங்களின் உம்மாவாக இருந்தது. விரிவுபடுத்தப்பட்ட உம்மா இறுதியில் மனித சமூகத்தின் அங்கத்தவர்களை தனக்குள் உள்ளடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. உலக  ‘உம்மா’ வை உருவாக்க இணைந்து கொண்ட சமூகங்கள் சமாதானமாக, சகவாழ்வை மேற்கொண்டன. ஒவ்வொரு உம்மத்தும் தத்தமது மதத்திற்கிணங்க அதனது அங்கத்தவர்களின் வாழ்வுமுறையை ஒழுங்குபடுத்தலாம்.   அவர்கள் தமக்கென பிரத்தியேகமான நிறுவனங்களையும் சட்டங்களையும் கொண்டிருக்க முடியும் என்பதுடன் முன்னையதை ஊக்கப்படுத்துவதற்கும் பின்னையதை நடைமுறைப்படுத்துவதற்குமான அதிகாரத்தையும் பெற்றிருப்பர். இஸ்லாமிய அரசு அதன் ஷரிஆவிலும் அல்லது இறைவன் தந்த ஷரீஆவிலும் சட்டயாப்பிலும் இவற்றுக்கான உத்தரவாதத்தை வழங்கும்.[18][18]

இஸ்லாமிய அரசில் பல்லின சமுதாயமொன்று இருக்கும் எனும் கருத்தை ராஷித் அல்கனூஷி பின்வருமாறு விளக்குகிறார் :- ”இஸ்லாமிய குடியுரிமையானது மக்களுக்கு மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள பால், இனம், மொழி
போன்ற வேறுபாடுகளை வைத்து குடிமக்களைப் பாகுபடுத்தமாட்டாது. மனித இனம் ஒரே அடிப்படையைக் கொண்டது என்று குர்ஆன் அடிக்கடி கூறுகிறது. மேலும், நிறம், இனம் போன்றன ஒரு சாரார் மற்றொரு சாராரைப் பிரித்து வாழவோ வெறுத்தொதுக்கவோ அன்றி பரஸ்பரம் புரிந்துணர்வுடன் நடக்கவும் மனித சமூகத்திலுள்ள அனுகூலங்களை வெளிக் கொண்டுவரவுமே உண்டுபண்ணப்பட்டது என்றும் கூறுகிறது. அந்தவகையில், இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படை அது சர்வதேச தன்மை கொண்டது என்பதாகும். அதனால் அதன் சட்டங்கள் அதனை விசுவாசித்தவர்களுக்கும் உடன்படிக்கை மூலம் அதற்குக் கட்டுப்படுபவர்களுக்கும் பொதுவானதாகும். தாருல் இஸ்லாத்திலுள்ளவர்கள் முஸ்லிம்களாக இருப்பினும் எத்தகைய நம்பிக்கைக் கோட்பாடுகளைக் கொண்ட முஸ்லிமல்லாதவர்களாக இருப்பினும் அவர்கள் அனைவரும் ஏக குடியுரிமையை பெற்றிருப்பர். இஸ்லாமிய அரசின் பிரஜாவுரிமைக்காக விண்ணப்பிக்கும் எவருக்கும் – அவரது நம்பிக்கைக் கோட்பாடு அல்லது கொள்கை எதுவாக இருப்பினும் – குடியுரிமைகளை அனுபவிப்பதற்காக அது வழங்கப்படும்.[19][19]

மௌலனா மௌதூதி அவர்கள் திம்மீக்கள் பற்றிக் கூறும் போது, “இஸ்லாமிய அரசின் எல்லைக்குள் வசிக்கும் முஸ்லிமல்லாதோரை இது குறிக்கும். இவர்கள் அரசுக்கு விசுவாசமாக நடப்பதாகவும், கட்டுப்படுவதாகவும் ஏற்றிருப்பர். அவர்கள் தாருல் இஸ்லாத்தில் பிறந்தவர்களாகவோ,அல்லது வெளியிலிருந்து வந்து தம்மை திம்மீக்களாக ஏற்குமாறு அரசை வேண்டியவர்களாகவோ இருக்கலாம். இவர்களுக்கு முஸ்லிம்களுக்குரிய உரிமைகளை இஸ்லாம் வழங்குவது போலவே  நாட்டின் உள்ளக சட்டங்களில் அவர்களுக்கான உரிமைகளை வழங்கும்.” [20][20]

           எனவே, முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம் அரசின் முதற்தரமான பிரஜைகள் என்று பஹ்மீ ஹுவைதி கூறுவது மிகப் பொருத்தமான கருத்தாகும்.

வரலாற்றில்  திம்மீக்கள்              

முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றை எடுத்து நோக்கும் போது முஸ்லிம் அரச அலகின் கீழ்
முஸ்லிமல்லாதவர்கள் திம்மீக்களாக நிம்மதியாக வாழ்ந்திப்பதை அறியமுடியும். ”பிறருடனான
உறவில் முஸ்லிம்களது சீர்திருத்தப் புரட்சியானது யூதர்களுடனும் கிறிஸ்தவர்களுடனும்
நிற்கவில்லை.மாறாக,நெருப்பு வணங்கிகள்,
இந்துக்கள், பௌத்தர்கள் ஆகியோரும் முஸ்லிம்
அரசில்  வாழ்ந்தனர். முஸ்லிம்கள்
பாரசீகத்தை வெற்றி கொண்டபோது பாரசீகர் நெருப்பை வணங்கியதுடன் நன்மைக்கும்
தீமைக்குமென இரு கடவுளர் இருப்பதாக நம்பிவந்தனர். இத்தகையவர்களை எப்படி நடாத்துவது  என்று மதீனா பள்ளியில் இருந்த ஆலோசனை
சபையிடத்தில் உமர்(றழி) அவர்கள் ‘நெருப்பு வணங்கிகளை நான் என்ன செய்வது?’என்று
விசாரித்தார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப்(ரழி) அவர்கள் ‘அவர்களை அஹ்லுல் கிதாப் போன்று
நடாத்துங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் ஒரு தடவை கூறினார்கள் என சான்று பகர்கின்றேன்’. என்றார்.” [21][21]

எனவே, நெருப்பு வணங்கிகளும் இஸ்லாமிய நாட்டின் பிரஜைகளாக இருந்துள்ளனர். நபி(ஸல்) அவர்களது
இந்தப் போதனையானது குலபாஉர் ராஷிதூன்களது காலத்திலும் இஸ்லாமிய வரலாறு நெடுகிலும்
உலக மதங்கள் இருந்த நாடுகளிலும் பாரசீகம் முதல் இந்தியா, சீனா
வரை அமுல்படுத்தப்பட்டது. மஃமூனின் காலத்தில், பாரசீகத்தில் மஜுஸியரது தவைராக
இருந்த ‘யஸ்தானப்ஹத்’
என்பார், கலீபாவின் அவையில் வைத்து வேதியியலாளர்களோடு
வாதத்தில் ஈடுபட்டதாகவும் இறுதியில் அவர் தோற்றுப் போனதாகவும் இஸ்லாத்தை
தழுவும்படி அவரை கலீபா வேண்டிய போது அதனை அவர் மறுத்த வேளை அவரைப் பின்பற்றுவோர்
இருக்கும் இடத்தை அவர் அடையும் வரை பாதுகாப்பு வழங்கும் படி
சம்பந்தப்பட்டவர்களை  கலீபா வேண்டிக்
கொண்டதாகவும் தோமஸ் ஆர்னோல்ட் கூறுவதாக கலாநிதி உமாறா தெரிவிக்கிறார்.[22][22]

”இஸ்லாமிய
அரசின் பல்லினத்தன்மை பற்றி Rlandaur என்பார் தனது நூலில்
பின்வருமாறு எழுதுகிறார் ‘கிறிஸ்தவ சாம்ராஜ்ஜியம் அதன் குடிமக்கள் மீது கிறிஸ்தவத்தை திணிக்க முயன்ற
போது அறபிகள் மதத்தால் சிறுபான்மையினரை அங்கீகரிக்குமளவுக்கு சென்றனர். அவர்களது
இருப்பை ஏற்றனர். யூத,
கிறிஸ்தவ, மஜுஸிகள்
உடன்படிக்கைக்குரியவர்களாக அறிமுகமாயினர். வேறு வார்த்தையில் கூறுவதாயின், அந்த
சமூகங்கள் பாதுகாப்போடு வாழ்ந்தன எனக் கூறலாம்.”[23][23]

“சில
ஹதீஸ்களின் படி தூதுக் குழுக்களின் வருடம் எனப்பட்ட ஹி.8-9- (கி.பி.630-631)ல்
நபி(ஸல்) அவர்கள் சொராஸ்திரியர்களை இஸ்லாமிய அரசுக்குள் ஓர்
‘உம்மா’ வாக அங்கீகரித்தார்கள். அதன் பிறகு உடனடியாக இஸ்லாமிய அரசு பாரசீகத்தை வெற்றி
கொண்டு, அதனது மில்லியன் கணக்கானவர்களை தனது பிரஜைகளாக அங்கீகரித்தது. இஸ்லாத்தை
ஏற்றவர்கள் முஸ்லிம்களது ‘உம்மா’ வில் இணைந்த அதேவேளை,
தமது சொராஸ்திரியத்தில் தொடந்தும் இருக்க விரும்பியோர்
யூதர்களுக்கு (மதீனா ஒப்பந்தத்தின் மூலம்) வழங்கப்பட்ட அதே உரிமைகளையும்
கடமைகளையும் பெற்றனர்.

ஹி. 91- கி.பி 711 ல் முஹம்மத் பின் காஸிம் அவர்களால் இந்தியா கைப்பற்றப்பட்ட பின்னர்
முஸ்லிம்கள் தமக்கு இதற்கு முன்னர் அறிமுகமேயற்ற பௌத்தம், ஹிந்து
ஆகிய புதிய மதங்களைச் சந்தித்தார்கள். முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்டு பின்னர்
இஸ்லாமிய அரசுடன் இணைக்கப்பட்ட சிந்து மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளில் அவ்விரு
மதங்களைச் சேர்ந்தோரும் சகவாழ்வை மேற்கொண்டனர். இந்துக்களையும் பௌத்தர்களையும்
கையாள்வது எப்படி என்பதற்கான வழிகாட்டல்களை முஹம்மத் பின் காஸிம் டமஸ்கஸ்
கலீபாவிடமிருந்து எதிர்பார்த்தார். அவர்கள் சிலைகளை வணங்க அவர் கண்டார். அவர்களது
கோட்பாடுகள் இஸ்லாத்திலிருந்து வெகு தூரத்திலிருந்தன. அந்த மதங்களது ஸ்தாபகர்கள்
பற்றி முஸ்லிம்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை. இந்த கவர்னரது அறிக்கையின் படி இது
பற்றிய தீர்ப்பைத் தரும்படி கலீபா உலமாக்களின் குழுவை வேண்டிக்கொண்டார். தீர்ப்பு
பின்வருமாறு அமைந்தது:- இந்துக்களும் பௌத்தர்களும் இஸ்லாமிய
அரசுக்கெதிராகப் போராடாமல் இருக்கும் காலமெல்லாம் அவர்கள்
ஜிஸ்யாவைச் செலுத்தும் காலமெல்லாம் அவர்கள் விரும்பும் விதத்தில் தத்தமது
கடவுளர்களை வழிபடுவதற்கான,
அவர்களது ஆலயங்களைப் பராமரிப்பதற்கான, அவரவர்
நம்பிக்கைகளது போதனைகளுக்கேற்ப தமது வாழ்வை அமைத்துக் கொள்வதற்கான சுதந்திரம்
வழங்கப்பட வேண்டும். யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வழங்கப்பட்ட அதே அந்தஸ்து
இவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அந்தத் தீர்ப்பு அமைந்தது. இத்தகவல்கள் அல்கூபீ என்பாரின் ‘ஷாஹ்
நாமா’வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறன.” என
பாரூகீ தெரிவிக்கிறார்.[24][24]

 இஸ்லாமிய அரசில் ஒருசாரார் திம்மீக்களாக
அங்கீகரிக்கப்பட வேண்டுமாயின் அவர்கள் யுத்தம் தொடுப்பதை விட்டுவிட்டு நாட்டின்
தலைவருடன் அல்லது அவருக்குப் பதிலாக இருப்பவருடன் நேரடியாக இந்த ஒப்பந்தத்தைச்
செய்ய வேண்டும்.அது தனிமனிதர்களால் வழங்கப்பட முடியாத உரிமையாகும்   என்பது அப்துல் கரீம் ஸைதானின்
கருத்தாகும்.[25][25]

இரு தரப்பினரும் இவ்வொப்பந்தத்தை வாய்மொழிந்து பரஸ்பரம் ஒப்புதல் வழங்கவும்
வேண்டும். இது எழுத்துருவில் அமைய வேண்டும் என்ற நிபந்தனை இல்லாவிட்டாலும்
இஸ்லாமிய பிக்ஹில் ஒப்பந்தங்கள் பாதுகாக்கப்படுவது வரவேற்கத்தக்கதாகக்
கருதப்படுகிறது.[26][26]
இஸ்லாமிய வரலாற்றில் பல ‘திம்மத்’ ஒப்பந்தங்கள் எழுதப்பட்டே நிறைவேற்றப்பட்டன. [27][27]

‘திம்மத்’ உடன்பாடு
நிரந்தரமானதாகும்.முஸ்லிம் அல்லாதவர்கள் தத்தமது மதங்களில் தொடர்ந்திருக்க
அனுமதித்தல் அவர்களுக்கு இஸ்லாமிய சமுதாயத்தின் பாதுகாப்பு,கவனிப்பு என்பவற்றை உத்தரவாதப்படுத்தல் என்பவற்றையே இவ்வுடன்பாடு
உள்ளடக்கியிருக்கும். ஆனால், அவர்கள் ‘ஜிஸ்யா’ எனப்படும்
வரியை அரசுக்கு செலுத்துவதோடு தத்தமது மத விவகாரங்களோடு தொடர்பான ஏனைய விடயங்களில்
இஸ்லாமிய சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாகக்
கொள்ளப்படும். இந்த உடன்பாட்டின்படி முஸ்லிம்களும் திம்மீக்களும் பரஸ்பர
உரிமைகளைப் பகிர்ந்து கொள்வதோடு ஒருசாரார் இன்னொரு சாராருக்கு நிறைவேற்ற வேண்டிய
கடமைகளையும் ஏற்றிருப்பர்.’[28][28]

முஸ்தஃமினூன்  مستأمنون        

தனது தேவையொன்றுக்காக தற்காலிகமான பாதுகாப்பு உடன்படிக்கையொன்றின் பேரில்
தாருல் ஹர்பிலிருந்து(அதாவது இஸ்லத்திற்கு எதிராக ஆயுதப் போரில் ஈடுபட்டுள்ள ஒரு
நாட்டிலிருந்து) தாருல் இஸ்லாத்திற்குள் நுழையும் முஸ்லிமல்லாத ஒருவர்
‘முஸ்தஃமின்’ எனப்படுவார்.அவர் தனது தேவை முடிந்த பின்னர் தனது
தாய்நாட்டுக்குத் திரும்பி விடுவார்.[29][29]

