(விடிவெள்ளி 19.10.2017)
மௌலவியா பாத்திமா அஸ்பா பளீல்
(பேராதனை பல்கலைக்கழகம்)
நாம் சிறுவயது முதல் மரணிக்கும் வரை பல வகையான நண்பர்களை சந்தித்து வருகின்றோம். எமது குழந்தைப் பரு-வத்தில் குடும்ப உறுப்பினர்கள் என்ற வட்டத்துக்குள் மாத்திரமே நண்பர்கள் இருப்பார்கள். காலப்போக்கில் பாடசாலை செல்லும் கட்டத்தில் இன்னும் பல உறவினர் அல்லாத நண்பர்களை சந்திப்போம். இவ்வாறாக ஒரு பிள்ளை வீட்டை விட்டு வெளியேற ஆரம்பிக்கின்ற போது அறிமுகமற்ற புதிய நண்பர்களுடன் பழக ஆரம்பிக்கின்றது. பிள்ளைகள் வளர வளர அவர்கள் செல்லும் இடமெல்லாம் நண்பர்கள் அதிகரித்துக் கொண்டே செல்வர். இது மனிதனுக்கென்று அல்லாஹ் விதித்துள்ள நியதியாகும்.
மனிதன் ஒரு¬போதும் தனித்து வாழ முடியாது. அனைத்துக் காரியங்களிலும் பிறரின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அது ஆலோசனையாகவோ, உதவியாகவோ, உபதேசமாகவோ இருக்கலாம். ஆனால் நட்புக் கொள்ளும் போது சில வரையறைகளையும் கவனத்திற்கொள்ள வேண்டும்.
நல்ல நட்பை உறுதிப்படுத்தல்
ஒருவரை அவரது நண்பர்களை வைத்தே சமுதாயம் எடைபோடுகின்றது.
“நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் தனது நண்பனின் மார்க்கத்தில் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் தான் நட்புக்கொள்கின்றவரை நன்றாக அவதானிக்கட்டும்.’’ (ஆதாரம்:அபூ¬தாவூத்)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். கஸ்தூரி வியாபாரி உனக்கு அதனை இனாமாகத் தரலாம். அல்லது நீ அதனை அவனிடமிருந்து விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒரு வேளை அவனிடமிருந்து நீ நறுமணத்தயாவது நுகரலாம். கெட்ட நண்பன் துருத்தியில் ஊதுகின்ற கொல்லனைபோலாவான். அவன் உனது ஆடையை எரித்துவிடலாம். அல்லது நீ அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகர்வாய்.” (நூல் புகாரி, முஸ்லிம்)
எனவே இதன் மூலம் நல்ல நட்பு சுவனத்துக்கான வழியையும் தீய நட்பு நரகத்திற்கான வழயையும் காட்டுகிறது என்பதை விளங்-கலாம். மேலும் இஸ்லாம் தீய நட்பை விட தனிமை சிறந்தது எனக் கூறுகிறது.
இறையச்முள்ள நண்பனைத் தேர்நதெடுத்தல்
ஒருவர் எப்போதும் ஒரே நிலையில் இருக்மாட்டார். ஒரு கட்டத்தில் அவர் வழிதவறிச் செல்வார். இச்சந்தர்ப்பத்தில் இறையச்சமுள்ள ஒரு நண்பன் மூலமே அவரை நல்வழிப்படுத்த முடியும்.
“இறை விசுவாசிகளைத் தவிர வேறு யாருடனும் தோழமை கொள்ளாதே. இறையச்சமுள்ளவனைத் தவிர வேறு யாரும் உமது உணவை உண்ண வேண்டாம்.’’ (அபதாவூத்)
“உற்ற நேசர்களையெல்லாம் அன்றைய (மறுமை) நாளில் ஒருவர் மற்றவருக்கு விரோதிளாக இருப்பர். இறையச்சமுள்ளவர்களைத் தவிர” (43:67) இதன் மூலம் இறையச்சமுள்ள நண்பனின் பெறுமதியை விளங்கலாம்.
இறயச்சமற்ற நண்பன் எப்போதும் எம்மை தீயவழியில் கொண்டு செல்வான் எனக் கூற முடியாது. ஒரு தீய விடயத்தை அழகானதாகக் காட்டி மனதை மாற்ற முடியும். ஆகையால் இறையச்சமுள்ள ஒரு நண்பனைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவன் எந்நிலையிலும் தீமையில் சம்பந்தப்பட்டு விடாமல் கவனமாக இருப்பான். நன்மையின்பால் செல்ல ஒத்துழைப்பான். எமக்கு எந்தவித கெடுதியும் எண்ண மாட்டான்.
