தொழுகையின் முக்கியத்துவம்

தொழுகை மார்க்கத்தின் ஐம்பெரும் கடமைகளில் – அதன் தூண்களில் ஒன்று.

بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدًا رسول الله، وإقام الصلاة…………..   أخرجه البخاري (8)، ومسلم (16).

       சுவர்க்கத்தின் திறவுகோல்                                                 . أخرجه الترمذي (4)، وأحمد (14662) .. مفتاحُ الجنةِ الصلاةُ

      வேறு எந்த இபாதத்துக்கும் இல்லாத முக்கியத்துவம்

இஸ்லாத்தில் நுழைந்த பின்னர் முதலில் நிறைவேற்ற வேண்டிய கடமை

அனைத்து வழிபாடுகளும் பூமியில் கடமையாக்கப்பட இது மாத்திரம் வானத்தில் வைத்து மிஃராஜின் போது கடமையாக்கப்பட்டது.

ஹிஜ்ரத்துக்கு மூன்று வருடங்களுக்கு முன்னரே கடமையாக்கப்பட்டது

விதிவிலக்கின்றி பருவமடைந்த, ஆண், பெண் அனைவர் மீதும் கடமை.

முஸ்லிமுக்கும் முஸ்லிம் அல்லாதவருக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு தொழுகை.

ஆன்மாவுக்கான உணவு, ஊட்டச் சத்து, சிறந்ததொரு உடற்பயிற்சி, பண்பாட்டு பலம்

தனி மனிதர்களுக்கும் சமூகத்துக்குமான பல்வகையான பயன்களை அது கொண்டிருக்கிறது.

மானக்கேடான, பாவமான காரியங்களை விட்டும் மனிதனைத் தடுக்கின்றது.

ஒரு தொழுகை மற்றொரு தொழுகைக்கு மத்தியிலுள்ள சிறிய பாவங்களுக்கு பரிகாரமாக அமைகிறது.

சமூகத்தில் இருந்து முதல் முதலில் ஆட்சியதிகாரம் பறிபோகும்; கடைசியாக தொழுகை சமூகத்திலிருந்து எடுபட்டுப் போகும் என்பது நபி மொழி.

குர்ஆனும் சுன்னாவும்:- அதற்கு உயர்ந்த இடத்தைக் கொடுத்து அதனை அதிகம் வலியுறுத்தியுள்ளன.

v  குர்ஆனில்:- தொழுகை பற்றி சுமார் 80 இடங்களில் கூறப்பட்டுள்ளது.

அது திக்ருடன் சேர்த்து, ஸகாத்துடன் சேர்த்து, பொறுமையுடன் சேர்த்து, அறுத்து பலியிடுவதுடன் சேர்த்து  அது வலியுறுத்தப்பட்டுள்ளது.

  1. இறையச்சமுள்ளவர்களின் இரண்டாவது பண்பு தொழுகையை நிலை நிறுத்துவதாகும்.“(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்” (2:3)
  2. “எல்லாத்தொழுகைகளையும், நடுவில் உள்ள (அஸர்) தொழுகையும் பேணித் தொழுது கொள்ளுங்கள். தொழுகையின் போது அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சத்தோடு நில்லுங்கள்.”(அல்குர்ஆன் 2 : 238)
  3. நபிமார்கள் அனைவருக்குமான கட்டளை:- தொழுகை எல்லா வானத்து மதங்களிலும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.அதனை கடைப்பிடிக்கும் படி நபிமார்கள் அனைவருக்கும் அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதுடன் அவர்களும் அவற்றை மிக கவனமாக கடைப்பிடித்து, பிறருக்கும் அது பற்றி ஏவியிருக்கிறார்கள்.

