அஷ்ஷெய்க் எஸ்.எம்.ஃபளீல்(நளீமி)
சிரியாவில் அம்பாரையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றியது
தண்டனை-சோதனை பற்றிய இஸ்லாமிய பார்வை:
தண்டனை என்றால் என்ன?
பாவங்களில் சம்பத்தப்பட்டால் அல்லது வெற்றிக்கான நிபந்தனைகளை பூர்த்திசெய்யாமல் இருந்தால்
அல்லாஹ்வின் புறத்தில் இருந்து நேரடியாக வருவது தான் தண்டனை.
சோதனை என்றால் என்ன?
உண்மை விசுவாசிகளாக வாழ்ந்தால் அதாவது இஸ்லாத்தை உரிய முறையில் பின்பற்றி ஒழுகினால் வருவது தான் சோதனை.
தண்டனை இரண்டு வகையில் அமையும்:
1.அல்லாஹ் நேரடியாக இறக்கும் தண்டணை. ஆது,தமூது, பிரஅவ்னிய கூட்டங்களுக்கு இறக்கப்பட்ட தண்டனைகள் இதற்கு உதாரணங்களாகும்.
2.எதிரிகளது கைகளால் முஸ்லிம்களுக்கு வரும் தண்டணை.
உஹதில் தலைமைத்துவத்துக்குக் கட்டுப்பாடின்மை, கனீமத் பொருட்கள் சேகரிப்பதில் விருப்பம் காட்டியமை போன்றவற்றால் 70 முஸ்லிம்கள் ஷஹீதாக்கப்பட்டனர். 70 பேர் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
அப்போது “நீங்கள் (நபியிடம்)இது(இந்த தோல்வி)எங்கிருந்து வந்தது என்று கேட்டீர்கள். ‘அது உங்களிடமிருந்தே வந்தது’என்று (நபியே) நீங்கள் கூறுங்கள்”. قلتم انى هذا? قل هو من عند انفسكم என்று அல்லாஹ் அந்த கேள்வி கேட்ட முஸ்லிம்களுக்குக் கூறும்படி தனது நபிக்கு கூறினான்.
சோதனை இரண்டு வகையில் அமையும்:
1.அல்லாஹ் அடியார்களின் ஈமானைப் பரிசோதிப்பதற்காகவும் அவர்களது அந்தஸ்த்துக்களை உயர்த்துவதற்காகவும் தருவது. இதில் அவன் நேரடியாகவே சம்பந்தப்படுவான்.
ஐயூப் (அலை)அவர்களுக்கு ஏற்பட்ட நோய்,
யூசுப்(அலை)அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள்.
இஸ்லாமிய பிரசாரத்தின் உச்சக் கட்டத்தில் கதீஜா(ரலி),அபூதாலிப் ஆகியோர் மரணமடைந்தமை,
மகன் இப்ராஹீமின் மறைவு.
2.இஸ்லாத்தின் எழுச்சியையும் வளர்ச்சியையும் காணும் இஸ்லாத்தின் எதிரிகள் போறாமைப்பட்டு காழ்ப்புணர்ச்சி கொண்டு கட்டவிழ்த்துவிடும் அட்டூளியங்களும்,அவர்கள் ஏற்படுத்தும் முட்டுக்கட்டைகளும்.இதில் எதிரிகள் நேரடியாக சம்பந்தப்படுவார்கள்.இது இஸ்லாமிய பிரசாரத்தினதும் பணியினதும் இயல்பான நிலையாகும். அது அல்லாஹ்வின் நியதியுமாகும்.இத்தகைய சோதனைகளினூடாகவே வெற்றி வர வேண்டும் என்பது அவனது ஏற்பாடகும்.புடம்போடும் நடவடிக்கையாக அமையும்.
وَتِلْكَ الْاَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِۚ وَلِيَـعْلَمَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَآءَ
இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்; இதற்குக் காரணம், ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்;
أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين
“நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா? நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் – ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான்.”(29:2,3)
இப்ராஹீம் (அலை) நெருப்பில் எறியப்பட்டமை
குர்ஆனில் வரும் அஸ்ஹாபுல் உஹ்தூத் (கிடங்குச்)சம்பவம்
ஹப்பாப் இப்னுல் அரத்(ரலி) அவர்களுக்கான நபிகளாரின் பதில்
மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் போக நேர்ந்தமை
பத்ரில் 13 பேர் ஷஹீத்கள்
ரஉல் தக்வான் சம்பவத்தில் 80 ஹாஃபிழ்கள் கொல்லப்பட்டமை
இஸ்லாம் வளர்ச்சியடைந்து அதற்கு செல்வாக்குக் கிடைத்து விட்டால் இஸ்லாத்தின் எதிரிகளது பொருளாதார,அரசியல் நலன்களுக்கு அதனால் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று அவர்கள் கருதும் போது இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய பிழையான கர்த்துக்களை பரப்ப ஆரம்பிப்பார்கள்.