இமாம் காஸானீ கூறும்போது,‘முஸ்தஃமின், தாருல் இஸ்லாத்தில்
நுழைந்தாலும் அவர் தாருல் ஹர்பைச் சேர்ந்தவராவார். அவர் தாருல் இஸ்லாத்தில்
நிரந்தரமாக தங்கும் நோக்கத்துடன் அல்லாமல் ஒரு தேவையின் நிமித்தம் வந்து பின்னர்
தாய் நாட்டுக்குத் திரும்புவார்.’[30][30]என்கிறார்.
மாற்று நாட்டைச் சேர்ந்த ஒரு  ‘ஹர்பீ’,முஸ்தஃமினாக மாறுவதாயின் அவர் அதற்காக
வார்த்தை அல்லது எழுத்து அல்லது கடிதம் அல்லது சைகை மூலமாக உடன்பாட்டைச் செய்து
கொள்ளலாம். அவ்வாறு உடன்பாடு செய்யப்பட்ட மாத்திரத்திலேயே உடனடியாக அது அமுலுக்கு
வரும். அந்த முஸ்தஃமினான ஹர்பீ, அந்த உடன்பாட்டிற்கிணங்க
செயல்பட முடியும். அவர் தாருல் இஸ்லாத்தில் பாதுகாப்பாக நுழைவார். அவருக்கு எவ்வித
தீங்கும் இழைக்கப்படலாகாது. அவ்வுடன்பாடு நடைமுறையில் இருக்கும் வரை அதனைப்
பேணுவது முஸ்லிம்கள் மீதான கடமையாகும்.[31][31]

முஸ்தஃமின்கள் பற்றிய விரிவான சட்டதிட்டங்களுக்கு அடிப்படையாக பின்வரும்
அல்குர்ஆன் வசனம் அமைகிறது.   “இணைவைப்பவர்களில் எவராவது உம்மிடம் அபயம் தேடி வந்தால் அவர் அல்லாஹ்வின்
வார்த்தையை செவிமடுக்கும் வகையில் அவருக்கு நீர் அபயமளிப்பீராக. பின்னர்,அவர்
பாதுகாப்பாக இருப்பதற்கான இடத்திற்கு அவரைக் கொண்டுபோய்விடுவீராக.”[32][32]

          ”இங்கு
முஸ்தஃமின் பற்றி மூன்று கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன :-

  1. இஸ்லாத்தை
    விளங்குவதற்கு அல்லது அது பற்றி தனது உள்ளத்திலுள்ள சந்தேகங்களைக் களைவதற்கு இந்த
    முஸ்தஃமின் முஸ்லிம்களுடன் உறவாட தாருல் இஸ்லாம் வருகிறார்.
  2. எனவே, அவர்
    தனது தேவையை நிறைவு செய்துகொள்ள சுதந்திரமான சூழல் ஒன்றை ஏற்படுத்துவதும்
    அவருக்கான பாதுகாப்பை வழங்குவதும் முஸ்லிம்களது கடமையாகும்.
  3. அவர்
    இஸ்லாத்தில் நுழைய மறுக்கும்பட்சத்தில் தனது நம்பிக்கைக் கோட்பாட்டின் பூரண சுதந்திரத்தை
    அனுபவித்த நிலையில்,
    பலாத்காரம் அல்லது அவமானப்படுத்தல் அல்லது
    நோவினைப்படுத்தல் ஆகிய எவற்றுக்கும்
    உள்ளாக்கப்படாமல் தனது தாயகம் திரும்ப அவருக்கு வசதி செய்து கொடுக்கப்படவேண்டும்.[33][33]

‘இங்கு
குர்ஆனை செவிமடுக்க வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பதுடன் இந்நிலை
குறுகிவிடாது. முஸ்லிம் சமூகத்தின் நாகரிக, கலாசார அம்சங்களை நேரடியாக
கண்டறிவதற்கு வழிசெய்யப்படுவதையும் இது குறிக்கும். இஸ்லாத்திற்கெதிரான
குற்றச்சாட்டுக்களிலிருந்து தூரவிலகி நின்று இஸ்லாத்தை தூய உருவில் புரிய இது
வழிவகுக்கும். குறுகிய ஒரு காலப்பிரிவில் இஸ்லாமிய நாட்டில் இவர் தங்குவதால்
அந்நாட்டின் பிரஜை என்று அவரைக் கூறமுடியாது. தற்காலத்தில் வழங்கப்படும் ‘வீசா’ எனப்படும், ஒரு          நாட்டில் நுழைவதற்கான
அரச அனுமதி என்ற அமைப்பை இது ஒத்திருக்கிறது.[34][34]

இஸ்லாமிய அரசில் திம்மீக்கள்

இஸ்லாமிய அரசின் அதிகாரம் பெற்ற எல்லையுள் வாழும் திம்மிக்களை இஸ்லாம்
சகிப்புத்தன்மையோடும் நல்லிணக்கத்தோடுமே நடாத்துகிறது. இஸ்லாமிய அரசில்
முஸ்லிம்களது தொகை அதிகமாக இருந்த காலப்பிரிவுகளிலும் ஸ்பெயின், இந்தியா
போன்ற முஸ்லிம்களது தொகை குறைவாக இருந்த காலப்பிரிவிலும் இந்த நல்லிணக்கம்
நடைமுறையில் இருந்துள்ளது. இந்தவகையில் இந்த நல்லிணக்கத்தின் வடிவங்களாக பல
அம்சங்களை இனம்காண முடியும். மத உரிமை, தனியார், குற்றவியல்
சட்டங்களில் அவர்களுக்கான  விதிவிலக்குகள்
போன்றன இப்பகுதியில் ஆராயப்படுகின்றன. முஸ்த.ஃமின்களுக்கான உரிமைகள் பற்றிய ஒரு சிறு
விளக்கமும் இங்குள்ளது.

தனியார் சட்டங்கள்

மத சுதந்திரம் என்பது அர்த்தமுள்ளதாக அமைய வேண்டுமாயின் மதங்களைப்
பின்பற்றுவோருக்கு அந்த மதங்கள் விதிக்கும் நடைமுறை வாழ்வுடன் தொடர்பான சட்ட
திட்டங்களைப் பின்பற்றும் உரிமையும் வழங்கப்பட்டாக வேண்டும்.  இஸ்லாமிய நாட்டில் வாழும் பிற சமயத்தவர்களுக்கு
இந்த உரிமையை இஸ்லாம் வழங்குகிறது. இவை திம்மீக்களுக்கு மட்டுமுள்ள சிறப்புச்
சலுகைகளாகும்.

. விவாகம்

இஸ்லாமிய ஷரீஆவில் சட்டபூர்வமற்றவை (அதாவது ஹராமான) வையாகக் கருதப்படும் விவாக முறைகளை
திம்மீக்கள் தத்தமது மத சட்டங்களின் படி அனுமதிக்கப்பட்டவையென நம்பினால், அவர்களது
விருப்பப்படி அவற்றைச் செய்து கொள்ள அனுமதிக்கப்படும் என்பதுடன் அவற்றில் இஸ்லாமிய
அரசு எவ்வித தலையீட்டையும் செய்யாதென ஹன்பலி, ஷாபிஈ, மாலிகி
மத்ஹபினர் கூறியுள்ளனர். ஹனபீ மத்ஹபைச் சேர்ந்தவர்கள் இதனை
அனுமதிக்கவில்லை. இமாம் அபூஹனீபாவும் இக்கருத்தைக் கொண்டுள்ளார்.[35][35]

மேற்கூறப்பட்ட கருத்தே அங்கீகரிக்கத்தகதாகும். மஜுஸிகள்
மஹ்ரம்களைத் திருமணம் செய்வதனை ஆகுமாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதை நபி(ஸல்)
அவர்கள் நன்கு தெரிந்திருந்தும் அவர்களது திருமண முறைகளை அங்கீகரித்தார்கள்.ஆனால்,
இவர்கள் வட்டிக் கொடுக்கல் வாங்கலை செய்யலாகாது எனத் தடுத்தார்கள்.மேலும்,நஜ்ரான் கிறிஸ்தவர்களது திருமண முறையையும் நபி(ஸல்)
அவர்கள் தடைசெய்யவில்லை. பாரசீகத்தை முஸ்லிம்கள் வெற்றிகொண்ட போது மஜுஸியரது
திருமண முறைகளை மாற்றியமைக்கவில்லை. ஒருதடவை உமர் இப்னு அப்துல் அஸீஸ்(ரஹ்) அவர்கள் ஹஸனுல் பஸரிக்கு எழுதிய கடிதத்தில் ‘திம்மீக்கள்
மஹ்ரம்களைத் திருமணம் செய்வதனையும் மது, பன்றியை வைத்திருப்பதனையும்
கண்ட குலபாஉர் ராஷிதீன்கள் அவற்றை அவர்கள் தொடர அனுமதியளித்துள்ளார்கள் அல்லவா?  இதன் தீர்ப்பு என்ன?,’ என
வினவினார். அதற்கு ஹஸனுல் பஸரி, ‘அவர்கள்
ஜிஸ்யா கொடுத்திருப்பது தாம் நம்பிக்கை கொண்டிருக்கும் அம்சங்களில் தமக்கு
சுதந்திரம் தேவை என்பதை எதிர்பார்த்துத் தான் .நீர்
(கலீபாக்களை) பின்பற்றுபவராக இருக்க வேண்டுமேயன்றி (மேற்படி சட்டத்தை ரத்துச்
செய்து) புதிதாக உருவாக்குபவராக இருக்கக் கூடாது’ என்றார்.”[36][36]

யூசுப் அல்கர்ளாவி அவர்களது கருத்தாவது,“அவர்களது மதம் அவர்களுக்கு
அனுமதித்திருக்கும் தனியார் சட்ட மற்றும் சமுதாய முறைமைகள் இஸ்லாத்தில்
தடுக்கப்பட்டிருப்பினும் அவற்றை விட்டுக் கொடுப்பது அவர்கள் மீது கடமையல்ல.
திருமணம். விவாகரத்து,
பன்றி உண்ணல், மதுவருந்தல் போன்ற அம்சங்களை
உதாரணமாகக் கூறலாம். இவற்றை ரத்துச் செய்வதன் மூலமோ கண்டிப்பதன் மூலமோ இஸ்லாம்
அவற்றில் தலையீடு செய்யாது. ஆனால், இவ்விடயங்களில் அவர்கள்
இஸ்லாமிய சட்டப்படி தீர்ப்புக் கேட்டுவந்தால் அதன்படி நாங்கள் தீர்ப்பு
வழங்குவோம்.ஏனெனில்,அல்லாஹ்”அல்லாஹ்
இறக்கியவற்றைக் கொண்டு நீர் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்குவீராக! அவர்களது
மனோ இச்சையைப் பின்பற்றாதீர்.”[37][37] என்கிறான். அவர்கள் எம்மிடம் இந்த விடயங்களில் தீர்ப்புக் கேட்டு வந்தால்
நாம் இரண்டில் ஒரு முடிவுக்கு வரலாம். அதாவது,ஒன்றில்
நாம் எமது ஷரீஆவின்படி தீர்ப்புக் கூறலாம், அல்லது கூறாமல்
விட்டுவிடலாம்.அல்லாஹ்:-”அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களுக்கு மத்தியில் நீர் தீர்ப்பு வழங்குவீராக, அல்லது
அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராயின்
அவர்கள் உமக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது.ஆனால்,நீர்
(அவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின் நியாயமாகவே அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக. ஏனெனில், அல்லாஹ்
நீதிமான்களையே நேசிக்கிறான்”[38][38] என்று
கூறுகிறான்.

 ”அந்தவகையில்,(எமது வரலாற்றில்) திம்மீக்களுக்கென தனியான நீதிமன்றங்கள் இருந்தன. அவர்கள் விரும்பினால்
அங்கு சென்று தீர்ப்புக் கேட்கலாம். அல்லது இஸ்லாமிய
தீர்ப்பை நாடலாம். மேற்கத்திய வரலாற்றாசிரியர் எடம் மித்ஸ் என்பார், திம்மீக்களுக்கான பிரத்தியேக நீதிமன்றங்கள் வரலாற்றில் இருந்தாகவும், அங்கு
அவர்களுக்கென தனியான நீதிபதிகள் தீர்ப்புக்களை வழங்கி வந்ததாகவும் அங்கு
திருமணத்துடன் தொடர்பான தீர்ப்புக்கள் மட்டுமன்றி வாரிசுச் சொத்துரிமை சம்பந்தமான
தீர்ப்புக்களும் வழங்கப்பட்டதாகவும் எழுதுகிறார்.
அந்தலூஸில் (ஸ்பெய்ன்) கிறிஸ்தவர்கள் தமது பிரச்சினைகளை தாமே தீர்த்துக்கொண்டதாகவும்
கொலைக் குற்றச் சட்டங்களுக்காக மட்டுமே ‘காழி’யை
அணுகியதாகவும் அவர் மேலும் குறிப்பிடுகிறார்.”[39][39]

. திருமணமும்
விபசாரமும்

திம்மீக்களில் எவராவது விபசாரக் குற்றத்தில் ஈடுபட்டால், முஸ்லிம்
விபசாரிக்கு விதிக்கப்படுவது போன்ற தண்டனை அவர்மீது விதிக்கப்பட வேண்டுமா என்ற விடயத்தில்
கருத்து பேதம் உண்டு. ஹனபி,
ஹன்பலி, ஷாபிஈ மத்ஹபுகளைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள்
இஸ்லாத்தின் உரிய தண்டனை (என்பது கசையடி அல்லது கொலைசெய்தல்) கட்டாயமாக
விதிக்கப்படல் வேண்டும் எனக் கூறுகின்றனர்.[40][40]

இது விடயமாக
மாலிகி மத்ஹபின் கருத்தாவது, விபசாரம் செய்யும்
திம்மீ மீது இஸ்லாமிய சட்டத்தின் படி தண்டனை வழங்கப்படமாட்டாது. அவர்களது
மதத்தவர்களிடம் அவர் ஒப்படைக்கப்பட்டு அவர்களது நம்பிக்கைப் படி தண்டனை
நிறைவேற்றும்படி வேண்டப்படும்.[41][41] இமாம் மாலிக் தனது இந்தக்
கருத்துக்கு ஆதாரம் காட்டுகையில், உமர்(றழி), அலி
(றழி), ஆகிய இருவரிடமும் திம்மீக்கள் இருவர் விபசாரம் செய்தால் என்ன செய்ய வேண்டும்
என வினவப்பட்டதற்கு அவர்கள் இருவரும் அவரவரது மதத்தவர்களிடம் ஒப்படைக்கப்படுவர்
என்று கூறினர் எனத் தெரிவிக்கிறார்.[42][42]

அதேவேளை, இமாம் அபூஹனீபா அவர்கள் திம்மீக்களான ஆணும்
பெண்ணும் விபசாரம் செய்தால் அவர்கள் ஒருபோதும் கல்லெறிந்து
கொல்லப்படமாட்டார்கள்,  மாறாக, அவர்களுக்கு
கசையடி வழங்கப்படும் என்றார்கள்.[43][43]

மதுவும் பன்றியும்

திம்மீக்கள் மது,
பன்றி என்பவற்றை விற்பதனையும் வட்டிக் கொடுக்கல்
வாங்கல்களில் ஈடுபடுவதனையும் தமக்கு அனுமதிக்கப்பட்டதாகக் கருதினால் அவர்களுக்கு
அத்தகைய நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும் என்று அபுல் வலீத் இப்னு ருஸ்த் (ஹி.520) கூறுகிறார்.”[44][44]

மேலும்,முஸ்லிம்களது சொத்துக்கள் அனைத்தும் (அத்துமீறலுக்கு உள்ளாக்கப்படாமல்)
பாதுகாக்கப்பட வேண்டும் என்பது போலவே அவர்களது (திம்மீக்களது) சொத்துக்களும்
பாதுகாக்கப்பட வேண்டும் என்று இமாம் இப்னு குதாமா கருத்துத் தெரிவிக்கிறார்.[45][45]

ஆனால் ஹனபி,
ஷாபிஈ, ழாஹிரி, ஹன்பலி, ஆகிய
மத்ஹபினரது கருத்துப்படி திம்மியின் மதுவையும் பன்றியையும் திருடியவர்-அவர்
முஸ்லிமாகவோ திம்மியாகவோ இருந்தாலும் அவர் மீது திருட்டுக் குற்றத்துக்கான தண்டனை
நிறைவேற்றப்படமாட்டாது. இந்தச் சொத்துக்கள் முஸ்லிமின் பார்வையில் பெறுமதியற்றவை
என்பது இவர்கள் இதற்காக காட்டும் நியாயமாகும்.

