தண்ணீர் எனும் அருட்கொடை

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்(நளீமி)

இப்புவியானது 70 சதவீத நீர்பகுதியினை கொண்டுள்ளது. நீரானது உயிரினங்கள் உயிர் வாழ மிகவும் முக்கியமானது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நீரானது மாசுபடும்போது அது நேரடியான மற்றும் மறைமுக பாதிப்புகளை உயிரினங்கள் மற்றும் சுற்றுசூழலில் ஏற்படுத்துகின்றது.

தற்போதைய உலக சனத்தொகையில் 33% ஆனோர் அடிப்படைத் தேவைகளுக்குத் தூயநீரைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளனர்.

2025 ஆம் ஆண்டளவில் 60 வீதமானோர் நீரைப்பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வர் என எதிர்வு கூறப்படுகிறது.

எமது நாட்டில் குடிநீர் ஒரு பிரச்சினைக்குரிய விடயமாக மாறிவருகிறது. அதிகமான பிரதேசங்களில் மேற்பரப்பு நீரையும் தரைக்கீழ் நீரையும் குடிப்பதற்குப் பயன்படுத்தமுடியாதுள்ளது. (உதாரணம்- யாழ்ப்பாணம், அனுராதபுரம்).

கழிவுப் பொருட்கள் நீரில் கலப்பதனால் நீர்வாழ் உயிரினங்கள், செடி கொடிகள் பாதிப்புக்குஉள்ளாகின்றன. 14 வருடங்களின் பின்னர் தற்போது ஏற்பட்டுள்ள மிக மோசமான நீர்த் தட்டுப்பாட்டினால் பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அல்லாஹ்வின் அருட்கொடை-நீர்

அல்லாஹ் மனதனுக்கு வழங்கிய மிகப்பெரிய அருள்களில் நீரும் ஒன்றாகும். மனிதர்கள், மிருகங்கள், தாவரங்கள் ஆகிய அனைத்து படைப்பினங்களும் நீர் இன்றி வாழமாட்டாது என்பது அடிப்படை உண்மையாகும். குர்ஆனில் நீர் என்ற சொல் பல இடங்களில் வந்திருப்பதுடன் உயிருள்ள அனைத்தும் நீரால் படைக்கப்பட்டதாக அல்லாஹ் கூறுகின்றான்.

நீர் என்ற மாபெரும் அருட்கொடையை அல்லாஹ் குர்ஆனில் பின்வரும் முறைகளில் தன்னுடன் சம்பந்தப்படுத்திப் பேசியிருக்கின்றான்:-

  1. அவனே அந்த நீரை வானத்திலிருந்து இறக்குவதாகவும் அவனது அந்த அருளைத் தான் மனிதர்களும் கால்நடைகளும் பருகுகிறார்கள் என்றும் தாவரங்களும் அதன் உதவியினாலேயே முளைக்கின்றன என்றும் கூறியுள்ளான்.

هُوَ الَّذِىْۤ اَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً‌ لَّـكُمْ مِّنْهُ شَرَابٌ وَّمِنْهُ شَجَرٌ فِيْهِ تُسِيْمُوْنَ

16:10. அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது; அதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும் உண்டாகி) அதில் இருக்கின்றன.

يُنْبِتُ لَـكُمْ بِهِ الزَّرْعَ وَالزَّيْتُوْنَ وَالنَّخِيْلَ وَالْاَعْنَابَ وَمِنْ كُلِّ الثَّمَرٰتِ‌ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّـقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏

16:11. அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும், ஒலிவம்(ஜைத்தூன்) மரத்தையும், பேரீத்த மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், இன்னும் எல்லாவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான் – நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சி இருக்கிறது.

فَاَنْشَاْنَا لَـكُمْ بِه جَنّٰتٍ مِّنْ نَّخِيْلٍ وَّ اَعْنَابٍ‌ لَـكُمْ فِيْهَا فَوَاكِهُ كَثِيْرَةٌ وَّمِنْهَا تَاْكُلُوْنَ

23:19. அதனைக் கொண்டு, நாம் உங்களுக்கு பேரீச்சை திராட்சை தோட்டங்களை உண்டாக்கியிருக்கின்றோம்; அவற்றில் உங்களுக்கு ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்

அவன் தான் வானத்திலிருந்து அளவோடு நீரை இறக்கி அதனை பூமிக்குள் சேகரிக்கிறான் என்பதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:-

وَاَنْزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ فَاَسْكَنّٰهُ فِى الْاَرْضِ‌ وَاِنَّا عَلٰى ذَهَابٍ بِه لَقٰدِرُوْنَ‌

23:18. மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்.

