எது எப்படிப் போனாலும் பாலஸ்தீன நிகழ்வின் பின்னர்:-
- முஸ்லிம் உலகம் ஓரளவு ஒற்றுமைப்பட்டுக் கொண்டிருக்கிறது.
- பலஸ்தீன் விடயமாக முஸ்லிம் அல்லாதவர்களது தரப்புக்களில் இருந்தும் நியாயங்கள் கணிசமான அளவு வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
- பலஸ்தீன் – இஸ்ரேல் விவகாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் விளைவாக பாலஸ்தீனியர்கள் தான் தவறு செய்திருக்கிறார்கள் என்று உறுதியாக நம்பிக்கொண்டிருந்த பலர் தமது கருத்தை மாற்றியிருப்பதாக தெரிகிறது. (மதவெறி மற்றும் சுயநலம் கொண்டவர்கள் எப்படியும் மாறமாட்டார்கள்)
- பாலஸ்தீன விடுதலைக்காக உழைத்துக் கொண்டிருந்த பல அமைப்புக்கள் தமக்கிடையே பிரிந்திருந்தார்கள். இதனால் காட்டிக் கொடுப்புக்கள் நடந்தன.தற்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருவது தெரிகிறது. ஐக்கிய நாடுகள் சபைக்கான பாலஸ்தீன விடுதலை இயக்கப் பிரதிநிதியின் தொலைக்காட்சிப் பேட்டியில் அவர் அமைப்புக்களை குறைகூறாமல் இஸ்ரவேல் செய்த குற்றங்களை மட்டும் முன்வைத்தமை இதற்கு நல்ல ஆதாரமாகும்.
- பாலஸ்தீன விவகாரம் தொடர்பாக எதிர்த்தரப்பு மீடியாக்களில் முன்வைக்கப்படும் பொய்கள் அம்பலத்துக்கு வருகின்றன. குறிப்பாக கைதிகளை பாலஸ்தீனர்கள் கையாளும் விடயம் தொடர்பில் புனையப்பட்ட செய்தி பொய் என நிருபணமாகிவிட்டது.
இப்படியாக பல நல்ல பக்கங்கள் உள்ளன.
தற்போதைய நிகழ்வுகளுக்குள் வல்லவன் அல்லாஹ் பல சார்பான அம்சங்களை உள்ளடக்கி வைத்திருக்கலாம்.
அல்லாஹ் குர்ஆனில்:-
“நீங்கள் ஒரு விடயத்தை வெறுக்கலாம்.(அது உங்களுக்கு பாதகமானதாக நினைக்கலாம்) அது உங்களுக்கு நலவாக இருக்கும். நீங்கள் ஒரு விவகாரத்தை விரும்பலாம்.அது உங்களுக்கு தீங்காக இருக்கலாம்”
என்று கூறுவதற்கு இந்த நிகழ்வுகளும் சான்றாகும்.
யாவற்றையும் அறிந்தவன் அல்லாஹ் மாத்திரமே.
அல்லாஹ் சத்தியத்தை வெல்ல வைப்பானாக!