ஹனபி மத்ஹபைச் சேர்ந்த இமாம் காஸானியின் கருத்து இதற்கு மாற்றமாக அமைகிறது.
திம்மீயின் சொத்துக்கள் அனைத்தையும் பாதுகாப்பது இஸ்லாமிய அரசின் கடமை என்ற
வகையில், ஒரு திம்மீ பன்றி அல்லது மதுவை வைத்திருந்தால் அவற்றைப் பாதுகாப்பதும் அந்த
வகையில் அடங்கும்,
இந்த இரண்டையும் ஒரு முஸ்லிம் வைத்திருந்து அவனிடமிருந்து
எவராவது அவற்றைத் திருடினால் அல்லது அழித்தால் அதற்காக அவனுக்கு நஷ்டஈடு
கிடைக்கமாட்டாது. காரணம்,
அவை முஸ்லிமிடமுள்ள பெறுமதியான சொத்துக்கள் அல்ல. ஆனால், திம்மீயின்
இத்தகைய சொத்துக்களை எவராவது அழித்தால் அவ்வாறு செய்பவர் நஷ்ட்டயீட்டை வழங்க
வேண்டும். ஏனெனில்,
அவை அவரைப் பொறுத்தவரையில் பெறுமதிமிக்க பொருட்களாகும்.
எனவே, அத்தகைய செல்வங்கள் திம்மத் ஒப்பந்தத்தின்படி பாதுகாக்கப்படுவதால் அவற்றின்
மீது ‘உஸ்ர்’ எனப்படும் வியாபாரப் பொருட்களுக்கான வரி விதிக்கப்படும் என்று ஹனபி மத்ஹபைச்
சேர்ந்த இமாம் ஸுபர் தெரிவிக்கிறார்.[46][46]

அத்துர்ருல் முக்தாரில் எழுதப்பட்டிருப்பதாவது: ‘திம்மியின்
மதுவை, அவனது பன்றியை ஒரு முஸ்லிம் அழித்தால் அதற்கான நஷ்ட்டயீட்டை அந்த முஸ்லிம்
பொறுப்பேற்க வேண்டும்’[47][47]

அந்தவகையில் மது,
பன்றியை சொந்தமாக வைத்திருக்க ஒரு திம்மீக்கு முடியும்
என்பதாலும் அவற்றிற்கு அவரிடம் ஒரு பெறுமதியிருப்பதாலும் அவற்றைத் திருடியவருடைய
கை வெட்டப்படும் என ஸைதானும் தெரிவிக்கிறார்.[48][48]

”திம்மீக்களது
தனியார் விவகாரங்கள் அவர்களது தனியார் சட்ட முறைமைக்கேற்பவே தீர்மானிக்கப்படும். ஷரீஆவில்
அத்துறை தொடர்பான சட்டங்கள் அவர்கள் மீது திணிக்கப்படமாட்டாது.”[49][49] ”விவாகம், விவாகரத்து
போன்ற விவாகாரங்களில் எமது ஷரீஅத்திடமா அல்லது அவர்களது மதத்திடமா சட்டம் கேட்பது
என்று தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்குண்டு. இந்த தனியார் சட்டங்கள் நேரடியாக
மதத்துடன் தொடர்புபட்டிருப்பதால் இஸ்லாமிய சட்டங்களைப் பின்பற்றும்படி நிர்ப்பந்திக்கப்படமாட்டார்கள்.
அவர்களது மார்க்கத்தின் படி நடக்க அவர்களை விட்டுவிடும்படி எமக்குப்
பணிக்கப்பட்டுள்ளது. ‘மார்க்கத்தில் பலவந்தமில்லை’ வாரிசுச் சட்டங்கள் விடயத்தில் அவர்கள்-சில
அறபு நாடுகளில் நடப்பது போன்று- இஸ்லாமிய ஷரீஆவை தேர்ந்தெடுத்தால் அது அவர்களைப்
பொறுத்ததாகும். அவ்வாறு இல்லாத போது அவரவரது தெரிவுக்கு அது விடப்படும்.”[50][50]

இஸ்லாமிய நாட்டில் வாழும் பிற மதத்தவர்களுக்கு அவரவர் மதப்படியான  தனியார் சட்டங்களைப் பின்பற்றும் உரிமையை
இஸ்லாம் வழங்குவது பற்றிக் கூறும் இஸ்மாயீல் பாரூக்கீ: “அங்கு சட்டப்பகுதியில்
பன்மைத்துவத்தைக் காணமுடியும். மேற்குலகு இதுவரை கற்பனை பண்ணியும் பார்த்திராத ஒரு
சிந்தனை(Idea) இதுவாகும். முஸ்லிம்களை ஆட்சி செய்யும்
இஸ்லாமிய நீதிமன்றங்களில் நிர்வகிக்கப்படும் ஷரீஆ சட்டங்கள் இஸ்லாமிய அரசில்
இருப்பது போலவே,
தௌராத்திய, கிறிஸ்தவ, சொராஸ்திரிய, இந்து
மற்றும் பௌத்த சட்டங்களையும் இஸ்லாமிய அரசில் காணலாம். அவ்வப் பிரிவினருக்கான
நீதிமன்றங்களால் அந்த சட்டங்கள் நிர்வகிக்கப்படும். உலக உம்மத்தை (இஸ்லாமிய அரசின்
கீழ் வாழும் சகலரையும் இவர் இவ்வாறு அழைக்கிறார்) பாதிக்கும் போர், சமாதானம்
ஆகிய விவகாரங்களில் இஸ்லாமிய அரசு மட்டுமே தீர்ப்புக்களை வழங்கும் பூரண உரிமையைப்
பெற்றிருக்கும்.”[51][51]

         ”ஸகாதும்
ஜிஹாதும் இஸ்லாத்தின் மிகப் பெரிய வழிபாடுகளில் இரண்டாக இருப்பதுடன் மதத்தன்மை
கொண்டவையாகஇருப்பதனால் அவற்றை முஸ்லிமல்லாதவர்கள் மேற்கொள்ள வேண்டுமென அவர்கள்
மீது இஸ்லாம் அவற்றைக் கடமையாக்கவில்லை. ஸகாத் ஒரு பண வரியாகவும் ஜிஹாத் என்பது
இராணுவ சேவையாகவும் இருப்பினும் அவர்கள் விலக்களிக்கப்பட்டு இராணுவ சேவைக்கு
பதிலாக ‘ஜிஸ்யா’ எனப்படும் ஆள்வரி அவர்கள் மீது விதிக்கப்பட்டது. பெண்கள், சிறுவர்கள், ஏழைகள், பலவீனர்கள்
அதனைச் செலுத்தத் தேவையில்லை.”[52][52]

குற்றவியல் மற்றும்
சிவில் சட்டங்கள்

குற்றவியல் சட்டங்களைப் பொறுத்தவரை அவை முஸ்லிம்கள் மீதும் திம்மீக்கள் மீதும்
ஒரே விதமாக அமுலாக்கப்படும். இரு சாராரும் சரிசமனாகவே பார்க்கப்படுவர் என மௌலானா
மௌதூதி கூறுகிறார். அவரது கருத்துப்படி மது அருந்தும் குற்றத்திற்காக மட்டுமே
திம்மீக்கள் இஸ்லாமிய முறைப்படி
தண்டிக்கப்படமாட்டார்கள்.[53][53]

மேலும், திம்மீக்கள் அல்லது முஸ்தஃமின்கள் மதுவருந்தினால் – அவர்கள் அதனை ஹராமானதாகக்
கணிக்காததனால் – மது அருந்தியமைக்காக முஸ்லிமுக்கு வழங்கப்படும் தண்டனை
அவர்களுக்கு வழங்கப்படமாட்டாது என மாலிகி, ஹன்பலி, ஷாபிஈ, ஹனபி
மத்ஹபைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.[54][54] அதேவேளை இவர்கள் மதுவை பகிரங்கமாக குடித்தால் தான் தண்டிக்கப்படுவர் என்று
சிலரும் குடித்து போதை பிடித்தால் தான் தண்டிக்கப்படுவர் என்று
வேறுசிலரும் கூறியுள்ளனர்.  ஹஸன் இப்னு
ஸியாத் எனும் ஹனபி மத்ஹப் அறிஞரின் கருத்துப்படி அவர்கள் மது அருந்துவதற்காக அன்றி
போதைக்காகவே ‘ஹத்து’ (தண்டனை) பெறுவர்.[55][55]

மது அருந்தும் திம்மீக்கள் இந்த தண்டனையை பெறமாட்டார்கள் என்பது அனைத்து சட்ட
அறிஞர்களதும் ஏகோபித்த முடிவாகும் என பத்ரான் தெரிவிக்கிறார்.[56][56] ஆனால், திருட்டுக் குற்றத்தில் திம்மீ ஈடுபட்டால் அவரது கை வெட்டப்படும். அதுபோலவே, ஒரு
முஸ்லிம், திம்மீயின் அல்லது முஸ்லிமின் பொருளைத் திருடினாலும் அவரது கை வெட்டப்படும்.
இவ்வாறுதான் அனைத்து சட்ட அறிஞர்களும் ஏகோபித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.[57][57]

முஸ்தஃமின் திருடும் பட்சத்தில் அவரது கை வெட்டப்படமாட்டாது என மாலிகீ, ஹம்பலீ
மத்ஹபினரும், இமாம்களான அபூ ஹனீபா,
முஹம்மத் ஆகியோரும் கூறியுள்ளனர். வேறு சிலர் வெட்டப்பட
வேண்டும் என்று கூறுகின்றனர். இரு தரப்பு ஆதாரங்களையும் ஆய்வு செய்த  பத்ரான் கை வெட்டப்பட வேண்டும் என்பதே சரியான
தீர்ப்பு என்று கூறி அந்த சட்டம் இல்லாத போது முஸ்லிம்களது சொத்தில் அவர் கை
வைப்பார் என்றும் தெரிவிக்கின்றார்.[58][58] ஆனால்
களவுக் குற்றம் இரு சாட்சிகள் மூலமாகவே நிறுவப்படும்.

திம்மீ அவதூறுக் குற்றமிழைத்தால் முஸ்லிம் குற்றவாளி போலவே அவர் மீது அதற்கான
தண்டனையாகிய எண்பது கசையடிகள் வழங்கப்படும். முஸ்தஃமின் அவதூறு கூறினால் அவர் மீது
அத்தண்டனை அமுலாகாது என்பதே ஏற்கத்தக்க கருத்து என பத்ரான் கூறுகிறார்.[59][59]

மேலும் திம்மீ கொலைக்குற்றம், ஹிராபா(அரசுக்கெதிரான கிளர்ச்சி அல்லது
ஆயுதமுனையில் கொள்ளை) போன்றவற்றில் ஈடுபட்டால் முஸ்லிமுக்கு வழங்கப்படும் அதே
தண்டனையே வழங்கப்படும்.[60][60]

”சிவில்
சட்டங்கள் விடயத்தில் முஸ்லிம், திம்மீ இருசாராரும் சமனாகவே நடாத்தப்படுவர்.
இதுதுறையில் முஸ்லிமுக்கு விதிக்கப்படும் அனைத்து கட்டுப்பாடுகளும் திம்மீக்கும்
விதிக்கப்படும்.”[61][61]

”வியாபார
முறைகள், வாடகை வகைகள்,
கம்பனிகள், அடகு வைப்பது, பங்குடமை, விவசாயப்
பங்குடமை, தரிசு நிலங்களை தமதாக்குவது போன்ற பணக்கொடுக்கல் வாங்கல், சிவில் நடைமுறைகள் போன்ற பணத்தையும், நலன்களையும்
பரிமாறும் விடயங்களில் திம்மீக்களும் முஸ்லிம்களைப் போலவே இருப்பர். முஸ்லிம்களுக்கு
அனுமதிக்கப்படும் சகல வியாபார முறைகளிலும் உடன்படிக்கைகளிலும் திம்மீயும்
ஈடுபடமுடியும். அவர்களுக்கு தடுக்கப்பட்டவை இவர்களுக்கும்
தடுக்கப்படும்.கிறிஸ்தவர்கள் மதுவையும் பன்றியையும் அனுமதிக்கப்பட்டவையாக
கருதுவதால் இவை இரண்டும் விதிவிலக்காகும். ஆனால், வட்டியைப்
பொறுத்தவரையில் எவருக்கும் அனுமதியில்லை.

ஆனால், மேற்கூறப்பட்டவை தவிரவுள்ள சிவில் மற்றும் குற்றவியல் துறைகளில் அதாவது, உயிர், பொருள், மானம், மரியாதை
போன்றவற்றைப் பாதிக்கும் குற்றச்செயல்களில் முஸ்லிம் குடிமக்களைப் போலவே
திம்மீக்களும் ஷரீஆவின் சட்டவிதிகளைப் பின்பற்றுவது கடமையாகும்.  இது பொதுவான விதியாகும்.  விரிவான தனிப்பட்ட சில அம்சங்களில்
வித்தியாசங்கள் உள.”[62][62]

தனிப்பட்ட சுதந்திரங்கள்

பொதுவாக திம்மீக்களுக்கான தனிப்பட்டதும் பிரத்தியேக மானதுமான
சில உரிமைகளை அனுமதிக்கலாமா என்பது பற்றி இஸ்மாஈல் பாரூகீ எழுதும் போது: ”அவர்களது
கலை அம்சங்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தமது சொந்தத் தேவைகளுக்காக அவற்றை
வெளிப்படுத்தலாம். ஆனால்,
பொதுமக்களது ஒழுக்க வரம்புகளை அவை மீறாதிருக்க வேண்டும்.
அவர்கள் தமது தனிப்பட்ட வீடுகளுக்குள் அவற்றை வைத்துக்கொள்ளலாம். ஆனால், இவ்வாறான
சுதந்திரம் பொதுமக்களது ஒழுக்க விழுமியங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் பட்சத்தில்
இஸ்லாமிய அரசுக்கு அதில் தலையீடு செய்து அத்தகைய செயல்பாடுகளை முடிவுக்குக்
கொண்டுவர உரிமையுண்டு. மதுவையும் பன்றியையும் பொறுத்தவரையிலும்  இந்த உண்மை பொருந்தும்.”[63][63] என்கிறார்.

