மனித உருவில் நடமாடும் மிருகங்கள் புரிந்த பாதகச் செயல்கள் ஜெஃப்ரியின் பைல்கள் மூலம் தெரிய வந்துள்ளன.
சிறுமியரை கடத்திச் சென்று அந்த பிஞ்சுகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி அதன் பின் அவர்களை கொலை செய்து அதற்கும் அப்பால் சென்று கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அவர்களது மாமிசத்தை புசிக்க ஏற்பாடுகளைச் செய்தவர்களும் அப்பாதச் செயல்களில் ஈடுபட்டவர்களும் மனித உருவில் நடமாடும் மிருகங்களது மொத்த உருவமேயாகும். இவர்களை எப்படி வர்ணிப்பது?
உலகின் ஆட்சியாளர்கள் பணக்காரர்கள் மற்றும் பிரபலங்களை தனது கொள்கைக்குள் சிக்கவைப்பதற்கு அந்த ஜெஃப்ரி என்ற மிருகம் இவ்வளவு பெரிய ஆட்டத்தை அரங்கேற்றியிருக்கிறது!!!
அதற்குத் தான் மனசாட்சி இல்லை என்றாலும் அந்த வலையில் சிக்கிக்கொண்டவர்கள் எவ்வளவு மோசமானவர்கள்! இவர்கள் மனம் கல்லாகி, இறுகி, வரண்டுபோனவர்கள்.
இத்தகையவர்களுக்கு மனசாட்சியே இல்லை. உலக வளங்களைச் சுரண்டி தமது கீழ்த்தரமான ஆசைகளை அடைந்து கொள்வதற்கு குழந்தைகள் பெண்கள், வயோதிபர்கள், அனாதைகளைக் கூட கொலை செய்வதற்கும் இவர்கள் கொஞ்சமும் தயங்குவதில்லை.பாலஸ்தீனில் இது வரை 20,000 ற்கும் அதிகமான சிறுவர்கள் படுமோசமாக கொலைசெய்யப்படுவதற்கு https://www.google.com/search… இந்த உணர்வு தான் காரணமாகும்.
பொதுவாக இதுபோன்ற சுயநலமிகள் ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளை வைத்திருப்பார்கள்.நாடுகளுக்கிடையில் யுத்தங்களை தூண்டுவார்கள். இனங்களை மோதவிடுவார்கள். தமது கீழ்த்தரமான அற்பமான ஆசைகளுக்காக மட்டுமே இதனை அவர்கள் செய்வார்கள். பாலியல் ஆசை, பதவியின் மீதான மோகம், புகழை அடைய வேண்டும் என்ற விருப்பம் சொத்துக்களை அடைய வேண்டும் என்ற மோகம் என்பவை மட்டுமே இவர்களது இலக்குகளாக இருக்கும்.இவர்களை விடவும் மனித சமுதாயத்தின் துரோகிகள் யாராக இருக்க முடியும்?
ஃபிர்அவ்ன் தனது ஆட்சியை எதிர்காலத்திலே ஓர் ஆண் கைப்பற்றி விடுவார் என்று ஜோதிடர்கள் கூறியதற்கு பயந்து ஆட்சியை காப்பாற்றுவதற்கு ஆண் பிள்ளைகளை கொலை செய்தான்.
நவீன தொழில்நுட்ப விஞ்ஞான யுகத்தில் ஆட்சியும் அறிவும் அதிகாரமும் படைத்த பல ஃபிர்அவ்ன்கள் இருக்கிறார்கள்.அவர்கள் அழகாக ஆடை அணிந்திருப்பார்கள் தோற்றத்தில் கவர்ச்சியானவர்களாக இருப்பார்கள். பெரும் பெரும் கதிரைகளில் அமர்ந்திருப்பார்கள்.சிலபொழுது பட்டங்களையும் சுமந்திருப்பார்கள். ஆனால் யுத்தங்களை தூண்டுவதற்கும் இவர்கள் காரணமாக அமைவார்கள்.
மனிதனது உடல் அறிவு என்பன வளர்ந்த அளவுக்கு அவனுடைய ஆன்மா வளராத போது, தன்னை உலகத்தில் படைத்த ஓர் இறைவன் இருக்கிறான் என்று அவன் உணராத போது, தனது வாழ்வு இவ்வுலகில் ஒரு சோதனை என்ற அந்த ஆழமான நம்பிக்கை இல்லாத போது, தனது உடல் தனக்கு சொந்தமானது அல்ல, தனது ஆற்றல்கள் அனைத்தையும் நாளை மறுமையில் அல்லாஹ் விசாரிப்பான் என்ற அந்த பயம் இல்லாத போது இதுவெல்லாம் நடக்கும்.
அல்லாஹ் அனைவரையும் பாதுகாப்பானாக!