  1. மழைநீரை உவர்ப்பாக அன்றே அன்றி குடிப்பதற்கு ஏற்றாற் போல் அமைத்திருப்பது அவனது திட்டமிடலால் நடப்பதாகும்.அவன் இருப்பதற்கான அத்தாட்சியாகவும் அது இருக்கிறது.:-

. أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجاً فلولا تشكرون

56:68-70. நீங்கள் குடிக்கும் தண்ணீரைப் பார்த்தீர்களா? அதனை மேகத்திலிருந்து பொழிய வைப்பது நீங்களா அல்லது நாம் பொழிய வைக்கிறோமா? நாம் நாடினால் அதனை எதற்கும் உதவாத கடும் உப்புத் தன்மையுள்ளதாக மாற்றி விடுவோம். அவ்வாறு செய்யாமல் நன்னீராக அமைத்துத் தந்தோமே. நீங்கள் நன்றி செலுத்துவதில்லையா?

  1. நீர் பூமிக்குள் வற்றிவிட்டால் அதனை மீளவும் வெளியே கண்ணுக்குப் புலப்படும் வகையில் கொண்டுவரும் ஆற்றலையும் அவனே பெற்றிருக்கின்றான்.

قُلْ أَرَءَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَن يَأْتِيكُم بِمَاءٍ مَّعِينٍ..

67:30 (நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்).

  1. அல்லாஹ்வின் அருட் பாக்கியமான மழையானது தடைப்படுவதற்கு மனிதர்கள் இழைக்கும் பாவங்களும் காரணமாக அமையலாம்.எனவெ பாவமன்னிப்புக் கேட்டால் மழை வீழ்ச்சி ஏற்படும் என்று நூஹ் (அலை)அவர்கள் தனது சமூகத்தைப் பார்த்துக் கூறியதாக அல்லாஹ் குர் ஆனில் கூறுயிருக்கிறான். (71:10,11)

فقلت استغفروا بكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا

எனவே, வரட்சி நிலை உருவாகும் போது பாவங்களில் இருந்து விலகுவதும் பாவமன்னிப்பில் ஈடுபடுவதும் மழை பெய்ய காரணமாக அமையும்.

  1. நபிமார்கள் பலரது வரலாற்றோடு அல்லாஹ் தண்ணீரை சம்பந்தப் படுத்தியிருக்கிறான்:-

நூஹ்(அலை)அவர்களது காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு,

இப்ராஹீம் (அலை)அவர்களது வாழ்வுடன் சம்பந்தப்படும் ஸம்ஸம் கிணறு.

மூஸா(அலை)அவர்களது காலத்தில் அன்னார் பெட்டியில் வைக்கப்பட்டு நைல் நதியில் அது மிதந்து சென்றமை

அன்னார் இரண்டு பெண்களுக்க்காக கிணற்றில் இருந்து ஆடுகளுக்கு நீர் பெற்றுக் கொடுத்தமை.

ஃபிர் அவுனும் கூட்டத்தாரும் கடலில் மூழ்கியமை,

யூனுஸ்(அலை)கடலில் பிரயானம் செய்த போது மீன் விழுங்கியமை,

லூத்(அலை)அவர்களது சமூகம் அழிக்கப்பட்ட சாக்கடல்,

ஸாலிஹ்(அலை)அவர்களது ஒட்டகத்துக்கான நீர் நிலை

  1. இது தவிர நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் தொடர்பாக கூறிய வழிகாட்டல்கள் இங்கு குறிப்பிடத்தக்கவையாகும்.

ஓடிக் கொண்டிருக்கும் ஆற்று நீரைக் கூட விரையம் செய்யலாகாது என்று அவர்கள் கூறியுள்ளமை நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் அவசியத்தைக் காட்டி நிற்கிறது.

நீரை மாசடையச் செய்யும் செயற்பாடுகளை நபியவர்கள் கடுமையாக் கண்டித்திருக்கிறார்கள்.

நீர்நிலைகளிலும் நிழல் உள்ள இடங்களிலும் பாதைகளிலும் மலம் கழிப்பது இறை சாபத்தை தரும் என்றும் அவை விடயமாக மிகுந்த எச்சரிக்கையோடு நடந்துகொள்ளும்படியும் அன்னார் எச்சரித்திருக்கிறார்கள்.

வரட்சி நிலவும் போது ’இஸ்திஸ்கா’ எனப்ப்படும் மழை வேண்டித் தொழும் படி காட்டளையிட்டிருக்கிறார்கள்.

