http://www.asiantribune.com/node/89747
அஷ் ஷெய்க் பளீல்
19.11.2016
…………………………………………
அமைச்சர் விஜேதாச அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையும் முஸ்லிம் கவுன்ஸிலின் அறிக்கையும் தொடர்பாக….
முஸ்லிம் சமுதாயம் பற்றிய – ஆதாரங்களை அடிப்படையாகக் கொள்ளாத – இத்தகைய குற்றச்சாட்டுக்கள் அவ்வப்போது இவ்வாறு முன்வைக்கப்படுகின்ற போதெல்லாம் இவ்வாறான கண்டண அறிக்கைகள் கட்டாயமாக வெளியிடப்படவேண்டும். இதனைத் தான் சாத்வீகப் போராட்டம். என்போம்.
பின்வரும் வகையில் எமது உரிமைப் போராட்டங்களை அமைத்துக் கொள்ளலாம்:
- கருத்தை கருத்தால் எதிர்கொள்வது,
- ஜனநாயக ரீதியிலான போராட்டத்ததை மேற்கொள்வது,
- பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டும் கண்ணியமான வார்த்தைப் பிரயோகங்களாலும் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது,
- மீடியாக் காரர்கள் தமது முயற்சிகளில் உயந்த பட்சமாக ஈடுபடுவது
- உலாக்களும் புத்திஜீவிகளும் தமது பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றுவது
இத்தகைய முயற்சிகள் இடம்பெறாமலில்லை. ஆனால், அவை மிகவுமே மந்த கதியிலும் மிகப் பலவீனமான நிலையிலும் இருக்கின்றன.
பொறுப்பான இடங்களில் இருப்பவர்கள் இதுபோன்ற பணிகளில் ஈடுபடாத போது முஸ்லிம் சமுதாயத்தில் தீவிரமாகச் சிந்திப்பவர்கள் உருவாகத்தான் செய்வார்கள்.எமது சமூகத்தை சரியான பாதையில் இட்டுச் செல்லவேண்டுமாயின் ஒவ்வொருவரும் தமது பணிகளை அமானிதங்களாகக் கருதி நிறைவேற்றுவது அவசியமாகும். அல்லாஹ் எமக்கு நேர்வழி காட்டி எம்மைப் பாதுகாப்பானாக!
ما مِنْ عَبْدٍ يَسْتَرْعِيهِ اللَّهُ رَعِيَّةً يَمُوتُ يَوْمَ يَمُوتُ وَهُوَ غَاشٌّ لِرَعِيَّتِهِ إِلَّا حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ
صحيح مسلم – 203
“எந்த ஓர் அடியானை அல்லாஹ் ஒரு சமூகத்தின் பொறுப்பாளனாக நியமித்து, அவ்வடியான் இறக்கும் நாளில் அந்த சமூகத்தை ஏமாற்றிவிட்டு இறந்தால் அவனுக்கு அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்குவான்.”
(ஹதீஸ்)
لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ يُرْفَعُ لَهُ بِقَدْرِ غَدْرِهِ أَلَا وَلَا غَادِرَ أَعْظَمُ غَدْرًا مِنْ أَمِيرِ عَامَّةٍ- (صحيح مسلم)
‘(மறுமை நாளில்) ஒவ்வொரு துரோகியினது பின்புறத்திலும் ஒரு கொடி உயரமாக நாட்டப்படும். அவனது துரோகத்தின் அளவுக்கு அது உயர்த்தப்படும். பொது மக்களது தலைவனாக இருந்து ஏமாற்றுபவனைத் தவிர பெரிய ஏமாற்றுக்காரன் வேறுயாருமில்லை.’ (ஹதீஸ் – ஸஹீஹ் முஸ்லிம்)