لَتُبْلَوُنَّ فِي أَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا أَذًى كَثِيرًا وَإِنْ تَصْبِرُوا وَتَتَّقُوا فَإِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ (186)
“(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.”(3:186)
இந்த வகையில் இஸ்லாமிய எழுச்சியை கண்டு சகிக்காத பொறாமை உணர்வுள்ளவர்கள் தம்மாலாலான சகல உத்திகளையும் பயன்படுத்தி அதனை அழிக்க முயற்சிப்பார்கள்.
முஸ்லிம்கள் வெற்றிகான நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் போது மட்டுமே அந்த வெற்றி வரும்.அதாவது அவர்கள் தம்மாலான சகல முயற்சிகளிலும் இறங்க வேண்டும்.
அவை வருமாறு:
1.ஆழமான ஈமான்
وَلَا تَهِنُوْا وَ لَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
3:139. “எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.”
எனவே, ஆழமான ஈமான் இல்லாத சமூகம் தைரியத்தை இழக்கும்;கவலைகளை சந்திக்கும்.
- சமூக ஒற்றுமை:
وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَه وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ وَاصْبِرُوْا اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَۚ
8:46. இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் – நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் – நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
எனவே,சமூகத்தில் பிளவுகளும் பிரிவினைகளும் அதிகரிக்கும் போது அந்த சமூகம் பலமிழந்து பிற சமூகங்களிடம் மதிப்பிழந்து போய்விடும். முஸ்லிம்கள் சக முஸ்லிம்களுடன் சகோதரத்துவ வாஞையுடன் நடக்காதிருப்பது தோல்விக்கான காரணமாக அமையும்.
3.ஆக்கபூர்வமான செயல்பாடுகள்:
وَالَّذِيْنَ جَاهَدُوْا فِيْنَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَاِنَّ اللّٰهَ لَمَعَ الْمُحْسِنِيْنَ
29:69.“மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான்.”
எனவே,முயற்சி செய்யாமல் இருப்பவர்களுக்கு முன்னால் எல்லாப் பாதைகளும் அடை பட்டிருக்கும்.கும்மிருட்டில் தத்தளிப்பார்கள்.தியாகம்,திட்டமிடல் என்பன இருக்கும் சமூகத்துக்கு அல்லாஹ் பல வகையான வழிகளையும் திறந்து கொடுப்பான்.
4.அறிவு எனும் பலம்:
يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ
”அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் – அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”
எனவே,அறிவுள்ளவர்களை கொண்ட சமூகத்தை அல்லாஹ் உயர்ந்த இடங்களில் வைப்பான்.அறிவற்ற சமூகம் பின்தங்கியதாகவும் மதிப்பற்றதாகவும் இருக்கும்.
ஆகவே,முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் தாக்கப்படுவதற்கும் நையப்புடைக்கப்படுவதற்கு ஈமான்,ஒற்றுமை,தியாகம் கலந்த முயற்சி,அறிவு போன்ற வெற்றிக்கான நிபந்தனைகளைப் பெறாதிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
துஆ,குனூத்து,நோன்பு என்பன பலனளிக்கும்.அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் இவற்றிலும் ஈடுபட வேண்டும்.
எமது தலையாய கடமைகள்:
1.இஸ்திக்பார்,திக்ர்,தஸ்பீஹ்:
எதிரிகள் எமக்கெதிராக சூழ்ச்சிகளைச் செய்யும் போது நாம் முதலில் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி அவனுடனான எமது உறவைப் பலப்படுத்த வேண்டும்.அதற்கு அது ஒரு பாதுகாப்பு அறணாக அமையும்.அவன் எமக்கு உதவுவான்.
