Ash Sheikh S H M Faleel
இந்திய விமானி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை வாழ் முஸ்லிம்கள் சமூக வலைத் தளங்களில் இடும் உணர்ச்சி ததும்பிய குறிப்புக்கள் நல்ல விளைவுகளை ஏற்படுத்துமா?
இந்திய விமானியை பாகிஸ்தான் விடுவித்தமை இஸ்லாமிய அடிப்படையிலும் மனிதாபிமான அடிப்படையிலும் மிகவுமே வரவேற்கப்பட வேண்டியதாகும். அதில் சமயோசிதமும் தூர நோக்கும் உள்ளது என்பதில் சந்தேகமில்லை.
அதேவேளை இந்திய அரசு காஷ்மீர் மக்கள் மீது புரிந்து வரும் அடாவடித்தனங்கள் மிகக் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் ஒரு முஸ்லிம் எப்படிப் போனாலும் நடுநிலையாக சிந்திக்கும் எந்த மதத்தவரும் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள்.
ஆனால், இத்தருத்தில் இன உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான பதிவேற்றங்களை இலங்கை முஸ்லிம்கள் இடும் போது அது ஏற்படுத்தும் பாதக விளைவுகள் யாவை?
வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களுடன் முஸ்லிம்கள் இரண்டரக் கலந்து வாழும் போது முஸ்லிம்களது கடுப்பேற்றும் பதிவுகள் எந்த வடிவத்தை எடுக்கும், எத்தகைய உணர்வலைகளை ஏற்படுத்தும் என்பதை ஊகிக்கலாம்.
தமிழ் சகோதரர்கள் Facebook ல் இடும் பின்னூட்டங்களைப் பார்த்தால் இதனைப் புரிய முடியும்.
வீரவசனங்கள் பேசும் போது சுற்றும் முற்றும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அடுத்த முக்கிய விஷயம் என்னவெனில், பாகிஸ்தானை விட இந்தியாவில் தான் முஸ்லிம்கள் அதிகம் வாழுகிறார்கள்.
நாம் இங்கிரூந்து தாறுமாறாக எழுதுவோம் . ஆனால் அவர்கள் தான் வாங்கிக் கட்டுவார்கள்.எதனையும் எழுலாம் என்பதை விட நல்ல பலன்களைத் தரும் பதிவுகளுக்கே முன்னுரிமை கொடுப்போமாக!
எனவே, இம்ரானின் முடிவை மெச்சுவோம்.ஆனால், அதனை மற்றவர்களுடன் ஒப்பிடுவதைத் தவிர்ப்போம்.
அடுத்த தேர்தலை இலக்காகக் கொள்ளாத அரசியல்வாதிகளைக் கண்டுபிடிப்பது கஷ்ட்டம்.காஷ்மீர் மக்களை பகடைக் காய்களாகக் கொண்டு அரசியல் நடாத்துவோர் இரு நாடுகளிலும் இருக்கிறார்கள்.
இம்ரானின் இம்முடிவுக்காக நாம் அவரைப் புகழ்ந்து தான் அவருக்கு புகழ் வந்து சேரவேண்டும் என்பதல்ல.
அது போன்ற நல்ல முடிவுகளை அவர் தொடர்ந்தும் எடுத்து முஸ்லிம்களை மட்டுமல்ல யாவரரையும் பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ள அல்லாஹ் அவருக்கு அருள்பாலிப்பானாக!