இப்ராஹிம்(அலை) “இரட்சகா! என்னையும் எனது சந்ததியைச் சேர்ந்தோரையும் தொழுகையை நிலை நிறுத்தக் கூடியவர்களாக ஆக்குவாயாக. ”                      رب اجعلني مقيم الصلاة ومن ذريتي { إبراهيم 40}

இஸ்மாயில்(அலை) தனது குடும்பத்தாருக்கு தொழுகையை கடைப்பிடிக்கும் படி ஏவியிருக்கிறார்கள்”

 وَاذْكُرْ فِي الْكِتَابِ إِسْمَاعِيلَ ۚ إِنَّهُ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُولًا نَّبِيًّا وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِندَ رَبِّهِ مَرْضِيًّا 13-  (سورة مريم آية 54-55) 

மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ்:- “என்னை நினைவூட்டுவதற்காக தொழுகையை நிலை நிறுத்துவீராக!” என்று கட்டளையிட்டான்.                                             وَأَقِمِ الصَّلاةَ لِذِكْرِي [طه:١٤]  

ஸக்ரிய்யா(அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் : – “அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்தனர்” (3:39). எனக் கூறுகிறான்.

فَنَادَتْهُ الْمَلَائِكَةُ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي الْمِحْرَابِ

ஈஸா (அலை) அவர்கள்  “எனக்கு எனது ரட்சகன் நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழும் படியும் ஸகாத்தை கொடுக்கும் படியும் எனக்கு உபதேசம் செய்தான்” எனக் கூறினார்கள்.

كقول عيسى عليه السلام: وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا {مريم 31}

லுக்மான்(அலை) தனது மகனுக்கு”எனது அருமை மகனே தொழுகையை நிலை நிறுத்துவீராக” என்றார்கள். يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ  (لقمان:17(

எப்போதும் கடமை:-

வாழ்வின் எந்த சந்தர்ப்பத்திலும் தொழுகையை விடுவதற்கான அனுமதி கிடையாது.

நோயின் பொழுது : முடியுமான விதத்தில் தொழுகையை நிறைவேற்றுவது கடமை.

قال رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم لعِمرانَ بنِ حُصَينٍ : صَلِّ قائمًا، فإنْ لم تستَطِع فقاعدًا، فإنْ لم تستَطِعْ فعلى جَنبٍ ) رواه البخاري (1117

நபி(ஸல்) அவர்கள், இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அவர்களுக்கு’நீ நின்று தொழு இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு. அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு” என்று விடையளித்தார்கள்.

பயணத்தில் : கூட தொழுகையை விட முடியாது. சுருக்கி, சேர்த்துத் தொழுவதற்கு அனுமதியுண்டு.

யுத்த சந்தர்ப்பத்தில் : கூட ஒரு சாரார் யுத்தம் செய்யும் பொழுது மறு சாரார் தொழுகையில் ஈடுபட வேண்டும். அல்குர்ஆனில் அல்லாஹ் யுத்தம் செய்யும் பொழுது போராளிகள் தொழ வேண்டும் என்ற வசனத்தை முடிக்கின்ற பொழுது “முஃமின்கள் மீது தொழுகையானது நேரம் வரையறுக்கப்பட்ட கடமையாக இருக்கிறது” என்று குறிப்பிடுகிறான்.  (அல்குர்ஆன் 4:103)

v  உயிர் பிரியும் போது:- நபி(ஸல்)அவர்கள் உயிர் பிரியும் கடைசி வேளையில் கூட தொழுகையை வலியுறுத்தினார்கள்.

 قال أنس بن مالك كانت عامَّةُ وصيةِ رسولِ اللهِ صلى الله عليه وآله وسلم حينَ حضَرَتْه الوفاةُ، وهو يُغَرْغِرُ بنفسِه :الصلاةَ : أخرجه النسائي في ((السنن الكبرى)) (7095)، وابن ماجه (2697)، وأحمد (12169)

‘நபி (ஸல்) அவர்களுடைய வஃபாதுடைய நேரம் வந்து அவர்களது தொண்டைக் குழியை உயிர் வந்தடைந்த சந்தர்ப்பத்திலும் தொழுகையை உரிய முறையில் கடைப்பிடிக்கும் படி தான் வலியுறுத்தி வந்தார்கள்’ என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

v  அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல்:-

عن عبدالله بن مسعود سَأَلْتُ النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: أيُّ العَمَلِ أحَبُّ إلى اللَّهِ؟ قالَالصَّلاةُ علَى وقْتِها  صحيح البخاري: 527 ,   أخرجه مسلم 85

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) கூறினார்கள்: அல்லாஹ்விடத்தில் மிக விருப்பமான அமல் எது என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன்,  தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது என்றார்கள். (ஆதாரம் : புகாரி)

