மஷூரா செய்வோம்!

அஷ்ஷைக் பளீல்

முஸ்லிம் சமூகத்திலுள்ள சமூக சேவை நிறுவனங்களது செயற்பாடுகளை நோக்குமிடத்து முஸ்லிம் சமூகத்தின் பின்னடைவுக்கான இரண்டு பிரதான காரணங்களை இங்கு அழுத்தமாக சுட்டிக் காட்ட முடியும்.

  1. எமக்கு முன்னால் உள்ள பொறுப்புக்களுக்கு மத்தியில் அதி முக்கியத்துவம் வாய்ந்த, உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பொறுப்புகள் எவை என்பதை மிகச் சிறப்பாக இனம்கண்டு அவற்றுக்கு முன்னுரிமை வழங்குவது இல்லை.
  2. எந்தவொரு விவகாரத்திலும் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முன்னர் துறைசார்ந்தவர்களுடன் கலந்தாலோசித்துக் கொள்ளாத நிலை.

இவ்விரு குறைபாடுகளும் நமது சமூகத்தில் இருக்கும் வரை சமூகம் தலைதூக்க மாட்டாது.

# ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டால் மட்டுமே முன்னுரிமைப்படுத்த வேண்டிய அம்சங்களை இனம் காணலாம்.

# தனிமனித முடிவுகளில் தங்கியிருக்காமல் துறைசார் நிபுணர்களது ஆலோசனைகள் கூட்டு முயற்சிகள் என்பவற்றை முன்னிலைப்படுத்துவது.

அல்குர்ஆனில் அல்லாஹ் ஆலோசனை செய்வதன் முக்கியத்துவத்தை பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறான்:-

فاسألوا اهل الذكر ان كنتم لا تعلمون

உங்களுக்கு தெரியாத போது வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் கேளுங்கள்.

وشاورهم في الأمر

(நபியே உமது தோழர்களான) அவர்களுடன் விவகாரங்களில் ஆலோசனை செய்து கொள்ளுங்கள்.

وأمرهم شورى بينهم

தமக்கு மத்தியில் ஆலோசனை செய்து கொள்வது என்பது அவர்களது பண்பாகும்.

ولا ينبؤك مثل خبير

அனுபவசாலியைப் போல் உனக்கு வேறு யாரும் அதுபற்றி தெரிவிக்க முடியாது.

சில தனிமனிதர்கள் பிறருடன் ஆலோசனை செய்யாமல் சமூக முக்கியத்துவம் வாய்ந்த சில முடிவுகளை எடுப்பதால் முழு சமூகமும் அதனால் பாதிக்கப்படுகிறது.

எனவே, மிக முக்கியமான விவகாரங்களில் ஆலோசனை செய்வது மார்க்கக் கடமை மட்டுமல்ல சமூகத்தின் வளர்ச்சிக்கான தேவையுமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top