தேர்தலில் வெற்றியும் தோல்வியும்

அஷ்ஷைக் பளீல்

தற்போது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இச்சந்தர்ப்பத்தில் வென்ற கட்சிக்காரர்கள் களிப்போடும் சந்தோஷமாகவும் முகமலர்ச்சியோடும் இருக்கும் போது தோற்ற கட்சிக்காரர்கள் அல்லது ஒப்பீட்டு ரீதியில் குறைந்த ஆசனங்களைப் பெற்ற கட்சிக்காரர்கள் மிகுந்த விரக்தியுடனும் கவலையுடனும் முகம் வாடியும் இருக்கிறார்கள்.

ஆனால் தோல்வியின் பொழுது எப்படி நடக்க வேண்டும் வெற்றி பெறும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான அருமையான வழிகாட்டல்கள் குர்ஆன் ஹதீஸில் இருக்கின்றன.

தோல்வியின் பொழுதான வழிகாட்டல்கள்

மனித வாழ்வு என்பது எதிரும் புதிருமான நிலைகளைச் சந்தித்தே தீரும்.இது அல்லாஹ்வின் நியதியாகும்.

وَنَبْلُوكُم بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً ۖ

“உங்களை தீயதை கொண்டும் நல்லதை கொண்டும் சோதனைக்காக சோதிப்போம்” என்ற குர்ஆன் வசனத்தில் ‘தீயதைக் கொண்டு’என்ற வார்த்தையை முற்படுத்தி இருக்கிறான்.

வெற்றி – தோல்வி, இன்பம் -துன்பம், பிறப்பு- மரணம், கவலை- சந்தோசம் என எதிரும் புதிருமான நிலைகள் உருவாகும் .அந்த நிலைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

எனவே, தோல்வி என்பதும் விரும்பத்தகாத விஷயங்களும் மனித வாழ்வில் இயல்பாகவே நடந்தே தீரும். இப்படியான சந்தர்ப்பங்களில் துவண்டு போய் இடிந்து போகாமல் தோல்விகளை அல்லது, விரும்பத்தகாத விடயங்களை திருப்தியோடு ஏற்றுக் கொள்வது அவசியமாகும்.

ஆனால் விரும்பத்தகாத அந்த நிலைகள் வராமல் இருப்பதற்கான உச்ச முயற்சிகளை அவர்கள் கடந்த காலத்தில் செய்திருக்க வேண்டும். அதற்குப் பிறகும் எதிர்பாராத விதமான முடிவுகள் வருமாயின் பொறுத்துக் கொள்வதே ஒரு முஃமினின் பண்பாக இருக்கும். எனவே,அவன் ஒருபொழுதும் விரக்தி அடையமாட்டான்.தோல்வி மனப்பான்மையுடன் உச்சகட்ட கவலையை நோக்கி போய்விடமாட்டான். அவனது நிலை எப்பொழுதும் ஆச்சரியமாகவே இருக்கும்.

எனவே நபிகளார் (ஸல்) அவர்கள்:-

قال رسولُ اللهِ صلى الله عليه وسلم:” عَجَبًا لأمرِ المؤمنِ إِنَّ أمْرَه كُلَّهُ لهُ خَيرٌ وليسَ ذلكَ لأحَدٍ إلا للمُؤْمنِ إِنْ أصَابتهُ سَرَّاءُ شَكَرَ فكانتْ خَيرًا لهُ وإنْ أصَابتهُ ضَرَّاءُ صَبرَ فكانتْ خَيرًا لهُ “. رواهُ مُسْلِمٌ.

“ஓர் இறை விசுவாசியின் காரியங்கள் ஆச்சரியமானவை. அவனது விவகாரம் அனைத்தும் அவனுக்கு நலவாக அமைந்துவிடுகிறது. இது ஓர் இறை விசுவாசியைத் தவிர மற்றெவருக்கும் அவ்வாறு அமைவதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியூட்டும் விடயம் ஏற்பட்டால், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நலவாய் அமைகிறது. அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் பொறுமை செய்கிறான். அதுவும் அவனுக்கு நலவாய் அமைகிறது” (நூல்: முஸ்லிம், 7692) எனக் கூறினார்கள்.

The Messenger of Allah (PBUH)said,

“Wondrous is the affair of a believer, as there is good for him in every matter; this is not the case for anyone but a believer. If he experiences pleasure, he thanks Allah and it is good for him. If he experiences harm, he shows patience and it is good for him.”

