அஷ்ஷைய்க் எஸ்.எச்.எம்.பளீல்
உலகில் பாவங்கள் மலிந்து விடுகின்ற போது,நன்மக்கள் எனப்படுவோர் தாமும் தம்பாடும் என வாழத் தலைப்படும் போது தண்டனைகளை அல்லாஹ் இறக்குவான். அவற்றால் நல்லவர்கள்,பொல்லாதவர்கள் எல்லோரும் பாதிக்கப்படுவார்கள்.
அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக!
பின்வரும் ஹதீஸ் நாம் வாழும் இக்காலத்துக்கு மிகவுமே பொருத்தமாகத் தெரிகிறது:-
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சபையில் இருந்த முஹாஜிரீன்களை நோக்கி சொன்னார்கள்;-
يا مَعْشَرَ المهاجرينَ ! خِصالٌ خَمْسٌ إذا ابتُلِيتُمْ بهِنَّ ، وأعوذُ باللهِ أن تُدْرِكُوهُنَّ :
முஹாஜிரீன்களே! ஐந்து விஷயங்களை கொண்டு நீங்கள் சோதிக்கப்பட்டால் அவை உங்களை பீடிப்பதிலிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
لم تَظْهَرِ الفاحشةُ في قومٍ قَطُّ ؛ حتى يُعْلِنُوا بها ؛ إلا فَشَا فيهِمُ الطاعونُ والأوجاعُ التي لم تَكُنْ مَضَتْ في أسلافِهِم الذين مَضَوْا
- எந்த ஒரு சமூகத்திலே மானக்கேடான விஷயங்கள் (குறிப்பாக விபச்சாரம்)வெளியாகி மக்கள் பகிரங்கமாக அவற்றைச் செய்ய ஆரம்பிக்கிறார்களோ, அவர்களுக்கு முன்னர் வாழ்ந்து சென்றவர்களுக்கு மத்தியில் இல்லாதிருந்த கொள்ளை நோய்களும் (அவற்றினால் ஏற்படும்) வலிகளும் அவர்களுக்கு மத்தியில் பரவும்.
، ولم يَنْقُصُوا المِكْيالَ والميزانَ إِلَّا أُخِذُوا بالسِّنِينَ وشِدَّةِ المُؤْنَةِ ، وجَوْرِ السلطانِ عليهم
- எந்த ஒரு சமூகம் அளவு நிறுவையில் மோசடி செய்யுமோ, அந்த சமுதாயம் வரட்சி, (விலைவாசி உயர்வினால் ஏற்படும்) பொருளாதார நெருக்கடி, அவர்கள் மீதான ஆட்சியாளர்களது அநியாயம் என்பவற்றால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
ولم يَمْنَعُوا زكاةَ أموالِهم إلا مُنِعُوا القَطْرَ من السماءِ ، ولولا البهائمُ لم يُمْطَرُوا
- எந்த சமூகம் தமது செல்வங்களுக்கான ஸகாத்தை கொடுக்காமல் தடுத்துக் கொள்ளுமோ, வானத்திலிருந்து வரும் மழையிலிருந்து தடுக்கப்படுவார்கள். கால்நடைகள் மட்டும் இல்லையென்றால் அவர்கள் மழைபொழியச் செய்யப்படமாட்டார்கள்.
ولم يَنْقُضُوا عهدَ اللهِ وعهدَ رسولِه إلا سَلَّطَ اللهُ عليهم عَدُوَّهم من غيرِهم ، فأَخَذوا بعضَ ما كان في أَيْدِيهِم
- எந்த ஒரு சமூகம் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் செய்த வாக்குறுதியை உடைத்துவிடுமோ (அதாவது மார்க்கத்தை புறக்கணித்து தம் மன இச்சைப்படி வாழுமோ)அல்லாஹ் அவர்கள் மீது அவர்கள் (முஸ்லிம்கள்) அல்லாதவர்களைச் சேர்ந்த அவர்களது எதிரிகளை சாட்டிவிடுவான். அவர்கள்,அந்த சமூகத்திடம் இருக்கும் சிலவற்றையும் எடுத்துக் கொள்வார்கள்.
وما لم تَحْكُمْ أئمتُهم بكتابِ اللهِ عَزَّ وجَلَّ ويَتَخَيَّرُوا فيما أَنْزَلَ اللهُ إلا جعل اللهُ بأسَهم بينَهم
- எந்த சமூகத்தின் தலைவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு ஆட்சிசெய்யவில்லையோ அல்லாஹ் இறக்கியவற்றைலிருந்து சிறப்பான சட்டங்களை அவர்கள் தமக்காகத் தெரிவுசெய்யவில்லயோ அல்லாஹ் அவர்களுக்குள்ளேயே பகைமையை உண்டாக்கி சண்டையை ஏற்படுத்தி விடுவான்.
அறிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி), இப்னு மாஜா, எண். 4019.
الراوي : عبدالله بن عمر
الصفحة أو الرقم: 7978 | خلاصة حكم المحدث : صحيح
التخريج : أخرجه ابن ماجه (4019)، والطبراني في ((المعجم الأوسط)) (4671)، والحاكم (8623) باختلاف.
எனவே,கொரோனா,வரட்சி,விலைவாசி உயர்வு போன்ற மனிதர்களை வாட்டும் சோதனைகளுக்கான உண்மையான காரணங்கள் யாவை என்பதை நாம் ஆராய்ந்து பார்த்தால் ஆத்மீக மற்றும் பண்பாட்டுடன் தொடர்புடைய காரணங்கள் முக்கியமாக அமைந்துள்ளதைக் காணலாம். குறிப்பாக பாவங்கள் பகிரங்கமாக இடம்பெறும் இக்காலத்தில் அவற்றில் ஈடுபடுவோரும் அவற்றைத் தடுக்காமல் இருப்போரும் சேர்ந்தே பாதிக்கப்படுவார்கள்.
அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக!