முழுமையாக நிறைவேற்றல்:-

خمسُ صلواتٍ افترضَهُنَّ اللَّهُ علَى عبادِهِ فمن جاءَ بِهِنَّ لم ينتقِصْ منهنَّ شيئًا استخفافًا بحقِّهنَّ فإنَّ اللَّهَ جاعلٌ لَه يومَ القيامةِ عَهْدًا أن يُدْخِلَهُ الجنَّةَ ومن جاءَ بِهِنَّ قدِ انتقَصَ منهنَّ شيئًا استخفافًا بحقِّهنَّ لم يَكُن لَه عندَ اللَّهِ عَهْدٌ إن شاءَ عذَّبَهُ وإن شاءَ غفرَ لَهُ  أخرجه أبو داود (425)، والنسائي (461)، وابن ماجه (1401) واللفظ له، وأحمد    22756     (

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் அடியார்கள் மீது கடமையாக்கியுள்ளான். அதன் கடமைகளை எளிதாகக் கருதி அதில் எதனையும் குறைத்து விடாமல் நிறைவேற்றுபவருக்கு சுவர்க்கத்தில் நுழைவிக்கும் ஒப்பந்தத்தை மறுமையில் அல்லாஹ் ஏற்படுத்துவான் . அத்தொழுகைகளை யார் அதன் கடமைகளை எளிதாகக் கருதி அவற்றில் ஏதாவது ஒரு பகுதியை குறைவாக நிறைவேற்றினால் அவருக்கு அல்லாஹ்விடம் எந்த ஒப்பந்தமுமில்லை. அவன் நாடினால் அவருக்கு தண்டனை வழங்குவான், அவன் நாடினால் அவருக்கு மன்னிப்பு வழங்குவான்” (அபூதாவூத், நஸாயீ, இப்னுமாஜா)

v  வாழ்வில் ஜெயிப்பதற்கான முதலாவது நிபந்தனை:-

“நிச்சயமாக விசுவாசிகள் வெற்றி பெற்று விட்டார்கள்” என்று கூறும் அல்குர்ஆன், அவர்களது முதலாவது பண்பாக அவர்கள் “தொழுகையில் பயபக்தியோடு இருப்பார்கள்” என்று கூறிவிட்டு, தொடர்ந்து அவர்களது பல பண்புகளையும் கூறிய பின்னர் கடைசியாக:- “அவர்கள் தமது தொழுகைகளில் பேணுதலாக இருப்பார்கள்” என்றும் அத்தகையவர்களே சுவர்க்கத்துக்கு அனந்தரக்காரர்களாக இருப்பார்கள் என்றும் கூறி முடிக்கிறான்.

v  முதல் விசாரணை : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமையில் தொழுகையைப் பற்றித் தான் முதலாவதாக விசாரிக்கப்படும். أولُ ما يحاسبُ بهِ العبدُ يومَ القيامةِ الصَّلاةُ (رواه الترمذي)

“மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும்.” (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)

v  கிரமமாக நிறைவேற்றி வந்தால் நிதாணமின்மைபதட்டம்பேராசை இருக்காது:-

إِنَّ الْإِنْسَانَ خُلِقَ هَلُوعًا  إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا  إِلَّا الْمُصَلِّينَ  الَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ دَائِمُونَ  

  “நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான்தொழுகையாளிகளைத் தவிரஅதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்”

v  பாவமன்னிப்பை தரும்:- ஐவேளை ஒருவர் ஓர் ஆற்றில் ஒரு நாளைக்கு ஐவேளை குளித்தால் அவரது அழுக்குகள் களையப்படுவது போல ஐவேளை தொழுபவரது பாவங்களும் காயப்படும்.