Source: Ṣaḥīḥ Muslim 2999

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் சந்தேகமில்லாமல் ஆழமாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு ழவிசுவாசி இப்படி ஈமானின் ஜோதியின் பிரகாசத்தின் காரணமாக அற்புதமான சம நிலையில் வாழ்ந்து வருவான்.

அன்றாடம் தொழுகையை கடைப்பிடித்து வருகின்ற பின்வரும் அல்குர்ஆன் வசனத்தில் (சூரத்துல் மஆரிஜ்:19-35) கூறப்படும் விசேடமான பண்புகளை கொண்டிருப்பவர்கள் ஒருபொழுதும் நிதானமிழந்து,விரக்தியடைய மாட்டார்கள். அத்தகையவர்கள் உலகத்தில் வாழ்கின்ற பொழுது விசேடமான சில உளப் பண்புகளையும் நடத்தைகளையும் கொண்டிருப்பதனால் அற்புதமான நிம்மதியோடு வாழுகின்ற அதேநேரம் சொர்க்கத்திலும் குடியிருப்பார்கள் என்பதை இந்த வசனங்கள் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன.

إِنَّ الْإِنْسَانَ خُلِقَ هَلُوعًا ۝ إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا ۝ وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا ۝ إِلَّا الْمُصَلِّينَ ۝ الَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ دَائِمُونَ ۝ وَالَّذِينَ فِي أَمْوَالِهِمْ حَقٌّ مَعْلُومٌ ۝ لِلسَّائِلِ وَالْمَحْرُومِ ۝ وَالَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ الدِّينِ ۝ وَالَّذِينَ هُمْ مِنْ عَذَابِ رَبِّهِمْ مُشْفِقُونَ ۝ إِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍ ۝ وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ ۝ إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ ۝ فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ ۝ وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ ۝ وَالَّذِينَ هُمْ بِشَهَادَاتِهِمْ قَائِمُونَ ۝ وَالَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ يُحَافِظُونَ ۝ أُولَئِكَ فِي جَنَّاتٍ مُكْرَمُونَ

[سورة المعارج:19-35].

மேலும் ஒரு முஸ்லிமுக்கு மனதில் ஏற்படும் கவலைகள்,அவன் சந்திக்கும் துன்பங்கள் அனைத்தும் அவனுக்கு பாவ மன்னிப்பை பெற்று தர கூடியவையாக இருப்பதாகவே அவன் நம்புவான் என்பதை பின்வரும் நபிமொழி தெளிவாக விளக்குகிறது:-

ما يُصِيبُ المُسْلِمَ، مِن نَصَبٍ ولَا وصَبٍ، ولَا هَمٍّ ولَا حُزْنٍ ولَا أذًى ولَا غَمٍّ، حتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا، إلَّا كَفَّرَ اللَّهُ بهَا مِن خَطَايَاهُ. صحيح البخاري

“ஓர் இறை நம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலி, துன்பம், நோய், கவலை, அவர் உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.”

(நூல் : ஸஹீஹ் அல்புகாரீ)

The Prophet(PBUH) said,

“No fatigue, nor disease, nor sorrow, nor sadness, nor hurt, nor distress befalls a Muslim, even if it were the prick he receives from a thorn, but that Allah expiates some of his sins for that.”

(Sahih Bukhari Book: 75, Hadith: 5701)

ஆகவே எந்த ஒரு துன்பமும் மனக்கவலையும் ஒரு முஸ்லிமை பொறுத்தவரையில் அவனுக்கு சார்பாகவும், அனுகூலமாகவும் அமையும் என்ற அற்புதமான கண்ணோட்டம் இங்கு தெரிவிக்கப்படுகிறது.

சில போது சில காரியங்களை அல்லது சில சம்பவங்களை நாம் விரும்பாமல் இருக்கக்கூடும். ஆனால், அல்லாஹ் அதற்குள் அல்லது அவற்றின் பின்னணியில் வேறு நலவுகளை வைத்திருப்பான், அவற்றை நாம் அறிந்திருக்க நியாயமில்லை.அவன் எல்லையற்ற அறிவு கொண்டவன் என்பதனால் அதற்கான நியாயங்களை அவன் மாத்திரமே அறிந்தவனாக இருப்பான்.

பின்வரும் அல்குர்ஆனிய வழிகாட்டல்கள் அதற்கு சான்றாக அமைகின்றன.