நாம் இன்று நண்பர் மூலம் ஏமாற்றப்பட்டவர்கள், துன்பத்துக்குள்ளானவர்கள், வாழ்வில் தோல்வியடைந்வர்கள், சமூகத்தில் இழிநிலைக்குச் சென்றுள்ளவர்களை கண்கூடாகக் காணகிறோம். இவற்றுக்கான முதற் காரணம் இறையச்சத்தை அடிப்படையாகக் கொள்ளாத நட்பாகும்.
மேலும் நட்பு எனபது பெயருக்காக மட்டுமே அமையக்கூடாது. நட்புக்கென்று சில அடையாளங்கள் இருக்கினறன. ஒரு நண்பன் இன்னொரு நண்பனுடன் எவ்வாறு பழக வேண்டும் என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.
உதவி செய்தல்
மனிதன் இன்னொரு மனிதனில் தங்கி வாழும் நிலையில் தான் படைக்கப்பட்டுள்ளான் என்பதற்கிணங்க அவனுக்கு கடடாயம் இன்னொரு மனிதனின் உதவி தேவைப்படுகின்றது. ஒரு மனதனுக்கு தேவை ஏற்படும் போது முதலில் நாடுவது அவனுடைய நெருங்கிய நண்பர்களிடத்திலாகும் . எனவே ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துக்கொள்ள வேண்டும்.
“ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரனாவான். அவனுக்கு அநியாயம் செய்யமாட்டான். அவனை இழிவுபடுத்தமாட்டான். யார் தன் சகோதரனின் தேவையை நிறை¬வேற்றுகிறாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுவான். யார் ஒரு முஸ்லிமின் நெருக்கடியை நீக்ககிறாரோ கியாமத் நாளின் நெருக்கடிகளில் ஒரு நெருக்கடியை அவரை விட்டும் அல்லாஹ் அகற்றுகிறான். யார் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கறாரோ அவரது குறையை அல்லாஹ் மன்னிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஆதாரம்: புகாரி)
உதவுதல் என்பது தேவையை நிறைவேற்றுவது மட்டுமன்றி, அநியாயம் இழைக்காமல் இருப்¬பது, குறையை மறைப்பது, துரோகமிழைக்காமல் இருப்பதும் ஒருவகை உதவியாகும்.
நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல்
“ஒரு மனிதனை நேர்வழிப்படுத்துவது சிவப்பு ஒட்டகையை விட உமக்குச் சிறந்ததாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி)
பொதுவாக சில பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு நல்ல நண்பர்களுடன் சேருமாறும் தீய நண்பர்களுடன் பழகக் கூடாதென்றும் கூறுகின்றனர். அதில் ஒரு நியாயமும் இருக்கின்றது. ஆனால் அப்படியான ஒரு தீயவனை நல்வழிப்படுத்துவதன் மூலம் எவ்வாறான நன்மை¬களை அடைவோம் என எம்மில் யாருக்கும் விளங்¬குவதில்லை. சில வேளை ஒருவர் மோசமானவராக இருப்பதற்கு அவரது சூழல், வளர்ப்பு முறை,பின்னணிச் சூழல் (Background) போன்றன காரணமாக அமை-யலாம். அவர்களை அணுகி அறிந்த பினனரே படிப்படியாக உபதேசிக்க வேண்டும். ஏனெனில் நன்மை செய்து கொண்டிருப்பவருக்கு தீய வழியில் விழ ஒரு நிமிடமும் தேவையில்லை. ஆனால் தீய வழியில் இருப்பவரை நேர்வழியில் இலகுவாக மாற்றிவிட முடியாது. அவ்வாறாக தீய வழியில் இருப்பவருக்கு பல முறை உபதேசித்தும் திருந்தாவிடில் அவரை விட்டும் ஒதுங்குவதே உசிதமானதாகும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். “உங்களில் யாராவது ஒருவர் தீமை இடம்பெறுவதைக் கண்டால் அதனை தனது கரங்களால் தடுக்கட்டும். அதுவும் முடியாவிட்டால் தனது நாவினால் தடுக்கட்டும், அதுவும் முடியாவிட்டால் உள்ளத்தினால் வெறுக்கட்டும் அதுவே ஈமானின் தாழ்ந்த நிலையாகும்.” (முஸ்லிம்)