ஆகவே, இஸ்லாமிய அரசின் ஆழுகையின் கீழ் வாழும் திம்மீக்கள் தமது தனித்துவத்தைப்
பாதுகாக்கும் வகையில் தத்தமது மார்க்கங்கள் மூலம் அனுமதிக்கப்பட்ட அம்சங்களைக்
கைக்கொள்வதற்கான உரிமையைப் பெற்றுள்ளனர். ஆனால், இஸ்லாமிய சமூகத்தின், அல்லது
அரசின் போக்கிற்கு எந்தவகையிலும் ஒத்துவராத, சமுகத்தின் விழுமியங்களை, நம்பிக்கைக்
கோட்பாட்டை வேரறுக்கும் செயல்பாடுகளில் திம்மீக்கள் ஈடுபடமுனைந்தால் அங்கு தடை
விதிக்கப்படும்.  இது நியாயமும் கூட. இன்று
மதசார்பற்ற நாடுகள் கூட இப்படியான பல கட்டுப்பாடுகளை பொதுநலனைக் கருத்திற் கொண்டு
விதித்திருப்பது எமக்குத் தெரியும்.

”ஆனால், திம்மீக்கள்
தமக்கான தனிப்பட்ட உரிமைகளை அனுபவிக்கும் போது, முஸ்லிம்களது உணர்வுகளை
மதிக்கவேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கி அரவணைத்துக் கொள்ளும் இஸ்லாமிய
அரசின் மரியாதையை அவர்கள் பேணிக்கொள்ள வேண்டும்.
அவர்கள் பகிரங்கமாகவே இஸ்லாத்தையும் அதன் தூதுவரையும் அதன் வேதத்தையும்
ஏசலாகாது. அதேபோல்,
இஸ்லாம் ஹராமாக்கியுள்ள மதுவருந்துவதிலும், பன்றி
சாப்பிடுவதிலும் பகிரங்கமாக ஈடுபடலாகாது.
இவற்றை முஸ்லிம்களுக்கு விற்க முடியாது. காரணம், அது
முஸ்லிம் சமுதாயத்தைப் பாதிக்கும் என்பதனாலாகும். முஸ்லிம்களின் உணர்வுகளை
மதிப்பதற்காக அவர்கள் ரமழானின் பகல் காலங்களில் பகிரங்கமாக உண்ணவோ, குடிக்கவோ
முடியாது.  இஸ்லாம் தன்னைப்
பின்பற்றுவோருக்கு பாவம் எனக் கூறியுள்ள எந்த ஓர் அம்சமாயினும் திம்மீக்கள் அதனை
தமது மதப்படி அனுமதிக்கப்பட்டதாகக் கருதினால், அதில், அவர்கள்
ஈடுபடவிரும்பினால் அவற்றைப் பகிரங்கமாக்காமலும் முஸ்லிம்களுக்கு சவால்விடும்
தோரணையில் அவற்றைப் பகிரங்கமாகச் செய்யாமலும் இருக்க வேண்டும். சமுதாய அமைப்பானது
கட்டமைப்போடும் சமாதானமாகவும் இருக்க இது வழிவகுக்கும்.

ஒருதடவை ஒரு கிறிஸ்தவரை அரபா இப்னுல் ஹாரித் என்பார் இஸ்லாத்திற்கு அழைப்பு
விடுத்தார். அப்போது அவர்,
நபி(ஸல்) அவர்களைப் பற்றி மோசமாக விமர்சித்தார். இதனை அரபா
அம்ரிப்னுல் ஆஸிடம் முறையிட்டபோது அம்ர், ‘அவர்களுடன் நாம் உடன்பாடு
செய்திருக்கிறோமல்லவா?’
(எனவே நாம் அவர்களை தண்டிக்கமுடியாது) என்றார். அது கேட்ட
அரபா ‘நாம் அவர்களுடன் உடன்படிக்கை செய்து பாதுகாப்பு உறுதிமொழிகளை வழங்கியிருப்பது
அல்லாஹ்வையும் அவனது தூதுவரையும் ஏசுவதன் மூலம் எம்மை நோவினைப்படுத்தவா? அல்லாஹ்
பாதுகாப்பானாக!  மாறாக, நாம்
அவர்களுடன் உடன்படிக்கை செய்து உறுதிமொழி வழங்கியிருப்பது பின்வரும்
அம்சங்களுக்காகும். அதாவது,
அவர்களது தேவாலயங்கள் விடயத்திலும் அவற்றில் அவர்கள் தாம்
விரும்பியவற்றைப் பேசும் விடயத்திலும் நாம் தலையிடமாட்டோம். அவர்களது சக்திக்கு
மேல் அவர்களை நிர்ப்பந்திக்கமாட்டோம். அவர்களைப் பாதுகாக்க நாம் போராடுவோம்.
அவர்களது சட்டதிட்டங்களின் படி அவர்கள் வாழலாம். ஆனால், அவர்கள்
எம்மிடம் தீர்ப்புக் கேட்டுவந்தால் அல்லாஹ் இறக்கிய சட்டங்களை வைத்து நாம்
தீர்ப்பு வழங்குவோம்,
(இதற்காகவே எமது உடன்பாடு அமைந்தது) என்றார். அது கேட்ட
அம்ர் ‘நீர் மிகச்சரியாகக் கூறினீர்’ என்றார்.[64][64]

‘எனவே, திம்மீக்கள், முஸ்லிம்களது
நம்பிக்கைக் கோட்பாடுகளைத் தாக்கவோ, இஸ்லாத்தின் அடிப்படைகள் அல்லது
சட்டங்களில் சந்தேகங்களை உண்டுபண்ணவோ அல்லது அவர்களது மதத்தை முஸ்லிம்களுக்கு
மத்தியில் பரப்பவோ முயற்சித்தால் அந்த சந்தர்ப்பத்தில் அவர்களைத் தடுப்பதற்கு
அதிகாரிகளுக்கு உரிமையுண்டு.  ஏனெனில், அவர்கள்
எந்த அரசின் கீழ் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழுகிறார்களோ
அந்த அரசின் நம்பிக்கைக் கோட்பாட்டின் மீதான அவர்களது அத்துமீறலாக இது
கணிக்கப்படும். ஒருவரது சுந்திரமானது மற்றவரது சுந்திரத்துடன் மோதும் போது அல்லது
அதன் மீது அத்துமீறல் செய்யும் போது அவ்விடத்தில் நின்று விடுகிறது.”[65][65] என
ஹாமித் ஹஸ்ஸான் கூறுகிறார்.

எனவே, இத்தகைய வரையறைகளைப் பேணிய நிலையில் திம்மீக்கள் தமது தனிப்பட்ட சுதந்திரங்களை
அனுபவிக்க முடியும்.

எனவே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாட்டை இஸ்லாம் மறுக்கிறது. பல்லின சமூகங்கள் வாழும் நாட்டில் அந்த அந்த சமூகங்களுக்குரிய தனியார் சட்டங்களுக்கும்
பாரம்பரிய விழுமியங்களுக்குமான உரிமையை வழங்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் கொள்கை மாத்திரமன்றி
அது வரலாற்றில் முஸ்லிம்கள் அதிகாரம் மிக்கவர்களாக வாழ்ந்த தாருல்
இஸ்லாத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இஸ்லாம் சகிப்புத்தன்மையற்ற
மார்க்கம், பிறசமயத்தவர்களுக்கு உரிமைகளை வழங்காத கொடூரமான மார்க்கம்
என்ற கருத்து பிழையானதாகும்.

நீதிக்கான உரிமை

முஸ்லிம் நாட்டில் வாழும் சிறுபான்மையினர் தத்தமது தனியார் சட்டங்களைப் பின்பற்றும்
உரிமையை பெற்றிருப்பர் என்பதை இதுவரை பார்த்தோம்.ஆனால் முஸ்லிம்
நாட்டின் பொதுச் சட்டம் என்று வரும் போது அங்கு அவர்கள் எள்ளளவும் அநீதிக்கு உள்ளாக்கப்பட
மாட்டார்கள் .அவர்கள் சிறுபான்மயினர் என்பதற்காக பக்கசார்பாகவோ
ஓரக்கண்கொண்டோ பார்க்கப்பட மாட்டார்கள். சட்டத்தின் முன் முஸ்லிம்களும்
முஸ்லிம் அல்லாதவர்களும் சமனாகவே நடாத்தப்படுவார்கள். இதனை பின்வரும்
ஆதாரங்கள் மூலம் நிறுவ முடியும். பொதுவாழ்வில் அவர்களுக்கு
நீதி கிடைக்காத போது  திம்மத் உடன்பாடு
முழுமை பெறமாட்டாது. அந்தவகையில் நீதிக்கான உத்தரவாதம் இஸ்லாமிய அரசில்
அவர்களுக்கு வழங்கப்படும்.

அல்குர்ஆனில்  “அல்லாஹ்
அணுப்பிரமான அளவு கூட அநீதியிழைக்கமாட்டான்”[66][66] எனக்
கூறுகிறான். “அல்லாஹ் மனிதர்களுக்கு அநீதியிழைப்பதில்லை என
பொதுவாகவே கூறியிருப்பதால் அதில் முஸ்லிம், முஸ்லிமல்லாத
அனைத்து மக்களும் அடங்குவர்”.[67][67] அல்லாஹ்
தனது அடியார்களை நோக்கி “எனது அடியார்களே! நான் அநீதியிழைப்பதை எனக்கு
தடைசெய்திருக்கிறேன். உங்களுக்குமத்தியிலும் அதனை தடைசெய்யப்பட்டதாகவே ஆக்கியிருக்கிறேன்.எனவே,
நீங்களும் உங்களுக்கு
மத்தியில் ஒருவருக்கொருவர் அநீதி இழைக்காதீர்கள்”[68][68]என்றும் கட்டளை
பிறப்பிக்கிறான். அதுமட்டுமின்றி, நீதி, நியாயம் என்ற பொருள்களைத் தரும்  ‘அத்ல்’ என்ற
சொல் அல்குர்ஆனில் 20 இடங்களிலும், ‘கிஸ்த்’
என்பது 24 இடங்களிலும்  ‘அநீதி’ என்ற
சொல் அல்குர்ஆனில் 280 ற்கு மேற்பட்ட இடங்களிலும்
பிரயோகிக்கப்பட்டிருப்பதானது.[69][69] இது சம்பந்நதமான குர்ஆனின்
கரிசனைக்கு சிறந்த சான்றாகும்.

‘அத்ல்’ என்பது அல்லாஹ்வின் 99
திருநாமங்களில் ஒன்றாகும். அந்தவகையில் முழு மனித வர்க்கத்துடனும் நீதிநியாயமாக
நடக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் அடிப்படை போதனையாகும். “நீதி என்பது
ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான உரிமைகளை அவர் கேட்காமலேயே கொடுப்பதாகும். அது அக்கிரமம்,
அநீதி என்பவற்றுக்கு எதிரானதாகும். சமத்துவம்
என்பது பொது நீதியில் ஒருவகை தான். அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான், மக்கள் ஒவ்வொருவரது சமூக அந்தஸ்துகளுக்கு முரணில்லாத விதத்தில்
அவரவருக்கான கடமைகளையும் உரிமைகளையும் சமனாக வழங்குவதாகும்”.[70][70]

“இஸ்லாத்தில் சமத்துவம், நீதி  என்பன மிக அதிகமான முக்கியத்துவத்தைப்
பெறுகின்றன. இவற்றில்தான் தனி மனிதர்களதும் சமுகங்களதும் சமாதான சகவாழ்வும்
வெற்றியும் தங்கியுள்ளன. இஸ்லாம் தன்னைப் பின்பற்றுபவர்கள் தமக்கு மத்தியிலும் இஸ்லாமியக்
கொள்கைக்கு வெளியே இருப்பவர்களுடனும் நீதியாக நடக்கும்படி கட்டளையிடுகிறது. ‘விசுவாசம் கொண்டவர்களே! நீங்கள் (உறுதி மொழி பெறப்பட்ட விடயங்களில்)
அல்லாஹ்வுக்காக நிலைத்து நில்லுங்கள். நீதிக்கு சான்று பகருபவர்களாக இருங்கள்.
உங்களுக்கு ஒரு சாராருடன் இருக்கும் பகைமையானது உங்களை நீதி செலுத்தாதிருக்க
ஒருபோதும் தூண்டாதிருக்கட்டும்.”[71][71]

“இஸ்லாமிய அரசில் தங்கியிருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களோடு நீதியாக
நடக்கும்படி தான் பணிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மீது அடக்குமுறை பிரயோகிப்பது
தடுக்கப்பட்டுள்ளது.”[72][72]

இஸ்லாமிய அரசின் ஆழுகையை ஏற்று அதற்கு விசுவாசமாக இருக்கும் – முஸ்லிம்களுடன்
சகவாழ்வை மேற்கொள்ளும் அதன் குடிமக்களான திம்மீக்கள் விடயமாக பின்வரும் வசனம்
இறக்கப்பட்டது.

