பண்பாடுகளா இபாதத்களா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

إن العبد ليبلغ بحسن خلقه عظيم درجات الآخرة وشرف المنازل وإنه لضعيف العبادة، وإنه ليبلغ بسوء خلقه أسفل جهنم وهو عابد.(رواه الطبراني)

“ஓர் அடியார் இபாதத்கள் விடயத்தில் பலவீனமானராக இருந்தாலும் தனது அழகிய பண்பு காரணமாக மறுமையின் அந்தஸ்த்துக்களையும் மகிமைக்குரிய நிலைகளையும் நிச்சயமாக அடைவார். அவர் ஓர் இபாதத்தாளியாக இருந்தாலும் தனது மோசமான பண்பின் காரணமாக நரகின் அடிமட்டத்தை நிச்சயமாக அடைவார்.”(தபரானீ)

மேலும் அவர்கள்:-

إن المؤمنَ لَيُدْرِكُ بحُسْنِ خُلُقِه درجةَ الصائمِ القائمِ.

أخرجه أبو داود (4798) واللفظ له، وأحمد (24355)

“ஒரு முஃமின் தனது அழகிய பண்பாடுகள் முலம் நோன்பிருக்கும்,(இரவு காலத்தில்) நின்று வணங்கும் ஒருவரது அந்தஸ்தை அடைந்து கொள்வார்.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

قال رجلٌ : يا رسولَ اللهِ ! إنَّ فلانةً تذكر من كثرةِ صلاتها وصيامها وصدقتها ؛ غير أنها تؤذي جيرانها بلسانها ؟ قال : هي في النارِ، قال : يا رسولَ اللهِ ! فإنَّ فلانةً تذكر قلةَ صيامِها وصدقتها وصلاتها، وإنها تصَّدقُ تدقُّ بالأثوارِ من الأقطِ، ولا تؤذي بلسانها جيرانها ؟ قال : هي في الجنةِ .

أخرجه أحمد (9675)، والبزار (9713)، وابن حبان (5764) باختلاف يسير

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘ஒரு பெண்மணி அதிகம் தொழுகை, நோன்பு, தர்மம் செய்பவளாக கருதப்படுகிறாள். ஆனால், அவள் அண்டைவீட்டாருக்கு தன் நாவால் தொல்லை தருகிறாள். (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?)’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இவள் நரகில் இருப்பாள்’ என்றார்கள். ‘இன்னொரு பெண்மணி குறைந்த நோன்பு, தர்மம், தொழுகை உடையவளாக இருக்கிறாள் என்று கருதப்படுகிறாள். அவள் தர்மம் செய்தால் வெண்ணைத் துண்டுகளைத் தான் தர்மம் செய்வாள். ஆனால் அவள் அண்டை வீட்டாருக்கு நாவால் தொல்லை தருவதில்லை. (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?)’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவள் சுவர்க்கத்தில் இருப்பாள்” என்றார்கள்.

நூல்: அஹ்மத் (9298)

அதனால் தான் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது தகாத வார்த்தைகளை மொழிய வேண்டாம். பாவம் செய்ய வேண்டாம்.அவருக்கு யாரும் ஏசினால் அல்லது திட்டினால் ‘நான் நோன்பாளியாக இருக்கிறேன்’ என்று கூறிவிடட்டும்” என்று கட்டளையிட்டார்கள்.

எனவே,

  1. இபாதத்கள் மனிதனில் அமைதியான வாழ்வு முறை ஏற்படக் காரணமாக அமைய வேண்டும்.
  2. மாறாக இஸ்லாத்தைப் பொருத்தவரையில் இபாதத்கள் நடைமுறை வாழ்வை செப்பனிடாத வெறும் சடங்குகள் அல்ல.
  3. இபாதத்கள் அல்லாஹ்வுடனான அடியானின் உறவை பலப்படுத்தும் அதே வேளை அடியார்களுடனான உறவுகளையும் பலப்படுத்தி ஒழுங்குபடுத்தும்.
  4. சிலபோது சுன்னத்தான இபாதத்களால் கிடைக்கும் நன்மைகளின் அளவுக்கு பண்பாடுகளாலும் நன்மைகளை சம்பாதிக்க முடியும்
  5. மிகவும் ஆபத்தான விடயம் என்னவென்றால் இபாதத்கள் மூலம் சம்பாதிக்கப்படும் பாரிய அளவு நன்மைகள் தீய நடத்தைகளால் அல்லது இழிகுணங்களால் அழிந்துவிடக்கூடிய சூழ்நிலையும் உருவாகும்.

எனவே,நாம் இபாதத்களில் கவனம் செலுத்தும் அளவுக்கே நற்குணங்களைக் கடைப்பிடிப்பதிலும் கவனம் செலுத்தி நடுநிலையான(வஸதிய்யாவான) வாழ்வொழுங்கை கைக்கொள்வோமாக!

அல்லாஹ் எம் அனைவரையும் அங்கீகரிப்பானாக!

அஷ்ஷைக் பளீல் (நளீமி)

15.02.2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top