அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமீ)
சிரியாவில், மியன்மாரில், ஈராக்கில், பலஸ்தீனில்…….. ஈவிரக்கமில்லாதவர்களால் எமது ஈமானிய உறவுகள் கொல்லப்படும் காட்சிகள் எமது மனதை குடைந்து எடுக்கின்றன.
ஆனால், அல்லாஹ் இந்த சமூகத்தை கைவிடமாட்டான் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது. அவனது அருளாகிய வெற்றியில் ஆழமாக நம்பிக்கை வைப்போமாக! நம்பிக்கை இழப்பது காபிர்களுடைய பண்பு என்பது அல்லாஹ்வின் ஆணித்தரமான கருத்தாகும்.
لا تَيْئَسُوا مِنْ رَوْحِ اللَّهِ إِنَّهُ لَا يَيْئَسُ مِنْ رَوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُون – يوسف: 87.
‘அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (அல்லாஹ்வை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்கமாட்டார்கள்’ (அல்குர்ஆன் 12:87)
وَمَن يَقْنَطُ مِن رَّحْمَةِ رَبِّهِ إِلاَّ الضَّآلُّونَ – الحجر: 56.
”வழிகெட்டுப் போனவர் தவிர வேறு எவரும் தனது இரட்சகனது அருளில் நம்பிக்கை இழக்கமாட்டார்.”(15:56)
அந்தவகையில், அனைத்து படைப்புக்களையும் படைத்து, பரிபாலித்து வருகின்ற வல்லவன் அல்லாஹ் என்றும் உயிரோடு இருப்பவன்.எல்லா சூழ்ச்சிகளுக்கும் மேலால் சூழ்ச்சி செய்பவன்.இறுதி வெற்றியை அவன் தருவான்.
முஸ்லிம் சமூகம் நோய்வாய்படும். ஆனால், இறக்கமாட்டாது. அது பின்வாங்கும், ஆனால், புறமுதுகு காட்டி ஓடிவிட மாட்டாது. சிலுவை வீர்ர்களது கைகளில் இருந்து 90 வருடங்களுக்குப் பின்னர் பைதுல் முகத்தஸை ஸலாஹுத்தீன் அய்யூபியின் கரங்களால் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மீட்டிக் கொடுக்கவில்லையா? ஈசல் போன்று வந்து பக்தாதில் அட்டகாசம் செய்து ஆயிரக்கணக்கானவர்களைக் கொலை செய்த தாத்தாரியர்களை அய்னு ஜாலுத்தில் வைத்து முறியடித்து சைபுத்தீனின் முயற்சிகளுக்கு ஒத்தாசையாக இருந்த அதே அல்லாஹ் இன்றும் இருக்கிறான். அவனது ஜோதியை அணைக்க யாராலும் முடியாது.
يُرِيْدُوْنَ اَنْ يُّطْفِــُٔــوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَيَاْبَى اللّٰهُ اِلَّاۤ اَنْ يُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْـكٰفِرُوْنَ
“அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான்.” (அல்குர்ஆன் 9:32)
அசத்தியம் தற்காலிகமாகத் தான் தாண்டவமாடும். ஆனால்,அதற்கு ஆயுள் குறைவு.
தற்காலத்தில் ஒருபக்கத்தில் இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கையில் இன்னொரு பக்கத்தால் முஸ்லிம் சனத்தொகை பல்கிப் பெருகிக்கொண்டிருக்கிறது. இஸ்லாமிய விருட்சத்தின் பத்துக் கிளைகளை அவர்கள் வெட்டும் போது அல்லாஹ் ஆயிரம் வித்துக்களை ஊன்றி மரங்களாக வளர்த்துக் கொண்டிருக்கிறான்.