“மார்க்க விடயத்துக்காக உங்களுடன் போராடாத, உங்களை உங்களது
வீடுகளிலிருந்து வெளியேற்றாதவர்களுக்கு நீங்கள் உபகாரம் செய்வதை விட்டும், அவர்களுக்கு நீதி செலுத்துவதை விட்டும் அல்லாஹ் உங்களைத் தடுக்கமாட்டான்.[73][73] நிச்சயமாக அல்லாஹ் நீதி
செலுத்துபவர்களை நேசிக்கின்றான்”[74][74]

அல்மாயிதாவின் 8ம் வசனத்தின்படி “எதிரி விடயமாக நீதி
செலுத்துவது கடமையாகும். ஆனால், மும்தஹனாவின் 8ம் வசனத்தின் படி இஸ்லாமிய அரசின் குடிமக்கள் விடயமாக நீதி என்ற
நிலைக்கும் அப்பால் சென்று ‘பிர்’ எனப்படும்
உபகாரம் செய்யும் நிலையையும் அடைவது கடமையாகும்” என ராஷிதுல்
கன்ணூஷீதெரிவிக்கின்றார்.[75][75]

அந்தவகையில், அநீதியைத் தடைசெய்து ,அதனை மோசமானதாகச் சித்தரித்து, அதன் உலக மறுமை
விளைவுகளை விளக்கி பல குர்ஆன் ஹதீஸ் வசனங்கள் வந்திருப்பது போலவே குறிப்பாக
உடன்பாட்டுக்கும் பாதுகாப்பிற்கும் உட்பட்டவர்களுக்கு அநீதியிழைப்பது பற்றி
எச்சரித்தும் பல ஹதீஸ்கள் வந்துள்ளன. நபி(ஸல்) அவர்கள் கூறிய சில ஹதீஸ்கள்
வருமாறு:

1.“யார் (இஸ்லாமிய அரசுடன்) உடன்படிக்கை செய்துள்ள ஒருவருக்கு
அநீதியிழைக்கிறாரோ அல்லது அவருக்குச் சேரவேண்டிய ஓர் உரிமையைக் குறைத்துக்
கொள்கிறாரோ அல்லது அவரது சக்திக்கு மேல் அவரை நிர்ப்பந்திக்கிறாரோ அல்லது அவரது
மனவிருப்பமின்றி அவரிடமிருந்து ஏதாவதொன்றை எடுத்துக் கொள்கின்றாரோ அவருக்கு எதிராக
நான் மறுமையில் வாதாடுவேன்.” [76][76]

“இது அநீதியை தடைசெய்து வரும் மிக பாரதூரமான சொற்பிரயோகமாகும். இந்த ஹதீஸில்
திம்மீக்கு அநீதியிழைக்கும் அல்லது அவரது சக்திக்கப்பால் நிர்ப்பந்திக்கும் அல்லது
உரிமைகளில் ஒன்றை அழித்துவிடும் அல்லது இஸ்லாம் புனிதமானது எனக்; கூறியுள்ள எந்தவொன்றின் மீதாவது அத்துமீறுவதற்கு கடும் எச்சரிக்கையும்
அச்சுறுத்தலும் விடுக்கப்படுகின்றது.” [77][77]

2.“யார் ஒரு திம்மியைத் துன்புறுத்துகிறாரோ நான் அவருக்கெதிராவேன். நான்
யாருக்கு எதிரானவனாக இருக்கிறேனோ அவரை நான் மறுமை நாளில் எதிர்ப்பேன்” [78][78]

இவ்வாறு சிறுபான்மையினரது உரிமைகள் மீதான அத்துமீறலை அல்லது அவர்கள் மீது
அநீதியிழைப்பதை மிகப் பெரிய குற்றச்செயலாக, கடும் பாவமாகக்
கருதும் எந்தவொரு உலகத்துச் சட்டயாப்பையும் எம்மால் காண முடியாது.[79][79]

நபிகளார்(ஸல்) அவர்கள், நஜ்ரான் பிரதேச கிறிஸ்தவர்கள்களுடன் செய்து
கொண்ட    ‘தீம்மத்’
ஒப்பந்தத்தில் உயிர், மதம், சொத்துக்கள், வணக்கஸ்தலங்கள், மதபோதகர்கள்,
துறவிகள் போன்ற பல அம்சங்களைப் பாதுகாப்பதாக
உத்தரவாதமளிக்கப்பட்டது. மேற்படி ஒப்பந்தத்தில் இடம்பெற்ற வாசகங்களில் ‘அவர்களில் உரிமைகளைக் கேட்டு வருபவர்களுக்கு – அவர்கள் அநீதியிழைக்காத
வகையிலும் பிறரால் அநீதிக்கு உள்ளாக்கப்படாத வகையிலும் நியாயம் வழங்கப்படும்……
அவர்களில் எவரும் மற்றொருவரது குற்றத்திற்காகத் தண்டிக்கப்படமாட்டார். இந்த
சாசனத்திலுள்ள அம்சங்களுக்கு அல்லாஹ்வினதும் தூதரினதும் அறுதிமானம் மறுமை நாள் வரை
என்றென்றும் இருக்கும். அவர்கள் தம்மீதான கடமைகளை இதய சுத்தியுடன் நிறைவேற்றி
சீரான வாழ்வை மேற்கொள்ளும் வரை இது அமுலில் இருக்கும்.’ [80][80] என்பன
முக்கியமானவையாகும்.

இது பற்றி  ஹாமித் ஹஸ்ஸான் பின்வருமாறு
எழுதுகிறார்: “‘அவர்களில் எவரும் மற்றொருவரது
குற்றத்துக்காகத் தண்டிக்கப்படமாட்டார்’ என்ற நபிகளாரது
வாசகம் குற்றமும் தண்டனையும் தொடர்பான இஸ்லாத்தின் கோட்பாடு பற்றிய பிரகடனமாகும்.
உலக சட்டயாப்புக்கள், இஸ்லாம் வருகை தந்து ஆயிரம்
வருடங்களுக்கும் பின்னர்தான் இதனைக் கண்டறிந்தன. ஒருவர் அவரது செயல்கள் பற்றி
மட்டுமே விசாரிக்கப்படுவார். அவரது குற்றத்துக்காக மட்டுமே
தண்டிக்கப்படுவார் என்பது இந்தக் கோட்பாட்டின் உள்ளடக்கமாகும். இந்த அடிப்படைக்
கோட்பாடுகள் பற்றி குர்ஆன் மிக ஆணித்தரமான, தெளிவான
வசனங்களைக் கூறியுள்ளது. ‘ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கெதிராகவே
கேட்டைத் தேடிக்கொள்கின்றது. எந்தவொரு ஆத்மாவும் மற்றொரு ஆத்மாவின் பாரத்தை
(குற்றத்தை) சுமக்கமாட்டாது.’ [81][81]

“எந்தவொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் நிர்ப்பந்திக்கவே
மாட்டான். அது தேடிக் கொண்ட நன்மை அதற்கே அது தேடிக்கொண்ட தீமையும் அதற்கே (கேடு
விளைவிக்கும்).[82][82], [83][83]

ஒருதடவை துஃமா இப்னு உபைரக் என்ற அன்ஸாரி நபித்தோழர் தனது அயல் வீட்டாரான
கதாதா இப்னு நுஃமான் என்பவரது கேடயத்தைத் திருடி, ஸைத்
இப்னுஸ்ஸமீன் என்ற யூதரிடம் ஒழித்து வைத்தார். அப்போது கதாதா தனது கேடயத்தை
நுஃமானிடம் தேடினார். ஆனால், கேடயம் பற்றி தனக்கு எதுவுமே
தெரியாது என நுஃமான் சத்தியம் செய்து பொய்யாகக் கூறினார். பின்னர் அவர் தனது
கேடயம் யூதரிடம் இருக்கக் கண்டார். ஆனால், கேடயத்தை நுஃமான்
தான் தன்னிடம் கொண்டு வந்து பதுக்கி வைத்ததாக யூதர் கூறிய போதிலும் தான்
திருடவில்லை என நுஃமான் மறுத்துவிட்டார். நபி (ஸல்) அவர்களிடம் மூவரும் நியாயம்
கேட்டுச் சென்றனர். அப்போது பனூ லபர் ஆகிய நுஃமானின் குடும்பத்தார் தாம்
முஸ்லிம்கள் என்ற வகையில் தம்மீது நபிகளார் வைத்திருக்கும் அன்பை தமக்குச்
சாதகமாகப் பயன்படுத்தி யூதர்தான் திருடினார் என அன்னாரை நம்ப வைக்க
முயற்சித்தனர்.  நபியவர்களும் விவகாரத்தை
தீர விசாரிக்காமல் நுஃமான் நிரபராதி என தீர்ப்புக் கூறப் பார்த்தார்கள். பின்னர்
அன்புணர்ச்சியை வென்ற அவர்கள் யூதர் நிரபராதி எனத் தீர்ப்பளித்தார்கள்.
அப்படியிருந்தும் ஸூரதுந் நிஸாவில் அல்லாஹ் பின்வருமாறு தனது நபியைக்
கண்டித்தான்:-[84][84]

 ’நபியே! அல்லாஹ் காட்டித்தந்தபடி
மக்கள் மத்தியில் தீர்ப்புக் கூறவேண்டும் என்பதற்காக நாம் உமக்கு வேதத்தை
சத்தியமான சட்டங்களுடன் இறக்கிவைத்தோம். துரோகம் செய்பவர்களுக்கு(ச்சார்பாக)
வாதிடுபவராக நீர் இருக்க வேண்டாம். நீர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக.
நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக் கிருபை
உடையவனாக இருக்கின்றான். தமக்குத் தாமே துரோகஞ்செய்து கொண்டவர்கள் சார்பாக
(நபியே!) நீர் வாதாட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அதிக துரோகம் செய்கின்ற கொடிய
பாவியானவனை விரும்பமாட்டான். நபியே உம்மீது அல்லாஹ்வின் அருளும் அவனது கிருபையும்
இல்லாதிருந்தால் அவர்களில் ஒரு கூட்டத்தினர் உம்மை (சரியான தீர்ப்பை நீர் வெளியிடுவதிலிருந்து)
திசை திருப்பி (தமக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற) முடிவு கட்டியிருப்பர்’[85][85]

இங்கு ஒரு யூதரை வெறுமனே அநியாயமாக களவுக்குற்றம் சாட்ட முனைந்தமைக்காக நபி (ஸல்)அவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்க
வேண்டும் என்பது பற்றியும் இறைத் தண்டனை உண்டு என்றும் கூறப்பட்டது.
விசுவாசிகளுடன் மிகக் கூடுதலாக பகைமை பூண்டுள்ளவர்களாயினும்  (யூதர்கள்) அவர்களும் மனிதர்கள் என்ற வகையில்
இஸ்லாத்தில் நீதிக்கு இருக்கும் பெறுமதியை வலியுறுத்த இந்த வசனம் இறங்கியது.[86][86]

“ஸைத் இப்னு ஷஃனா எனும் ஒரு யூதரிடம் நபி(ஸல்) அவர்கள் கடன் பெற்றிருந்தார்கள். கடன் காலக் கெடு முடிவடைதற்கு
இரண்டு அல்லது மூன்று நாட்கள் இருக்கையில் அதனை திருப்பிப் பெறச்சென்ற
அந்த யூதர், நபிகளாரின் ஆடைகளை பிடித்து இழுத்தது மட்டுமன்றி
நபிகளார் கடனைத் திருப்பிச் செலுத்துவதில்
கால தாமதம் காட்டும் பரம்பரையைச் சேர்தவர் என்றும் முகத்தை கொடூரமாக வைத்த நிலையில்
இழிவாகப் பேசினார். இதனை அவதானித்த உமர்(ரலி)
அவர்கள்  ‘அல்லாஹ்வின்
விரோதியே! நபியவர்கள் அதிருப்திப்படுவார்கள் என்பதனால் உன்னை விட்டுவிடுகிறேன்.
இல்லாவிட்டால் உனது உனது கழுத்தை எனது வாளினால் வெட்டியிருப்பேன்’ என்றார்கள். அதுகேட்ட நபியவர்கள் உமரைப்
பார்த்து ‘உமரே, கடனை உரிய முறையில் திருப்பிக் கொடுக்கும்படி எனக்கும் கடனை
உரிய முறையில் திருப்பிக் கேட்க வேண்டும் என்று அவருக்கும் நீங்கள் கூறி இருக்க வேண்டும்.அது
தான் எம் இருவரதும் தேவையாகும். எனவே, உமரே அவரை அழைத்துச் சென்று அவருக்குக்
கடனைத் திருப்பிக் கொதுப்பதுடன் அவரைப் பயமுறுத்தியதற்கு பதிலாக  மேலதிகமாக இருபது ’ஸாஉ’ ஈத்தம்
பழத்தையும்   கொடுப்பீராக’ என்றார்கள். உமர்(ரலி)
அவ்வாறே செய்தார்கள்.அப்போது அந்த யூதர் தான் ஒரு யூத மதகுரு என்றும் நபியவர்களின்
முகத்தில் நபித்துவத்தின் அடையாளங்கள் இருப்பதாகவும் குறிப்பாக இந்த சம்பவத்தின் மூலமாக
இரண்டு அடையாளங்களை தான் அறிந்து கொண்தாகவும் ஒரு நபியின் அறியாமையை அவரது விவேகம்
முந்திக் கொள்ளும்,அவருடன் எவராவது மடத்தனமாக நடந்து கொள்ளப் பார்தால் அவரது விவேகம்
அச்சந்தர்ப்பத்தில் இன்னும் வேகமாக வேலை செய்யும் என்றும் இந்த சம்பவத்தின் மூலம் அதனை
தான் பரீட்சாத்தமாக அறிந்து கொண்தாகவும் கூறினார்.மேலும் தான் பணக்காரணாக இருப்பதனால்  தனது செல்வங்களில் அரைவாசியை முஸ்லிம் உம்மத்துக்கு
தர்மாக் குடுப்பதாகவும் கூறியது மட்டுமன்றி புனித இஸ்லாத்தையும் தழுவிக்கொண்டார். [87][87]

திம்மீக்களுக்கு நீதி வழங்கி அவர்களை சமத்துவமும் கண்ணியமுமிக்க பிரஜைகளாக
வாழவைக்க இந்த குர்ஆன் ஹதீஸ் வசனங்கள் துணை புரிகின்றன. மேற்படி கட்டளைகளை
நபிகளாரிற்குப் பின்வந்த நன்மக்களும் பின்பற்றினர்.

உமர்(றழி) அவர்களது கிலாபத் காலத்தில் திம்மீக்களாக இருந்த நெருப்பு வணங்கி
(மஜூஸியர்)களில் ஒருவனான அபூலுஃலுஃ தான் அன்னார் தொழுது கொண்டிருந்த வேளையில்
எதிர்பாராத விதமாக அவர்களை நஞ்சூட்டப்பட்ட ஆயுதத்தால் தாக்கினான்.அவ்வேளையில் கூட
அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:- “எனக்குப் பின்னால் வரும் கலீபாவுக்கு
திம்மீக்களுடன் சிறப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களுடனான உடன்படிக்கையை
முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்களைப் பாதுகாத்துப் போராட வேண்டும்
என்றும் அவர்களது சக்திக்கு மேல் அவர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது என்றும் நான் உபதேசம்
செய்கிறேன்”[88][88] என்று
கூறினார்கள்.

திம்மீக்களில் ஒருவரால் உயிர் போகுமளவு தான் தாக்கப்பட்டிருந்த போதிலும்
அதனைக் காரணம்காட்டி திம்மீக்கள் சமுகம் தனது மரணத்திற்குப்பின்னர் எவ்வகையிலும்
முஸ்லிம்களால் பாதிக்கப்படலாகாது என்பதில் கலீபா காட்டிய அக்கறையை இச்சம்பவம்
புலப்படுத்துகிறது. இதுதான் சகிப்புத்தன்மையின் உச்சகட்டமாகும்.