“ஒருவருக்கு நல்ல விடயமொன்றை யார் ஏவுகிறாரோ அவர் அதனை அமுல்படுத்தும் காலமெல்லாம் (ஏவியவருக்கு) அதற்¬கான கூலி கிட்டும்.” (திர்மிதி)
ஆகவே நாம் ஒரு நல்ல விடயத்தை ஒருவருக்கு ஏவினால் அந்த நன்மையை அவர் செய்யும் காலமெல்லாம் எமக்கு நன்மை கிட்டும். இது எமது நன்மைகளை இரட்டிப்பாக்க மிக இலகுவான ஒரு வழியாகும். அது போலவே நாம் ஒருவருக்கு தீமையை காட்டிக்கொடுத்து அதனை அவர் செய்யும் காலமெல்லாம் எமக்கும் தீமை வந்து சேரும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் அல்குர்ஆனில் அல்லாஹ் “நீங்கள் ஒருவருக்கொருவர் நன்மையான விடயத்தில் ஒத்துழைத்துக் கொள்ளுங்கள். தீமைக்கும் வரம்பு மீறுதலுக்கும் ஒருவருக்கொருவர் ஒத்தழைக்க வேண்டாம்’’ என கூறு¬கிறான்.
நண்பர்கள் நன்மையான காரியங்களில் ஒத்துழைத்தல் எனும் போது பரஸ்பரம் உதவுவது சமூக நலனபுரி சேவைகளில் ஈடுபடுவது, சிறந்த கலநதுரையாடல்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் அத்துடன் தீமையான விடயங்களுக்கும் ஒத்துழைப்பதானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். உதாரணமாக ஒருவர் தீமை செய்தால் அதற்¬கான சகல உத¬வி¬க-ளையும் வழங்கி உறவினர்களுக்குத் தெரியாமல் மறைக்கும் கீழ்த்தரமான விடயங்களிலும் நண்பர்கள் ஈடுபடுகின்றனர். அத்தகையவர்கள் அல்லாஹ்வை பயந்துகொள்ள வேண்டும். நிச்சயமாக அல்லாஹ் கண்காணிக்கின்றான்; அவ¬னுக்கு அனைத்¬துமே தெரியும்.
நாம் எமது நண்பர்கள் தீமை செய்யும் போது உரிய முறையில், மானபங்கப்படுத்தாமல் தனிமையில் சுட்டிக்காட்டி தெளிவுடுத்தி அதனைத் தடுக்க வேண்டும். அதனை விட்டு விட்டு அவனது எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும் என்ற நோக்கத்திற்காக மற்றவர்களிடம் அவரைப் பற்றி குறைகூறுவதில் எவ்வித நன்மையுமில்லை.
தீமையைக் கண்டும் தடுக்காத பாவத்திற்கு உள்ளாவோம். நம்மில் அனை-வரும் பெரும்பாலும் இவ்வாறான நிலையிலேயே இருக்கின்றோம் என்பது கசப்பான உண்மையாகும். நபி (ஸல்) அவர்கள் “உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும் அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்” என கூறினார்கள். அப்போது ஒருவர் “அல்லாஹ்வின் தூதரே அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வது சரி, ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்கு கூறுங்கள்” என்றார். அதற்கு நபியவர்கள் “அநியாயம் செய்வதிலிருந்து நீ அவரை தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு செய்யும் உதவி” என பதிலளித்தார்கள். (புகாரி)
தூய நட்பாக இருத்தல்
நாம் எந்தக் காரியத்தை செய்யும் போதும் அல்லாஹ்வுக்¬காக என நினைப்பது போல நட்பையும் அல்லாஹ்வுக்காக என தூய நோக்கத்திற்காக அமைத்துக் கொள்ள வேண்டும். மாறாக உலக நோக்கங்களுக்காக இருக்கக்கூடாது.