إِنَّ الَّذِينَ يُجَادِلُونَ فِي آيَاتِ اللَّهِ بِغَيْرِ سُلْطَانٍ أَتَاهُمْ إِنْ فِي صُدُورِهِمْ إِلَّا كِبْرٌ مَا هُمْ بِبَالِغِيهِ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ
السَّمِيعُ الْبَصِيرُ
“நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த அல்லாஹ்வுடைய வசனங்களைப்பற்றி எந்த ஆதாரமுமின்றித் தர்க்கம் செய்கின்றார்களோ, அவர்களுடைய இருதயங்களில் பெருமை தவிர (வேறு எதுவும்) இல்லை; ஆனால் அ(ப் பெருமையான)தை அவர்கள் அடையவும் மாட்டார்கள்; ஆகவே (நபியே!) நீர் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக அவன், யாவற்றையும் செவியேற்பவன், பார்ப்பவன்.”(40:56)
فاصبر . إن وعد الله حق . واستغفر لذنبك , وسبح بحمد ربك , بالعشي والإبكار
“ஆயினும், (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக; நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, உறுதியான நம்பிக்கை இல்லாத இவர்கள் உம்மைக் கலக்கமடையச் செய்ய வேண்டாம்.”(30:60)
2.ஒருபோதும் நம்பிக்கை இழக்காதிருப்பது:
يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله الا أن يتم نوره ولو كره الكافرون
9:32. தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
- பெளத்தர்களை பெரும்பான்மையாக்க கொண்ட நாட்டில் நாம் முயற்சிக்கும் போது ,
- பெளத்தர்களிற் சிலர் மேற்கொள்ளும் வன்முறைக்கும் பெளத்த மதத்துக்கும் சம்பந்தம் இல்லை.பெளத்தத்தில் வன்முறைக்கு இடமில்லை.ஐ.எஸ்.. ஐ .எஸ் இற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல்.
- இலங்கை பெளத்தர்கள் எல்லோரும் இதனை ஏற்கவில்லை, சில விஷமிகளைத் தவிர.
- சமூக வலைத் தலங்களில் தகவல்களப் பகிரும் போது மிகுந்த எச்சரிக்கையோடு நடந்துகொள்வது.
- எமது வியாபார நடவடிக்கைகளின் போதும் சமூக உறவுகளின் போதும் இஸ்லாமிய ஒழுக்கங்களை உயர்ந்தபட்சம் கடைப்பிடிப்பது.
- கண்டன அறிக்கைகள், கையொப்ப ஏற்பாடுகள், சட்டநடவடிக்கைகள்,பாராளுமன்றதில் குரலெழுப்புதல் ,ஆக்கங்கள், துஆக்கள் தெளிவான அறிவைப் பெறுவதும் பிறருக்குப் பரப்புவதும் என்பன கட்டாயம் தேவை.
- இலங்கை முஸ்லிம்களையும் பெளத்தர்களையும் சேர்ந்த படித்தவர்கள் இன உறவைப் பாதிக்கும் செயல்பாடுகள் பற்றிய தெளிவை பெறும் நோக்கில் கலந்துரையாடல்களை நடாத்தி நாட்டு மக்களுக்கு உண்மை நிலவரத்தை அறிக்கையாக வெளியிடுவது.
சிரியா விவகாரம் தொடர்பாக நாம் தவிர்க்கவேண்டியவை:
1)முஸ்லிம் நாடுகளது நிலைப்பாடுகளை வைத்து எமக்கு மத்தியில் சண்டைகளை தவிர்ப்பது
2)இதுவரை சிரியா தொடர்பாக வந்துள்ள புகைப்படங்கள் வீடியோக்களை மென்மேலும் அதிமதிகம் பகிர்வதில் மனதில் ஏற்படும் உளவியல் பாதிப்புக்களை கவனத்தில் எடுப்பது.
நாம் உடனடியாக செய்ய வேண்டியவை
1) உண்மை நிலவரத்தை சரியாக விளங்குவது
2) பின்னணிகளை ஆராய்வது
3) துஆச் செய்வது
4) எமக்கோ வேறு யாருக்கோ நடக்காதிருக்க முன்னேட்பாடுகளையும் நீண்டகால திட்டங்களையும் வகுப்பது
5) எப்போதும் நம்பிக்கை இழக்காது எதிர்காலம் இஸ்லாத்திற்கே என நம்புவது.
அல்லாஹ் சத்தியத்துக்கும் சத்தியத்துக்காக உழைப்பவர்களுக்கும் வெற்றியைத் தருவானாக!