இமாம் கராஃபீ
அவர்கள்:

“திம்மத்
உடன்படிக்கையை நாம் செய்தால் அவ்வுடன்படிக்கையானது திம்மீக்களுக்கான பல கடமைகளை எம்மீது
சுமத்துகிறது. ஏனெனில் அவர்கள் எமது அருகிலும் அடைக்கலத்திலும் அல்லாஹ்வினதும் அவனது
தூதரதும் இஸ்லாம் மார்க்கத்தினதும் பாதுகாப்பிலும் இருக்கிறார்கள். மோசமான ஒரு வார்த்தையின்
மூலமோ அல்லது அவர்களில் ஒருவரது மானம் தொடர்பாக புறம் பேசுவதன் மூலமோ அல்லது ஏதாவது
ஒருவகையில் துன்புறுத்துவதன் மூலமோ அவர்கள் மீது
எவராவது அத்துமீறல் செய்தால், அல்லது இவை விடயமாக பிறருக்கு ஒத்துழைப்பு வழங்கினால்
அவர்  அல்லாஹ்வினதும் அவனது தூதரதும் இஸ்லாம்
மார்க்கத்தினதும் திம்மத்  உடன்படிக்கையை வீணடித்தவராவார்.”எனக்
கூறுகிறார்கள்.[89][89]

உமர் (றழி) அவர்களது ஆட்சியின் போது எகிப்து கவர்னர் அம்ரிப்னுல் ஆஸின் மகன், திம்மியாகிய கிப்தி ஒருவரது மகனுக்கு அநியாயமாக அடித்த போது அது பற்றிய
முறைப்பாட்டை மதீனாவிலிருந்த கலீபாவிடம் நேரடியாக கிப்தி தெரிவித்தார். அப்போது
கவர்னரின் மகனுக்கு கிப்தியின் மகன் பழிக்குப் பழியாக சாட்டையால் அடிக்க வேண்டும்
என தீர்ப்புக் கூறி அதனை உடனுக்குடன் நிறைவேற்றிய கலீபா  ‘மக்களை அவர்களது தாய்மார்
சுதந்திரவான்களாகப் பெற்றெடுத்திருக்க நீங்கள்
அவர்களை எப்போது அடிமைப்படுத்தினீர்கள்?’ என்று
ஆட்சேபனைத் தொனியில் வினாத்தொடுத்தார்.[90][90]

உமர் (றழி) அவர்கள் தனது கிலாபத்தின் போது தனது கவர்னர்களுக்கு திம்மீக்கள்
விடயமாக நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு உபதேசித்தார்கள். அந்த திம்மீக்கள்
நன்றாக நடத்தப்படுவதை அவர்கள் தன்னிடம் வரும் தூதுக்குழுக்களிடம் கேட்டு
ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார்கள். அந்த வகையில் பஸராவிலிருந்து வந்த தூதுக் குழுவிடம் ‘முஸ்லிம்கள் திம்மீக்களுக்கு தீங்கு செய்கின்றார்களா?என வினவினார்கள். அதற்கு அவர்கள்  ‘திம்மத் ஒப்பந்தம்
பேணப்படுகின்றது என்பதைத் தவிர வேறு எதுவும் எமக்குத் தெரியாது’ என்றனர்.[91][91]

கலீபா அலி(றழி) அவர்கள், தனது கேடயத்தை ஒரு
கிறிஸ்தவர் வைத்திருக்கக் கண்டார்கள். அவரை நீதிபதி சுரைஹிடம் அழைத்து வந்த
அவர்கள், ‘அது எனது கேடயம். அதனை நான் எவருக்கும் விற்கவோ
அன்பளிப்பாக வழங்கவோ இல்லை’ என்றார்கள். அதற்கு நீதிபதி  ‘முஸ்லிம்களின் தலைவர் கூறுவது
பற்றி நீ என்ன சொல்கின்றாய்?’ என கிறிஸ்தவரைக் கேட்டார்.
அதற்கு அவர்  ‘கேடயம்
என்னுடையது தான். என்னைப் பொறுத்தவரை முஃமின்களின் தலைவர்  பொய்யர் அல்லர்’ என்றார்.
அப்போது அலி(றழி) அவர்களை திரும்பிப் பார்த்த நீதிபதி ‘உங்களிடம்
ஏதாவது ஆதாரம் உள்ளதா?’ என்றார். அதனைக் கேட்டுச் சிரித்த
அலி(றழி) அவர்கள்  ‘சுரைஹ்
சொன்னது சரிதான். என்னிடம் என்ன சாட்சி தான் இருக்கிறது!’என்றார்.
எனவே, கேடயம் கிறிஸ்தவருக்குரியது என நீதிபதி
தீர்ப்பளித்தார். அப்போது அந்த கிறிஸ்தவர் ‘இவை நபிமார்களது
சட்டங்கள். முஃமின்களது தலைவர் என்னைத் தனது நீதிபதியிடம் அழைத்து வர நீதிபதியே
அவருக்கெதிராகத் தீர்ப்பளிக்கின்றார்’ எனக்கூறி இஸ்லாத்தைத்
தழுவினார்.”[92][92]

எனவே, இஸ்லாமிய சட்ட மரபுகள் (மத்ஹபுகள்) அனைத்தையும் சேர்ந்த சட்டவியலாளர்கள் திம்மீக்களுக்கு
அநீதியிழைக்கப்படுவதை தவிர்ப்பதும் அவர்களைப் பாதுகாப்பதும் முஸ்லிம்கள் மீதான
கடமை என தெளிவாக வலியுறுத்திக் கூறியுள்ளனர்.ஏனெனில், அவர்களுக்கு திம்மத்தை (பாதுகாப்பு வாக்குறுதியை) வழங்கியதன் மூலம்
அவர்களிடமிருந்து அநீதியை விலக்குவதாக உறுதிமொழி யளித்துவிட்டனர்.அதன் மூலம் அவர்களும் தாருல் இஸ்லாத்திற்குரியவர்களாக மாறிவிட்டனர் என
அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமன்றி, அந்த
சட்டவியலாளர்களிற் சிலர் ஒரு திம்மிக்கு அநீதியிழைப்பதை ஒரு முஸ்லிமுக்கு
அநீதியிழைப்பதனை விட அதிக பாவமானது என தெளிவாகக் கூறியுள்ளனர்.[93][93]

முஸ்தஃமின்களுக்கானவை

தாருல் இஸ்லாத்தின் குடிமகனாக முஸ்தஃமின் இல்லாவிட்டாலும் திம்மீ அனுபவிக்கும்
சகல உரிமைகளையும் ஒரு சில விதிவிலக்குகளுடன் அவன் அனுபவிக்க முடியும்.[94][94] இவர்கள் இஸ்லாத்தை எதிர்த்து
போராடுவோராக இருப்பினும் தற்காலிக சமாதான ஒப்பந்தப்படி இஸ்லாமிய அரச எல்லைக்குள்
வருகை தருவதால் இவர்களது உயிர்கள், சொத்துக்கள்,
மனைவியர், சந்ததியினர் ஆகிய அனைத்துக்குமான
உத்தரவாதத்தை அரசு வழங்கும்.[95][95]

சமாதான நோக்குடன் முஸ்லிம்களுடன் சகவாழ்வை மேற்கொள்ள இஸ்லாத்தின் போதனைகளை
அறிய வருபவரைப் பதுகாக்கப் போராடுவது (அரசின்) கடமையாகும். அவ்வாறு வருபவர் தனது
நோக்கத்தை சுதந்திரமான சூழலில் நிறைவேற்ற இது உதவும். அவர் சகல
தீங்குகளிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும். அவர் இஸ்லாத்தில் நுழைய மறுக்கும்
பட்சத்தில் எவ்வித நிர்ப்பந்தமோ,நோவினைப்படுத்தலோ, இழிவுபடுத்தலோ இன்றி அவர் தனது முழுமையான நம்பிக்கைச் சுதந்திரத்தை
அனுபவித்த நிலையில், பாதுகாப்பாக தனது நாட்டுக்குத் திரும்ப
அவருக்கு இடமளிக்கப்படுவது கடமையாகும்.[96][96]

தாருல் இஸ்லாத்தில் முஃதஸ்மின்
அனுபவிக்கும் உரிமைகள் ஷரீஆவிலிருந்து பெறப்பட்டதாகும். இது அமான்
(பாதுகாப்பு உடன்பாடு) மூலம் அவருக்குக் கிடைக்க வேண்டியவையாகும். அமானை முழுமையாக
நிறைவேற்றும் படி இஸ்லாமிய ஷரீஆ கட்டாயப்படுத்துகின்றது. எனவே, அரசு அவற்றில் பொடுபோக்காக இருக்க முடியாது. அப்படியிருப்பது மோசடியும்
துரோகமுமாகும். துரோகம் இஸ்லாமிய ஷரீஆவில் தடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த சட்டமூலத்தின் படி இஸ்லாமிய அரசு தன்னிடம் வந்த முஸ்தஃமினை அவரது அரசு
வேண்டும் பட்சத்தில் அவரது விருப்பத்தின் பேரிலன்றி அதனிடம் கையளிக்கக் கூடாது. அவருக்குப் பகரமாக முஸ்லிம் கைதியொருவரை பரிமாறிக் கொள்வதாக இருந்தாலும்
சரியே. அவ்வாறு அவரைக் கையளிக்காத போது முஸ்தஃமின் சார்ந்துள்ள அரசு முஸ்லிம்
அரசுக்கெதிராக போராடுவதாக அச்சுறுத்தினாலும் அவ்வாறு கையளிக்கலாகாது.[97][97] ஏனெனில்,‘அமான்’ மூலமாக  ‘முஸ்;தஃமின்’
இஸ்லாமிய அரச பிராந்தியத்தினுள் நுழைந்திருப்பதனால் அவர் அரசின் அரவணைப்பிலும்  பாதுகாப்பிலும்
இருக்கின்றார். எனவே, அவரைப் பாதுகாப்பதும் நோவினை  செய்யாதிருப்பதும் அரசின் கடமையாகும். அவ்வாறே
முஸ்தஃமின் ஒரு சிறு தொகை பணத்துடன் அரச எல்லைக்குள் வந்தால் அவரது பணம் யாவும்
இழக்கச் செய்யும் வகையிலான வியாபார வரியை அவர் மீது விதிக்கலாகாது. அவரது அரசு
தனது எல்லைக்குள் நுழையும் இஸ்லாமிய அரசின் குடிமக்களுக்கு இந்த வரியை விதித்து
வரும் வழக்கமிருந்தாலும் சரியே. ஏனெனில், இப்படியான
சந்தர்ப்பத்தில் முஸ்தஃமினின் அரசைப் போல் இஸ்லாமிய அரசும் நடந்து கொள்வது
அநீதியாகும். அநீதி இழைப்பதில் போட்டி போடலாகாது.[98][98]

முஸ்தஃமின் நீதியாக, சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்கு
பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கலாம் :-

1.“இணைவைத்து வணங்குவோர் எவரும் உம்மிடம் வந்து அபயம் கேட்டால், அவர் அல்லாஹ்வின் வேத வசனங்களை செவியுறுவதற்காக நீர் அவருக்கு அபயம்
கொடுப்பீராக! பின்னர் பாதுகாப்பான இடத்துக்கு அவரைக் கொண்டு சேர்ப்பீராக”.[99][99]

இந்த வசனத்தில் பொதிந்துள்ள உண்மை பற்றிக் கூறவந்த ஸாகிர் நாயிக் அவர்கள் “தற்கால
சர்வதேச யுத்தப் பரப்பில் அன்பும் சமாதானமும் உள்ள ஒரு படைத் தளபதி யுத்தம்
நடக்கும் போது எதிர்த்தரப்பு வீரன் சமாதானமாக இருக்கவிரும்பினால், அவனைச் சுதந்திரமாகப் போகவிடலாம். அனால், அவ்வாறு
சமாதானமாகப் போகவிரும்பும் ஓர் எதிரிப்படை வீரனை போக அனுமதித்துவிட்டு அவனைப்
பாதுகாப்பான இடத்திற்கு பாதுகாப்பாகக் கூட்டிச்செல் என்று எந்த தளபதி தான்
கூறுவார்?” என வினவுகிறார்.[100][100]

2.அபூசுப்யான் சதாவும் இஸ்லாத்தை எதிர்த்து வந்தவராயினும் கூட அவர் ஹூதைபியா
உடன்படிக்கை அமுலிலிருந்த காலத்தில் மதீனாவிற்கு வந்தார். அவருக்கு முஸ்லிம்களில்
எவரும் எந்த அநீதியையும் இழைக்கவில்லை.[101][101]

3.பொய் நபியாகிய முஸைலமாவுக்கு எதிராக மதீனா அரசு யுத்தப் பிரகடனஞ்  செய்த போதும் முஸைலமாவின் இரு தூதுவர்கள்
நபி(ஸல்) அவர்களிடம் வந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு நபியவர்கள் பாதுகாப்பு
வழங்கினார்கள். பின்னர் ‘தூதுவர்கள் கொல்லப்படுவதில்லை என்ற
நியதி மட்டும் இல்லை என்றிருப்பின் உங்கள் இருவரையும் நான் கொலை செய்திருப்பேன்’
என்றார்கள்.[102][102]

அந்தவகையில் முஸ்தஃமினுக்கு போக்குவரத்துச் செய்வதற்கு, கருத்து வெளியிட, நம்பிக்கை கொள்ள, அரச சலுகைகளை அனுபவிக்க, கொடுக்கல் வாங்கல் செய்ய
உரிமை இருக்கிறது.[103][103]

ஒரு  முஸ்தஃமினை வேண்டுமென்று ஒரு
முஸ்லிம் கொலை செய்யும் பட்சத்தில் அந்த முஸ்லிம் கொல்லப்பட வேண்டுமா என்பதில்
சட்டவியலாளர்களுக்கு மத்தியில் சில கருத்துப் பேதங்கள் நிலவுகின்றன.
இக்கருத்துக்களை ஆராய்ந்த அறிஞர் அப்துல் கரீம் ஸைதான் அவர்கள், அத்தகைய ஒரு முஸ்லிம் கொல்லப்பட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்.
கொலையாளியும் கொல்லப்பட்டவரும் ஒரே சமயத்தைச் சேர்ந்தவர்களா என்று பார்க்கப்படாமல்
அவர்கள் இருவரும் இஸ்லாமிய அரசின் பாதுகாப்புக்கு-  ‘இஸ்மத்’- ற்கு
உட்பட்டவர்களா என்பது கவனிக்கப்பட்டே இத்தண்டனை நிறைவேற்றப்படும். இது போன்ற
சுமார் ஐந்து நியாயங்களை அவர் முன்வைத்து தனது வாதத்தை முடிக்கிறார்.[104][104]

எனவே, இஸ்லாமிய அரசாங்கத்தின் பிரஜைகள்
அல்லாதவர்கள் விடயத்திலும் நீதியாகவும் நேர்மையாகவும் நடக்க வேண்டியதன்
அவசியத்தையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இது இஸ்லாத்தின் சமய நல்லிணக்கத்தையும்
சகவாழ்வுப் போக்கையும் அறிய நன்கு துணை செய்யும் விடயமாகும்.இஸ்லாமிய அரசை எதிர்த்து
யுத்தம் புரியும் நிலையிலுள்ள காபிர்களாயினும் அவர்களுடன் யுத்தம் புரியும்
சந்தர்ப்பத்திலும் யுத்தம் முடிவடைந்த பின்னரும் எப்போதும் இஸ்லாம் தனக்கேயுரிய
யுத்த தர்மத்தைக் கடைப்பிடித்துள்ளது. அது இந்த திம்மீக்கள் அல்லாதவர்கள்
விடயமாகவும் நீதி அனுசரிக்கப்படவேண்டும் என்பதற்கான தக்கசான்றாகும்.