  1. இஸ்லாமிய சட்ட நூல்களில் ’கிதாபுத் தஹாரா’(சுத்தத்தின் பாடம்) எனும் தலைப்பில் குர் ஆன் ஹதீஸ் வசனங்களுடன் சுத்தம் தொடர்பான ஏராளமான சட்டங்களும் எழுதப்பட்டிருப்பது நீர் பற்றிய இஸ்லாத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தப் போதுமானாதாகும்.சுத்தம் ஈமானின் பாதி என்றால் சுத்தமான நீரின்றி அந்த சுத்தம் சாத்தியப்படமாட்டாது.

தண்ணீரின் பயன்பாடுகள் தொடர்பான நவீன மருத்துவம் கூறும் பின்வரும் குறிப்புக்கள் எமது கவனத்தை ஈர்க்க வேண்டும்:

1.நாம் அருந்தும் நீரானது உமிழ்நீர் உருவாக்கத்துக்கு உதவுகிறது.

  1. உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது.
  2. திசுக்கள், முள்ளந்தண்டு மற்றும் மூட்டுகளைப் பாதுகாக்கிறது.
  3. மலம் சலம் மூலம் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
  4. உடல் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது.
  5. மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.
  6. செரிமானத்திற்கு உதவுகிறது.
  7. ஊட்டச்சத்து உறிஞ்சலுக்கு உதவுகிறது.
  8. எடை இழக்கச் செய்ய உதவுகிறது.
  9. இரத்த ஆக்சிஜன் சுழற்சியை மேம்படுத்துகிறது.
  10. நோய்களைத் தடுக்க உதவுகிறது.
  11. உடல் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
  12. புலனுணர்வு செயல்பாட்டுக்கு உதவுகிறது.
  13. மனநிலையை மேம்படுத்த உதவுகிறது.
  14. தோலை பிரகாசமாக வைக்க உதவுகிறது.
  15. ஒட்டுமொத்த நீர் வறட்சியை தடுக்கிறது.

How much should you drink?

Being attentive to the amount of water you drink each day is important for optimal health. Most people drink when they’re thirsty, which helps regulate daily water intake.

According to the National Academies of Sciences, Engineering, and Medicine, general water intake (from all beverages and foods) that meet most people’s needs are:

  • about 15.5 cups of water (125 ounces) each day for men
  • about 11.5 cups (91 ounces) daily for women

People get about 20 percent of their daily water intake from food. The rest is dependent on drinking water and water-based beverages. So, ideally men would consume about 100 ounces (3.0 liters) of water from beverages, and women, about 73 ounces (2.12 liters) from beverages.

You’ll have to increase your water intake if you’re exercising or living in a hotter region to avoid dehydration.

Other ways to assess hydration include your thirst and the color of your urine. Feeling thirsty indicates your body is not receiving adequate hydration. Urine that is dark or colored indicates dehydration. Pale or non-colored urine typically indicates proper hydration.

The bottom lines

Water is important to nearly every part of your body. Not only will hitting your daily recommended intake help you maintain your current state of being, it may even improve your overall health.

Here are some ideas for how you can be sure you drink enough:

  • Carry a water bottle with you wherever you go. This way you can drink whenever the need strikes.
  • Keep track of your intake. Aim to take in optimum amounts every day, a minimum of half your body weight in ounces.
  • Pace yourself to approach half of your recommended consumption by midday. You can always finish about an hour before you plan to sleep.

Source :- https://www.healthline.com/…/why-is-water-important…

ஆகவே,தண்ணீர் என்பது அல்லாஹ்வின் அருள் என்பதால் அதற்காக நாம் அல்லஹ்வுக்கு ஸுக்ர் செய்ய வேண்டும். அதனை ஓர் அமானிதமாக நாம் கருதி அதனை மாசுபடாமல் பாதுகாப்பதும் அதனை தங்கத்தைப் போன்றே மதிப்பதும் விரயம் செய்யாமல் இருப்பதும் ஒவ்வொருவரதும் கடமையாகும்.

நாம் நன்றி செலுத்தினால் அருட்பாக்கியங்களை அவன் மென்மேலும் பெருக்கித் தருவான்.நன்றிகெட்தனமாக நடந்துகொண்டால் அவனது தண்டனை கடுமையாகவே இருக்கும்.

நன்றி செலுத்துவது என்பது ’அல்ஹம்து லில்லாஹ்’ என்று வாயார இரட்சகனைப் புகழ்வது மட்டுமல்ல.அவன் தந்த அருள்களை முறையாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்துவதோடு மற்றவர்களுக்கும் அதனை வழங்குவதுமாகும்.

வல்ல அல்லாஹ் எம் அனைவரையும் அவனுக்கு நன்றியுடைய அடியார்களாக வாழவைப்பானாக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top