ஹஜ்ஜுக் காலத்தில் குதர்க்கமும் புறம் பேசலும்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்

வெள்ளிக்கிழமை நோன்பு பிடித்தவர்களை வியாழக்கி கிழமை பிடித்தவர்களும் வியாழக் கிழமை பிடித்தவர்களை வெள்ளிக்கிழமை பிடித்தவர்களும் தூசிப்பதையும் வம்புக்கு இழுப்பதையும் சமூக வலைத்தலங்களில் கீறிக் கிழிப்பதையும் காண முடிகிறது.சகிப்புத்தன்மை பிறரது கருத்துக்கள மதிப்பது போன்ற இஸ்லாமிய பண்புகள் மலையேறிவீட்டனவா?

கருத்து வேறுபாடான ஒரு பிரச்சினக்காக ஏன் இப்படி நடந்து கொள்கிறோம்?

”தகாத வார்த்தைகள் பேசாமலும் பாவச் செயல்களில் ஈடுபடாமலும் ஹஜ்ஜு செய்கிறாரோ அவர் அன்றைய தினம் தாய் பெற்ற பிள்ளை போல் (வீடு)திரும்புவார்.

(புகாரீ,முஸ்லிம்)

எனவே,பொதுவாக உடல் உறுப்புக்களையும் குறிப்பாக நாவையும் பாவச் செயல்களில் இருந்து பாதுகாப்பது ஹஜ்ஜின் நோக்கம் என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக உணர்த்துகிறது.

இது ஹஜ்ஜு செய்பவர்களுக்கு மட்டுமான கட்டுப்பால்ல.

ஹஜ்ஜு மாதத்தை அடைந்த அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடாகும்.ஏனெனில் யுத்தம் செய்வதற்கு தடை செய்யப்பட்ட 4 புனித மாதங்களில் துல்ஹிஜ்ஜாவும் ஒன்றாகும்.

ஹஜ்ஜதுல் வதாவில் நபிகளார் செய்த உபதேசத்தில் இந்த (அரபா)நாள் எப்படி புனிதமானதோ(ஹராமானதோ) அதேபோல் உங்களது இரத்தங்கள்,சொத்துக்கள்,மானம் மரியாதைகள் அனைத்தும் ஹராமாதாகும்” என்றார்கள்.

எனவே இந்தக் காலப்பிரிவில் எமக்கு மத்தியில் உள்ள பிக்ஹ் கருத்து வேறுபாடுகளை மையமாக வைத்து பரஸ்பம் விமர்சனங்ளை அள்ளி வீசி பாவத்தை சம்பதித்துக்கொள்வதிலிருந்து தவிர்ந்திருப்போமாக!

சட்டத்துறைக் கருத்து வேறுபாடுகள் பற்றிய நபி (ஸல்) அவர்களது பின்வரும் கூற்றை நாம் நுணிகிப் பார்ப்போம்:

«إذا حكم الحاكم فاجتهد ثم أصاب فله أجران، وإذا حكم فاجتهد ثم أخطأ فله أجر».

”தீர்ப்புச் சொல்பவர் (ஹாகிம்), இஜ்திஹாத் செய்து அவரது முடிவு சரியாக அமைந்தால் அவருக்கு இரண்டு கூலிகள் உண்டு. அவரது முடிவு தவறாக அமைந்து விட்டால் அவருக்கு ஒரு கூலி உண்டு’

(அறிவிப்பவர் : அமருப்னுல் ஆஸ் (ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம்)

வரலாறு நெடிகிலும் பல மஸ்அலாக்களில் இமாம்களுக்கு மத்தியில் கருத்து பேதங்கள் இருந்து வந்துள்ளன.அவற்றில் ஒன்று தான் இந்த சர்வதேச பிறை – தேசியப்பிறை விவகாரம்..