முஹாரிப்களுக்கானவை

     இஸ்லாத்தின் நீதிக் கொள்கை
இஸ்லாமிய அரசுக்கு விசுவாசமாக நடப்போருடன் மட்டும் குறுகிவிடமாட்டாது. மாறாக,
இஸ்லாத்தை எதிர்த்துப் போராடுவோர் (முஹாரிப்) விடயமாகவும் இது
கடைபிடிக்கப்பட வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

“உங்களுக்கு ஒரு கூட்டத்தாரோடு இருக்கும் பகைமையானது அவர்களுடன் நீதியாக
நடப்பதை விட்டும் உங்களை ஒருபோதும் தடுக்காதிருக்கட்டும். நீங்கள் நீதி
செலுத்துங்கள். அது இறைபக்திக்கு மிக நெருக்கமானதாகும்.”[105][105]

‘நண்பனாயினும் எதிரியாயினும் அவனில் நீங்கள் நீதியைக் கடைப்பிடியுங்கள்
என்பது இதன் பொருளாகும்’ என இந்த வசனத்திற்கு இமாம் இப்னு
கதீர் விளக்கம் தருகின்றார்.[106][106]

இந்த வசனம் பொதுவாக மக்களது நீதிபதிகள், ஆட்சியாளர்கள்
ஆகியோர் முஃமின்-காபிர், நெருக்கமானவன்-தூரமானவன் ஆகிய
அனைவரையும் சமனாகப் பார்க்கும் படி கட்டளையிடுகின்றது. பகைமை அல்லது நெருக்கம்
என்பவை பக்கச் சார்பாக, அநீதியாக நடப்பதற்கு அவர்களைத்
தூண்டாமலிருக்க வேண்டும் என்று கூறுகின்றது.[107][107]

“நீங்கள் மக்களுக்கு மத்தியில் தீர்ப்புக் கூறினால் நீதியாக தீர்ப்புக்
கூறும்படி அல்லாஹ் உங்களுக்கு ஏவுகின்றான்.”[108][108] என குர்ஆன்
குறிப்பிடுகின்றது.

இங்கு குர்ஆன்  ‘முஸ்லிம்களுக்கு
மத்தியில்’ என்று கூறுவதற்குப் பதிலாக  ‘மக்களுக்கு மத்தியில்’ என்று பொதுவாகவே கூறியிருக்கிறது. அப்படியாயின் எதிரி விடயத்திலும் நீதி
செலுத்துவது கட்டாயக் கடமையாகும்.[109][109]

அல்மாயிதாவின் 8ம் வசனம் பற்றிக் கூறவந்த பஹ்மீ ஹூவைதி,
ரஷீத் ரிளா கூறுவதாகக் குறிப்பிடுகிறார்:- “இந்த வசனம் மனித
சமூகத்தில் நாம் வெறுக்கின்றவர்களுக்கு மத்தியில் கூட நீதி என்ற பெறுமானம் (Values)ஐ உறுதியாக நிறுவும்படி அழைப்பு விடுக்கின்றது. ஏனெனில்,அநீதியையும் பக்கசார்பையும் கையாண்டு நீதியை விட்டுவிடுவதற்கு ஒரு
விசுவாசிக்கு எந்த நியாயமுமில்லை.ஆனால்,அவன் தனது விருப்பு
வெறுப்புக்கள், ஆசைகள் அனைத்தையும் விட மேலாக அந்த நீதியை
வைக்கவேண்டும்.எந்தக் காரணத்துக்காக நட்பு, பகைமை என்பவை இருந்தாலும்
அவற்றை அவன் கவனிக்கலாகாது. ஒரு காபிருக்கு சார்பாக சாட்சியம் கூறவேண்டிய
சந்தர்ப்பத்தில் அல்லது ஒரு முஃமினுக்கெதிராக ஒரு காபிரின் உரிமையைப் பெற்றுக்
கொடுக்க வேண்டிய வேளையில் அவ்வாறு செய்யாதிருக்க முடியும் என ஒரு போதும் ஒரு
முஃமின் நினைக்காதிருக்க வேண்டும்.”[110][110]

மத சுதந்திரம் என்பது அர்த்தமுள்ளதாக அமைய வேண்டுமாயின் மதங்களைப்
பின்பற்றுவோருக்கு அந்த மதங்கள் விதிக்கும் நடைமுறை வாழ்வுடன் தொடர்பான சட்ட
திட்டங்களைப் பின்பற்றும் உரிமையும் வழங்கப்பட்டாக வேண்டும்.  இஸ்லாமிய நாட்டில் வாழும் பிற சமயத்தவர்களுக்கு
இந்த உரிமையை இஸ்லாம் வழங்குகிறது.இவை திம்மீக்களுக்கு மட்டுமுள்ள சிறப்புச்
சலுகைகள் ஆகும்.

எனவே   ‘ஒரேநாடு ஒரே சட்டம்’ என்ற
கோட்பாட்டை மறுக்கும் இஸ்லாம்   அதேவேளை ‘சட்டதின் முன்
யாவரும் சமம்’ என்ற நிலப்பாட்டில்
உறுதுயாக இருக்கிறது.சிறுபான்மை இனத்தவர்களுக்கான உரிமைகளை மறுத்து அவர்களை துன்புறுத்தும் சமூகங்கள் இவற்றிலிருந்து படிப்பினை
பெற வேண்டும்.இனம்,மதம்,மொழி,பிரதேசம் ,குலம் போன்றவற்றை
அடிப்படையாக வைத்து சட்டதில் பாகுபாடு
காட்டுவதை இஸ்லாம் பெரும்பாவமாகவே கருதுகிறது.இஸ்லாம்
முழு உலகத்தாருக்குமான இரட்சகனான
அல்லாஹ்வால்  தரப்பட்ட
மார்க்கமாக இருப்பதனால் இத்தகைய
சமத்துவமான சட்டங்களை அங்கு காணமுடிகிறது.

1.
அபூதாவுத்,(3053) கிதாபுல் கராஜி வல்
ஃபய்இ வல் இமாறா, பாபு பீ தஷ்ரீஈ
அஹ்லித் திம்மா,அல்பானீ,ஸஹீஹ் அபூதாவூத்(2626)

[111][2]. ஸஹீஹுல் புகாரீ, ஹதீஸ் இலக்கம் :6914

[112][3]. கர்ளாவீ , கைருல் முஸ்லிமீன் ஃபில்முஜ்தமயில் இஸ்லாமீ , பக்: 22

[113][4]. மேலது,பக்கம்:07

[114][5]. ஸர்கஸீ, அஸ்ஸியர்
அல்கபீர், பாகம்-1,பக்:140, அல்காஸானீ, அல்பதாஇஃ
வஸ்ஸனாஇஃ ,பாகம் :5,பக் .281, இப்னு குதாமா,அல்முக்னீ,பாகம்:5,பக்: 516.

[115][6]. இக்கருத்தை அப்துல் காதர் அவ்தா
(அத்தஷ்ரீஉல் ஜினாஈ அல்இஸ்லாமீ, பாகம் -1,பக் – 232,307) அப்துல் கரீம் ஸைதான் (அஹ்காமுத் திம்மீய்யீன் பக் -49-51, 63)ஆகியோர்
முன்வைக்கின்றனர்.

[116][7]. பஹ்மி
ஹுவைதீ ,முவாதினூன் லா திம்மிய்யூன், பக்;. 112,113.

[117][8]. தாருல் இஸ்லாம்:இஸ்லாமிய சட்டங்கள் அமுலில் இருக்கும்
நாடு. தாருல் ஹர்ப்: தாருல் இஸ்லாத்துக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்துள்ள நாடு.தாருல்
அஹ்த்:தாருல் இஸ்லாத்துடன் சமாதான உடன்படிக்கை செய்துள்ள முஸ்லிம் அல்லாத நாடு.அஷ்ஷைக்
கர்ளாவியின் கருத்துப்படி,இன்றைய சூழலில் ஐக்கிய நாடுகள் தாபனத்தின் விதிமுறைகளுக்கு
அமைய தமக்கிடையே உடன்பட்டு செயல்படும் அனைத்து நாடுகளும் ‘தாருல் அஹ்த்’களாகும் (ஃபிக்ஹுல்
ஜிஹாத்: 894,895)

[118][9].  கல்லாப் , அஸ்ஸியாசதுஸ்
ஷரஇய்யா, பக் . 77

[119][10]. மஹ்மஸானி, சுப்ஹீ
,அல்கானூன் வல் அலாகாதுத் தவ்லிய்யா பில் இஸ்லாம், பக்.23

[120][11]. ‘அவ்ஃப் என்பவர் யூத சமூகத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவராவார். அவரது
சந்ததியினரே மதீனாவில் வாழ்ந்த இந்த யூதர்களாவர்.

[121][12]. இப்னு
ஹிஷாம், ஸீரா இப்னு ஹிஷாம் ,
பாகம் – 1, பக் .341

[122][13]. கல்லாப், பக் .71, நஜ்ரான் தேச கிறிஸ்தவர்களையும் தாருல்
இஸ்லாத்துடன் இணைந்த பிரஜைகளாகக் கருதிய நபியவர்கள், அவர்கள் இஸ்லாமிய அரசுக்கு
விசுவாசமாகவும், எவருக்கும்  அநீதியிழைக்காமலும் இருந்தால் அவர்கள்
அல்லாஹ்வினதும் தூதரினதும் பாதுகாப்பில் இருப்பர் என அவர்களுடன் செய்த
ஒப்பந்தத்தில் குறிப்பிட்டார்கள். (அல்கராஜ், பக்.73)

[123][14]. பஹ்மி
ஹுவைதி, பக். 126

[124][15]. சூரஹ்மான்,அத்ஆயுஸ்
அஸ்ஸில்மீ பைனல் முஸ்லிமீன வகைரிஹிம். பக்.319

[125][16]. முஹம்மத்
உமாரா, அல்அகல்லியா கைரல்முஸ்லிமா, மனாருல் இஸ்லாம், (352), பக் :86

[126][17]. சூரஹ்மான்
பக்.319 (இது ஹாமித் சுல்தானின் அல்கானூன் அத்தவ்லீ அல்ஆம் பீ வக்திஸ்ஸில்ம்,பக். 347 என்ற
நூலிலிருந்தான மேற்கோளாகும்.)

[127][18].  Ismail al-Faruqi (ed), Trialogue of the Abrahamic Faiths. p.58.

[128][19]. கண்ணூஷி,
ஹுகூகுல் முவாதனா- ஹுகூகு கைரில் முஸ்லிம் பில் முஜ்தமஇல்
இஸ்லாமீ . பக்.66

[129][20]. மௌதூதி, நழறிய்யதுல் இஸ்லாம் வ ஹதிய்யுஹு. பக்.307

[130][21].பலாதூரி,புதூஹுல்புல்தான்,பக்-328(முஹம்மத்உமாராவின்  மேற்கோளாகும். (மனாருல்
இஸ்லாம், 352 பக்- 87)

[131][22]. உமாரா, பக்- 87

[132][23]. Zakir,(2004,March)
Protection of  Property Ensured,
Al
Haj & Umra , p. 31

[133][24]. Ismail Farooki(ed), Islam
And Other Faiths -pp. 89,90

[134][25]. ஸைதான், அஹ்காமுத்திம்மிய்யீன்
வல் முஸ்தஃமினீன். பக். 23

[135][26]. மத்கூர், ஸலாம், தாரீகுத்
தஷ்ரீஇல் இஸ்லாமீ,
பக். 417

[136][27]. நபியவர்கள் நஜ்ரான் தேசத்தருக்கு எழுதிய
கடிதம் , காலித் பின் வலீத் ஹீரா
வாசிகளுடனும்,நயீம் இப்னு
முக்ரின் ரய்வாசிகளுடனும்,உத்பா இப்னு
பர்கத் அஸர்பைஜான் வாசிகளுடனும் செய்த உடன்படிக்கைகள் எழுதப்பட்டன.(பார்க்க:தாரீக்தபரீ,பாகம்:5,பக்:228,அபூஉபைத்,அல்அம்வால் ,பக் -87 )

[137][28]. கர்ளாவீ, கைருல் முஸ்லிமீன் ,
பக்
, 7

[138][29]. ஸைதான் , பக் . 67

[139][30]. காஸானீ , பாகம்
: 7, பக் .326

[140][31]. ஸைதான் , பக் .47

[141][32]. அல்குர்ஆன், சூரா
அத்தவ்பா. 06

[142][33]. அல்கன்னூஸி, ராஷித் , ஹுகூகுல்
முவாதனா, பக் . 60

[143][34]. மேலது,பக் :61,62

[144][35]. இப்னு குதாமா,  அல்முக்னீ பா:6, பக்:613-637,
முக்னீல்
முஹ்தாஜ் பா:3, பக்:196, அல்முதவ்வனா-அல்குப்ரா, பா-4,
பக்:162, சரஹுல் கர்ஸீ, பா-3,பக்-149:-
(அவர்கள்
தத்தமது பெண்மக்களையும் தாய்மாரையு/ம் திருமணம் செய்வதை விட்டும் தடுத்தக்கப்படமாட்டார்கள்.)

[145][36]. ஸைதான்- பக்:361,362

[146][37]. அல்குர்ஆன், சூறா அல்மாயிதா:49

[147][38]. அல்மாயிதா: 42

[148][39]. கர்ளாவி, கைருல் முஸ்லிமீன், பக்: 41

[149][40]. ஸைதான் பக்:308,

[150][41]. இமாம் மாலிக், அல்முதவ்வனா அல்குப்ரா, பக்:1324,
பக்:4, பக்:384

[151][42]. ஷர்கஷீ, அல்மப்ஸுத்,பா:9,பக்:57

[152][43]. பார்க்க: இப்னு ஹஸ்ம், அல்முஹல்லா. பா:11, விவகாரம் : 2183

[153][44].அபுல்வலீத்,இப்னு
ருஸ்த்,அல்முகத்திமாத்
அல்முமஹ்ஹிதாத்,பாகம்-2,பக்.289

[154][45]. இப்னு குதாமா, அல்முக்னீ, பாகம்:8, பக். 444, 445

[155][46].அல்காஸானீ, பதாஇஊஸ் ஸனாஇஃ,பா:7,பக்.69,அல்முஹல்லா,
பா,11,பக்:334

[156][47]. அல்காஸானீ, பதாஇஊஸ் ஸனாஇஃ,பாக:2,
பக்.38

[157][48]. ஸைதான், அஹ்காமுத்திம்மிய்யீன் பக்:329

[158][49]. Maududi, The Islamic Law and Constitution, p.275, I.Doi, pp. 50,51

[159][50]. கர்ளாவீ, அல்அகல்லிய்யாத் அத்தீனிய்யா, பக்.14,15(இப்பகுதி
தொடர்பான மிகவும் விரிவான விளக்கத்திற்கு பார்க்க: அஹ்காமுத் திம்மிய்யீன், பக். 339-546 வரை.