எதிரிகள் வந்து எம்மை தாக்குகின்ற பொழுதும் எம்மைத் தற்காத்துக் கொள்வதற்காக அவர்களை எதிர்த்துப் போராடுவதை இஸ்லாம் அனுமதிக்கிறது, மாத்திரமல்ல அதனை கடமை என்றும் சொல்கிறது.ஆனால், அந்தக் கடமையில் நாம் விருப்பத்தோடு ஈடுபடாவிட்டாலும்,அது எமக்கு வெறுப்புக்குரியதாக இருந்தாலும் அதற்குள் அல்லாஹ்வை நாம் அறியாத ஓர் நலனை வைத்திருப்பான் என்று பின்வரும் வசனம் (2:216) சொல்லுகிறது:-

{وَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ وَعَسَى أَنْ تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَكُمْ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ} [البقرة: 216]}.

ஒருவர் தமது மனைவியை ஏதோ ஒரு காரணத்துக்காக வெறுக்கலாம்.அல்லது பிரிந்து வாழலாமே என அவர் சிந்திக்கலாம். ஆனால் சேர்ந்து வாழ்வதில் நன்மை இருக்கும் என்ற விடயம் அந்த கணவனுக்கு தெரியாமல் இருக்கலாம். அல்லாஹ் அந்த வாழ்வில் பரகத்த்தை அவன் வைத்திருக்கலாம். எனவே, இணைந்து வாழ வேண்டும் என்று அல்லாஹ் குர்ஆனில் (4:19) கட்டளையிடுகின்றான்

{فَإِنْ كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا} [النساء: 19]

சுருங்கக் கூறினால் துன்பங்களை, விரும்பத்தகாத சம்பவங்களை இன்முகத்தோடும் திருப்தியோடும் அவை அல்லாஹ்வுடைய நாட்டம் என்ற வகையிலும் எதிர்கொள்வது உள்ளத்தில் அற்புதமான அமைதியையும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் பெற்றுத் தரும்.

ஆனால்,மற்றொன்றையும் நாம் இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகத்திற் கொள்ள வேண்டும் அதாவது தோல்விகள், அல்லது விரும்பத்தகாத நிகழ்வுகள் இடம்பெறும் பொழுது எமது பக்கத்தில் நாம் ஏதும் பாவம் செய்திருக்கிறோமா அல்லது கடமைகளில் குறைபாடு செய்திருக்கிறோமா என்பது பற்றியும் தீவிரமாக சிந்திக்க வேண்டும். தோல்விகளுக்குப் பின்னால் எனது பலவீனங்கள்,பிழைகள், தவறுகள் மறைந்திருக்கக் கூடும் என்ற விடயமும் கவனத்திற் கொள்ளத்தக்கது.

வெற்றியின் போதான பண்புகள்

தோல்வியைப் போலவே வெற்றியும் மனித வாழ்வின் சகஜமான ஓர் அங்கமாகும். எதிர்பார்த்தது நடக்கலாம். மனதுக்கு குளிர்ச்சியைத் தரும் சம்பவங்களை நாம் எதிர்கொள்ளலாம்.

அத்தகைய சந்தர்ப்பங்களில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்கள் இஸ்லாத்தில் ஏராளமாக இருக்கின்றன:

  1. அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிப்பது:- ஏற்கனவே நபிமொழியில் கூறப்பட்ட பிரகாரம் இந்த நன்றி அமைய வேண்டும். எமது சாதனைகள் மனதுக்கு விருப்பமான அடைவுகள் அனைத்தும் அல்லாஹ்வின் அருளால் தான் கிடைக்கப் பெற்றிருகின்றன என்ற பணிவான சிந்தனையுடன் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று புகழ வேண்டும். சுஜூதில் விழுந்து அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

மாறாக மூஸா (அலை) அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த காரூனைப் போன்று மமதையோடும், அகம்பாவத்தோடும், தனது அடைவுகள் அனைத்துக்கும் தானே காரணம் என்றும் எண்ணிக் கொண்டு இறுமாப்போடு நடந்து கொள்ளக் கூடாது:-

அல்லாஹ் காரூனைப் பற்றி பின்வருமாறு சொல்கிறான்:-

إِنَّ قَارُونَ كَانَ مِن قَوْمِ مُوسَىٰ فَبَغَىٰ عَلَيْهِمْ ۖ وَآتَيْنَاهُ مِنَ الْكُنُوزِ مَا إِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ إِذْ قَالَ لَهُ قَوْمُهُ لَا تَفْرَحْ ۖ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ (76) وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ ۖ وَلَا تَنسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا ۖ وَأَحْسِن كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ ۖ وَلَا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ ۖ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ (77)

