அஷ்ஷைக் பளீல்
தற்காலத்தில் முஸ்லிம் ஊர்களிலும் கூட போதைப் பொருட்களது பாவனை அதிகரித்து வருவது யாம் அறிந்த உண்மையாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் நாம் முஸ்லிம்கள் என்ற வகையில் இந்த விடயத்தைக் கையாள்வதற்கு இஸ்லாம் அழகான வழிமுறைகளை கற்றுத் தந்திருக்கிறது. அந்தவகையில் நடைமுறைச் சாத்தியமான சில ஏற்பாடுகளை நாம் இங்கு நோக்க முடியும்.
- ஈமானிய பக்குவத்தை அனைவரிடமும் ஆழமாக ஏற்படுத்துவது.
- சமூக சூழலை தீமையை எதிர்ப்பதாகவும் நன்மைகளை போஷிப்பதாகவும் மாற்றுவது.
- வீட்டு சூழலை இஸ்லாமிய பயன்படுத்துவது.
- கல்விக்கான ஊக்குவிப்புக்கள்.
- சமூக முக்கியஸ்த்தர்களும் பெற்றோரும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருப்பது.
- இளைஞர்களது உடற்தேவைக்கும் மனநிலை வளர்ச்சிக்கும் ஏற்ப ஓய்வு நேரத்தை உரிய முறையில் கழிப்பதற்கான ஏற்பாடுகளை ஊர் பெற்றிருப்பது.(பொருத்தமான விளையாட்டுக்களுக்கான மைதானங்கள், உடற்பயிற்சிகாகான ஏற்பாடுகள், நல்லதொரு வாசிகசாலை போன்றன)
- ஊரிலுள்ள இளைஞர்களுடன் உலமாக்கள்,கல்வியாளர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள் நெருக்கமான உறவைப் பேணி வருவது.
- பொலீஸார், பாடசாலை, பள்ளிவாயல் நிர்வாகங்கள் சமூக சேவை தொண்டர் நிறுவனங்கள் உட்பட அனைத்துத் தரப்பினரதும் உதவியைப் பெற்று போதை வஸ்த்துக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவது.
கடைசியாகக் கூறப்பட்டது எவ்வளவு முக்கியமோ அதனை விட ஏற்கனவே கூறப்பட்ட விடயங்கள் முக்கியமானவை.
தீமைகளின் வாயில்களை மூடுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்படும் அதேவேளை அவற்றையும் மீறி அவை நடக்க ஆரம்பித்து விட்டால் தான் அவற்றை சட்டத்தாலும் தண்டனைகளாலும் கட்டுப்படுத்த வேண்டும்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் நன்மைகளை வளர்ப்பதற்கான சூழலை அது முதலில் உருவாக்குகிறது. அதேவேளை தீமைகளது வாயில்களை மூடுகிறது. அதற்குப் பிறகும் கூட தீமைகள் இடம்பெறுமாயின் சமூகத்தின் கட்டுக்கோப்பை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சட்டத்தாலும் தண்டனை களாலும் மக்களை அது நெறிப்படுத்துகிறது.
எனவே எமது ஊர்களிலிருந்து போதைவஸ்தை ஒழிப்பதற்கான முயற்சிகள் ‘நீண்டகால திட்டங்கள்’ ஆகவும் ‘குறுகிய கால திட்டங்கள்’ ஆகவும் இருக்க வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்




