(அண்மைக் காலமாக இடம்பெறும் இனவாத தாக்குதல்களின் போது முஸ்லிம் சமூகம் எப்படி நடந்து கொண்டால் நல்லது என்பது பற்றி குத்பாக்களில் சேர்த்துக் கொள்ள முடியுமான சில குறிப்புக்கள் )
பிறசமூகங்களிடமிருந்து ஏச்சுப் பேச்சுக்களையும் நெருக்குதல்களையும் சந்திக்கின்ற போது ஒரு விசுவாசி தனது உள்ளத்திலும் தான் வாழும் உலகத்திலும் சாந்தி,சமாதானத்தை கண்டு கொள்வதற்கான சில இஸ்லாமிய அணுகுமுறைகள் உள்ளன.அவை குறியகால திட்டங்களாகவும் நீண்டகால திட்டங்களாகவும் அமையும்.
ஆத்மீக அணுகுமுறைகள்:
1.சோதனைகள் அல்லாஹ்வின் ஏற்பாடு எனக் கருதுவது :
இஸ்லாமிய எழிச்சியை சகிக்கமுடியாத இஸ்லாமிய விரோத சக்திகள் இஸ்லாத்தை அழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.இவை வரலாறு நெடுகிலும் இடம்பெற்ற சம்பவங்களின் தொடராகும்.அதனை வைத்து அல்லாஹ் எம்மை சோதிப்பான் .இது சோதனை.
அல்லாஹ்: ”நீங்கள் உங்களது சொத்துக்கள், உயிர்கள் விடயத்தில் நிச்சயமாக சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களிடமிருந்தும் இணை வைத்தவர்களிடமிருந்தும் நிச்சயமாக மனதுக்கு அதிகம் கவலை தரும் தகவல்களை நீங்கள் செவியேற்க நேரிடும்.’ (3:186) எனக் கூறுகிறான்.
2.இத்தகைய சோதனைகளின் போது அல்லாஹ்விடம் உதவியைத் தேடுவது:
”நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி எந்த ஆதாரமுமின்றித் தர்க்கம் செய்கின்றார்களோ அவர்களுடைய இருதயங்களில் பெருமை தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால்அதை அவர்கள் அடையவும்மாட்டார்கள்;. ஆகவே (நபியே!) நீர் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக அவன், யாவற்றையும் செவியேற்பவன், பார்ப்பவன்.” (40:56)
- தண்டனையாக இருக்காலாம்:
நாம் பாவங்களில் சம்பந்தப்பட்டிருந்தால் அதற்காக இறைவனின் தண்டணையாகவும் அல்லாஹ் இத்தகைய சோதனைகளைத் தரக் கூடும்.இது தண்டணை. எனவே, பாவங்களில் இருந்து விலகி தெளபாச் செய்வது.
وَكَأَيِّنْ مِنْ قَرْيَةٍ عَتَتْ عَنْ أَمْرِ رَبِّهَا وَرُسُلِهِ فَحَاسَبْنَاهَا حِسَابًا شَدِيدًا وَعَذَّبْنَاهَا عَذَابًا نُكْرًا . فَذَاقَتْ وَبَالَ أَمْرِهَا وَكَانَ عَاقِبَةُ أَمْرِهَا خُسْرًا -الطلاق:8-9
4.திக்ர், பொறுமை , இஸ்திக்பார் எனும் ஆயுதங்கள்
”ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உமது பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக! மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹ்(துதி) செய்து கொண்டு இருப்பீராக!” (40:55)
5.நன்மையை ஏவி தீமையை தடுக்காமல் இருந்தாலும் நல்லவர்களுக்கும் சேர்த்தே தண்டணை இறங்கலாம்.
والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر، أو ليوشكن الله أن يبعث عليكم عقابًا ثم تدعونه فلا يُستجاب لكم (سنن الترمذي رقم: ٢١٦٩)
5.உபத்திரவம் செய்வோரை நற்குணத்தால் எதிர்கொள்வது
”நன்மையும் தீமையும் சமமாகமாட்டா. நீர்(தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, உமக்கும் யாருக்குமிடையே பகைமை இருந்ததோ,அவர் உற்ற நண்பரைப் போல் ஆகிவிடுவார்.(41:34)
மாற்றத்ததை எம்மிடமிருந்து ஆரம்பிப்போம்!
‘ஏனெனில் எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள (போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில்அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை.” (8:53)
தனிநபர்களதும் சமூகத்தினதும் நடத்தைகளோடு தொடர்பான எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் தேவை.எதிரியின் சூழ்ச்சிகளை முறியடிக்க அவை துணையாக அமையும் .அதாவது சில பலம்களை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
அவையாவன:
1.ஓற்றுமைப் பலம் (ஒற்றுமை இல்லாத சமூகத்தை அல்லாஹ் சோதிப்பான்.)