சனத்தொகைப் பெருக்கத்தில் முஸ்லிம்கள் முன்னணியில்
சர்வதேச ரீதியில் பார்க்கும் போது 2010 -2015 ற்கு இடைப்பட்ட காலத்தில் முஸ்லிம் அல்லாதவர்களது கருவளம் 2.5% ஆக இருக்கையில் முஸ்லிம்களது கருவளம் 3.1% ஆக இருந்தது. (http://www.pewforum.org/…/pf_15-04-02_projectionstables75/)
உலகிலேயே அதிக கருவளம் (Fertility) கொண்ட நாடுகளுக்கு மத்தியில் நைகர், மாலீ ஆகிய இரு முஸ்லிம் நாடுகள் தான் முறையே முதலாம் (46.12 %) இரண்டாம் (45.53%) இடங்களில் இருக்கின்றன. (http://www.indexmundi.com/g/r.aspx?v=25) நைகரின் மொத்த சனத்தொகையில் முஸ்லிம்கள் 94%,ஆகவும் மாலீயின் சனத்தொகையில் 94.8% ஆகவும் உள்ளனர்..
அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் Pew Research Centre என்பது மதக் குழுக்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் பிரபலமான நிறுவனமாகும்.அதன் ஆய்வின் படி,
*2010-2050 இடைப்பட்ட காலத்தில் முஸ்லிம் சமூகம் 73% ஆன வளர்ச்சியைக் காணும்.
. *தற்போது உலகின் பெரும்பான்மையினராக இருக்கும் கிறிஸ்தவர்களது சனத்தொகைக்குச் சமனான அளவுக்கு முஸ்லிம்களது சனத்தொகை வளரும்.
*தற்போது 2.17 பில்லியனாக உள்ள கிறிஸ்தர்களது எண்ணிக்கை 2050 ல் 2.92 பில்லியனாக மாறக்கூடும். அதேவேளை, தற்போது 1.6 பில்லியனாக உள்ள முஸ்லிம்களது தொகை 2.76 பில்லியனாக மாறலாம். தற்போது உலக மொத்த சனத் தொகையில் 31.4% ஆகவுள்ள கிறிஸ்தர்கள் 40 வருடங்களின் பின்னரும் அதே அளவில் இருப்பர் என்றும் ஆனால்,23.2% ஆகவுள்ள முஸ்லிம்கள் 29.7% ஆக மாறுவர் என்றும் அனுமானிக்கப்பட்டுள்ளது.
*அடுத்த நான்கு தசாப்தங்களில் இஸ்லாம் உலகில் உள்ள பிரதான ஏனைய மதங்களையும் விட வேகமாக வளரும் என Pew Research Centre இன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pew Research Centre இன் முழுமையான அறிக்கையை http://www.pewforum.org/…/religious-projections-2010-2050 / எனும் வெப்தளத்தில் சென்று பார்க்கலாம்.
இந்த தகவல்களைப் பரிமாறும் பொழுது இரண்டு விடயங்களை மறந்துவிட முடியாது:-
1.இந்த ஆய்வு நிறுவனம் கிறிஸ்தவர்களால் இயக்கப்படுகிறது. அதேவேளை,அதில் உள்ள எல்லா தகவல்களும் சரியாக இருக்கும் என்று சொல்வதற்கும் இல்லை.
2.முஸ்லிம்கள் ஒருபொழுதும் எண்ணிக்கை (Quantity) யில் நம்பிக்கை வைக்கக் கூடாது. தரத்தில் (Quality) தான் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆனால், தொகையில் ஏற்படும் வளர்ச்சி பற்றிய தகவலும் சுபமான ஒன்று தான்.
இருப்பினும், முஸ்லிம் சமூகம் பற்றிய சுபமான அதுவும் மனதுக்கு இனிய, சுபசோபனச் செய்திகள் முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்து வரும் போது அவற்றைப் பகிர்வதில் தவறு இருக்க முடியாது.
நபிகள்(ஸல்) அவர்களது முன்னறிவிப்புக்கள்
மேலும்,கிறிஸ்தவ உலகின் இதயமாக உள்ள ரோமாபுரி வெற்றிகொள்ளப்படும்,முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் மூளவிருக்கும் யுத்தத்தில் யூதர்களை முஸ்லிம்கள் கொலைசெய்வார்கள், நபித்துவத்தின் வழிநின்ற கிலாபத் மீண்டும் உதயமாகும்.பூமியில் இரவும் பகலும் இருக்கும் இடங்களுக்கு எல்லாம் இஸ்லாம் சென்று செல்வாக்குச் செலுத்தும் போன்ற கருத்துக்களை தாங்கிய ஹதீஸ்கள் வந்துள்ளன. இந்த முன்னறிவிப்புக்களும் நற்செய்திகளும் இன்னும் நடைபெறவில்லை.அவை இடம்பெறாமல் கியாமத் நாள் வரமாட்டாது என்றும் அவை நிச்சயமாக இடம்பெறும் என்றும் நாம் நம்புகிறோம்.