[160][51]. Ismail Faruqi, The Nation State & Social Order in Perspective
of Islam, p.58

[161][52]. கர்ளாவீ, அல்அகல்லிய்யாத் அத்தீனிய்யா, பக். 13

[162][53]. Maududi, The Islamic Law and Constitution, p.273

[163][54]. அல்காஸானீ, பதாஇஊஸ் ஸனாஇஃ,பாக:7
,பக்.39,

[164][55]. மேலது,பாக:7
,பக்.40,

[165][56]. பத்ரான், அல்அலாகாதுல் இஜ்திமாஇய்யா பைனல் முஸ்லிமீன வகைரில் முஸ்லிமீன். பக். 297

[166][57]. மேலது,பக்.298,

[167][58]. மேலது, பக்.299,
முக்னீ.10/276, பத்ஹுல்
கதீர் 4/ 104, மப்சூத்.9/178

[168][59]. மேலது, பக். 303,304

[169][60]. மேலதிக விளக்கங்களுக்கு பார்க்க: :Abdur Rahman I. Doi: Non- Muslims Under Sharia, pp. 45-47

[170][61]. Maududi, The Islamic Law and Constitution, p.274

[171][62]. கர்ளாவீ,கைருல் முஸ்லிமீன், பக். 41

[172][63]. Faruqi, Islam & other faiths, p.300

[173][64]. கர்ளாவீ, கைருல் முஸ்லிமீன், பக். 41,42

[174][65]. ஹாமித் ஹஸ்ஸான், அல்ஹுர்ரிய்யதுத் தீனிய்யா, பக். 08

[175][66]. அல்குர்ஆன், சூறா அன்னிஸாஉ:40

[176][67]. அல்அய்னீ, உம்ததுல் காரீ, பாகம்.09, பக்.94

[177][68]. ஸஹீஹ் முஸ்லிம்,பாபு தஹ்ரீமில் ளுள்ம்,கிதாபுல் பிர்ரி வஸ்ஸிலா (இல-2577)

[178][69]. ஹஸன் ஹிம்ஸீ, முப்ரதாதுல் குர்ஆன், , பக்.140,142,146,177,178

[179][70]. இப்ராஸீ, ரூஹுல் இஸ்லாம், பக்.213

[180][71]. அல்குர்ஆன், சூறா அல்மாஇதா,8

[181][72]. Zakir
Naik, Justice and Equality, Haj & Umra – Ap-2003, p.334

[182][73]. இங்கு  ‘தடுக்கமாட்டான்’ என்ற பிரயோகம்  ‘கட்டாயம் செய்ய வேண்டும்’ என்ற கருத்தில் வந்திருப்பதாக கலாநிதி
கர்ளாவி தெரிவிக்கிறார். பார்க்க: அல்ஹலால் வல் ஹராம், பக்.

[183][74]. அல்குர்ஆன், சூறா மும்தஹனா:08

[184][75]. கன்னூஸி- பக்.48

[185][76]. அபூதாவுத், கிதாபுல் கராஜி வல் ஃபய்இ வல்இமாறா, பாபு பீ தஷ்ரீஈ அஹ்லித் திம்மா, பைஹகீ அஸ்ஸுனனுல் குப்றா-பா.5,பக.;
205

[186][77]. ஹஸ்ஸான், ஹுகூகுத் திம்மிய்யீன்- பக்.05

[187][78]. ஸஹீஹ் வ ளஈப் அல் ஜாமிஉஸ் ஸகீர், 12093 (ளஈப்)

[188][79]. ஹஸ்ஸான், ஹுகூகுத் திம்மிய்யீன், பக். 05

[189][80]. இப்னு ஸஅத், அத்தபகாதுல் குப்ரா, 1/287,288
,அபூஉபைத்
அல்அம்வால்,. 182, அபூயூஸுப், அல்ஹராஜ், பக். 72

[190][81]. அல்குர்ஆன், சூறா அல்அன்ஆம் ,164

[191][82]. சூறா அல்பகரா ,286

[192][83]. ஹஸ்ஸான், ஹுகூகுத் திம்மிய்யீன்.பக் .06

[193][84]. இப்னு கதீர், தப்ஸீருல் குர்ஆனில் அளீம், பாகம்-01, பக்:755-756

[194][85]. அல்குர்ஆன் சூறா அந்நிஸாஉ, 105-113

[195][86]. ஹுவைதீ. பக். 92

[196][87]. பார்க்க: இப்னு ஹிப்பான்:288, அல்ஹாகிம்:6547,
அல்பைஹகீ:11066

[197][88]. ஸஹீஹுல் புகாரீ, கிதாபுல் ஜனாஇஸ்,பாபு மவ்தில் ஃபஜ்ஆ, 1392,3052

[198][89] .இமாம் அல்கராஃபீ, அல்புரூக், பாகம்:3, பக்கம்:14

[199][90]. ஹஸன் அய்யூப், அல்குலபாஉர் ராஸிதூன், பக். 130

[200][91]. தபரீ, தாரீஹுர் ருஸுலி வல்முலூக்,  பாகம்:4, பக்.218

[201][92]. குதுப், சையித், அஸ்ஸலாமுல் ஆலமீ வல் இஸ்லாம். பக்.129

[202][93]. கைருல் முஸ்லிமீன், பக்.11,
இப்னு
ஆபிதீன் தனது விளக்கவுரையில், தாருல்
இஸ்லாத்தில் உள்ள திம்மீ பொதுவாக பலவீனனாக இருப்பதானாலும் பலசாலி பலவீனனுக்கு
அநீதி இழைப்பது அதிக பாவத்தை தரும் என்பதானாலும் இக்கருத்து இவ்வாறு
தெரிவிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

[203][94]. ஸைதான், பக். 73

[204][95]. மேலது பக், 52

[205][96]. கனூஷீ, பக். 60

[206][97]. ஷரஹு அஸ்ஸியரில் கபீர், பாகம்:03, பக். 330

[207][98]. ஸைதான், பக். 74

[208][99]. அல்குர்ஆன், சூறா அத்தவ்பா. 06

[209][100]. Zakir
Naik, (2004, April), Treatment of Non-Muslim Enemies in War, Al Haj &
Umra, p.27

[210][101]. ஷரஹு அஸ்ஸியரில் கபீர், பாகம். 03, பக்.228,
4/6,133இந்த முஸ்தஃமின்கள் முவாதஆ  ‘நாட்டின் பிரஜைகளாக இருந்தால்
அதனைப் பயன்படுத்தி எமது நாட்டினுள் நுழைய முடியும். அந்த  ‘முவாதஆ’வானது அவர்களுக்கு எமது நாட்டில் பாதுகாப்பை அவசியம்
பெற்றுக்கொடுக்கும்.அப்படியாயின் அவர்களும் முஸ்தஃமின்களது தரத்தில் இருப்பர். (அல்மப்சூத்,10/89, ஸைதான், 52)

[211][102]. ஸைதான், பக். 52

[212][103]. விரிவான விளக்கத்திற்கு: ஸைதான்,பக். 117-136

[213][104].ஸைதான்,269-273 .மேலும், முஸ்தஃமினுக்கு
வழங்கப்பட வேண்டிய உரிமைகள் கடமைகள் தொடர்பாக மேற்படி நூலைப் பார்க்க.

[214][105]. அல்குர்ஆன், சூறா அல்மாயிதா, 08

[215][106]. தப்ஸீர் இப்னு கதீர், பாகம்:02, பக், 867

[216][107]. கன்ணூஷீ,, பக். 37

[217][108]. அல்குர்ஆன், சூறா அந்நிஸா. 58

[218][109]. கன்ணூஷீ, பக். 48

[219][110]. ஹுவைதீ, பக். 92

உசாத்துணைகள்

  1. அல்அல்பானீ, நாஸிருத்தீன், (1982), ஸஹீஹ் அல்ஜாமிஉஸ் ஸகீர், வஸியாததுஹூ (3ம் பதிப்பு), அல் மக்தபுல் இஸ்லாமீ, பெய்ரூத்.
  2. அல்காஸிம், அபூ உபைத், (1981), கிதாபுல் அம்வால், (3ம் பதிப்பு), தாருல் பிக்ர், கெய்ரோ.
  3. அல்இப்ராஷீ, முஹம்மத்,அதிய்யா,(2003)ரூஹுல் இஸ்லாம்,(2ம் பதிப்பு) மக்தபதுல் உஸ்ரா, எகிப்து.
  4. அல்காஸானீ, அலாவுதீன், (1910), பதாஇஉஸ் ஸனாஇ, (1ம் பதிப்பு) சஈத் கம்பனி,கராச்சி
  5. அல்ஐனீ, பத்ருதீன்,உம்ததுல் காரி, ஷரஹுஸஹீஹில் புகாரி, தாரு இஹ்யாஇத் துராதில் அரபி.
  6. அல்கல்லாப், (1988),அஸ்ஸியாஸதுஷ் ஷரஇய்யா பிஸ்ஷுஊனிஸ் துஸ்தூரிய்யா வல்காரிஜிய்யா வல்மாலிய்யா, தாருல் கலம், குவைத்.
  7. அல் கன்னூஷீ, ராஷித், (1993), ஹகூகுல் முவாதனா – ஹகூகு கைரில் முஸ்லிம் பில் முஜ்தமஇல் இஸ்லாமீ, (2ம் பதிப்பு) அல்மஃஹத் அல் ஆலமீ லில் பிக்ர் அல்இஸ்லாமீ, வெர்ஜினியா, அமெரிக்கா.
  8. அலீஅல்பைஹகீ, அஸ்ஷுனன் அல்குப்ரா, தாருல் பிக்ர், பெய்ரூத்.
  9. அவ்தா, அப்துல்காதர், அத்தஷ்ரீஇல் ஜினாஈ இல்இஸ்லாமீ, முகாரனா பில் கானூன் அல்வள்ஈ, முஅஸ்ஸஸதுர் ரிஸாலா,பெய்ரூத்.
  10. அபுல் ஐனைன், பத்ரான், (1984), அல்அலாகதுல் இஜ்திமாஇய்யா பைனல் முஸ்லிமீன் வகைரில் முஸ்லிமீன், பெய்ரூத், தாருன் நஹ்ளதில் அரபிய்யா.
  11. அபுல்ஹுஸைன், முஸ்லிம் (2000) ஸஹீஹ் முஸ்லிம்,மவ்சூஅதுல் ஹதீஸ் அஷ்ஷரீப், தாருஸ் ஸலாம்
  12. அபுல்வலீத்,இப்னு ருஷ்த் (ஹி1325), அல்முகத்திமாத் அல்முமஹ்ஹிதாத், ஸஆதா பதிப்பகம், எகிப்து.
  13. அபூ அப்தில்லாஹ், அல்புகாரி, (2000), ஸஹீஸூல் புகாரி, மவ்சூஅதுல் ஹதீஸ் அஷ்ஷரீப், ரியாத், தாருஸ்ஸலாம் லின்னஷ்ரி வத்தவ்ஸீஇ.
  14. அபூ யூசுப், (1352 ஹி), அல்கராஜ், கெய்ரோ, அல்மத்பஅதுஸ் ஸலபிய்யா.
  15. இப்னு ஸஅத் (1968), அத்தபகாதுல் குப்ரா, தாருத் தஹ்ரீர், கெய்ரோ.
  16. இப்னு கதீர், (2001), தப்ஸீரல் குர்ஆனில் அழீம், மக்தபா தாருஸ் ஸலாம், ரியாத்.
  17. இப்னு குதாமா (1992), அல்முக்னி, ஹஜர் லித்திபாஆ, கெய்ரோ.
  18. இப்னு ஹிஷாம், (1937) ஸீரதுன் நபி, தாருல் பிக்ர், பெய்ரூத்.
  19. இப்னு ஹஸம், அல்முஹல்லா, தாருல் ஆபாக், பெய்ரூத்.
  20. கமாலுத்தீன், பத்ஹூல் கதீர், அல்மக்தபதுந் நூரிய்யா, பாகிஸ்தான்.
  21. கர்ளாவீ, யூசுப் (1998), அல் அகல்லியாதுத் தீனிய்யா, (3ம் பதிப்பு), அல்மக்தபுல் இஸ்லாமி, பெய்ரூத்.
  22. கர்ளாவீ, யூசுப் (1983), கைருல் முஸ்லிமீன் பில் முஸ்தமஇல் இஸ்லாமீ, (2ம் பதிப்பு), முஅஸ்ஸஸதுர் ரிஸாலா, பெய்ரூத்
  23. குதுப், சையித், (1982), அஸ்ஸலாமுல் ஆலமீ வல் இஸ்லாம், தாருஸ்ஷுரூக், பெய்ரூத்
  24. சூரஹ்மான், ஹிதாயத், (2001), அத்தஆயுஸ் அஸ்ஸில்மீ பைனல் முஸ்லிமீன் வகைரிஹிம், தாருஸ்ஸலாம், கெய்ரோ.
  25. மஹ்மஸானீ, சுப்ஹீ, (1972) அல்கானூன் வல்அலாகதுல் தவ்லிய்யா பில் இஸ்லாம், பெய்ரூத்
  26. மத்கூர், ஸலாம், (1959), தாரீகுத் தஷ்ரீஇல் இஸ்லாமீ, லஜ்னதுல் பயான் அல்அரபீ.
  27. மனாருல் இஸ்லாம், அபூதாபி, ஐக்கிய அரபு அமீர் இராச்சியம்.
  28. மாலிக் பின் அனஸ் (1991), அல் முதவ்வனா அல் குப்ரா, தாருல் பிக்ர், பெய்ரூத்.
  29. மௌதூதி, அபுல் அஃலா, (1969), நழறிய்யதுல் இஸ்லாம் வ ஹத்யுஹூ பிஸ்சியாதி வல்கானூன்.
  30. முக்னில் முஹ்தாஜ், இலா மஆனீ அல்ஃபாளில் மின்ஹாஜ்.
  31. அபூ ஜஃபர், (1964), தாரீஹுர் ருசுல் வல்முலூக், தாருல் மஆரிப், கெய்ரோ.
  32. அபூஜஃபர், தாரீக் தபரீ, அல்மத்பஅதுல்ஹுஸைனிய்யா, கெய்ரோ.
  33. ஹஸன் அய்யூப், (1992), அல் குலபாஉர் ராஸிதூன், தாருத் தவ்ஸீஇ வந்நஷ்ர்.
  34. ஹஸன், ஹிம்ஸி, (1999), முப்ரதாதுல் குர்ஆன், முஅஸ்ஸஸதுல் ஈமான், பெய்ரூத்.
  35. ஹஸ்ஸான், ஹாமித், (1995), ஹூகூகுத் திம்மிய்யீன், தஃவா அகடமீ, இஸ்லாபாத்.
  36. ஹஸ்ஸான், ஹாமித், (1995), அல்ஹுர்ரிய்யதுத் தீனிய்யா, தஃவா அகடமீ, இஸ்லாபாத்.
  37. ஹுவைதி, பஹ்மி, (1999), முவாதினூன் லா திம்மியூன், தாருஸ்ஷுரூக், பெய்ரூத்
  38. ஸைதான், அப்துல் கரீம் (1982), அஹ்காமுத் திம்மிய்யீன் வல்முஸ்தஃமினீன் பீ தாரில் இஸ்லாம், முஅஸ்ஸஸதுர் ரிஸாலா, பெய்ரூத்.
  39. அஸ்ஸர்கானீ, (1335 ஹி), அஸ்ஸியர் அல்கபீர், மத்பஅது தாஇரதில் மஆரிப் அந்நிழாமிய்யா, ஹைதராபாத்.
  40. அஸ்ஸர்கானீ, (1986), அல்மப்ஸூத், தாருல் மஆரிப், லெபனான்.
  41. Al Faruqi, Ismail Raji (1991), Trialogue of the Abrahamic Faiths, The Nation State and Social Order in the Perspective of Islam, Virginia, U.S.A.: The International Institute of Islamic Thought, (3rd Edition)
  42. Al Faruqi, Ismail, (1998), Second Edition (First Ed – 1896) Islam and Other Faiths (ed) by Athaullah Siddeeque, Leicester (U.K): The Islamic Foundation.
  43. I.Doi, Abdur Rahman (1994), Non – Muslims Under Shariah (Islamic Law), Kuala Lumpur: A.S.Noordeen, (Pub).
  44. Maududi, Abul A’la, (1996), The Islamic Law and Constitution, Lahore: Islamic Publication Ltd.

Al Haj & Umra, (Magazine), Ministry of Haj, Kingdom of Saudi Arabia, Jeddah (2004, April)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top