”இன்னும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் – நீங்கள் பரஸ்பரம் சண்டை சச்சரவில் ஈடுபட்டுக்கொள்ளாதீர்கள்;. அதன் விளைவாக நீங்கள் தோல்வியடைந்துவிடுவீர்கள்;. உங்கள் பலம் குன்றிவிடும்.(8:46)
- அறிவுப் பலம் :(ஈமானுடன் அறிவையும் இணைத்த சமூகத்துக்கே உயர்ச்சி கிட்டும்.)
يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
மார்க்க அறிவுகள் , உலக அறிவுகள் ,விஞ்ஞானம், தொழில்நுட்பம், விவசாயம், மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் முன்னேற வேண்டும்.
- பிறரிடம் கையேந்தி ,அவர்களது தயவில்அடிமைப்பட்டு வாழக்கூடாது.
- ஆய்வு, மீடியாத் துறையில் முக்கிய கவனம் செலுத்துவதும் நல்லதொரு அறிவுப் பின்னணியைக் கொண்டிருப்பதும் அவசியமாகும்.
- பண்பாட்டுப் பலம்
நபி(ஸல்) அவர்களுக்கு ஜாஹிலிய்யா காலத்தில் சாதிக்,அமீன் என்ற பெயர்கள் வைக்கப்பட்டதற்கு காரணம் அவர்களது நற்குணங்களாகும்.
- வியாபார கொடுக்கல் வாங்கல்களில் முஸ்லிம்கள் பொய்,ஏமாற்று என்பவற்றுடன் நடப்பதானது பெரிய சவாலாக உள்ளது.
- வியாபார தலங்கள் –காரியாலயங்கள்-வைத்தியசாலைகள்-பொதுப் போக்குவரத்து சாதனங்களில் பண்பாட்டுடன் நடந்து கொள்வது.
- முஸ்லிம் அல்லாத அயல்வீட்டாருடனும் பல்கலைக் கழகங்களிலும் இஸ்லாமிய ஒழுக்கங்களைப் பேணுவது
- முஸ்லிம் பெண்கள் கடைகளுக்குப் போகும்போதும் வைத்தியர்களிடம் போகும் போதும் ஒழுக்கமாக நடப்பது.
முச்சக்கர வண்டிகளில் ஆண் துணையின்றி பெண்கள் பயணிப்பதை தவிர்ப்பது
- பிறசமூகங்களுக்கான உதவிகளும் நன்கொடைகளும்
‘மார்க்க விடயத்தில் உங்களுக்கெதிராக (ஆயுதம் தூக்கி)ப் போராடாத, உங்களை உங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றாதவர்களுக்கு நீங்கள் உபகாரம் செய்வதனை விட்டும் நீங்கள் அவர்களுடன் நீதியாக நடப்பதை விட்டும் அல்லாஹ் உங்களை தடுக்கமாட்டான்.'(60:8)
- யூத நோயாளியை நபிகளார்(ஸல்) தரிசித்தார்கள்.
- பிறசமயத்தவர்களது மரண வீடுகள் திருமண வைபவங்களுக்கு முஸ்லிம்கள் போகவேண்டும்.
5.பொது விடயங்களில் பரஸ்பரம் ஒத்துழைத்துக்கொள்வது:
- ‘நற்காரியங்களிலும் இறைபக்தியிலும் பரஸ்பரம் ஒத்துழைத்துக்கொள்ளுங்கள்’ (குர்ஆன்)
- சிரமதானம், வைத்தியசாலைகளை புனரமைப்பது , இரத்த தானம் போதை வஸ்துக்களை ஒழிப்பது என்பவற்றில் பங்கெடுப்பது காலத்தின் தேவையாகும்.
- ’ஹில்புல் புழூல்’ இல் நபி(ஸல்)அவர்கள் பங்கெடுத்தார்கள்.
6.நீதி நியாயமாக நடப்பது
(05:02) (05:08)பிறருடன் நாம் பகைமை கொண்டிருந்தாலும் அதற்காக அவர்களுடன் அநீதியாக நடப்பதற்கு அப்பகைமை எம்மை ஒருபோதும் தூண்டலாகாது.
குறிப்பான பொறுப்புக்கள்:
- பெற்றோரது பொறுப்புக்கள்
பிள்ளைகளுக்கு- இளைஞர்களுக்கு வழிகாட்டல்களை வழங்குவது
கல்வி விளையாட்டு பயணங்களின் போது பண்பாடுகளோடு நடக்கும் படி புத்திமதி கூறுவது.
- உலமாக்களது பொறுப்புக்கள்
- பிக்ஹுல் அகல்லிய்யாத் பற்றிய அறிவைப் பெறுவது
- சிறுபான்மையாக வாழும் போது அகீதாவோடு, வழிபாடுகளோடு,சமூக உறவுகளோடு அன்றாட பழக்க வழக்கங்களோடு தொடர்பான பிரச்சினைகள் எழும் போது அவற்றை ‘கரைந்து போகாமல் கலந்து வாழும்” விதத்தில் சிறுபான்மை நாட்டில் எப்படி தீர்ப்பது என ஆராய்வது.
