முன்னைய காலங்களில் முஸ்லிம்களது படையெடுப்புக்கள் புனிதமான இலக்குகளைக் கொண்டிருந்தன என்பதற்கு பின்வரும் சம்பவம் நல்ல உதாரணமாகும்.
பிரான்ஸில் அப்துர் ரஹ்மான் காபிகீயின் தலைமையில் நகர்ந்து கொண்டிருந்த இஸ்லாமிய சேனையை தற்போதைய பிரான்ஸின் வட பகுதியில் இருந்த அகுய்டைன் எனும் பகுதியில் கிறிஸ்தவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அங்கு இடம்பெற்ற யுத்தம் Battle of Tours எனப்பட்டது. அதில் எதிரிப்படையினர் இஸ்லாமிய சேனையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொலை செய்தார்கள். கி.பி.732 ல் ரமழான் மாதத்தில் நடந்த இப்போராட்டத்தில் ஷஹீதாக்கப்பட்டவர்களது ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு ’பிலாதுஷ் ஷுஹதா’ (ஷஹீதுகளது ராஜபாட்டை) Battle of the Highway of the Martyrs என்று பெயரிடப்பட்டது.
அவர்களது மண்ணறைகளிலிருந்து இரவில் பாங்கோசை கேட்பதாக அப்பிரதேசத்தவர்கள் கூறியதாக இப்னு ஹய்யான் எனும் வரலாற்றாசிரியர் கூறுகிறார். ‘அல்லாஹ் மிகப்பெரியவன்’, ‘அல்லாஹ் மிகப்பெரியவன் என்ற வாசகங்களை பாங்கு கொண்டிருக்கிறது. “அந்த மண்ணறைகளில் இருந்து யுத்தத்ததுக்கு அழைக்கும் மேளச் சத்தங்களையோ வாள்வீச்சு சத்தங்களையோ யுத்தம் செய்வோரது கூச்சல்களையோ அப்பிரதேசத்தவர்கள் கேட்கவில்லை. ஆனால் அவர்கள் ஏகத்துவத்தினதும் ஈமானினதும் தொழுகையினதும் வாழ்க்கையில் வெற்றியினதும் கோஷத்தையே காதுகளால் கேட்டார்கள்” என அஷ்ஷைக் கஸ்ஸாலீ அவர்கள் தனது ‘மஅல்லாஹ்’ எனும் நூலில் மிகவும் காத்திரமான ஒரு கருத்தை சொல்லுகிறார்கள்.
ஆனால், காலனித்துவவாதிகள் எந்த எந்த நாடுகளுக்கெல்லாம் சென்றார்களோ அங்கு அவர்கள் போராடி இறந்த பொழுது அவ்வப்பிரதேசங்களில் அவர்களது பூத உடல்கள் அடக்கப்பட்டன. எனவே, “அவர்களது மயானங்களில் இருந்து ‘தங்கம், தங்கம், பெட்ரோல்,பெட்ரோல், சுரடண்டல், சுரண்டல் ‘ என்ற கூக்குரல்கள் தான் வெளிவரும்” என்று அஷ்ஷைக் கஸ்ஸாலீ சொல்லுகிறார்கள்.(நூல்;மஅல்லாஹ்,பக்:163)
எனவேதான் காலனித்துவ வாதிகள் பிற நாடுகளை ஆக்கிரமித்தமைக்கு பிரதானமான தங்கம், கொஸ்பல்,மகிமை ஆகிய மூன்று தூண்ட காரணிகள் பின்னணியில் இருந்ததாக கூறி Louis B wright எனும் எழுத்தாளர் GOLD GLORY AND GOSPEL எனும் நூலை எழுதியிருக்கிறார்.
A lively, colorful account of the adventures of Spanish, Portuguese, and English explorers emphasizes their diverse and seemingly contradictory motives.