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “எனக்காகநேசிக்கக்கூடியவர்களுக்கு ஒளியினால் ஆன மிம்பர்கள் இருக்கும். அவர்கள் நிலையை நபிமார்களும் சுஹதாக்களும் கூட விரும்புவர்.” (நூல் திர்மிதி)
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நலலறங்கள் புரியும் ஒருவரை அவரின் நல்லறங்களுக்காக ஒருவர் நேசிக்கிறார்.ஆனால் நேசிப்பவரோ அவரைப் போன்று நல்லறங்கள் புரியவில்லை. இவரைப் பற்றிக் கூறுங்களேன் என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் அவருடன் ( மறுமையில்) இருப்பேன், என்று கூறினார்கள். இதனைக் கேட்ட நபித்தோழர்கள் வேறு எதற்கும் மகிழ்ச்சியடைந்ததை நான் கண்டிராத அளவு மகிழ்ந்தனர் என்று அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூ-தாவூத்)
“மறுமை நாளில் அல்லாஹ் எனக்காக பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக்கொண்டும் வாழ்ந்த மனிதர்கள் எங்கே, எனது நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இன்றைய தினம் அவர்களுக்கு எனது நிழலில் இடமளிப்பேன் என்று கூறுவான்.” (முஸ்லிம்)
நட்பை மேம்படுத்தல்
நாம் நட்பை முறித்துக் கொள்ளாமல் எப்போதும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நட்பை மேம்படுத்துவதில் ஒன்றுதான் ஸலாம் கூறுவதாகும். நண்பர்களுக்கு மாத்திரமன்றி அனைவருக்கும் ஸலாம் கூறவேண்டும். அப்போது தான் நட்பு வளர்கிறது.
“என் உயிர் எவன் கைவசம் இருக்¬கிறதோ அவன் மீது சத்தியமாக நிச்சயமாக நீங்கள் ஈமான் கொள்ளும்வரை சுவனத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவருக்கொருவர் நேசிக்கும் வரை ஈமான் கொண்டவராக முடியாது. உங்களிடையே நேசத்தை ஏற்படுத்தும் காரியத்தை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? உங்களுக்கிடையே ஸலாத்தை பரப்புங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறி¬னார்கள். (முஸ்லிம்)
அத்துடன் நேசத்தை அதிகமாக தெரிவிப்பதன் மூலமும் நட்பு மேம்படுத்தப்படுகிறது. நபி (ஸல்) அவர்களின் சபையில் நான் இருந்தேன். அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே நான் இந்த மனிதரை நேசிக்¬கின்றேன் என்றார். அதனை அவருக்கு தெரிவித்துவிட்டாயா? என நபியவர்கள் கேட்டார்கள். அதற்கவர் ‘ இல்லை’ என்றார். “எழுந்து சென்று அவரிடம் தெரிவியுங்கள்” என கூறினார். உடனே அம்மனிதர் எழுந்து சென்று “ இன்னவரே நாம் உம்மை அல்லாஹ்வுக்காக நேசிக்கிறேன்.’’ எனக் கூறினார். அதற்கு அம்மனிதர் “யாருக்காக நீ என்னை நேசித்தாயோ அந்த அல்லாஹ் உம்மை நேசிப்பானாக” என்று கூறினார் (அஹ்மத்)
மேலும் நாம் நண்பர்களை அதிகமதிகம் சந்தித்துக் கொள்ள வேண்டும். பரிசுப்பொருட்களை பரிமாற்றிக்கொள்ள வேண்டும். அவர்களது சுகதுக்கங்களில் கலந்து கொள்ள வேண்டும். அவர்களது இரகசியங்களை பாதுகாக்க வேண்டும். அவர்களுக்காகவும் அவர்களது குடும்பத்தவர்களுக்காகவும் பிரார்த்திக்க வேண்டும், நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும். வெற்றிகளுக்காக பாராட்டி தோல்விகளுக்காக ஆறுதல் கூறி தைரியமூட்ட வேண்டும். இவ்வாறான காரியங்கள் மூலம் நட்பை மேலும் வளர்த்துக்கொள்ளலாம்.
எனவே நாம் நல்ல நண்பர்களுடன் பழகி நன்மையான விடயங்களில் ஒத்துழைத்து தீமையைக் களைந்து அல்லாஹ்வுக்காக நேசித்து நாளை மறுமை நாளில் அல்லாஹ்வின் நிழல் பெறும் ஏழு கூட்டத்தாரில் ஒரு கூட்டத்தினரான அல்லாஹ்வுக்காக நேசித்த நண்பர்கள் எனும் கூட்டத்தில் சேர்ந்து நன்மையடைவோமாக.




