முஸ்லிம் சமூகத்தின் தலைமைப் பொறுப்புக்களை வகிப்பவர்கள் குறிப்பாகவும் பொதுவாக முஸ்லிம்களும் பிற சமூகங்களுக்கு எல்லா வகையிலும் முன்மாதிரியாக வாழ வேண்டும். அப்படியில்லாத போது அவர்கள் சார்ந்துள்ள இஸ்லாத்துக்கே அவப்பெயரை அவர்கள் தேடிக்கொடுப்பார்கள்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் கடத்தல் ஊழல் லஞ்சம் மோசடி அநீதிக்கு துணை போதல் போன்ற மிகப் பெரும் பாவங்களில் ஈடுபடும் போது அது முழு முஸ்லிம் சமூகத்தையும் பாதிக்கும். இஸ்லாத்திற்கு பிற சமயத்தவர்கள் வருவதற்கு அது தடையாக மாறிவிடும்.இஸ்லாமிய பெயர்களை வைத்துக் கொண்டு சிலபோது முஸ்லிம்கள் அணியும் ஆடைகளை அணிந்து கொண்டு பள்ளிவாயல்களுக்கும் வரும் இத்தகைய குற்றிவாளிகள் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளாகவே பிறரால் பார்க்கப்படுகிறார்கள்.
இந்த நாட்டின் பிரஜைகளாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் இந்த நாட்டின் பொதுவான சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டே வாழ வேண்டும்.அது இந்த நாட்டுடன் நாம் செய்திருக்கும் ஒப்பந்தமாகும். உடன்படிக்கையாகும். ஆனால் இந்த நாட்டில் வாழும் அதேவேளை நாட்டின் சட்டங்களை நாம் மீறும் போது அது நாட்டுக்கு செய்யும் துரோகமாகும். சுங்கத் திணைக்களம் இவ்வாறு சட்டங்களை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் நாட்டுடன் நாம் செய்துள்ள உடன்படிக்கைகளை நாம் கேலிக்கூத்தாக்கி அவற்றை கேடயமாக்கி எமது திருகு தாளங்களைச் செய்யும் போது – குர்ஆனின் கண்ணோட்டத்தில்- அது எம்மை பலவீனமான ஸ்திரமற்ற சமூகமாக்கி விடும்.எம்மைப் பற்றிய நன்மதிப்பை நாம் இழந்து விடுகிவோம்.
அல்லாஹ் குர்ஆனில்:-
“நீங்கள் உங்கள் சத்தியங்களை (உடன்படிக்கைகளை) உங்களுக்கிடையில் சதி துரோகம் ஆகியவற்றுக்குக் காரணமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்வதால் நிலை பெற்றிருந்த உங்களுடைய பாதம் சறுகி விடும்.
அதனை விடவும் மிகப் பெரிய தவறொன்றையும் நாம் இழைத்தவர்களாகி விடுவோம்.அது தான் எமது தவறுகளின் காரணமாக நாம் சார்ந்துள்ள புனித தீனுல் இஸ்லாத்தைப் பற்றிய பிழையான புரிதல் முஸ்லிம் அல்லாதவர்களது மனதில் ஏற்படும்.
இன்னும் ஒரு படி மேல் சென்று கூறுவதாயின் இஸ்லாத்துக்குள் வருவதற்கு முஸ்லிம் அல்லாதவர்கள் விருப்பத்தோடு இருந்தாலும் எமது இந்த பிழையான முன்மாதிரியால் அவர்கள் இஸ்லாத்திற்கு வரமாட்டார்கள்.
இதனால் அல்லாஹ்வால் நாம் இம்மையிலும் மறுமையிலும் தண்டிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவோம்.
அல்லாஹ் பாதுகாப்பானாக!
மேற்படி கருத்தை அல்லாஹ் பின்வருமாறு ஸூரதுன் நஹ்லில் தெளிவாக குறிப்படிகிறான்.
அன்றியும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களைத் தடுத்துக்கொண்டிருந்த காரணத்தால் இம்மையில் பெருந் துன்பத்தை அனுபவிக்க நேரிடும். மறுமையிலும் உங்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.”
Sura Annahl
And (O Muslims,) do not make your oaths the means of deceiving one another lest (someone’s) foot should slip after being firmly fixed (16:94)
And you may suffer the consequences of debarring other people from the Way of Allah, and undergo a severe torment.(16:95)
“Someone,who might have been convinced of Islam, seeing your dishonest conduct should become disgusted and hold back from joining the Believers” .For he might argue like this: “As these Muslims are not much different from the disbelievers in their morals and dealings, there is no reason why I should join them. “(Thafheemul Quran)
தப்ஹீமுல் குர்ஆன் எனும் வியாக்கிய நூலில் இதற்கு பின்வருமாறு விளக்கம் கூறப்பட்டுள்ளது.’இஸ்லாத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒருவர், (முஸ்லிம்களாகிய) உங்களின் நேர்மையற்ற நடத்தையைக் கண்டு வெறுப்படைந்து, விசுவாசிகளுடன் சேராமல் இருந்துவிடலாம்
.அவர் இப்படி வாதிடலாம்: “இந்த முஸ்லிம்கள் தங்கள் ஒழுக்கம் மற்றும் நடவடிக்கைகளில் காஃபிர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவர்கள் அல்ல. நான் அவர்களுடன் சேருவதற்கு எந்த காரணமும் இல்லை. “(தஃப்ஹீமுல் குர்ஆன்)
ولا يَنْتَهِبُ نُهْبَةً، يَرْفَعُ النَّاسُ إلَيْهِ فيها أبْصارَهُمْ حِينَ يَنْتَهِبُها وهو مُؤْمِنٌ (صحيح البخاري 2475)
ஒருவன் களவாடும் போது மக்கள் தமது பார்வைகளை உயர்த்தி பார்க்கும் அளவுக்கு பகிரங்கமாகவே அதனைச் செய்வானாயின் அந்த நேரத்தில் அவன் முஃமினாக இருக்க மாட்டான்( ஸஹீஹுல் புகாரி)
அரச சொத்துக்கள் பொதுமக்களது சொத்துக்கள் வக்ஃப் சொத்துக்கள் போன்றவற்றை எவ்வித கூச்சமோ பயமோ இல்லாமல் பகிரங்கமாகவே சாப்பிட்டுக் கொண்டு நிம்மதியாகப் படுத்துறங்கும் பலர் இருக்கலாம்.
இவர்களுக்கு ஈமான் இருப்பது சாத்தியமில்லை
இஸ்லாத்தின் மோசமான பிரதிநிதிகள்
இஸ்லாத்திற்கு இவர்களால் அவப்பெயர்
உலகில் இவர்கள் தண்டிக்கப்படுவார்கள்
மறுமையில் கடுமையான தண்டனையுண்டு.
ஒரு முஸ்லிம் ஒருபோதும் பிறருக்கு துரோகமோ உபத்திரவமோ செய்யமாட்டான்.
மாறாக எப்போதும் பிறருக்கு உதவி செய்பவனாக பிறரது கஷ்ட துன்பத்தில் பங்கெடுப்பவனாகவே இருப்பான்.
அல்லாஹ் எம் அனைவரையும் பாதுகாப்பானாக!