இதுபோன்ற நம்பிக்கையூட்டும் தகவல்களை நாம் எமக்கிடையே அடிக்கடி பகிர்ந்து கொள்ள வேண்டும்.
குத்பாக்களை ஓதுபவர்கள் முஸ்லிம் சமூகத்துக்கு நேர்ந்துள்ள அவல நிலைகளைப் பற்றி மட்டுமே பேசி பொது மக்களுடைய ஈமானை மழுங்கடித்து விடாமல் நம்பிக்கை ஊற்றுக்களை ஓடச் செய்யும் இது போன்ற தகவல்களையும் பகிர்ந்து கொள்வது அவசியமாகும்.
عَنْ أَبِي مُوسَى، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا بَعَثَ أَحَدًا مِنْ أَصْحَابِهِ فِي بَعْضِ أَمْرِهِ، قَالَ: «بَشِّرُوا وَلَا تُنَفِّرُوا، وَيَسِّرُوا وَلَا تُعَسِّرُوا» صحيح مسلم / 32 – كتاب الجهاد والسير / 3 – باب في الأمر بالتيسير، وترك التنفير
நபி(ஸல்) அவர்கள் தனது தோழர்களில் எவரையாவது அவரது சில தேவைகளுக்காக அனுப்பும் போது ஆசையூட்டுங்கள், வெறுப்பூட்டாதீர்கள். இலகுபடுத்துங்கள், சிரமப்படுத்தாதீர்கள்” என்று கூறுவார்கள். (ஆதாரம்; ஸஹீஹ் முஸ்லிம்)
எனவே,பொதுவாக முஸ்லிம் சமூகமும் குறிப்பாக அதன் செயற்பாட்டாளர்களும் உள்ளம் நொந்து போயிருக்கும் சூழலில் தைரியமூட்டும் வார்த்தைகள் தான் தேவைப்படுகிறது.
இறுதியாக ஒரு வேண்டுகோளும் ஆலோசனையும்:
முஸ்லிம் சமூகத்தை மானுஷீக ரீதியில் பலப்படுத்துவதற்கும் எதிர்காலம் இஸ்லாத்திற்கே என்ற நம்பிக்கையை ஆழமாக வேரூன்றச் செய்வதற்கும் பின்வரும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பது எமது பணிவான அபிப்பிராயமாகும்.இதற்காக இணைய தளங்கள்,வட்ஸ்அப்,ஃபேஸ் புக் பக்கங்கள் என்பவற்றை தமிழ் மொழி உட்பட வேறு மொழிகளிலும் உருவாக்குவது.
1.முஸ்லிம் சமூகமே இறுதியில் வெற்றி காணும் என்பதைக் காட்டும் குர் ஆனிய ஹதீஸ் வசன்ங்களை சமூகத்திற்கு எடுத்திக் காண்பிப்பது.
2.வரலாறு நெடுகிலும் இஸ்லாம் சந்தித்த சவால்கள், மற்றும் தோல்விகள் ஒவ்வொன்றுக்குப் பின்னரும் பெரு வெற்றிகளை முஸ்லிம்கள் அடைந்திருக்கிறார்கள் என்பதை நிறுவும் வகையிலான வரலாற்ருத் தகவல்களைத் திரட்டுவது.
3.உலகளாவிய ரீதியில் முஸ்லிம் சமூகத்தின் சனத்தொகை பற்றிய தவல்களை திரட்டி வெளியிடுவது
4.முஸ்லிம் சமூகத்தின் வளங்கள். பற்றிய நம்பகரமான தகவல்களைத் திரட்டுவது.
5.முஸ்லிம் சமூகத்தின் விஞ்ஞானிகள்,பேராசிரியர்கள்,பெறும் பெரும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் துறைசார் நிபுனர்கள் பற்றிய தவல்கள்.




