ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் குத்பாவுக்கான சில குறிப்புகள்:-

தொடர்வது:- நோன்பு காலத்தில் பெற்ற பயிற்சிகளை அடுத்து வரும் காலங்களிலும் நடைமுறைப்படுத்தத் தூண்டுவது. இரவு நேர வணக்கம், குர்ஆன் திலாவத், முன்,பின் சுன்னத்கள், தானதர்மங்கள் போன்றன தொடர வேண்டும்.

தவிர்ப்பது:- ரமழானில் சினிமா பார்த்தல், கோள் ,புறம், சண்டை சச்சரவுகள் போன்ற பாவங்களிலிருந்து தூரமாகி இருந்தது போலவை எதிர்வரும் காலங்களிலும் அதேபோன்று தூய்மையோடு இருக்க அதிகூடிய முயற்சி எடுக்கக் கூறுவது.

கெட்ட பழக்கவழக்கங்கள்:- புகைபிடித்தல், வெற்றிலை போடுதல் மூக்குத் தூள் போன்ற உடலுக்கு பாதிப்பான கருமங்களில் ரமழானில் தவிர்ந்து இருந்தது போன்றே எதிர்காலத்திலும் தவிர்ந்திருக்க கூறுதல்.

உரிமைப் பாதுகாப்பு:- அல்லாஹ்வின் உரிமைகளில் பொடுபோக்காக இருந்தமைக்காக தெளபா கேட்டிருக்கலாம். அடியார்களின் உரிமைகளின் மீதான அத்துமீறலுக்காக அவர்களிடம் இருந்து விடுதலையடைந்திருக்கலாம். எதிர்காலத்தில் இவ்விரு பாவங்களிலிருந்தும் முற்று முழுதாக தவிர்ந்து இருக்கும்படி வலியுறுத்துவது.

முஸ்லிம்களது பெருநாள் தனித்துவமானது:- மது, சூது, வன்முறைகள், தொந்தரவு செய்தல், வீண்விரயம், அளவு மீறிய உணவு, அனாவசியமான பயணங்கள் என்பவற்றை தவிர்க்கும்படி வலியுறுத்தும் அதேநேரம் அனுமதிக்கப்பட்ட விளையாட்டுக்களில் விடுபட ஊக்குவிப்பது.

ஊக்குவிப்பு:- பெற்றார்,உற்றார், உறவினர்கள் நண்பர்கள், ஏழைகள், அயலவர்கள் ஆகியோரது வீடுகளுக்குச் சென்று சேமம் விசாரித்து உதவிகளைச் செய்வது. நேரடியாக போக முடியாத போது தொலைபேசியிலாவது உரையாடி உறவை புதுப்பித்துக் கொள்வது என்பவற்றை வலியுறுத்தல்.

பொருளாதார நெருக்கடி:-

நாம் இருக்கும் காலம் பொருளாதார நெருக்கடிமிக்கதாக இருப்பதனால் அதனை எதிர்கொள்வதற்கு குத்பாவில் பின்வரும் விடயங்கள் வலியுறுத்தப்பட வேண்டும்.

1.சுயமுயற்சி:- சொந்தக் காலில் நிற்பதற்கும் முடிந்த வரை தொழில்களில் குறிப்பாக சிறுகைத்தொழில்கள், வீட்டுத்தோட்டம்,வியாபாரம் செய்வதற்கும் வலியுறுத்தப்பட வேண்டும்.யாசகம் கேட்பதை இயன்றவரை தவிர்க்கக் கூறுவது. யாசகம் கேட்பவர் மறுமையில் முகத்தில் சதைகள் இல்லாமல் வருவார் என்ற ஹதீஸை வலியுறுத்துவது.

  1. சிக்கனம்:- பணபலமிக்கவர்களும் ஏனையோரும் ஊதாரித்தனம், வீண் விரையம் என்பன இக்காலத்தில் பெரும் குற்றங்களாகவே கணிக்கப்பட முடியும்.(ஊதாரித்தனம் பற்றிய குர்ஆன் வசனங்களை நினைவூட்டலாம்)
  2. சேமிப்பு:- எதிர்கால நலன் கருதி யூசுப் (அலை) அவர்கள் எகிப்து நாட்டில் கடைப்பிடித்த அதே ஒழுங்கு பற்றி வலியுறுத்துவது.
  3. ஸகாத்திற்கு மேலதிகமாக:- தனவந்தர்கள் ஸகாத்தை கொடுத்த பின்னரும் சமூகத்தில் தேவைகள் இருப்பின் மேலதிகமான தர்மங்களை செய்யும்படி அவர்களை ஊக்குவிப்பது.(ஸகாத்தை தவிரவும் சொத்துக்களில் கடமைகள் உள்ளன என்ற ஹதீஸ்) அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதால் ஏற்படுகின்ற உலக மறுமைப் பயன்கள் பற்றி ஓரிரு ஆதாரங்களுடன் வலியுறுத்துவது.
  4. தற்காலிக உரித்து:- சொத்து செல்வங்களும் பணமும் அல்லாஹ் தந்த அருட்கொடைகள், அமானிதங்கள். எமது கைகளில் உள்ள சொத்துக்களுக்கு நாம் தற்காலிக பொறுப்புதாரிகள், காவலாளிகள் மாத்திரமே.
  5. உலோபித்தனம்:- கஞ்சத்தனம், ஏகபோக உரிமை கொண்டாடுவது என்பன நெருக்கடியான காலத்தில் முறையல்ல என்பதை வலியுறுத்துவது. (கஞ்சத்தனம் பற்றிய குர்ஆன் ஹதீஸ் வசனங்கள்) ரமலான் காலத்தில் நபியவர்கள் வேகமாக வீசும் காற்றைப் போன்று தர்மம் செய்ததையும் ஞாபகம் முட்டுவது

ஃபித்யா: – ரமழானில் நோன்பு பிடிப்பதற்கு முடியாது போன நிரந்தர நோயாளிகள் வயது கூடிய பலஹீனமான முதியவர்கள் ஆகியோரும் விடுபட்ட ஒரு நாளுக்கு நகரமாக ஓர் ஏழைக்கு உணவு வழங்குவது கடமை என்பதை ஞாபகமூட்டுவது.

களா நோன்பு:- நோன்பு காலத்தில் நோன்பு அனுஷ்டிக்க முடியாத நிலையிலிருந்த பெண்கள் நோயாளிகள் பிரயாணிகள் ஆரோ ஆகியோர் கூடிய விரைவில் அவற்றை களா செய்யும்படி வலியுறுத்துவது.

ஷவ்வால் மாத ஆறு நோன்பு களையும் பற்றி வலியுறுத்துவது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top