இரண்டு கூலிக்கும் ஒரு கூலிக்கும் இடப்பட்ட ஒன்று தான் இது.மாறாக ஒன்று ’ஹக்கு’ மற்றது ’பாதில்’ என்று கூறத்தக்க ஒன்றல்ல.

மிகத் தெளிவான ஷிர்க்,

மிகத்தெளிவான ஹாராம்,

மிகத் தெளிவான பாதில் باطل

என்ற எல்லைகளுக்குள் இவை வரமாட்டாது.

இவற்றுக்காக ஒருவர் மற்றவரைப் பகைப்பதும் வழிகேடன், ஹவாரிஜ் என்றெல்லாம் பத்வா கொடுப்பதும் எப்படியுமே நல்லதல்ல.

1) அஹ்ஸாப் யுத்தம் முடிந்து திரும்பிய நபியவர்கள், ஸஹாபாக்கள் சிலரை பனூ குரைழாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்களை அனுப்பும்போது ‘பனூ குரைழாவில் அன்றி யாரும் அஸரைத் தொழ வேண்டாம்’ எனக் கூறினார்கள். பனூ குரைழாவை நோக்கி செல்லும் வழியில் சிலர் அஸர்த் தொழுகைக்கான நேரத்தை அடைந்து கொண்டார்கள். அப்போது ‘பனூ குரைழாவில் அன்றி யாரும் அஸரைத் தொழ வேண்டாம்’ என்ற நபியவர்களின் ஹதீஸைப் புரிந்து கொள்வதில் அவர்கள் மத்தியில் இரண்டு விதமான கருத்துக்கள் தோன்றின. சிலர் பனூ குரைழாவுக்குச் சென்றுதான் அஸரைத் தொழ வேண்டுமெனப் புரிந்து கொண்டார்கள். எனவே, அங்கு சென்றுதான் அதனைத் தொழுவோம் என்று கூற, மற்றும் சிலர் அவ்வாறல்ல. நேரமாகிவிட்டதால் இவ்விடத்திலேயே தொழ வேண்டுமெனக்கூறி அங்கு தொழுதனர். பின்னர் இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எத்தி வைக்கப்பட்டபோது இரு சாராரில் யாரையும் அவர்கள் கண்டிக்கவில்லை என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்கள் : புகாரி, முஸ்லிம்)

‘பனூ குரைழாவில் அன்றி யாரும் அஸரைத் தொழ வேண்டாம்’ என்ற ஹதீஸைப் புரிந்து கொள்வதற்காக அவர்கள் இஜ்திஹாத் செய்திருப்பதைக் காணலாம். சிலர் இந்நபிமொழியின் நேரடிக் கருத்தைப் புரிந்து கொள்ள, ஏனையோர் அது கூறும் உள்ளார்ந்த கருத்தைப் புரிந்தார்கள். அதாவது, அஸருத் தொழுகைக்கு அங்கு சென்றடையக் கூடியவாறு வேகமாகச் செல்ல வேண்டுமென்பதே நபியவர்கள் அவ்வாறு கூறியதன் நோக்கம் என்பது அவர்களது நிலைப்பாடாகும்.

2) ஸஹாபாக்களில் இருவர் குளிப்புக் கடமையானவர்களாக இருந்தனர். அவர்களிடம் தண்ணீர் இருக்கவில்லை. அவர்களில் ஒருவர் தயம்மும் செய்து கொண்டு தொழுதார். மற்றவர் தொழவில்லை. இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறிய போது அவர்களில் எவரையும் நபியவர்கள் குறை கூறவில்லை என தாரிக் பின் ஷிஹாப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்கள் : அஹ்மத், நஸாஈ)

