தர்கா நகர் – அளுத்கம் வீதிய முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலையில் இன்று இடம்பெற்ற (29-08-2019 ) ‘ஆசிரியர் வலுவூட்டல்’ கருத்தரங்கில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது.
இந்நிகழ்வு தர்காநகர் சமூக மேம்பாட்டுக்கான மையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கற்பித்தல் என்பது ஒரு தொழில் அல்ல. மாறாக அது ஒரு புனிதமான பணி, இபாதத், சதகா, அல்லாஹ்விடம் வகை கூறவேண்டிய ஓர் அமானிதம். தற்கால சூழலில் முஸ்லிம் சமூகத்தின் பின்னடைவுக்கு கல்வித் துறை வீழ்ச்சியும் ஒரு காரணமாகும். கல்வித் துறை வீழ்ச்சிக்கான பிரதானமான காரணம் ஆசிரிய ஆசிரியைகள் தமது பணியை உரிய விதத்தில் நிறைவேற்றாமல் இருப்பதாகும். கல்வித் தகைமைகள் அதிகரிக்கும் அளவுக்கு அல்லாஹ்வின் கேள்வி கணக்கும் அதிகமாகும் போன்ற கருத்துக்களை பகிர முடிந்தது.
இந்த ஆசிரியர் வலுவூட்டல் நிகழ்வு நடைபெற பல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரியட்டும்!