 أرأيتُم لوْ أنَّ نَهرًا ببابِ أَحدِكم يَغتسِلُ منه كلَّ يومٍ خَمْسَ مرَّاتٍ؛ هلْ يَبقَى مِن دَرَنِه شيءٌ؟ قالوا: لا يَبقَى من دَرنِه شيءٌ، قال: فذلِك مَثَلُ الصَّلواتِ الخمسِ؛ يَمْحُو اللهُ بهنَّ الخَطايا رواه البخاري (528) , ومسلم (667.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்’ என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: ஸஹீஹுல் பூகாரி, பாகம் 1, அத்தியாயம் 9, எண் 528)

v  காதில் ஷைத்தானின் சிறுநீர்:-

ذُكِرَ عِنْدَ النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ رَجُلٌ، فقِيلَ: ما زَالَ نَائِمًا حتَّى أَصْبَحَ، ما قَامَ إلى الصَّلَاةِ، فَقالَ: بَالَ الشَّيْطَانُ في أُذُنِهِ    أخرجه البخاري (1144)، ومسلم ) 774(

ஒருவர் விடியும் வரை தூங்கி கொண்டே இருக்கிறார். தொழுகைக்கு எழுவதில்லை என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான் என்று விடையளித்தார்கள்.

v  தண்டணைகள்

  1. தலை பிளக்கப்படும் நபர்:-

عَنِ النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ في الرُّؤْيَا، قالَ: أَمَّا الذي يُثْلَغُ رَأْسُهُ بالحَجَرِ، فإنَّه يَأْخُذُ القُرْآنَ، فَيَرْفِضُهُ، ويَنَامُ عَنِ الصَّلَاةِ المَكْتُوبَةِ. صحيح البخاري  1143

நபி(ஸல்) அவர்கள் கனவில் கண்ட தலை நசுக்கப்படும் மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டு ‘அவர் குர்ஆனைக் கற்று  அதனை மனம் செய்யாமலும் அதன்படி செயல்படாமலும் இருந்ததுடன் கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்” என்று விளக்கமளித்தார்கள்.(புஹாரி 1143)

  1. ஸகர் நரகம்:தொழுகையை விட்டவர் நரகத்தில் நுழைவார்:-

مَا سَلَكَكُمْ فِي سَقَرَ قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ المدثر: 42 – 43

‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று சுவர்க்கவாதிகள் நரகவாதிகளிடம் கேட்கும் சந்தர்ப்பத்தில்). அவர்கள் ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை’. (பதில்) கூறுவார்கள்: (அல்குர்ஆன் 74:42,43)

  1. பாராமுகமாக இருப்பவர்களுக்கு கடுமையானதண்டனை:

“தொழுமையாளிகளுக்கு‘வைல்’ தான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பாராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள். (107: 4,5,6). ‘வைல்’ என்றால் நரகின் ஓர் ஓடையின் பெயர், கடும் தண்டணை,அழிவு என்ற விளக்கங்கள் உள்ளன.

فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا )مريم:  59(

 “ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் غَيًّ ‘ச் சந்திப்பார்கள்.”.

இங்கு வந்துள்ள ’கையுன்’ என்ற சொல் தோல்வி, நஷ்டம்,நரகில் இருக்கும் ஓர் ஓடை, நரகவாதிகளது உடம்புகளில் இருந்து வழியும் சீழ் மூலம் உருவான ஓர் ஆறு போன்ற பொருள்களைத் தரும்.

  1. முனாபிக்களது பண்பு:-

إِنَّ ٱلْمُنَٰفِقِينَ يُخَٰدِعُونَ ٱللَّهَ وَهُوَ خَٰدِعُهُمْ وَإِذَا قَامُوٓاْ إِلَى ٱلصَّلَوٰةِ قَامُواْ كُسَالَىٰ يُرَآءُونَ ٱلنَّاسَ وَلَا يَذْكُرُونَ ٱللَّهَ إِلَّا قَلِيلًا

  “நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் …..தொழுகைக்கு தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் – மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.”

v  முனாஃபிக்கீன்கள் மீது பாரமானவை :-  “இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன் மீது பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜமாஅத்தும்” என நபி (ஸல்) அவர்கள் நவின்றனர். (நூல்கள்:புகாரி, முஅத்தா, அபூதாவூத், திர்மித், நஸயீ)

  1. ஷைத்தானின் மூன்று முடிச்சுக்கள்:-

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.   “ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கியப் பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் மூன்று முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் நீர் உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும், உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும் என்று உளறுகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு படுக்கையிலிருந்து உளு செய்தபின், இரண்டாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார்.” (புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸயீ.)