3) நபித் தோழர்கள் இருவர் ஒரு பயணத்தில் ஈடுபட்டிருந்தனர். தொழுகைக்கு நேரமாகியது. அவர்களிடம் தண்ணீர் இருக்கவில்லை. எனவே, தூய்மையான மண்ணினால் தயம்மும் செய்தனர். பின்னர் தொழுகையின் நேரம் முடிவடைய முன்னரே நீரைப் பெற்றுக் கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தொழுகையைத் திருப்பித் தொழுதார். அடுத்தவர் திருப்பித் தொழவில்லை. பின்னர் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபியவர்கள் திருப்பித் தொழாதவரைப் பார்த்து ‘சரியாக ஸுன்னாவைச் செய்தீர். உனது தொழுகை உனக்குப் போதுமானதாகும்’ என்றார்கள். திருப்பித் தொழுதவரைப் பார்த்து ‘உனக்கு இரண்டு தடவைகள் கூலி கிடைக்கும்’ என்று கூறினார்கள் என்று அபூ ஸஈத் அல் குத்ரீ (ரழி) அறிவிக்கிறார்கள். (நூல்கள் : அபூதாவுத், பைஹகீ, ஹாகிம், தபரானீ, தாரகுத்னீ)

மேற்படி மூன்று நிகழ்வுகளும் ஸஹாபாக்கள் இஜ்திஹாத் செய்திருப்பதையும் அதனை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்திருப்பதையும் காண முடிகின்றது. இஜ்திஹாத் செய்வதற்கு நபியவர்களின் அங்கீகாரம் இருந்ததனாலேயே அவர்கள் நபி (ஸல்) அவர்கள் உயிருடனிருக்கும்போது இஜ்திஹாத் செய்தது போன்று அவர்கள் மரணித்த பின்னரும் மிகப்பரந்த அளவில் இஸ்லாமிய சட்டத்துறையில் இஜ்திஹாதைப் பிரயோகித்திருப்பதை ஆதாரபூர்வமான செய்திகளினூடாக அறிய முடிகின்றது.

(http://suvanathendral.com/portal/?p=1376)

பிறரோடு முரண்படலாம். ஆனால் அதற்கென இஸ்லாம் ஒழுக்கங்களை சொல்லித் தருகிறது.

அறிவோடு பேசுவது,அல்லாஹ் பார்க்கிறான் என்ற உணர்வோடு பேசுவது,சத்தியம் எதிர்த் தரப்பில் இருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனோ நிலையில் இருப்பது,பரந்த மனப்பாங்கோடு எதனையும் அணுகுவது எந்த நிலையிலும் ஹராமாக்கப்பட்ட அணுகுமுறைகளைக் கையாளாதிருப்பது என்பன கவனிக்கப்பட வேண்டும்.

இக்கால கட்டதில்

மியன்மார் முஸ்லிம்களுக்கு எப்படி உதவலாம் என்று சிந்திப்போம்.

தாய் தகப்பர், உறவினர்களது உறவுகளைப் பலப்படுத்துவோம்.

ஏழைகள், அனாதைகள்,அகதிகள்,பசி பட்டிணியோடு இருப்பவர்கள் ஆகியோரை குசலம் விசாரித்து உதவுவோம்,

அதிகமாக தக்பீர் போன்ற திக்ருகளிலும் திலாவதுல் குர் ஆனிலும் கவனமெடுப்போம்.

பிற சமயத்தவர்களது உணர்வுகளை மதிக்கும் வகையில் நடந்து கொள்வோம்.

சமூகத்தில் சடவாதம் நாஸ்திகம்,அறிவீனம்,பிரிவினை,இயக்க, கட்சி வெறி,குடும்ப அமைப்பின் சீர்குலைவு,வாலிபர் வழிபிறள்வு போன்ற பிரமாண்டமான பிரச்சினைகள் உள்ளன என்பதை அடிக்கடி நினைவு படுத்திக் கொள்வொம்.

நேரங்களை விட கடமைகள் அதிகம் என்று ஓரு மேதை கூறி இருப்பதை கருத்திற்கொள்வோம்.

அல்லாஹ் எமக்கு வழிகாட்டி நெறிப்படுத்துவானாக, பாதுகாப்பானாக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top