மேலும் சுலைமான் (அலை) அவர்கள் மிகப் பெரும் ஆட்சியாளராக இருந்தும் கூட அடக்கமாகவும் பணிவோடு நடந்து கொண்டார்கள். தனக்கு முன்னால் பல்கீஸ் ராணியின் சிம்மாசனம் கொண்டுவந்து வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இது எனது இரட்சகனின் அருளில் நின்றும் உள்ளதாகும். நான் நன்றி செலுத்துகின்றேனா அல்லது நன்றி கெட்டதனமாக நடந்து கொள்கின்றேனா என்று சோதிப்பதற்காகவே இவ்வாறு அல்லாஹ் செய்திருக்கிறான், என்று தனது அடக்கத்தை, பணிவைப் சுலைமான் (அலை) வெளிப்படுத்தினார்கள்.

قَالَ الَّذِي عِندَهُ عِلْمٌ مِّنَ الْكِتَابِ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَن يَرْتَدَّ إِلَيْكَ طَرْفُكَ ۚ فَلَمَّا رَآهُ مُسْتَقِرًّا عِندَهُ قَالَ هَٰذَا مِن فَضْلِ رَبِّي لِيَبْلُوَنِي أَأَشْكُرُ أَمْ أَكْفُرُ ۖ وَمَن شَكَرَ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ ۖ وَمَن كَفَرَ فَإِنَّ رَبِّي غَنِيٌّ كَرِيمٌ

அதேபோல் மிகப்பெரும் அணைக் கட்டை கட்டி முடித்த துல்கர்னைன் அவர்கள் தனது அடக்கத்தை வெளிப்படுத்திய சந்தர்ப்பத்தை அல்லாஹுத்தஆலா பின்வருமாறு சொல்கிறான்:-

قَالَ مَا مَكَّنِّي فِيهِ رَبِّي خَيْرٌ فَأَعِينُونِي بِقُوَّةٍ أَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا (95) آتُونِي زُبَرَ الْحَدِيدِ ۖ حَتَّىٰ إِذَا سَاوَىٰ بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انفُخُوا ۖ حَتَّىٰ إِذَا جَعَلَهُ نَارًا قَالَ آتُونِي أُفْرِغْ عَلَيْهِ قِطْرًا (96) فَمَا اسْطَاعُوا أَن يَظْهَرُوهُ وَمَا اسْتَطَاعُوا لَهُ نَقْبًا (97) قَالَ هَٰذَا رَحْمَةٌ مِّن رَّبِّي ۖ فَإِذَا جَاءَ وَعْدُ رَبِّي جَعَلَهُ دَكَّاءَ ۖ وَكَانَ وَعْدُ رَبِّي حَقًّا (98)

  1. எதிர்த் தரப்பினரை அல்லது எதிரிகளை மன்னிப்பது:-

சாதனைகளை நிலைநாட்டுவோர் அல்லது வெற்றியைத் தழுவுவோர் எதிர்த் தரப்பினரை அல்லது எதிரிகளை மன்னிப்பது அவர்களது கடமையாகும். இது அவர்களது பெருந்தன்மையை காட்டும்.

நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனக்கு கடும் அநீதிகளை இழைத்த தனது சகோதரர்களை பார்த்து தான் அவர்களை மன்னித்து விட்டதாகவும் அவர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் பெரு மனதோடு கூறிவிட்டார்கள். மேலும் அவர்கள் ‘இறைவா நீ எனக்கு ஆட்சியை தந்தாய். சம்பவங்களுக்கான விளக்கங்களை சொல்வதற்கான அறிவை தந்தாய். வானங்கள் பூமியைப் படைத்தவன் நீ. நீதான் உலகிலும் மறுமையிலும் எனது பொறுப்பாளனாக இருக்கிறாய்.என்னை முஸ்லிமாக மரணிக்க செய்து நல்லடியார்களில் சேர்ந்துக் கொள்வாயாக’ என்று பணிவோடு பிரார்த்திக்கிறார்கள்.

