வெறுப்பூட்டும் பேச்சுக்களை எதிர்கொள்வதும் இணக்கப்பாடான பன்மைத்துவ சமூகத்தை கட்டி எழுப்புவதும்

‘வெறுப்பூட்டும் பேச்சுக்களை எதிர்கொள்வதும் இணக்கப்பாடான பன்மைத்துவ சமூகத்தை கட்டி எழுப்புவதும்’

எனும் மகுடத்தில் நேற்றும் இன்றும் கொழும்பில் நடைபெற்று முடிந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அதில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முன்னைநாள் கலைத்துறை பீடாதிபதி பேராசிரியர் நவரத்ன பண்டா, சட்டத்தரணியும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான பிரபோத ரத்னாயக,பிபிலியானே மஹானாம தேரர், அஷ்ஷைக் முனீர் முளப்பர்,வேலன் சுவாமிகள்,அருட் தந்தை அனுர பெரேரா ஆகியோரும் வளவாளர்களாக கலந்து சிறப்பித்தனர்.

மிகவுமே பயன்மிக்க தகவல்கள் பரிமாறப்பட்டன.

சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, சமாதான சகவாழ்வு என்பவற்றுக்காக சர்வதேச ரீதியாக பல நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும் KAICIID அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.

அதன் இலங்கைப் பிரதிநிதிகளான அஷ்ஷைக் மிஹ்ரார், சகோ.நிஷாந்த ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top