வெற்றி எது? தோல்வி எது?

இஸ்லாத்தை கொள்கையாக ஏற்காதவர்கள் வெற்றிக்கு அல்லது தோல்விக்கு கொடுக்கும் வரைவிலக்கணங்களை விட அல்லாஹ் அவை இரண்டுக்கும் கொடுக்கும் வரைவிலக்கணம் மிக மிக வித்தியாசமானது.

பாலஸ்தீன விவகாரத்தையும் அல்லாஹ் கூறும் விதமாகவே முஃமின்கள் பார்க்க வேண்டும். சில போது அங்கு இடம்பெறும் பேரழிவுகள் இழப்புக்களைப் பார்ப்போர் விரக்தியடைவதற்கும் அவநம்பிக்கையில் இருப்பதற்கும் இந்த ஈமானியப் பார்வை இல்லாதிருப்பது காரணமாகும்.

இஸ்லாமிய நோக்கில் வெற்றி என்பது எதிர்த்தரப்பினரது நாடுகளை பிடிப்பதும் அவர்கள் மீது மேலாண்மை ஏற்படுவதும் மட்டும் தான் என நினைப்பது தவறாகும். அதுவும் வெற்றி தான்.ஆனால் இது சட உலகில் கிடைக்கும் வெற்றியாகும்.

சில போது சட உலகில் இத்தகைய வெற்றிகள் கிட்டாதவர்களும் வெற்றியாளர்களாக அல்லாஹ்வின் அருளுக்குப் பாத்திரமானவர்களாக இஸ்லாமிய நோக்கில் கருதப்படுவார்கள்.

அவர்கள் யார்?

அல்லாஹ்வின் மீது அசையாத நம்பிக்கை வைத்து அவனது மார்க்கத்தை அச்சொட்டாகப் பின்பற்றி அதன் உயர்ச்சிக்காக உயர்ந்த தியாகங்களை செய்திருப்பார்கள்.ஆனால் நாம் மேலே சொன்ன உலக அடைவுகளை சில போது காண்பார்கள்.சில போது காணமாட்டார்கள்.

சிலபோது உலகிலுள்ள பலர் அவர்களை எதிர்ப்பார்கள். இன்னும் சில போது பலரால் அவர்கள் வஞ்சிக்கப்படுவார்கள். தவறாக சித்தரிக்கப்படுவார்கள். தோல்விக்கு மேல் தோல்விகளை சந்திப்பார்கள். ஆனால் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் ஜெயித்தவர்கள். சுவர்க்கவாதிகள். அவர்களது இக்லாஸிற்கும் முயற்சிக்குமே அல்லாஹ்வின் திருப்தியும் கூலியும் கிடைக்கும்.

அல்லாஹ் அல்குர்ஆனில் முஃபலிஹுன் (ஜெயம் பெற்றவர்கள்) என்று எங்கெல்லாம் கூறுகிறானோ அந்த வசனங்களில் இதற்கான விளக்கம் உள்ளது. காஸிரூன் (நஷ்டமடைந்தவர்கள்) என்று அவன் கூறுகின்ற வசனங்களை நாம் ஆழ்ந்து சிந்தித்தால் தோல்விக்கான சரியான ஈமானிய பார்வை அங்கு வரும்.

சடரீதியான பார்வையை நாம் முற்றாக தவிர்த்து ஈமானிய பார்வையில் உலக நடப்புகளை பார்க்க வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top