அஷ்ஷைக் பளீல்
அவர்களது திறமை, ஞாபக சக்தி, ஏலவே பாடத்திட்டத்தை இயன்றவரை அதிகமாக பூர்த்தி செய்திருத்தல் என்பன அவசியமாகும்.
ஆனால் இந்த மாணவ மாணவியர்களது பெறுபேறுகள் சிறப்பாக வர வேண்டுமாயின் இவற்றுடன் சேர்த்து மிகமுக்கியமாக,
#வீட்டு சூழலின்
ஒத்துழைப்பு மிக முக்கியமானதாகும்.
பிள்ளை தனது பரிட்சையை திருப்திகரமாக, முழுமனதோடு எழுதுவதற்கு தடையாக இருக்கும் எல்லா அம்சங்களையும் அகற்றி பிள்ளையின் பாதையை சீர்செய்து கொடுப்பது பெற்றோரின் பொறுப்பாகும்.(உணவு, போக்குவரத்து, பாதுகாப்பு, ஓய்வு, பாடமீட்டலுக்கும் ஓய்வுக்குமான பொருத்தமான இடம்)
வீட்டுச்சூழல் கலைப்பான்கள் இல்லாததாக இருத்தல் வேண்டும். (தொலைக்காட்சி வானொலி போன்ற ஊடகங்களது சத்தங்கள் சிறு பிள்ளைகளது கூக்குரல்கள்)
தாய்க்கும் தகப்பனுக்கும் இடையிலான, குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கு இடையிலான உறவுகள் அன்னியோன்யமாக இருத்தல் வேண்டும். சண்டை சச்சரவு இருக்கும் வீட்டில் பிள்ளை எரிச்சலோடு தான் இருக்கும். அது படிக்கமாட்டாது.
வீட்டில் இருப்போர் பிள்ளைக்கு உற்சாகமான தைரியமான வார்த்தைகளையே பேச வேண்டும்
பிள்ளை ஒவ்வொரு பாடத்தையும் எழுதிவிட்டு வந்தவுடன் வீட்டில் இருப்போர் வினாப் பத்திரத்தை கையிலெடுத்து அவற்றில் இருக்கும் பகுதிகளை ஆராய்ச்சி செய்யக் கூடாது. அது அடுத்த நாள் பாடத்துக்கு பிள்ளையை தயாராவதற்கு பெரும் தடையாக அமையும்.
இன்ஷா அல்லாஹ் உங்களால் முடியும்!
நீங்கள் படித்திருப்பது தாராளமாகப் போதும்!
நீங்கள் மிகச் சரியாகத்தான் விடைகளை எழுதி இருப்பீர்கள்!
உங்களது உச்ச முயற்சி இருந்தால் நிச்சயமாக அல்லாஹ் கைவிடமாட்டான்!
உங்களுக்கு எந்த பெறுபேறு வந்தாலும் நாங்கள் அதனை திருப்தியுடன் ஏற்றுக்கொள்வோம். அதுதான் அல்லாஹ்வுடைய நாட்டம் என்ற வகையில்.
போன்ற சொற்கள் தான் பிள்ளைகளது காதில் கேட்க வேண்டும்.
எமது கூடியபட்ச முயற்சி + அல்லாஹ்வின் நாட்டம் இரண்டும் இணைகின்ற போது அவன் நாடிய பெறுபேறுகளைத் தருவான். அவற்றை நாம் முழுமனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
யா அல்லாஹ்! பரீட்சை எழுதும் மாணவ மாணவியர்களுக்கு தைரியத்தையும் நல்ல பெறுபேறுகளையும் கொடுப்பாயாக!




