சிறுவர் கடத்தல் பற்றி குத்பாக்களில்

சிறார்கள் நாட்டின் சில பகுதிகளில் கடத்தப்பட்டிருப்பது பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதேபோல சிறார்களுக்கு அவர்கள் அறியாத விதத்தில் மயக்க மருந்து கொடுத்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

சிறார்களது விடயமாக பெற்றார் மிகுந்த கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.

பல கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

எனவே இன்று குத்பா ஓதும் உலமாக்கள் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

இன்றைய குத்பாவில்

  1. போதைப் பொருட்களை பாவிப்பது விற்பது தொடர்பான இஸ்லாத்தின் கண்ணோட்டம்( குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள்)
  2. பிள்ளைகளது ஒழுக்கம் கல்வி பாதுகாப்பு என்பவற்றில் பெற்றாரின் பங்கு
  3. போதை வஸ்துக்களை ஒழிப்பதில் பாடசாலை பள்ளி மற்றும் சமூக நிறுவனங்கள் சமூகத் தலைவர்களது கடமைகள்.

போன்றன பற்றி உலமாக்கள் பேசுவது நல்லது

மது அருந்துபவனுக்கு நபிமொழியில் கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது. ‘போதைப் பொருளை அருந்துபவனுக்கு ‘தீனதுல் கபால்’ எனும் பானத்தைப் புகட்டுவதாக அல்லாஹ்விடம் ஒரு வாக்குறுதி உள்ளது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, ‘அல்லாஹ்வின் தூதரே! ‘தீனதுல் கபால்’ என்றால் என்ன?’ எனத் தோழர்கள் கேட்டதும் அல்லாஹ்வின் தூதரவர்கள், ‘நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் சீழ் என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்.

போதைப் பொருட்களை உபயோகிப்பவர்கள் மட்டுமன்றி அதனுடன் சம்பந்தப்படும் ஒவ்வொருவரும் குற்றவாளிகளே.

وبَيَّن النبي صلى الله عليه وسلم أن الخمر ملعون بائعها وشاربها وحاملها ، كما جاء في الحديث الذي رواه أبو داود (3674) وابن ماجه (3380) عن ابْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : (لَعَنَ اللَّهُ الْخَمْرَ ، وَشَارِبَهَا ، وَسَاقِيَهَا ، وَبَائِعَهَا ، وَمُبْتَاعَهَا ، وَعَاصِرَهَا ، وَمُعْتَصِرَهَا ، وَحَامِلَهَا ، وَالْمَحْمُولَةَ إِلَيْهِ) . وصححه الألباني في صحيح أبي داود .

ورواه الترمذي (1295) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ : (لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْخَمْرِ عَشْرَةً : عَاصِرَهَا ، وَمُعْتَصِرَهَا ، وَشَارِبَهَا ، وَحَامِلَهَا ، وَالْمَحْمُولَةُ إِلَيْهِ ، وَسَاقِيَهَا ، وَبَائِعَهَا ، وَآكِلَ ثَمَنِهَا ، وَالْمُشْتَرِي لَهَا ، وَالْمُشْتَرَاةُ لَهُ) .

அதனை பயிரிடுபவர்கள் விற்பவர்கள் போன்ற பத்துக் கூட்டத்தவர்கள் அனைவரும் அல்லாஹ் மற்றும் அவன் தூதரது சாபத்திற்கு உட்பட்டவர்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top