  1. பேணித் தொழாதவரது மறுமை நிலை:

عن النَّبِيِّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ أنَّهُ ذَكرَ الصَّلاةَ يومًا فقالَ من حافَظَ عليها كانت لَه نورًا وبُرهانًا ونجاةً إلى يومِ القيامةِ ومن لَم يُحافِظ عليها لم يَكن لَه نورٌ ولا برهانٌ ولا نجاةٌ وَكانَ يومَ القيامةِ معَ فرعونَ وَهامانَ وأبَيِّ بنِ خلفٍ )أخرجه أحمد (6576)، وابن حبان (1467)، والطبراني 14/127

 “யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக் கொள்ளவில்லையோ அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, சாட்சியாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. (மாறாக) அவன் மறுமை நாளில் காரூன், பிர்அவ்ன், ஹாமான், உபைபின் கலஃப் ஆகியோருடன் இருப்பான்” என நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.

இந்த ஹதீஸுக்கு விளக்கம் சொல்லும் சில அறிஞர்கள்: யாரது தலைமைத்துவமும் ஆட்சியும் அதிகாரமும் அவரை தொழுகையை விட்டு தூரமாக்கியதோ அவர் ஃபிர்அவ்னுடனும், தொழில், அமைச்சுப் பதவி  போன்றவற்றில் மூழ்கி அதனால் தொழுகையை விட்டவர் ஃபிர்அவ்னின் அமைச்சர் ஹாமானுடனும், சொத்து செல்வங்களைக் கவனிப்பதில் மூழ்கி அதன் விளைவாக தொழுகையை விட்டவர் காரூனுடனும், வியாபாரம், கொடுக்கல் வாங்கல்களின் காரணமாக தொழுகையை விட்டவர் உபை இப்னு கலப் உடனும் எழுப்பப்படுவார் என்று கூறுவர்.தொழுகையை முறையாகப் பேணியவர்கள் நிச்சயமாக ஈருலகிலும் வெற்றியடைந்து விட்டார்கள். மனஅமைதியை பெற்று விட்டார்கள்.

அல்லாஹ் நமக்களித்துள்ள எண்ணிலடங்கா அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் வணக்கம். அதனை கடமை உணர்வுடனும் நன்மையை எதிர்பார்த்தும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் முறையாக நிறைவேற்ற வேண்டும்.

  1. தொழாதவர்பற்றிய மார்க்கத்தின் தீர்ப்பு:- 

“நமக்கும் அவர்களுக்குமிடையே (காஃபிர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகிவிட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: திர்மிதி, அபுதாவூத், அஹமத், இப்னுமாஜா)

إنَّ بَينَ الرجُلِ وبَينَ الشِّركِ والكُفرِ تَرْكَ الصَّلاةِ  رواه مسلم 82

  1. தொழுகை கடமை என்பதை மறுப்பவர் காபிர் (ஏகோபித்த கருத்து)
  1. வேண்டுமென்றேமனமுரண்டாக நேரம் கழியும் வரை தொழுகையை தொழாமல் இருப்பது குப்ர், ரித்தத் (உமர், அப்துர் ரஹ்மான், முஆத், அபூஹுரைரா, இப்னு மஸ்ஊத், இப்னு அப்பாஸ், ஜாபிர், அபுத் தர்தா அஹமத் இப்னு ஹன்பல், இப்னுல் முபாரக், நகயீ, இப்னு அபி ஷைபா)
  2. தொழுகையைவிடுபவர் காபிராகமாட்டார். ஆனால் பெரும்பாவி. அவர் தவ்பாசெய்து மீள வேண்டும். (அபூ ஹனிபா,மாலிக், ஷாஃபி) அவர்  தவ்பா செய்யாத போது கொல்லப்படுவார்.(மாலிக், ஷாஃபி, வேறு சிலர்)
  3. அவர் கொல்லப்படமாட்டார். ஆனால் தஃஸீர் வகையிலான பொருத்தமான வேறு ஒரு தண்டனை அவருக்கு வழங்கப்படும். தொழும் வரை அவர் சிறையில் அடைக்கப்படுவார்.(அபூஹனீபா)
  4. தொழுகையைவிட்டவர்.காஃபிர். அவர் கொல்லப்பட வேண்டும் (இமாம் ஷவ்கானி)

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top