قَالَ لَا تَثْرِيبَ عَلَيْكُمُ الْيَوْمَ ۖ يَغْفِرُ اللَّهُ لَكُمْ ۖ وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ (92 ۞ رَبِّ قَدْ آتَيْتَنِي مِنَ الْمُلْكِ وَعَلَّمْتَنِي مِن تَأْوِيلِ الْأَحَادِيثِ ۚ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ۖ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ (101)

மேற்கூறப்பட்ட உண்மைகளை வைத்துப் பார்க்கின்ற பொழுது தேர்தலில் வெற்றிபெற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் பணிவோடும் அடக்கத்தோடும் கண்ணியமாகவும் மனித விழுமியங்களை கைக்கொண்டு நடந்துகொள்ளவேண்டும். மாற்றுக் கட்சியினரை பழிவாங்கவோ அவர்கள் மீது தாக்குதல் நடத்தவோ கூடாது.தாம் எதிர்பார்த்தது போன்ற வெற்றியை அல்லாஹ் பெற்றுதா தந்தமைக்காக அவர்கள் நன்றி செலுத்த வேண்டும் நன்றி செலுத்த வேண்டும்.நமக்குக் கிடைத்திருக்கின்ற அதிகாரத்தையும் ஆட்சியையும் சமூக நலனுக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்த வேண்டும். வெறுமனே அல்ஹம்துலில்லா என்று சொல்லாமல் நமக்கு இறைவன் தந்த பாக்கியத்தை மனிதன் சமூகத்தின் முயற்சிக்காக பயன்படுத்த வேண்டும். இல்லாதபோதும் அது பெரும் துரோகமாகும் மறுமையில் நஷ்டத்தையும் பெற்றுத்தரும்.

அதேபோன்று தோல்வியை தழுவிய அல்லது குறைந்த ஆசனங்களைப் பெற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் விரக்தி அடையாமல் தோல்வி மனப்பான்மையுடன் இருக்காமல் எல்லாம் நலவுக்கே என்ற கோட்பாட்டை மனதில் இறுத்தி, அல்லாஹ்வின் தீர்ப்பை ஏற்று வாழ வேண்டும். மேலும் தமது கட்சி தான் தோல்வி கண்டிருப்ஓபதற்கான காரணங்களையும் அவர்கள் கட்டாயம் தேடிப்பார்த்து எதிர்காலத்தில் அவற்றை படிப்பினையாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக சில வார்த்தைகள்

தேர்தலுக்காக அல்லும் பகலும் உழைத்தவர்கள் தமது உள்ளத்தில் கை வைத்து பின்வரும் கேள்வியை மாத்திரம் கேட்டுக் கொள்ள வேண்டும்:-

#நான் தேர்தல் பிரச்சாரங்களிலும் எனது கட்சியை வெல்ல வைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டமைக்கு #சுயநலம் எதுவும் காரணமாக அமைந்ததா அல்லது #சமூகத்தினதும் நாட்டினதும் #சுபிட்சம் மாத்திரமே எனது குறிக்கோளாக அமைந்ததா?

இந்தக் கேள்விக்கு மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நாளை மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கின்ற பொழுது திருப்திகரமாக பதில் சொல்லலாம் என்ற நம்பிக்கையில் இருக்கமுடியுமா இருந்தால் உலகத்தில் இருக்கும் எவரது விமர்சனத்தையும் புகழையும் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.

வென்ற கட்சியை ஆதரித்தவர்களும் தோற்ற கட்சிகளை ஆதரித்தவர்களும் தத்தமது அறிவையும் இஜ்திஹாதையும் பயன் படுத்ததி முடிவுக்கு வந்திருந்தால் நிச்சயமாக அவர்களுடைய இஜ்திஹாத் பிழையாக அமைந்தாலும் சரியாக அமைந்தாலும் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு கூலியிருக்கும் ஆனால் ‘நிய்யத்’ நன்றாக இருக்க வேண்டும்.

அல்லாஹ் இந்த நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களுக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்து தருவாயாக!

قُلِ ٱللَّهُمَّ مَٰلِكَ ٱلْمُلْكِ تُؤْتِى ٱلْمُلْكَ مَن تَشَآءُ وَتَنزِعُ ٱلْمُلْكَ مِمَّن تَشَآءُ وَتُعِزُّ مَن تَشَآءُ وَتُذِلُّ مَن تَشَآءُ ۖ بِيَدِكَ ٱلْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌ

“நீ நாடுபவர்களுக்கு ஆட்சியை கொடுக்கிறாய் நீ நாடுபவர்களிடமிருந்து ஆட்சியை பறிக்கிறாய். நீ நாடுபவர்களை கண்ணியப் படுத்துகிறாய். நீ நாடுபவர்களை அவமானப்படுத்துகிறாய். உனது கையிலேயே நலன்கள் அனைத்தும் இருக்கின்றன. நீ அனைத்தின் மீதும் சக்தி உள்ளவனாக இருக்கிறாய்.”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top