- இஸ்லாமிய பிரசாரத்தை ஆதாரங்கள் சிறந்த வழிமுறைகளோடு மேற்கொள்வது.
- மத உரிமையை மதிப்பது
பிறதெய்வங்களை ஏசுவது கூடாது:-
ولا تسبوا الذين يدعون من دون اللـه فيسبوا اللـه عدوا بغير علم
யுத்தங்களில் யுத்ததர்மம் பேணப்பட்டது.
தேவாலயங்கள் பாதுகாக்கப்பட்டன.
நஜ்ரான் தூதுக்குழுவுக்கு நபி(ஸல்)கொடுத்த கௌரவம்
- குத்பாக்கள் சமாதான சகவாழ்வை அடையும் வழிகள் தனித்துவங்களை பாதுகாப்பது எப்படி? அக்லாக்குகளது முக்கியத்துவம் பற்றியவையாக அமைவது அவசியம்.
- பாடசாலைகள், அஹதிய்யாக்கள்,மக்தப்கள்
காலைக் கூட்டங்கள் மாணவ மன்றங்கள் விசேட விழிப்பூட்டல் நிகழ்வுகள் சகவாழ்வை இலக்காகக் கொண்ட போட்டி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
- பள்ளி நிருவாகிகள்
- குத்பாக்களுக்கு பொருத்தமானவர்களைத் தெரிவு செய்வது
- பள்ளிவாயல்களில் விசேட நிகழ்ச்சிகள்
- பள்ளிவாயல்களது பதிவுகள் இயக்க முரண்பாடுகளை பிற சமுதாயத்தவர்கள் தலையீடு செய்யுமளவுக்கு வளரவிடாதிருத்தல்
- ஒலிபெருக்கிப் பாவனையை ஒழுங்குபடுத்துவது
- பள்ளிகளும் இயக்கங்களும்
சமூகத்தை விழிப்பூட்டுவதும் விசேட நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வது
1.தஃவா அமைப்புகளிடையே பொது வேலைத் திட்மொன்றை அறிமுகம் செய்தல்.
2.வியாபாரிகள் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் இறைச்சிக் கடை வியாபாரிகளுக்கான நிகழ்ச்சிகள்
3.பிற சமுதாயத் தலைவர்களுடனான சந்திப்புக்கள்.
சிங்கள சமுதாய முக்கியஸ்தர்களை இனம்காண்பது, தொடர்புகளை வைத்துக்கொள்வது .இவர்களை சந்திப்பதற்கு பொருத்தமானவர்களை தெரிவு செய்தல்.கருத்துப் பரிமாறலுக்கான சந்தர்பங்களை உருவாக்குதல்
.கலவரங்கள் பதட்டமான நிலைகளின் போது அவர்களைத் தொடர்பு கொள்வது.
சட்டரீதியாக அணுக முயற்சிப்பது கலந்தாலோசனைக்கு முன்னுரிமை வழங்குவது
4.பள்ளியை மையப்படுத்திய நிகழ்வுகள்-
பல்லின விளையாட்டுப் போட்டிகள்
பொது வைபவங்களில் கலந்துகொள்வதும் பிறசமூகத்தவர்களுக்கு அழப்பு விடுப்பதும்.
- சட்டத்தரணிகளும் ஊடகவியலாளர்களும்
முஸ்லிம் சமுதாயத்துக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்கி அதன் நியாயமான உரிமைகளுக்காகப் போராடுவது
சவால்க்ளை முறியடிக்கும் வகையிலும் இஸ்லாமிய பிரசாரத்துக்காகவும் ஊடகத்தை உச்சகட்டமாகப் பயன்படுத்துவது.
தனித்துவம் காப்பது கடமை
முஸ்லிம்களுக்கு மத்தியில் இருதீவிர நிலைங்கள் உள்ளன.சிலர் முஸ்லிம் அல்லாதவர்களில் இருந்து முற்றாக ஒதுங்கி வாழுகிறார்கள்.வேறு சிலர் அவர்களோடு ஓன்றித்து கலந்து கரைந்து போகிறார்கள்.இரண்டுமே தவறாகும்.
ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் ‘கரையாமல் சங்கமிக்காமல் சகவாழ்வு பேணிக்கொள்ள வேண்டும்.
எமது கலாலாசாரம், பண்பாடு, நம்பிக்கை கோட்பாடுகள், வழிபாடுகள். தனித்துவமானவை.
எல்லாவற்றிலும் முடிந்தவரை ஈடுபட்டுவிட்டு அல்லாஹ்விடம் தவக்குல் வைத்து உதவி தேடுவது.
பின்வரும் LINK களில் உள்ள குத்பாக்களிலும் மேலதிக விளக்கங்களைப் பெறலாம்:
https://slhub.com/…/ash…/muslims-communal-situation
https://slhub.com/…/ash…/muslims-present-situation




