கல்வி மேம்பாட்டில் அட்டுளுகம அல்கஸ்ஸாலி

அட்டுளுகம அல்-கஸ்ஸாலி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு பொதுக் கூட்டம் இன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. அடுத்த இரு வருடங்களுக்கான நிர்வாகிகளும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இதன்போது ‘இஸ்லாமிய கண்ணோட்டத்தில் நிர்வாகிகளது பொறுப்புக்கள்’ எனும் தலைப்பில் உரைநிகழ்த்த சந்தர்ப்பம் கிடைத்தது.

கல்லூரி அதிபர் சட்டத்தரணி ஹிதாயதுல்லாஹ் சேர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் களுத்துறை மாவட்ட ஜம்இயத்தில் உலமா தலைவர் ஷேக் அப்துர் ரஹ்மான் பஹ்ஜி ஹஸரத், காதிரிய்யா தரீக்கா பள்ளிவாசல் பிரதம ட்ரஸ்டி அப்துல் காதர் ஹாஜியார், அட்டுளுகம ஜுமுஆ பள்ளிவாசல் பிரதம ட்ரஸ்டி அனூஸ் ஹாஜியார் ஆகியோர் விஷேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இம்மூவரும் பாடசாலை அதிபரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தமை ஊரின் ஒற்றுமைக்கான அடையாளமாக இருந்தது. கூட்டத்தில் பெற்றார்கள், நலன் விரும்பிகள் ஆசிரிய ஆசிரியைகள் என பலரும் கலந்துகொண்டனர்.

அல்கஸ்ஸாலியில் நீண்ட காலம் கடமை புரிந்து ஓய்வுபெற்ற பிரதி அதிபர் மிஸ்பா சேர் அவர்களை பழைய SDEC மூலம் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு, கௌரவப் பரிசில் வழங்கி கௌரவிக்கப் பட்டமை முன்மாதிரியான நிகழ்வாக அமைந்தது.

நிகழ்ச்சிகளின் அடுத்த கட்டமாக அல்கஸ்ஸாலி பாடசாலை மற்றும் ஆரம்ப பாடசாலை ஆகியவற்றில் கற்பிக்கும் ஆசிரிய ஆசிரியைகளுக்கான நிகழ்ச்சியில் ‘முஸ்லிம் ஆசான்களது பணிகளும் பொறுப்புக்களும்’ எனும் தலைப்பில் உரைநிகழ்த்த சந்தர்ப்பம் கிடைத்தது.

அல்ஹம்துலில்லாஹ்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top